Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

October 27, 2013

மழலை சொல் கேளாதார்

நேற்று மாலை என் நண்பரின் வீட்டிற்குச் சென்றேன். வழக்கம் போல் அனைத்து உபயகுஷலோபயியும் ஆயிற்று. நண்பரின் குழந்தை நான் சென்ற தருணம் உறங்கிக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் பிறகு துயில் சிறிது களைந்து எட்டிப்பார்த்தான். நான் அருகில் அவனை சென்று அள்ள முயன்றேன். அழ ஆரம்பித்தான். பிறகு அவன் அப்பா அவனை மார்போடு அள்ளிக்கொண்டு அவனை சமாதானம் செய்தார். துயில் நன்றாய் களைந்த உடன் யார் புதியதாக என்று கூர்ந்து கவனித்தான். நான் சிரித்தேன். கொஞ்சம் சிரித்துவிட்டு தன் முகத்தை அவன் தந்தையின் மார்பில் புதைத்துக்கொண்டான். இம்முறை, நண்பரின் குழந்தை நன்றாக வளர்ந்திருந்தான் என்று எனக்கு தோன்றியது. கொஞ்ச நேரம் கழித்து என்னை எட்டி எட்டிப் பார்த்தான், சிரித்தான் பிறகு முகத்தை திருப்பிகொண்டான். இதை ஒரு விளையாட்டை செய்துக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து நான் வீட்டிற்கு கிளம்பினேன். அப்போது கீழேப் பேசிக் கொண்டு இருந்தோம். அவன் கையை வைத்து என்மேல் மகிழ்ச்சியாக அடித்துக் கொண்டு இருந்தான். அவன் கண்கள் என்னையே நோக்கிக்கொண்டு இருந்தன என்று எனக்கு இப்போழுது தோன்றுகிறது. நான் சிரித்தால் அவனும் சிரிக்கிறான். பல நேரங்களில் அவனே என்னை பார்த்து சிரித்துக்கொள்கிறான். எனக்கு இப்போது தோன்றுவது ஒன்று தான். அவன் என்னிடம் எதிர்பார்த்தது (எதிர்ப்பார்த்தானா என்றால் எனக்கு தெரியாது) பதிலுக்கு ஒரு சிரிப்பு. சிரிப்பு மழையில் நனைந்தபின் நான் வீட்டிற்கு செல்கையில் வழியில் சற்று வான் மழையிலும் நனைந்தேன்.

இன்று மாலை இச்சம்பவத்தை அசைப்போட்டுக்கொண்டு இருந்தேன். அம்மழலை எதர்க்காக என்னிடம் சிரித்தான் ? ஒரு வேளை அவன் என்னிடம் விளையாடிக்கொண்டு இருந்தானா ? நான் ஒரு விளையாட்டு பொம்மையா ? நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், அவன் என்மேல் வைத்தது நம்பிக்கை - நான் பதிலுக்கு சிரிப்பேன் என்று. சிரித்தேன். அவனும் சிரித்தான். 

குழலினிது யாழினிது என்பர் தன்மக்கள்
மழலை சொல் கேளாதார் 

என்ற வள்ளுவரின் வாக்கை முழுமையாக மற்றுமொரு முறை அனுபவித்தேன்.

அவனுடன் பேசும் நாட்களுக்கு நான் காத்துக்கொண்டு இருக்கிறேன்.

October 25, 2013

சில நேரங்களில் சில மனிதர்கள்

திரு.ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய மகத்தான நாவல் சில நேரங்களில் சில மனிதர்கள். இந்நாவல் சிறப்பு வாய்ந்த சாஹித்திய அகாடமியின் விருதை பெற்றது. பின்பு 1975ஆம் ஆண்டில் திருமதி.லஷ்மி மற்றும் திரு.ஸ்ரீகாந்த் ஆகியோரின் சிறப்பான நடிப்பில் நாவலின் பெயர்க் கொண்டே திரைப்படமாய் வெளிவந்தது. இவை பெரும்பாலவனர்களுக்கு தெரிந்தவையே.

 


நேற்று இப்படத்தை யூடுயுபில் பார்த்தேன்.  முதலில் நான்கு நாட்களில் பார்க்கலாம் என்று தான் இருந்தேன். முந்தாநாள் முதல் அரை மணி நேரம் பார்த்தேன். நேற்றும் இரண்டாவது அரை மணி நேரம் பார்க்கலாம் என நினைத்தேன். ஆனால் படம் என்னை கட்டிப்போட்டுப் ஒரே வீச்சில் பார்க்கச் செய்தது. 

கண்டிப்பாய் சொல்ல வேண்டும். தரமான படம். இன்று நான் துயிலில் இருந்து எழும் வரை நேற்று இரவு உறக்கத்தில் இப்படம் என் நினைவில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. இப்பொழுதும். என்னை மிகுந்த ஒரு சலனத்தில் இருந்து தெளிவுப்படுத்திய உணர்வை இப்படம் கொடுத்தது என்று சொல்வேன். இது பீம்சிங்ப் போன்ற இயக்குனர் கையாண்ட விதம் போற்றுதலுக்குரியது. 

அனைத்து கதாபாத்திரங்களுக்கும் அற்புதமான கதாபாத்திர வடிவமைப்பு. அனைவரும் ஒப்பனை என்று சொல்லாதவகையில் உடலும் சதையுமாய் நடித்திருந்தனர். குறிப்பாக லஷ்மி கங்காவாகவும் ஸ்ரீகாந்த் ப்ரபுவாகவும் வாழ்ந்திருந்தார்கள். கங்காவின் மாமாவாக வை.ஜி.பார்த்தசாரதியும், ஸ்ரீகாந்தின் மகள் மஞ்சுவாக ஜெயகீதா மனதில் பதிகின்றனர்.



இப்படிபட்ட துணிவான கதைக்களத்தில் 1975ஆம் ஆண்டிலேயே இப்படம் வந்தது ஆச்சர்யம் தான். இன்று இப்படி ஆண் பெண் உறவையும் அதில் உள்ள உளவியலையும் முன்னிலைப் படுத்தி திரைப்படம் வெளிவருமா என்றென்பது கேள்வியளவே இருக்கின்றது.  இன்றும் இதுப் போன்ற திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றிப் பெறுவதில்லை என்பது வருத்தத்துக்குரிய நிலையாகும்.
 

  

கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம். அதுவும் 17 முதல் 20 வயதிற்குள் இருப்பவர்கள் பார்க்கவேண்டிய படம். இந்த நாவலை படிக்கலாம் என்று சென்ற மாதம் வாங்கினேன். இன்னும் படிக்கவில்லை. கண்டிப்பாய் படம் தொட்ட ஆழத்தை விட இன்னும் ஆழமாய் தொட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

ரம் சொல்லேல்.
பொருள்: ஒருதலைப் பட்சமாகக் பேசக் கூடாது. 
Meaning: Let your argument never be biased.

October 17, 2013

வாடிவாசல் - 1959 - சி.சு.செல்லப்பா

சென்ற வெள்ளிக்கிழமை (11-அக்டோபர்) அன்று பெங்களுரில் இருந்து புதுவைக்கு சரஸ்வதி பூஜைக்காக சென்றேன். அன்று மாலை ரயிலுக்கு புறப்பட சிறிது நேரம் இருந்தது. அப்போது சமீபத்தில் புத்தக கண்காட்சியில் வாங்கிய வாடிவாசல் என்ற குறுநாவலை வாசிக்கலாம் என்று எடுத்தேன். ரயிலில் மீதி பாதியை வாசித்தேன்.



வாடிவாசல் அமரர் திரு.சி.சு.செல்லப்பா அவர்கள் 1959 ஆண்டு எழுதியது. இந்த நூல் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் உள்ள ஒரு கிழவன் மற்றும் கிழக்கில் இருந்து வந்துள்ள பிச்சி, முருகு ஆகியவர்களின் நடுவே நடக்கும் உரையாடலில் துவங்குகிறது. கிழவன் ஜல்லிகட்டை பற்றி சற்று விவரிக்கிறான். கிழவனுக்கும் தெரியும் வகையில் பிச்சியும், முருகுவும் மனம் பாதி பேச்சிலும் பாதி நோட்டம் விடுவதுமாக இருந்தார்கள். அப்போது அம்புலி என்கிற ஒரு ஜல்லிக்கட்டு வீரரை பற்றி சிலாகிக்கும் வகையாக பேசுகிறார். அம்புலிக்கு காரி என்னும் காளையால் நேர்ந்த துயரத்தை வருத்துடன் சொல்கிறார். அப்போது கிழவன் திகுதிகுக்கும் வகையில் இது அம்புலி புள்ள பிச்சி என்று முருகு சொல்கிறான். தன் தந்தையிடம் அவரின் மரணப் படுக்கையில் கொடுத்த வாக்கிற்காக காரியை அடக்குவதற்க்காக வந்திருக்கிறான் பிச்சி. வழக்கம் போல் காரி போன்ற பிசாசு காளைகளை ஜல்லிக்கட்டில் விட்டு மிருகங்களின் மூலம் பேர் ஈட்டிக்கொள்ளும் ஜமிந்தார் வந்திருந்தார். மற்றும் திறளாய் திரண்டிருந்த மக்கள். இது தான் கதைகளம் ஆடுகளுமும் கூட. இதில் இருந்து இம்மி அளவும் வெளியே செல்லவில்லை. சி.சு.செல்லப்பா அவர்கள் இதனை ஒரு முழு நாவலாக படைப்பதற்கு அனைத்து சாத்திய கூறுகள் இருந்தப்பின்னும் அவர் அவ்வழியே செல்லவில்லை. ஒரு போதும் வாடிவாசல் நடக்கும் ஊரை பற்றியோ, அல்லது, அங்கு திருவிழாக்கு கூடியிருப்பதுப்போல் கூடியிருக்கும் மக்களை பற்றியோ, அல்லது, பிச்சி, பிச்சியின் தந்தை அம்புலி, ஜமிந்தார்களின் பின்புலத்தை பற்றி ஒருப் போதும் நாவல் செல்லவில்லை.

வாடிவாசல் என்பது ஜல்லிக்கட்டில் காளைகள் ஆடுகளத்திற்குள் நுழைவதற்கான நுழைவு கதவு. அதன் வழியாக தான் நூற்றுக்கணக்கான காளைகளை பலர் விடுவர். இந்த நூலில் சி.சு.செல்லாப்பா அவர்கள் ஜல்லிக்கட்டின் ஆடுகளத்தை அவரது வர்ணஜாலத்தின் மூலம் கண் முன் நிறுத்துகிறார் என்பதே மெய். காளை சீறும் விதம், மனிதன் காளையின் கொம்பை பிடிக்கும் விதம், மனிதன் காளையை நோக்கம் (காளையின் குணாதிசியங்களை சுதாரிப்பது) விடும் விதம், காளை மனிதனை தூக்கி வீசும் இடம், ஆகியவற்றை மிக நேர்த்தியாக சொல்லி இருப்பார். மனிதன் காளையை வீழ்த்தும் தருணங்களில் ஜமிந்தார், கிழவன், காரி காளை, பிச்சி, மக்கள் ஆகியோரின் மிக யதார்த்தமான மனநிலையை மிக அழகாக பதிவுசெய்து இருப்பார். சினிமாவில் காட்டுவது போல் அவ்வளவு எளிதல்ல காளையின் கொம்பை பிடித்து அதனை அடக்குவது என்பது நமக்கு புரியும். 




வாடிவாசல் மூலம் நான் உணர்ந்த சில உண்மைகள் : 
1) மனிதனுக்கு தெரியும் அது விளையாட்டு என்று. ஆனால் காளைக்கு தெரியாது அது விளையாட்டு என்று. நம்மிடம் இரக்கம் எதிர்ப்பார்த்தே அது உள்ளது. அதனை நாம் யாரும் தருவதில்லை.

2) காளை மூலம் வெற்றி பெற்று தன் அதிகாரத்தை தனது சுற்றுப்புரத்திற்ககும் தன்னிடம் உள்ள மனிதர்களும் ஊர் மக்களுக்கும் காண்பிக்கிறான் ஜமிந்தார். ஆனால் அதே காளை தோற்றால் தயவு தாட்சியம் இல்லாம் அங்கேயே கொல்கிறான். அதை கொன்று விட்டு திரும்பிக் கூட பார்க்காமல் ஒரு வருத்தமும் இல்லாமல் வீடு திரும்புகிறான்.

3)மனிதனில் உள்ள மிருகம் சினம் கொண்டு வருவதை பிச்சியின் விளையாட்டில் காணலாம். 

4) தன் காளை தோற்றாலும் பரவாயில்லை காளையை வீழ்த்து என சொல்லும் ஜமிந்தார் மனிதர்கள் மிருகங்களையும் (மனிதர்களையும்) அடக்கி ஆள நினைக்கும் அதிகாரத்துவுத்தின் நிகரில்லா சான்று.

5) வெரும் இரண்டு பவுன் தங்க காசுக்கிற்காக காளையிடம் உயிரை தூக்கி விசுகிறார்கள் மனிதர்கள்.

6) தொடை குத்து தான் நாலு நாள்-அ சரியாப் போய்டும். வேப்ப எண்ணை காச்சு ஊத்தினா சரியாப் போய்டும் என கிழடுகளும் மனிதர்களும் அதை சொல்பவர்கள் பலர் உண்டு.

இதனை படித்துவிட்டு ஜல்லிகட்டுப் போன்ற விளையாட்டுக்கள் தேவையா போன்ற பல கேள்விகள் எல்லோர் மனதிலும் எழும். எனக்கும். ஆனால் இந்த குறுநாவல் அதனை சொல்வதற்கு அல்ல. நான் மேற்சொன்ன அடிப்படை உண்மைகளை பின்புலத்தில் மிக நேரகா நேர்த்தியாக திரு.சி.சு.செல்லப்பா அவர்கள் சொல்லி இருப்பார். இன்னொரு முறை படித்தால் இன்னும் சில உண்மைகளை உணர்வேன் என்று நம்புகிறேன். 

ஒரு 2 மணி நேர வாசிப்பிற்கான ஒரு நல்ல வாசிப்பு இந்த 50-60 பக்க குறுநாவல். மிக சிறந்த் இச்சிற்றிலக்கியத்தை தங்களுக்கு அன்போடு பரிந்துரைக்கிறேன்.


பி.கு: குறிப்பாக ஒன்று சொல்லவேண்டும், சி.சு.செல்லப்பா இந்நூலில் சொல்லாதது, வேரு எங்கோ நான் வாசித்தது, ஜல்லிகட்டு என்றென்பது தமிழர் பண்பாட்டில் ஆயிரம் ஆண்டு காலத்திற்கும் மேலாக வரலாற்றில் அருபடாமல் தொடரும் ஒரு விளையாட்டு. 

பொருள்: துன்பம் விளைவிக்கும் எந்த செயலையும் செய்யாதே. 
Meaning: Do not do anything that may hurt (self & others)

October 07, 2013

புதுச்சேரி எக்ஸ்ப்ரஸ்

அக்டோபர் - 1. என்னுடன் வேலைப் பார்த்த ரகுவீர் தரிமலா வீட்டில் நன்றாய் சாப்பிட்டேன். எதற்கு இந்த செய்தி ? இறுதியில் சொல்கிறேன். இரவு 10:35க்கு க்ருஷ்ணராஜபுரம் வரவேண்டிய புதுச்சேரி எக்ஸ்ப்ரஸ் சற்றுத் தாமதமாக 11 மணிக்கு வந்தது. S4 பெட்டியில் 49ஆம் படுக்கை எனக்கு.

(நன்றி: வலையுலகம்) 

நான் ஏறும் போது சிலர் அவர்களுடைய பெயர்களை பெயர்ப் பலகையில் இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் பெயர்கள் இல்லை என்று சற்றுக் குழம்பினார்கள். நான், அது தாதர்-இல் இருந்து வரும் சாலுக்யா எக்ஸ்ப்ரஸ். ஆதலால் அங்கு பெங்களுரில் இருந்துப் புதுவைச் செல்லும் பெயர்ப் பட்டியல் இருக்க வாய்ப்பு குறைவு என்று ஆங்கிலத்தில் சொன்னேன். அந்த பொன்னு என்னப் பாத்து யா யா`னு சொல்லிட்டு ஏறினாள். அந்த பொன்னு ரொம்ப நல்ல இருந்தா. நவீன உலகுத்துப் பெண் போன்று ஒரு தோற்றமும் பேச்சும் இருந்தாலும் அவளிடம் இருந்த அடக்கும் தேவையான அளவு நாணமும் மரியாதையும் அவளிடம் ஒரு நல்ல எண்ணத்தை உறுவாக்கியது. பரவா இல்லையே நம்ம பெட்டிலக் கூட பாக்க லக்‌ஷனமா இருக்குரப் பொன்னுங்க ஏறுதேனு நெனச்சுக்குட்டு ஏறினேன். எப்படியும் நம்ம கம்பார்ட்மேன்ல வரமாட்டாங்கனு (ஏன்னா அப்படி ஒரு ராசி/அனுபவம்) மனச தேத்தினு சென்றேன். அந்த மூன்றுப் பெண்கள் என்னோட கம்பார்ட்மேன்ல நின்றுக்கொண்டு அவர்களுடைய சாமான்களை கீழ்ப் படுக்கையின் கீழ் வைத்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களுடன் மூன்றுப் பசங்களும் இருந்தார்கள். எனக்கு ஒரு மெல்லிய சந்தேகம் இருந்தது. ஒரு வேலை அந்தப் பொண்ணுங்க பக்கத்து கம்பார்ட்மேன்ல படுத்துக்கப் போதுங்கனு. ஆனா அவுங்க அங்கேயே இருந்தாங்க ஒரு பத்து நிமிஷம். எதிர்ப்பார்க்காதப் போது தான் கடவுள் கொடுப்பார் என்பார்களே அதுப் போல் அமைந்தது. எனக்கு பயங்கரச் சந்தோஷம். இருப்பினும் ஒரு மெல்லிய சந்தேகம் இருந்துக்கொண்டே இருந்தது. ஏன்னா அந்தப் பொண்ணுங்க கொஞ்ச நேரம் அரட்டை அடித்து விட்டு எப்ப வேண்டுமானாலும் கிளம்பலாம். நாகமணிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் - தல. காட் இஸ் க்ரேட் தல. ஐ அம் ஆல் ஸ்மைல்ஸ். ய ஆவ்சம் க்ஏல் இன் தி ட்ரைன். ஜஸ்ட் ஸ்போக் டு ஹர் வைல் சீன்ங் நேம் இன் சார்ட் லிஸ்ட். ஆர் நேம்ஸ் வெர் தெர். ஐ ஹவ் ய லாஜிக்கல் எக்ஸ்ப்ப்லனேஷன் தட் இட் இஸ் ஃப்ர்ம் தாதர். சோ இட் மைட் நாட் பி தெர். டு யு நொ தீ பெச்ட் திங். ஷி இஸ் இன் மை கம்பார்ட்மேண்ட் தட் இஸ் வித்-இன் தி 6 சீட்ஸ் இன் தி பாக்ஸ். :D நாகமணிக்கு மற்றும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் - இத்தன வாட்டி ட்ரைன்`ல வந்துருக்கேன். இவ்லோ மாடர்னா க்லாசியா ஒரு பொன்னு வாய்ப்பே இல்ல. தே ஆர் ப்லேயிங் டம்-சி :) அவர் எனக்கு ஒரு பதில் குறுஞ்செய்தி அனுப்பினார் - :) என்ஜாய் பாஸ். அம் சிட்டிங் நெஸ்ட் டு 70இயர் ஒல்ட் தாத்தா.

ரயில் வரும் வேளையில் நான் என்னுடன் முன்பு வேலைப் பார்த்த ஜகதீஷிடம் பேசிக்கொண்டு இருந்தேன். ரயில் வந்ததால் அழைப்பை துண்டித்து விட்டேன். மேற்ச் சொன்னவர்கள் என்னுடன் பயணம் செய்துக் கொண்டு இருந்தும் நான் ஜகதீஷுக்கு மறுபடியும் அழைத்து சிறிது நேரம் பேசினேன். இவர்களோ டம்-சி எனப்படும் ஒரு செய்கை விளையாட்டினை ஆடிக் கொண்டு இருந்தனர். அவர்கள் மிக சுவாரச்யமாக மகிழ்ச்சியுடன் விளையாடினார்கள். அவர்களுடையக் கேலிகள் என்னை கவர்ந்தன. என் மனம் ஜகதீஷின் பேச்சில் இல்லை என்பதே உண்மை. அவன் பேச்சு எனக்கு நன்றாய்  ஒலித்தப் போதும், ரயில் வேகமாய் செல்கிறது எனக்குக் கேட்கவில்லை என்று செல்லப் பொய்ச் சொல்லி அழைப்பை நிறைவு செய்தேன் (அவனுக்கு கல்யானம் உறுதியானதால் அவனுக்கு அங்கு ஒருவர் காத்திருந்தார் என்பதாலும் நான் அவசரமாக  நிறைவு செய்தேன்). சேவியர் அழைத்தான். அவனிடமும் ஒரிரு வாரத்தைகள் பேசி, இங்கு சில முதன்மையானவர்கள் இருக்கிறார்கள் என்று  நிறைவு செய்தேன். பிறகு `The Sunlith Path' என்கிற ஒரு புத்தகத்தைப் படித்தேன். கொஞ்சப் பக்கங்களை படித்துக் கொண்டு இருந்தேன். ஆனால் மனமெல்லாம் டம்-சி-யில் அல்லவா இருந்தது. (இதில் ஒன்றும் வியப்பில்லை).

(நன்றி: வலையுலகம்)

அவர்கள் உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தார்கள். என் மனமோ அவர்களிடம் தான் இருந்தது என்று முன்பே கூறினேன். அப்போது எனது காதில் நாப்பது என்று கேட்டது. என்னடா இது, இதுவரைக்கும் தமிழ் வார்த்தையே இவர்களுடைய விளையாட்டில் வரவில்லையே என்றப்பின் அவர்களின்  விளையாட்டை நோக்கினேன். அப்ப ஒருவன் நமாஸ் செய்வதுப் போல் காண்பித்துக் கொண்டு இருந்தான். நான் நாப்பது என்பதை வைத்து இது "அலிபாபவும் 40 திருடர்களுமா" என்றேன். அவன் ஆம் என்றான். அப்ப அந்தப் படத்தின் பெயரை கண்டுப்புடிக்க முயற்சித்த பெண் அவள் உள்ளங்கையை என் உள்ளங்கையில் அடிக்க அவள் விரல்கள் வானத்தை நோக்க காண்பித்தாள். நான் என் உள்ளங்கையை அவள் உள்ளங்கையுடன் லேசாக தட்டி வெற்றி வெற்றி என்றவாரு மகிழ்ந்தோம். நீங்களும் ஆட்டத்துல சேந்துக்கோங்க`னு அவுங்க கூப்பிடாங்க. நான் எனக்கு விளையாட தெரியாது. நான் வேண்டுமானால் படத்தின் பெயர்களை சொல்கிறேன். நீங்கள் உங்கள் ஆட்டத்திற்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றேன்.  நாகமணிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் - ஐ அம் ஆல்சோ ப்லேயிங் டம்-ஷராஸ் என்று.

புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். அவர்களுடன் சேர்ந்து நானும் தமிழ்ப் படங்களுக்கு மட்டும் யூகித்தேன். ஒரு பெண் மலையாளம் என்பதை அறிந்துக்கொண்டேன். சரி நீங்கள் நீளத் தாமரா என்ற படத்தின் பெயரை இவர்களுக்கு நடித்துக் காண்பியுங்கள் என்றேன். அவங்களும் காண்பித்தார்கள். இவர்கள் எளிதாகக் கண்டுபிடித்தார்கள். பிறகு ஒருவன் ஒரு மூன்று வார்த்தை திரைப்படம் என்றான். கடைசி வார்த்தை வாலிபன் என்று கண்டுப் பிடித்தார்கள். உலகம் சுற்றும் வாலிபன் என்றோம். இல்லை. இரண்டாவது வார்த்தை அரண்மனை என்று செய்கை காண்பித்தான். சற்று குழம்பினோம். நான் கோட்டையா என்றேன். ஆம் என்றான். வஞ்சிக் கோட்டை வாலிபன் ? ஆம். சரியான பதிலை சொல்லி அவர்கள் மனதில் ஒரு சந்தோஷத்தை உண்டாக்கினேன். அவர்கள் ஹே ஹே ஹே என்று கோஷமிட்டார்கள். :) அவர்களுக்கு வஞ்சி என்றால் பெண் என்று பொருள் கூறி, பெண்களின் கோட்டையில் வாலிபன். அது நம் காதல் மன்னன் ஜெமினி என்று கூறினேன். அவர்கள் துத்துதுத்துது என்று உச்சுக் கொட்டினார்கள்.

(நன்றி: வலையுலகம்)

"முதல் மரியாதை" படத்தைப் பரிந்துரைத்தேன். அவர்கள் அதை உடனே கண்டுப்பிடித்து விட்டார்கள். அவர்கள் என்னை ஒரு படத்தின் பெயரை செய்கை செய்து காண்பிக்க சொன்னார்கள். இல்லை எனக்கு நடித்து காண்பிக்க தெரியாது என்று பவ்யமாக மறுத்துவிட்டேன். அவர்கள் இல்லை பரவாயில்லை முயற்சி செய்யுங்கள் என்றார்கள். ஆனால் மனதில் ஒரு சிறிய ஆசை செய்து காண்பிப்போமே என்று. மனதை மாற்றிக்கொண்டேன். செய்து காண்பிக்கலாம் என்று வந்தேன். அங்கு பலர் ஆர்வமாய் இருந்தனர். அதைக் கண்டு எனக்கு ஒரு அச்சம் உருவாயிற்று. ஆதலால் இல்லை எனக்கு நடிக்க வராது என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு சில ஆங்கில படங்கள் "அப் இன் தி எர்", "ஆல் அப்போட் உமென்" (அது "ஆல் அப்போட் மதர்ஸ்") மற்றும் 'கல்யானம் பன்னியும் ப்ரம்மச்சாரி" படங்கள் பெயரை என்னுடன் இருந்த சென்னை பெண்ணிடம் கூறினேன். அவுங்க ப்ரம்மச்சாரி, பன்னியும் ஆகிய வார்த்தைகளை கண்டுப்பிடிப்பதில் கொண்ட மெனக்கேடல் ஒரு அலாதி. ஆக மொத்தம் இந்த டம்-சி ரொம்ப நல்லா போச்சு. இதுக்கு முன்னாடி அரிசெண்ட்’ல வெள்ளிக்கிழமை மதியம் சில வாரங்கள் டம்-சி விளையாடி உள்ளோம். இன்றும் ரொம்ப நல்லா இருந்துச்சு. நம்மளும் நடிச்சுக் காண்பிக்க ஒரு நல்ல வாய்ப்ப நம்ம தவர விட்டுடோமேனு தோணுச்சு. நம்ம எதுக்கு இன்னும் இந்த கூச்சமெல்லாம் வைத்துக்கொண்டு இருக்குரோம். நாளை போய் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்கப் போரோம். இன்னும் இப்படி இருக்கோமேனு இருந்துச்சு.

பிறகு அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் எங்கு எதற்கு செல்கிறார்கள் என்று கேட்டேன். ஏன் என்றால், நான் செவ்வாய் அவர்களை சந்தித்தேன். புதன் காந்தி ஜெயந்தி என்றாலும், வியாழன் வெள்ளி விடுப்பு எடுத்து எங்க ஊரை சுற்ற ஒன்றும் பெரிதாக இல்லை. அவர்கள் சொன்னார்கள் அவர்கள் அசிம் ப்ரெம்ஜி பல்கலைகழகத்தில் எம்.ஏ எஜுக்கேஷன் படிக்கிறார்களாம். ஆதலால் அரசுப் பள்ளிகளில் ஒரு துறையில் ஆய்விற்காக (Field Study) வந்துள்ளார்களாம். குறிப்பாக ஆசிரியர்களிடம் நேர்காணல் எடுப்பார்களாம், வேண்டுமென்றால் பெற்றோர்களுடம் கலந்துரையாடுவார்களாம். வந்தவர்களில் சித்தார்த் என்பவன் சென்னைவாசி, ஒருவன் மதுரை, ஒருவன் கேரளாவில் மனப்புரம், ஒரு பெண் பஞ்சாப் மாநிலம், ஒரு பெண் சென்னை - ஆனா தமிழ் கொஞ்சம் கஷ்டபடுது (ஆங்கிலம் சரளம்), ஒரு பெண் கேரளம். இவர்கள் அனைவரும் மிக கண்ணியமாக அவர்களுடன் பழகிக்கொண்டு வந்தார்கள். பார்க்கவே நன்றாய் இருந்தது.  1 மணி ஆயிற்று. இரண்டு மணி நேரம் எப்படிச் சென்றது என்றே தெரியவில்லை. ஆனால் மிக மிக அருமையாக சென்றது.. சரி எங்க தங்கப் போரிங்க என்றேன். அவர்கள் ரெட்டியார்ப்பாளையம்’ல விடுதி ஒன்றை அவுங்க அசிம் ப்ரேம்ஜியோட புதுவை செயல்பாட்டு உழியர்கள் ஆயத்தம் செய்து உள்ளதாக சொன்னார்கள். ஆட்டோக்கு எவ்ளோ ஆகும்னு கேட்டாங்க. நான் ஒரு 200 கேட்க வாய்ப்பு இருக்கு என்றேன். எங்க போலாம்னு சித்தார்த் கேட்டான். பாண்டி’ல எப்போதும் போல் ஆரோவில், ஆஷ்ரம், மனக்குள் விநாயகர் கோவில், சுன்னாம்பார் போகலாம். நீங்க வேணும்னா சிதம்பரம் பக்கதுல பிச்சாவரம் போய்ட்டுவாங்க. ஒரு அறை நாள் ஆகும்னு சொன்னேன். சிறிது நேரம் பிறகு எல்லாரும் தூங்கலாம் என்றார்கள். எல்லோரும் உறங்கினார்கள். நானும்.  (குறிப்பு: நான் எப்போதும் ட்ரைனோ பஸ்-ஓ - ஏறி உட்காந்த உடனே தூங்கிருவேன்)  நாகமணிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் - அந்தப் பொன்னு மல்லூ பொன்னு. வெரி நைஸ் நைட். ஐ ஹட் ய ஹெவ்வி டின்னர். இன் ஸ்பைட் ஆப் தட் ஐ டிண்ட் கெட் ஸ்லீப் ;)

(நன்றி: வலையுலகம்)

காலை 6:30 மணிக்கே எழுந்துவிட்டேன். அந்த மல்லூ பொன்னு சைடு லொயர் உட்கார்ந்துனு வேடிக்கைப் பார்த்துனு வந்துச்சு. விழுப்புரம் வந்த உடனே நான் போய் வாயக் கொப்லிச்சுட்டு நாகமணிக்கு ஒரு ப்பொணப் போட்டேன். இரவு நடந்தையேல்லாம் கூறினேன். அவுரு என்ன சொன்னாருனு மறந்துட்டேன். ஆனா அவுரு 30 வருஷமா நானும் எத்தனையோ ரயில் பயணங்களில் சென்று வந்துள்ளேன்.  ஆனா இந்த மாதிரி ஒன்னுக் கூட நடத்து இல்லைனு பீல் பன்னார். வாழ்க்கைல இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷக்குதுக்கு தானே இந்த சின்ன மனசு ஏங்குது. FB'க்கு ஒரு குறுஞ்செய்தி தட்டினேன் - லாஸ்ட் நைட்ஸ் ட்ரைன் ஜர்னி - ஈஸிலி தி பெஸ்ட் ட்ரைன் ஜர்னி சொ ஃபார்.

(நன்றி: வலையுலகம்)

விழுப்புரத்தில் ஒரு காப்பி அடித்து விட்டு மறுபடியும் ஏறினேன். (குறிப்பு: நான் எப்போதும் விழுப்புரம் தாண்டி புதுவைக்கு 15நிமிடம் முன்னாடி தான் எழுந்துப்பேன்) அப்போது, மறுபடியும் விட்ட இடத்தில் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். அந்த மல்லூ பொன்னு சைடு லோயர்’ல எதிர்ப் பக்கம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள். நான். எதுவும் பேசவில்லை. ஒரு 25 நிமிடம் கழித்து நீங்க கேரளால எந்த ஊரு ? நான் உட்டப்பலம் (Ottappalam)’னு சொன்னா. ஓ! அது எங்கே ? பாலக்காடு பக்கத்துல. ஓ! நான் பாலக்காடுக்கு என் ஃப்ர்ண்டோட கல்யானத்துக்கு வந்து இருக்கேன்’னு சொன்னேன். ஓ அப்படியா என்றாள். கொஞ்ச நேரம் கழித்து ஒரு சில வீடுகளையும், ரயில்வே கடப்புகள் (க்ராசிங்ஸ்) நகரப்புரம் வந்துவிட்டது போல் ஒரு எண்ணம் தனை உண்டாகிற்று. எனக்கு அச்சம். என்னடா 8 மணிக்கு தானே இந்த ரயில் புதுவையை சென்றடையும். இதென்ன 7:45க்கு விற்கெல்லாம் புதுவை வந்து விட்டது என்று. அந்தப் பொன்னு கிட்ட இன்னும் கொஞ்ச நேரம் பேச்சுக்கொடுக்கனும் போலைய இருந்துச்சு. பாவி ரயில் 20 நிமிஷம் முன்னாடியே வந்துருச்சு அன்னிக்கு. அம்மாக்கு எங்க இருக்கேள் என்று ப்போன போட்டேன். 7:45’க்கே வந்துருச்சா. 8 மணிக்குத்தானே வரும் என்றார்கள். புதுவை இரண்டாவது ரயில் நடைமேடையை வந்தடைந்தது புதுச்சேரி எக்ஸ்ப்ரேஸ். அந்தப் பொன்னு மத்தவங்கள எழுப்பிச்சு. (எச்சரிக்கை: நான் சொல்லப்போவது சிலருக்கு வயத்து எரிச்சலை உண்டாக்கி, இதய எரிச்சலை உண்டாக்கி, மாரடைப்பே வரக்கூடும்) என்னிக்கி ரிட்டன் என்றேன். அந்தப் பொன்னு அக்டோபர் -15 என்றாள். எனக்கு கடந்த சில நாட்களில் விழுந்த மிக இனிமையான செய்தி அதுவே என்று பரவசமடைந்தென். ஏன் என்றால் அக்டோபர் -15 அன்று கொலு பொம்மைகளை எடுத்து பரன்மேல் வைத்துவிட்டு கிளம்புவது என்று ஒரு இரண்டுமாதம் முன்பே திட்டம் செய்து உள்ளேன். எல்லாரும் எழுந்த உடன் ஹவ் ய நைஸ் ஸ்டே. என்ஜாய்னு சி யூ என்று கிளம்பினேன். அவர்களும் த்ன்க்யூ என்றார்கள். நான் கட கட வென்று வெளியே வந்து அம்மாவுக்காக காத்திருந்தேன். அவர்கள் சிறிது நேரம் கழித்து வந்தார்கள். அவர்களே ஆட்டோப் பார்த்துக்கொண்டு ஆட்டொவில் ஏறினார்கள். அவ்வளவு என்று கேட்டேன் 100 என்றார்கள். பிறகு அம்மாவுடன் அவர்கள் சென்றப் பாதையில் அவர்கள் பின்னால் தாவரியல் பூங்கா வரை சென்றேன். (குறிப்பு: வழக்கமாக நான் மகாத்மா காந்தி ரோட் வழியாக இந்தியன் காப்பி ஹொஸ் சென்றுவிட்டு செல்வேன்). அவர்கள் இடபக்கம் ரெட்டியார்பாளையம் சென்றார்கள். நான் வலப்பக்கம் ராஜா தியேட்டர் பக்கம் சென்றேன். பின்பு அல்லாவற்றையும் அசைப்போட்டுக்கொண்டு சென்றேன். சேவியர், நம்பினு எல்லார்க்கிட்டேயும் சொன்னேன். நேத்து ரயில்’ல வசந்துகிட்ட முழுசா சொன்னேன். FB-ல போட்டேன். நாகமணி மெய்ன் கரக்டர்ஸ் நரேஷன் மிஸ்ஸிங்னு கம்மண்ட் பன்னார். அவருக்காக ஒரு சிறு குறிப்பு கொடுத்தேன். ட்ரைன விட்டு இறங்கியப்பின் அல்லவா தோன்றியது அந்தப் பெண்ணிடம் நெல்லியம்ப்பதி பத்திப் பேசி இருக்கலாம். இப்போது  அவர்களுடைய நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டு அக்டோபர்-15’க்கு சாலுக்யா எக்ஸ்ப்ரஸில் அவர்களுக்காக காத்திருக்கிறேன்.  குறிப்பு: உண்மையிலேயே எனக்கு சித்தார்தோட பெயரைத் தவிர வேறு யாருடைய பெயரும் தெரியாது. கேட்கவுமில்லை).

பி.கு (16-அக்டோபர்) - 15-அக்டோபர் அன்று புதுச்சேரியில் இருந்து பெங்களுரு செல்கையில் அவர்களை மீண்டும் கண்டேன். அவர்களில் இரண்டு ஆண்கள்  (மற்றும் ஒரு புதிய நபர்) மட்டுமே இருந்தனர் . மற்ற நான்கு பேர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று அப்படியே பெங்களுர் வருவதாக அவர்கள் திட்டத்தை மாற்றி கொண்டனர். அந்த ஒரு நபரின் பெயரை கேட்க எனக்கு ஆவலாய் இருந்தது. ஆனால் கேட்பது ஒழுக்கம் அல்ல என்று கேட்க கூடாதென்று இருந்துவிட்டேன். பின்பு இரண்டு மணி நேரம் கழித்து அந்த பசங்க எதேர்ச்சய்யாக ஒருவர் பெயரை பேசிக்கொண்டாட்கள் (ஒட்டப்பலம் சென்ற வழியை பற்றி). ஒட்டப்பலம் ப்ரீத்தா, மதுரை தாமரைச் செல்வன், மனப்புரம் ரபிக், சென்னை சித்தார்த் (மற்ற இருவர் பெயர் தெரியவில்லை)

கேள்வி முயல்.
பொருள்: கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய் 
Meaning: Listen to good advice/techniques from knowledgeable/ experienced person

September 10, 2013

ஊக்கம்

"இந்த விதை தன் மேல் கிடந்த பாறைகளை முட்டி முட்டியே முளைத்தது" - இந்த வரியை இன்று நான் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் (Thamizh Pechu Engal Moochu : Sep 8, 2013 - கடைசி 10 நிமிடத்தில் வரும்) கேட்டேன். நரம்புகள் சிலிரிக்கும் படியாக இருந்தது. எனது வாழ்க்கையில் குறிப்பிட்ட காலம் வரை மேற்சொன்னவாரு தான் இருந்தது. இன்று என் மேல் எனக்கு கேள்விகள் அதிகம் உள்ள இந்நாட்களில் இந்த வாக்கியம் மிகுந்த உத்வேகத்தை தருகிறது.

September 06, 2013

யாவரும் கேளிர் - கடிதம்


எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள் பரிந்துரைத்த யாவரும் கேளிர் சிறுகதையினை படித்தபின் அவருக்கு நான் எழுதிய மடல்.

யாவரும் கேளிர்  => http://www.jeyamohan.in/?p=36570

அன்புள்ள திரு.ஜெ  மற்றும் திரு.சிவா-கிருஷ்ணமூர்த்தி,

இன்று இந்த யாவரும் கேளிர் சிறுகதையினை படித்தேன். ஒரு சிறிது நேர சந்திப்பில் ஒரு பெரிய உண்மையினை உணர்ந்தேன். கதை மிக நன்றாக இருந்தது. 

இது போன்று ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு என் வாழ்வில் ஒரு தொலைப்பேசி உரையாடலில் என்னுள் இருந்த ஒரு உண்மையை உணர்ந்தேன் களைந்தேன். உங்களிடம் அதை (நேரம் கருதி முக்கியமான 2-3 கேள்விகளை மட்டும்) பகிர்ந்துகொள்ள எண்ணுகிறேன். 2010`இல் எனது தோழியுடன் பல மாதங்கள் கழித்து தொலைப்பேசியில் உரையாடுகையில் அவள் தனது மேற்படிப்பு பற்றி என்னிடம் பேசினாள். அவள் வீட்டில் அவளுக்கு வரன் பார்த்து கொண்டு இருப்பதனால், அவளிடம் கேட்டேன் உங்க வீட்ல வரன் பார்க்கிறார்கள், நீ படிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறாய். இரண்டும் ஒன்றாய் நேர்ந்தால் என்ன செய்வாய் ? அவள் அதற்கு என்னிடம் கேட்டாள் `அவுங்க(வருங்கால கணவர்) கல்யாணம் ஆனா பிறகு யு.ஸ்`ல படிக்க அனுமதிப்பார்களா? சொல்ல முடியாது. எல்லாரும் அதற்கு சம்மதிப்பார்களா என்று. அதற்கு அவள் பதில் கேட்டாள், அப்ப என்ன கல்யாணம் ஆனா புள்ள பெத்துப் போட்றத்துக்குத் தானா ? ஒரு 10 வினாடி என்னை நடு மண்டையில் குட்டியது போல் இருந்தது.  பின்பு சில நாட்கள் என்னை நான் வெளியில் இருந்து கண்டேன். என்னுள் இருந்த ஒரு குறுகிய மனப்பான்மை நான் கண்டுக்கொண்டேன்.  அதுவரையில் பெண்கள் கல்யாணம் ஆன பிறகு  படிக்க ஆசைப்பட்டால் ஒரிரு ஆண்டுகள் பிறகு படிக்கலாம் என்றே மனதில் பதிக்காத ஒரு எண்ணமாக இருந்தது என்னில் இருந்தது. அன்று முதல் பெண்கள் மீதான பார்வையை நான் மாற்றிக் கொண்டேன். 

யாவரும் கேளிர் எழுதிய திரு.சிவா-கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.அதனை தனது இனையத்தளத்தில் பரிந்துரைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி. 

Best,
Rajesh
http://rajeshbalaa.blogspot.in/
FandFstores.com

மெல்லி நல்லாள் தோள்சேர்.
Meaning: Never cheat on your wife

September 03, 2013

அவளது வாசனை - குறுந்தொகை

வெளியே மழை
உள்ளே மின்சாரமில்லை
மெழுகு வற்தியுடன் குறுந்தொகை
கண்மூடி திறந்தேன்
இப்பாடல் வந்தது
இதோ . . .

168. பாலை - தலைவன் கூற்று

மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை
இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து
பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன
நறுந்தண் ணியளே நன்மா மேனி
புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள்
மணத்தலுந் தணத்தலு மிலமே
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே.
-சிறைக்குடி யாந்தையார்.

விளக்கம் (சுஜாதவின் குறுந்தொகை - ஒரு எளிய அறிமுகம் புத்தகத்தில் இருந்து).

(அவளது வாசனை)
மழையில் மலரும்
பிச்சிமலர்களின்
நனைந்த அரும்புகளை
பனங்குடையில் சேகரித்து
மழை பெய்யும் விடியற்காலையில்
விரித்துவிட்டது போல
மணக்கும்
அந்தப் பெண்ணின் தோளை
அணைக்கவும் முடியவில்லை
பிரியவும் முடியவில்லை
பிரிந்தால் உயிர் வாழ்வது
அதனினும் இல்லை

Meaning: Never cheat on your wife

பொய் - பாரதி

பொய் சொல்வதை பற்றி நகைச்சுவையாக ....

பானையிலே தேளிருந்து
பல்லால் கடித்ததென்பார்
வீட்டிலே பெண்டாட்டி
மேல்பூதம் வந்ததென்பார்
பாட்டியார் செத்துவிட்ட
பன்னிரண்டாம் நாளென்பார்
   --- மகாகவி சுப்ரமணிய பாரதியார்

(தேள் பல்லால் கடிக்காது, பெண் மேல் பூதம் வராது, பன்னிரண்டாம் நாளென்று `காரியங்'களில் கிடையாது)

September 02, 2013

சில திரைப்பதிவுகள்

யார் பாரதி ?

1) நெல்லை கண்ணன்


2) பாரதி பாஸ்கர் & பட்டிமன்றம் ராஜா



சிந்திப்போம் - நெல்லை கண்ணன் @ ஈரோடு புத்தக கண்காட்சி
(மொத்தம் - 10 திரைப்பதிவுகள்)

August 18, 2013

காதல் - பாரதி

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால்,காதல் செய்வீர்;உலகத்தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்.
   --- மகாகவி சுப்ரமணிய பாரதியார்

August 15, 2013

ஆங்கில கல்வி - பாரதியின் பார்வை

கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்,பின்
கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்;
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்தி ருக்கும் கவிளம் காண்கிலார்;
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்;
வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்
துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள்
சொல்லு வாரெட் டுணைப்பயன் கண்டிலார். 23

கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
காளி தாசன் கவிதைபு னைந்ததும்,
உம்பர் வானத்துக் கோளை மீனையும்
ஓர்ந்த ளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்,
நம்ப ருந்திற லோடொரு பாணினி
ஞால மீதில் இலக்கணங் கண்டதும்,
இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்
இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும், 24

சேரன் தம்பி சிலம்மை இசைத்ததும்,
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்,
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார ளித்ததும் தர்மம் வளர்த்ததும்,
பேரு ருட்சுடர் வாள்கொண் டசோகனார்
பிழைப டாது புவித்தலங் காத்ததும்,
வீரர் வாழ்த்த மிலேச்சர்தந் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும். 25

அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;
முன்னர் நாடுட திகழ்ந்த பெருமையும்
மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார்
பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்;
என்ன கூறிமற் றெங்ஙன் உணர்த்துவேன்
இங்கி வர்க்கென துள்ளம் எரிவதே! 26

--- மகாகவி சுப்ரமணிய பாரதியார்

குறிப்பு -
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;

என்பதனை கீழ்வருமாறு படிக்கவும்
    அன்ன யாவும் அறிந்திலர்  பாரதத்து
    ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்

நன்றி - http://temple.dinamalar.com/news_detail.php?id=8149 

தொன்மை மறவேல்.
Meaning: Don't forget antiquity 

August 07, 2013

இனி

இனி எனது பெஸ்புக்-இலோ அல்லது மற்ற தளங்களிலோ சினிமா, அரசியல் போன்ற பொருள் அற்ற (விவாத) மேடைகளில் நான் பங்கேற்க மாட்டேன் என்று உறுதி பூண்டு உள்ளேன்.

August 06, 2013

When you are away Nothing to tell as Life

ஏன் என்று தெரியவில்லை நேற்று காலை வண்டியில் அலுவலகம் செல்லும் பொழுது இப்பாடலை வாய்விட்டுப் பாட ஆரம்பித்தேன். ஆனால் கடந்த இரு நாட்களாக இப்பாடலை மனதுள் பாடிக்கொண்டே இருக்கிறேன். நெஞ்சின் மிக அருகில் உள்ள சில வரிகள் இதோ. 

நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை;
தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை;

ஜீவன் வந்து சேரும் வரும் வரை தேகம் போல் நான் கிடப்பேன் ;
தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்.

நித்தம் சொல்வேன் என்னுள் அவள் இருக்கிறாள். அவளை தவிர வேர் யாரும் இப்பாடலில் எனக்கு தெரியவில்லை.

(முழு பாடல்)
வண்ணம் கொண்ட வெண்ணிலவே ;
வானம் விட்டு வாராயோ;
விண்ணிலே பாதை இல்லை ;
உன்னை தொட ஏணி இல்லை ;

பக்கத்தில் நீயும் இல்லை ;
பார்வையில் ஈரம் இல்லை;
சொந்தத்தில் பாஷை இல்லை ;
சுவாசிக்க ஆசை இல்லை ;

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் மில்லை;
நீலத்தைப்  பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை;
தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை;

வண்ணம் கொண்ட வெண்ணிலவே ;
வானம் விட்டு வாராயோ;

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன்;
நங்கை வந்து சேர வில்லை நட்சத்திரம் வாடுதடி;

கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன் ;
ஜீவன் வந்து சேரும் வரும் வரை தேகம் போல் நான் கிடப்பேன் ;
தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்.


பாடல் ஆசிரியர்: வைரமுத்து.
பாடி இயற்றியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியன்
திரைப்படம்: சிகரம்
பாடலின் ஒளிப்பதிவு இணைப்பு: http://www.youtube.com/watch?v=e7fXQrIg21o

August 01, 2013

அறம் - திரு.ஜெயமோகன் (Aram by Jeyamohan)

கடந்த சில நாட்களாக திரு.ஜெயமோகன் அவர்களின் ”அறம்” என்கின்ற சிறுகதைகள் தொகுப்புப் நூலினை வாசித்து வந்தேன். நான் வாசித்த சில நூல்களில் சிறந்த நூல்களில் இது முதன்மை பெரும். இச்சிறுகதைகள் அனைத்துக்கும் மையச்சரடு என்பது இவை உண்மை மனிதர்களின் கதைகள்தான் என்பதே. அனைத்தையும் விட மேலாக இக்கதைகளில் காண்பது இன்னொருவரிடம் தொற்றிக்கொள்ளக்கூடிவை.

ஒரிரு கதைகள் தவிர் மற்றவை யாவும் எனக்கு மிக மிக பிடித்தது. அறம், சோற்றுக்கணக்கு, யானை டாக்டர், நூறு நாற்காலிகள், உலகம் யாவையும், ஓலைச்சிலுவை, பெருவலி, வணங்கான்,  மெல்லிய நூல், தாயார் பாதம் ஆகியவை கண்டிப்பாய் படிக்கபட வேண்டியவை. அதிலும் அறம், சோற்றுக்கணக்கு,  யானை டாக்டர், நூறு நாற்காலிகள், உலகம் யாவையும் ஆகிய ஐந்து சிறுகதைகளும் என்னை நிமிரச்செய்து படிக்க வைத்தவை.

இந்நூல் என்னுள் ஒரு வேற் ஒர் பரிமாணத்தை போர்த்தியுள்ளது. அதனின் தாக்கம் என்னில் இருந்த பல கேள்விகளுக்கு நன்விடையை தேடி செல்லும் பாதையை வகுத்து அதில் விளக்காய் ஒளிர்கின்றது.

’அறம்’தனை உங்களுக்கு மிகுந்த நன்மதிப்புடன் பரிந்துரை செய்கிறேன்.

இதனை நீங்கள் திரு.ஜெயமோகன் அவர்களின் வலையதளத்திலும் இலவசமாய் படிக்கலாம். http://www.jeyamohan.in/?page_id=17097(அறம் சிறுகதைகள்).

(Translation)
Last few days, I have been reading a short stories collection "Aram" [Idealism] by Jeyamohan. Among the books I have read, among the bests, this book will be in the top of the list. The main thread in all these stories is, it is based on real life stories. Most importantly, above all the traits seen in these stories can catch on us.

Except couple of stories, I liked every story very much. Among them, Aram [Idealism], Sotrukanakku [Food Accounts], Yaanai Doctor [Elephant Doctor], Nooru Naarkaaligal [100 chairs], Ulagam Yaavaiyum [Entire World], Olai siluvai [Palm Christ Cross], Peruvali [Big Pain], Vanangaan [Unbendable person], Melliya Nool [Mild book],  Thaayar Paadam [Feet of Mother] are must reads. Especially, Aram, Sotrukanakku, Yaanai Doctor, Ulagam Yaavaiyum hit me hugely. 

This book has blanketed a different perspective upon me. Its impact has paved way, as well as serving as  a lamp, towards the answers for plenty of questions I have for a long time. 

With huge regards, I highly recommend 'Aram'.

You can read all these short stories in Jeyamohan's website itself.  
http://www.jeyamohan.in/?page_id=17097

(click to view original size)


வீடு பெற நில்.
Meaning: Stand to gain Liberation
முக்திக்கான வழியை அடைய முயற்சி செய்ய வேண்டும்

July 22, 2013

Do you think, like others, I'll fall down ?

The below poem by Mahakavi Subramaniya Bharathiyar is one of the best poems I have read. These lines take us to give a deep thought about our actions. It is highly inspiring to lead a meaningful life. I am striving hard to make a positive change for myself but others.

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...

              - மகாகவி சுப்ரமணிய பாரதியார்

Translation:
Searching for and having food daily,
And chattering with lots of small talk,
With the mind suffering in pain,
And your deeds making others suffer as well,
Then you age and become old ,
And face the grim reaper in death.
Like lots of other people,
Do you think I'll fall down?

I shall ask you a few boons ,
You shall directly grant me those.
Any evil deeds in my past and their effects,
Shall not come back to life again.
Hereby shall I be given a new life
With no worries for me.
Give me a clarity of thought ,
And making me happy forever.
- (Originally poem written by) - Mahakavi (Great Poet) Subramaniya Bharathiyar

Translation Courtesy: Thought Trickles

Translation 2: (Courtesy: Dhilip Shiva/newmaldentamilschool.org.uk)
Search! Search for food every day!
Speak! Speak of unwanted things through out!
Worry! Worry myself with thoughts!
Hurt! Hurt others in the way of pointless things!
Get! Get old day by day!
Die! Succumb to vileness, die and finally go without a trace!
I am not them! I am not you(them)!
Don’t you ever dare to think that, I would give up! I never give up! ​

பொருள்தனைப் போற்றி வாழ்.
Meaning: Do not spend naively. Protect and enhance your wealth.

June 17, 2013

ஆனந்த யாழை மீட்டுகிறாள் [She is playing the happy music]

At last, Nagamani, along with his family, visited our home at Pondicherry last weekend. And incidentally Sai Prithvi, as well, along with his family, made a quick visit to our home. Prithvi’s daughter Mrithika aka Meethu was a cute little kid just dancing on the road as any toddler does. She had fun in jumping over the small elevation of steps and getting down the steps at outer viewing point of Auroville. She was walking on the foot path easily but we have to go beyond her nevertheless I didn’t get tired by that. Those chirpy sounds that her shoes makes while she walks were more than music. She got easily attached to me and didn’t hesitate or cry much. When she smiles, those little tooth were pleasure to. And on Saturday evening, Nagamani finally arrived. His daughter Yaazhini (Yaalini) what an angel she is. She also easily got attached to me on the very first time I called her. Of course there were share of hesitation and cry but we could manage it. When we say her, pray God, she just looks up looking for the frames of God (as they used to be in their home). While her parents went inside the Aurobindo Ashram, she was sleeping me over my shoulders. Due to lack of such opportunities like that in my life so far, not sure when before a kid was sleeping like that on me. She sleeps, adjusts her head from left position to right position and over time slides down. That’s when I realized that, Oh! even for sleeping a kid we need to learn many techniques. But those 10-15 minutes was sheer joy for me. When in car, along with her mom, she would identify me, sitting in the back, and shake hands with me and when I decided to pull her back, she was willing to come but, at last moment, she changed her mind. Similarly, she was his father and I was going around near her. She quickly turned her head and changed her position. When enquired about it, I came to know that it is to safeguard that I don’t lift her from her father. What an intelligent girl. All these wonderful moments are really awesome and makes me envious of all fathers and mothers. Honestly, I was tempted to get married and quickly have a girl. But I said to myself - Tempting but not now. Last night, when I returned from Pondicherry to Bangalore, I listened to Anandha Yaazhai (from Thanga Meengal) at an altogether different level and it was awesome.

P. S: Both Sai Prithvi’s wife and Nagamani’s wife affirmed that their kids don’t go to a stranger immediately but they got attached to you so easily. I had to say “En kitta vara ellaa pon kozhandaigaloda petrorgal elaarume ippadi thaan solraanga” (All the parents of the kids tell me the same).

I must thank Sai Prithvi and Nagamani for having visited my home this weekend. It was great. 

Here below is the lyrics of the beautiful song Anandha Yaazhai (from Thanga Meengal)

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்,
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்.

இரு நெஞ்சம் இணைத்து பேசிட,
உலகில் பாஷைகள் எதுவும் தேவை இல்லை!
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்,
மலையின் அழகோ தாங்கவில்லை.

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி,
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி…

இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்,
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்.

தூரத்து மரங்கள் பார்க்குதடி,
தேவதை இவளா கேக்குதடி,
தன்னிலை மறந்தே பூக்குதடி,
காற்றினில் வாசம் தூக்குதடி – அடி
கோவில் எதற்கு ? தெய்வங்கள் எதற்கு ?
உனது புன்னகை போதுமடி !

இந்த மண்ணில் இது போல் யாரு இங்கே,
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் பூசுகிறாய் !

உன் முகம் பார்த்தால் தோணுதடி,
வானத்து நிலவு சின்னதடி,
மேகத்தில் வரைந்தே பார்குதடி,
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி,

அதை கையில் பிடித்து ஆறுதல்
உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லப்படி !

இந்த மண்ணில் இது போல் யாரும்
இங்கே என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் !
                                                                              - நா.முத்துக்குமார்


Meaning: Do not forsake good friends.

January 28, 2008

Thiruvaiyaaru Araadhana









It was a wonderful trip to Thiruvaiyaar, 161st Aradhana of Sri Thyagaraja.
All Pancharathna Krithis sung by all musicians and played by all instrumentalists along with the humming of the rasigas(im also one of the rasigas) was a treat to feel. On the trip to Thiruvaiyaru(15km from Thanjavur) we(myself(budding Violinist :-) and my friend Lourdu Xavier, budding(already few petals came out) Veena Vidwan) went to Brahadeeswar Temple

Here are few snaps of the trip