Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

Showing posts with label Myself. Show all posts
Showing posts with label Myself. Show all posts

February 20, 2019

2001

பல பொய்பிரச்சாரங்களையும்

உண்மையாக மறுத்தவனும்

இன்று அது

உண்மையாக இருந்திருக்கலாமோ

என்று நினைப்பானெனில்

......
போதும் போதும் ..

September 17, 2016

En route to Luxembourg where Next Adventure begins

Folks,


I am thrilled to start the next voyage in my career and life. I am heading to Luxembourg where I will work for Amazon as Sr.Product Manager in their Retail Leadership Development Program!



With lots of hopes, dreams, ambition and perseverance, I landed in this country USA - a typical destination for many middle class Indians. I joined the BYU MBA program which turned out to be the best investment I've made in my career. In this program I met many fabulous people and made life time friends. However, it has also been a journey of many ups-n-down and uncharacteristic self doubts. I am glad that I was resolute and stayed there.


I wished I could stay here for some more time. However, life has different plans in store for me. Amazon-Luxembourg was the only non-USA job I had applied only because it is Amazon. Fortunately, I got the job offer in their Retail Leadership Development Program. In early October, I will begin my new career.

As I leave this truly diverse country, I carry, incredible friends, fond memories n stories and many invaluable lessons. I am sure I would come back after a while for another stint here. Until then Good Bye to all my friends here and I will stay in touch!


I like to take this opportunity to thank many people who helped me unconditionally. The list is really long and I apologize if I miss anyone. I learnt at least one thing from every official/unofficial Sherpa or mentor or BYU alum. Thank you BYU MBA Class of 2016, 2015, BYU MBA Network, my core Team 6 of first semester, my core Team 8 and Adobe Field Study Team of second semester and my all other teams viz Brand, A/c Mgmt etc.,. Big shout-out to Abhishek Reddy, Andrew Kinji Watanabe,@Anil.Dhawan (Meetup mentor), Austin Bagley, Austin Johansen, Christie Clark Rasmussen, Danner Banks, Gary K Rhoads, Meghan Whalen, Nirmal Ganesh, Reid Clark, and Sravya Vankayalapati Susarla. Thanks to Angel-Sheila Martinez, Brady David Leavitt, @Chetan Prasad, Chetan Zawar, Dave Crosby, Elena Samuels, John Peterson, Jorge Omar Ramirez, Julia Tian Mann, @Kari Ann Sewell, Lahari Prabha(for showing the path of Amazon Europe), Mark Nugent, Scott K. Christofferson, Sreekanth Rajoli Raichur and so many others. :)

And apologies to many as I couldn't call you to inform before my departure because I got my visa only yesterday while my USA visa expires tomorrow.

நான் வருவேனு சொல்லு! திரும்பி வருவேன்னு .. 20-25 மாசத்துக்கு முன்னால எப்படி போனாரோ ..ராஜேஷ் அப்படியே திரும்பி வருவேன்னு சொல்லு!!

Love you all!!

Warm Regards
Rajesh

June 21, 2015

நினைப்பதெல்லாம் . . .

உளமார எழுத வேண்டிய தருணம் இது.

2013 எனது எம்.பி.ஏ கனவுகளில் ஆயுத்தமாகி எனது மனதை முழுமையாக அதற்கு ஒப்படைத்தேன். அதன் விளைவாக எம்.பி.ஏ-வுக்கு நுழைவுக்கிடைத்தது.  அப்போழுது 2014 ஏப்ரல்-ஜூலை ஒய்வு விடுப்பு நேரத்தில் கல்யாணம் பேச்சும் எண்ணமும் ஒலித்தது வீட்டிலும் மனதிலும். எனக்கு அவளின் முகமும் ஞாபகத்திற்கு வந்தது. அவளை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அவளுக்கும் எனக்கும் ஒற்றுமைகள் பல உண்டு. அப்படி இருவருக்கும் ரசனை, குறிக்கோள்கள் (சொல்ல போனால் அவளிடம் நான் நன்றாக பேசிய பொழுது அவளின் லட்சியங்களை கேட்டே அவள் மீது மதிப்புக் கொண்டு அவளின் நட்பு பாராட்ட விரும்பினேன்) உயர்வாக இருப்பதனால் இருவரும் வாழ நன்றாகவும் ஆனந்தமாகவும் இருக்குமே என்று நினைத்தேன்.

நினைவுகள் இருந்தாலும் நாங்கள் இருவரும் வேவ்வேறு பிரிவை சார்ந்தவர்கள். எனது தங்கையின் கல்யானத்தால் ஆன குழப்பமே அதிகம். நான் வேறா ? தம்பியின் கல்யாணமும் சிக்கல்களுக்கு உள்ளாகும். எல்லோரும் முழு நிறைவு என்பது சற்று குறைவாக இருக்க சாத்தியம் அதிகம். முக்கியமாக நான் எம்.பி.ஏ படிக்க போனால் கல்யாணம் நடத்த தாமதம் ஆகும். அவளுடைய வீட்டில் எப்படி சொல்லி கல்யாணத்தை தாமத படுத்தவும் முடியாது. அதுவும் மூன்று நான்கு ஆண்டுகளாக பெண்ணுக்கு வரன் பார்க்கும் பெற்றோர்களிடம். ஆதலால் என் எண்ணத்திற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தேன்.

ஆனால் அவ்வெண்ணம் விளைந்தது. என்னை விட்டு நீங்கா வண்ணம் இருந்தது. இப்படி போய் கொண்டு இருக்கையில் எங்கள் வீட்டிலும் பெண் பார்க்கும் படலம் தீவிரமாய் சென்று கொண்டு இருந்தது. அந்த சுழற்சியிலும் என்னை வேறு வழியின்றி ஆட்படுத்திக்கொண்டேன்.  ஒன்றும் அமையவில்லை.  இப்படி சென்றுக்கொண்டு இருக்கையில் எனது கல்லூரியில் ஒரு பெண் மீஷாவிடம் பல நாள் நடந்த பேச்சுகளில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால் - நீ எடுக்கும் முடிவை நீ வாழ்நாள் முழுவதும் சுமப்பாய். இதில் உன் குடும்பத்திற்கு என்று பார்த்தால் உன் மகிழ்ச்சி கேள்விக்குள்ளாகும். ஒருவேளை வீட்டில் பார்க்கும் பெண் சரியில்லை என்றால் என்ன செய்வாய் ? உனக்கு பிடித்ததை செய். வீட்டில் உள்ளவர்கள் உன் வாழ்க்கையில் இருக்கும் நேரம் குறைவு.

அதன் பின் நான் என்னை பற்றி அதிகம் யோசிக்க துவங்கினேன். நான் எனது வாழ்விற்கு என் நலனிற்கு என் அமைதியிற்கு என் மகிழ்ச்சியிற்கு வாழவேண்டிய நேரம் வந்து ஆயிற்று. கடந்த 10 ஆண்டுகளாக குடும்பம் என்னும் வண்டி தனை ஓட்டி ஆயிற்று. போதும். ஆதலால் என் மனதில் உள்ள நியாயமான எண்ணதிற்கு தர வேண்டிய இடத்தை தர நினைத்தேன்.  முதலில் தம்பியிடம் கூறினேன். அவன் சற்று குழப்பினான். இருப்பினும் என் முடிவு சரி என்றே எனக்கு பட்டது. ஊரில் இருந்து கிளம்பும் முன் அம்மாவிடம் மணக்குள விநாயகர் கோவிலில் வைத்து சொன்னேன். அம்மாவிடம் எதிர்ப்பு எதையும் எதிர்ப்பார்க்கவில்லை. அதேப் போல் அம்மா எதிர்க்கவில்லை. நீ ஒரு முடிவு எடுத்தால் நீ யோசித்து எடுப்பாய். ஆதலால் நான் சம்மதிக்கிறேன் என்று கூறினார்கள். பாட்டியிடம் கூறினேன். நீயுமா ? என்றாள். ஆம் பாட்டி. இவளை எனக்கு பிடித்து இருக்கிறது. நல்ல பெண் குணம் ரசனை என்றேன். பாட்டி முழு சரியும் சொல்லவில்லை முழு மறுப்பும் சொல்லவில்லை. சமூக சூழலில் பழைமைவாதியின் பின்புலத்தில் வாழ்க்கையில் அவள் பட்ட பாடத்தின் பின்னனியில் வைத்து பார்க்கையில் அதை தான் அவளிடம் எதிர்ப்பார்க்க முடியும். ஆனால் அவள் ஆசி எனக்கு இருநூறு சதவிகிதம் உண்டு என்று எனக்கு தெரியும்.  ஆதலால் துணிந்தேன்.

இருப்பினும் இப்பொழுது தான் மிகவும் கடினமான கட்டதிற்கு வந்தேன். அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற தயக்க போராட்டம். துன்னுள் விழைந்து மோதினேன். நண்பர்களை நாடினேன். அனைவரும் என்னை ஆதரித்தார்கள். கொலம்பஸ், இண்டியானவில் என் தூக்கங்கள் தொலைந்தது. எண்ணங்கள் அலைந்தது. கொலம்பஸில் வந்த முதல் வாரமே சொல்ல முற்பட்டேன். சொல்லக்கூடிய உன்னதமான தருணம் அல்ல. ஆதலால் பயணத்தை தள்ளிப்போட்டேன். ஆனால் அது எத்தனை உரக்கங்களை தள்ளிப்போட்டது தெரியுமா ? அதற்கு அடுத்த வாரம் சொல்ல முற்பட்டேன் . அதுவும் வேலைக்கு ஆகவில்லை. சரி இந்த வாரம் செல்லலாம் என இருந்தேன். செல்ல முடியாத சூழலில் அவள். வேறு வழியில்லை அலைப்பேசியில் சொல்வது தான் இப்போதைய வழி என்று முடிவு எடுத்தேன்.

இதற்கு ஆயுத்தம் என்பது அப்படி ஒரு முதன்மையான் செயல். ஆதலால் என் மனதில் உள்ளதை மிக தெளிவாக சொல்ல வேண்டும். ரத்தினச்சுருக்கமாக சொல்ல வேண்டும். ஆழமாக சொல்ல வேண்டும். அழகின்மையோடு சொல்லவேண்டும். ஆனால் நெஞ்சை பிராண்டும் அளவிற்கு மானே தேனே என்று எல்லாம் சொல்லக்கூடாது. பொதுவாக நான் எனது எம்.பி.ஏ வியூகங்களை வெளியே பேசுவதில்லை. ஆனால் நான் மார்கேட்டிங் ஃபில்ட் ஸ்டடியில் கற்றுக்கொண்டது என்னவென்றால் நீ சொல்வது மிக முக்கியம். அதுவே அடுத்தவர்களுக்கு போய் சேரும். உன் மனதில் என்ன நினைக்கிறாய் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும் ஆதலால் சொல்வதை நன்றாய் ஆராய்ந்து ஆழமாக தெளிவாக அழகாக சுருக்கமாக சொல்.  ஆதலால் நான் சொல்ல வேண்டியதை தற்காலிக மின் மடலில் கொட்டினேன். சரி செய்தேன். கூட்டினேன். முறைப்படுத்தினேன். வார்த்தைகளை மாற்றினேன். இரண்டு நாட்களாக.  பாரதி சொன்ன மதி தனில் மிக தெளிவு வேண்டியதை பெற்றேன். 

இவ்வளவு ஆயுத்தமாகியும் அவளிடம் சொல்ல நேரம் நெருங்கும் பொழுது அப்படி ஒரு பட படப்பு. ஆனால் ஆயுத்தமாவது எவ்வளவு நன்மை பயவிக்கும் என்பதை அப்பொழுது உணர்ந்தேன். நான் பேச நினைத்தது தெளிவாக இருந்தது. பேசக்கூடாததும் தெளிவாக இருந்தது. முதலில் ஆங்கிலத்தில் தான் எழுதி வைத்துக்கொண்டேன். ஆங்கிலத்தில் சொல்வது ஈசியாக இருக்கும் ஏனென்றால் நம்ம ஓர் அளவு மனப்பாடம் செய்தே பழகிய மொழி. ஆனால் தமிழில் தான் சொல்லுவேன் என்று மனசங்கல்ப்பம் செய்து கொண்டேன். தமிழிலும் ஆயுத்தமானேன். ஏன் என்றால் அது தான் உள்ளார்ந்து வரும் (internalize என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்)

இன்று ஜுன் 19 2015 வெள்ளி அன்று மாலை 7 மணி. அவளிடம் பேசுவது முன்பு கை பட பட வென்று இருக்கிறது. கால்களோ உட்காரவில்லை. முகத்தை அலம்பினேன். தலைவாரினேன். என்னை பார்த்து கண்ணாடியில் சிரித்துக்கொண்டேன். இது நடந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன். மகிழ்ச்சியும் அடைந்தேன். ஆனால் இனம்புரியாத ஒரு நடுக்கும் இருந்துக்கொண்டே தான் இருந்தது. குளிர்சாதன அரையில் திடீர் என்று ஐந்து-ஆறு டிகிரி குறைந்தால் ஏற்படும் நடுக்கம் போல. மாலை7:35க்கு அவளுக்கு போன் செய்தேன். போனை எடுத்துப் பேசினாள். எடுத்த உடனே சொல்லாதே. அவள் கேட்கும் மனநிலையில் இருக்கிறாளா அல்லது வேறு வேலையா இருக்கிறாளா என்பதை தெரிந்துக்கொள். ஒரு 5-10 நிமிடம் மொக்கையை போட்டேன். பின்பு அவளிடம் சொன்னேன். உங்கிட்ட ரொம்ப நாளா ஒன்னும் சொல்லனும் சொல்லனும்’னு நினைக்கிறேன். இம்பார்டண்ட் மேட்டர். சொல்லலாமா. இப்ப பேச முடியுமா என்று கேட்டேன். என்ன விஷயம் சொல்லு என்றாள். "நான் எம்.பி.ஏ காலேஜுக்க்கு வருவதற்கு முன்பு எனக்கு இவ்வெண்ணம் தோன்றியது. அப்போழுது இரண்டு வருடம் காத்திருக்க சொல்ல என்னால் முடியவில்லை. பெண் வீட்டிலும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். எங்க வீட்டிலும் பார்க்க துவங்கவில்லை. சரி மேலே படிப்போம். இந்த எண்ணம் வளருதா பார்ப்போம் என்று இருந்தேன். சரி கேட்கலாம்னு தான் நெனச்சு இந்த முடிவுக்கு வந்தேன். (உம்ம்ம் என்றால். அவள் முகத்தில் ஒரு புன்னகையை கண்டேன். நீயா ராஜேஷ்  என்று அவளுக்கு ஒரு எண்ணம் போல) நம்ம இரண்டு பேருக்கும் பல விஷயம் ஒத்துப்போது. we have many things in common. நம்ம இரண்டு பேரும் கல்யாண வாழ்க்கைல சந்தோஷமா இருக்க முடியும்’னு நினைக்குறேன். நீயும் அப்படி நெனச்சா எனக்கு ரொம்ப சந்தோஷம். யோசிச்சு சொல்லு. ஒன்னும் அவசரம் இல்லை. பொறுமையா சொல்லு. எனக்கு புரியுது உனக்கு கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். எனக்கு அப்படி தான் இருந்துச்சு. ரொம்ப நாள் யோசிச்சு தான் நான் கேக்குறேன்".  (பி.கு இதுவரை சொன்னவற்றில் ஒரு 90 சதவிகிதம் சொன்னேன். சில விஷயங்கள் பின்பு தொடர்ந்து பேசும் பொழுது சொல்லி இருப்பேன்) அப்பாடா என்று மூச்சு விட்டேன். 

ஆனால் அவளோ. நான் அப்படி எல்லாம் நினைக்கவில்லை என்றாள். மறுபடியும் (பொதுவாக மிக அதிக படியாக பெண்கள் சொல்லும்)அதே வார்த்தைகளா என்று என் மனம் கன கனத்தது.  (இல்ல நீ இப்ப எதுவும் சொல்லாதே. யோசிச்சு சொல்லு என்று மனதில் நினைத்தேன். வாயும் வந்தது). ஆனால் உடனே சொல்லிவிட்டாள். நீ சொல்லுவது சரி. ஆனால்  எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது. உண்மையை சொல்லி விடுகிறேன் என் வீட்டில் ஒரு விஷயம்(கல்யானம்) முடிவு அடையும் நிலையில் உள்ளது. நான் அந்த பையனிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்று சொன்னாள். அப்படியா. ரொம்ப சந்தோஷம். Happy for you. Wish you good luck என்றேன். எப்ப கல்யாணம் என்று கேட்டேன். அது போய் கொண்டு இருக்கு. கொஞ்சம் இழுவையாதான் இருக்கு. அடுத்த மாசம் ஆகும் என்றாள். என்ன மன்னிச்சுரு. நான் உன்ன ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம். இப்ப என்ன நிலைமைல கல்யாண தேடல் போய்னு இருக்குனு கேட்டு இருக்கலாம். இல்ல ராஜேஷ், நீ கேட்டு இருந்தாலும் சொல்லி இருக்க மாட்டேன் என்றாள். முடியும் வரை சொல்ல வேண்டாம் என்றே சித்தம் (பாடங்கள்) .  உனக்கு தோனிச்சானா எனக்கு தெரியாது. எனக்கு தோனிச்சு கேட்டேன். சாரி என்றேன். பரவா இல்லை ராஜேஷ். அது மிக இயற்கையான ஒரு எண்ணம் ஒரு தவறும் இல்லை. நீ இருக்கும் சந்தர்பத்தில் நானும் இதை தான் செய்வேன். தவறு இல்லை. நீ தவறாகவும் கேட்கவில்லை. நீ நேராக என்னிடம் கேட்டதே நல்ல விஷயம் தான்.  ஒன்னும் தப்பு இல்லை என்றாள். நம்ம நல்ல நண்பர்களா இருப்போம் என்று சொன்னாள். (ஆமா முஸ்தபா முஸ்தபா-வே தான்) கேட்க நல்ல தான் இருந்துச்சு. ஆனா என் மனதிற்கு அது அதிர்ச்சியே (ஆதாவது அவளுக்கு முடியும் தருவாயில் இருந்தது. ஏனெனில் சென்ற மாதம் தான் அவளின் கல்யானத்தேடல் சொதப்பி கொண்டு இருப்பதாக சொன்னாள்). பின்பு அவளின் கதையை கேட்டு கொண்டு இருந்தேன்.   பிறகு ஒரு 15-20 நிமிடத்திற்கு இடையில் ஒரு 5 நிமிடம் ஒன்றுமே நிகழாததுப் போலவே இருவரும் பேசிக்கொண்டு இருந்தோம். அவளிடம் பேசிய பின்பு வாய்விட்டு சிரித்தேன். சிரித்தேன். சிரித்தேன். ஆனா ரொம்ப சந்தோஷப்பட்டேன். அவளுக்கு விரைவாக நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணினேன்.

ஆயிரம் இருந்தாலும் அந்த அளவுக்கு ஒரு பக்குவத்தோட அவ எடுத்துக்குட்டதும் அதுக்கு அப்புறம் அவ பேசினதும் ரொம்ப ஆறுதலா இருந்துச்சு. ஏனா பல பேரு ஏதோ தலைக்கு வந்த தலை வலி தீடீர் என்று இடம் பெயர்ந்து நெஞ்சு வலி வந்தத்து போன்று அவள் பேசுவில்லை. அதுவும் அது இயற்கை என்று சொல்லுவதற்கு வாழ்வின் ஒரு புரிதல் வேண்டும் அல்லவா. ஒரு விதத்துல எனக்கு வருத்தம் (அதன் பின்பு நான் எவ்வளவு தான் நிகழ்ந்ததை நினைத்து வாய்விட்டு சிரித்தாலும் சில உண்மைகள் சிரிது நேரத்திற்கு கொஞ்சம் கசக்கத்தான் செய்யும்) இருப்பினும் பெரிய வருத்தம் இல்லாததிற்கு அவள் அதை எடுத்துக்கொண்டு என்னிடம் பேசிய விதமே காரணம்.  என் எம்.பி.ஏ கம்யூனிகேஷன்ஸ் ஸ்கில்ஸ் வகுப்பில் சொல்லி தந்தது தான் ஞாபகத்துக்கு வருது. எந்த ஒரு தருணத்திலும் நாம் சந்தர்ப்பத்திலும் (situation) சூழலிலும் தான் கவனம் செல்லுத்த வேண்டும். தனி நபர்(people) மீது கவனம் செலுத்தக்கூடாது என்று சொல்லி கொடுத்து உள்ளார்கள். (In difficult situations focus on situation not on people). அதை தானே அவள் அவ்வளவு அழகாக செய்தாள்.

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை!!  
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

அதனால் தான் நினைப்பதெல்லாம் என்று இப்பதிவின் தலைப்பாக வைத்தேன். சொன்னவை யாவுமே நான் இப்பொழுது நினைப்பது. 

இப்பொழுது . . .
என் நெஞ்சுக்குள் முடிந்துவிட்டு
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்

November 23, 2014

Home at San Jose

I feel home only with good number of people. And I felt home at Vivek's house during my recent trip to San Jose[21,22 Nov 2014]. Without much hesitation I asked whatever food I wanted as if it is my own home. Felt good!

 With Vivek's Daughter Aadhiraa
 With Vivek

January 17, 2014

குல்லா

நான் ஜூன் 1984 பிறந்த குழந்தை. செப்டெம்பர் 1984 இல் (மாத கடைசியாக இருக்கலாம்) சற்று குளிராக இருந்ததாம். நான் எனது பாட்டியை அரவனைத்துக் கொண்டேனாம். இதைப் பார்த்த எனது பட்டு என்னை அப்படியே விட்டுவிட்டு தாத்தாவிடம் கடைக்குச் செல்கிறேன் என்று சொல்லி உடனடியாக கிளம்பிவிட்டார்கள். பாண்டிக்குச் சென்று (டவுனுக்கு சென்று) ஷப்னமில் எனக்கு ஒரு ஸ்வெட்டர், குல்லா, கை கால்களுக்கு சாக்ஸ் வாங்கி வந்தார்கள். அதை முதல் வேலையாக எனக்கு போட்டுவிட்டு பார்த்தார்களாம். தாத்தாவும் எதற்கு இப்படி அவசர அவசரமாக சென்று வந்தாய், ஏன் இதனை அவசர அவசரமாக வாங்கினாய் என்று ஒரு வார்த்தை கேட்கவில்லையாம். இந்த குல்லாவை போட்டுப் பார்த்தப்பிறகு தான் பட்டுவுக்கு திருப்தியாக இருந்ததாம். மற்றும் அந்த பழுப்பு (மேரூன்) நிறக் குல்லாவில் நான் சூப்பராக இருந்ததாக பட்டு குறிப்பிடார்கள் இன்று சற்றுமுன் பேசிக் கொண்டிருக்கையில். அவ்வன்பின் கதகதப்பில் நான் இன்றும் குளிர்காய்ந்துக் கொண்டு இருக்கிறேன். அந்த குல்லா இன்னும் வீட்டில் எங்கேயோ இருக்கிறதாம். இருப்பின் அதை பாதுகாக்க வேண்டும்.

January 01, 2014

2014

ஆ!

இந்த ஆண்டு எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பரிசு
நேற்று சென்ற ஆண்டைப் பற்றி எழுதியப்பொழுது நாளை 2014கைப் பற்றி சற்று சிந்தித்து எழுத வேண்டும் என்று எண்ணினேன். அப்படி எழுதலாம் என்று உட்கார்ந்து நினைக்கயில் திரு.ஜெயமோகன் அவர்களின் வலையத்தில் `வெண்முரசு - முதற்கனல்` பதிப்பை படித்தேன். முதல் பதிவே ஒரு ஆழமான துவக்கமாக அமைந்தது. இது மகாபாரதத்தின் கதைப் போல உள்ளதே என்ற சந்தேகம் இருந்தது. மற்றுமொரு ஒரு பதிவை அதில் படித்தேன். ஆண்டின் துவக்கத்திலேயே ஒரு பரிசு. ஜெயமோகன் அவர்கள் வெண்முரசு - என்ற தலைப்பில் மகாபாரதத்தை எழுதுகிறார். இந்த நாவல் 10 ஆண்டுகளுக்கு தினமும் தொடராக அவரது வலையத்தில் வர உள்ளது. இந்த செய்தி வாசித்தப்போது எனக்கு என்று வந்தது. ஆகவே தான் ஆ வென்று துவங்கினேன்.அவர் இப்படி எழுதியிருப்பார் `இது ஒவ்வொருநாளும் கொஞ்சமேனும் வாசிக்கக்கூடியவர்களுக்கான படைப்பு. ஒவ்வொருநாளும் வாசித்தவற்றைப்பற்றி தியானிக்கக்கூடியவர்களுக்கானது. அவர்களின் வாழ்க்கையை மேலும் சிலவருடங்கள் வியாசனின் மானுடநாடகம் ஒளியேற்றுவதாக! ` அப்படி வாசித்தவற்றை (எல்லாவற்றையும்) தியானிப்பேன் என்பதே இந்த ஆண்டின் முதல் தீர்மானமாக துவங்குகிறேன்.

எனது இந்த ஆண்டு தீர்மானங்கள்
1) அன்போடும் பண்போடும் இருத்தல் வேண்டும்.
2) கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
2) கல்லூரியில் அனுமதிப் பெற வேண்டும்.
3) 52 நூல்கள் (அதாவது, வாரம் ஒரு புத்தகம்) வாசிக்க வேண்டும். 
4) வெண்முரசு (மகாபாரதம்)- தினமும் வாசிக்க வேண்டும்.
5) திருக்குறள் - நாளும் ஒரு குறள் கற்க வேண்டும்.
6) வாசித்தவற்றை தியானிக்க வேண்டும்.
7) Coursera.Orgஇல் - Introduction to Financial Accounting, Data Analysis and Statistics, First Step in Entrepreneurship ஆகிய பாடங்களை கற்க வேண்டும்.
8) உடல் இடையை குறைக்க வேண்டும்.
9) மனதை ஆக்கபூர்வமான எண்ணங்களிலும் செயல்களிலும் மட்டும் திளைக்க விட வேண்டும்.
10) சமூக வலைதளங்களில் மிக மிக குறைவாக தான் ஈடுபட வேண்டும்.
11) பொருட்களை நாடாத ஒரு எளிய வாழ்வை பின்பற்ற வேண்டும். புதிய துணிமணிகள், மின் அணு பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
12) உணவு கட்டுப்பாடு வேண்டும்.

பாரதியார் சொன்னதுப் போல் -> http://rajeshbalaa.blogspot.in/2013/07/like-others-do-you-think-ill-fall-down.html

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.

December 31, 2013

ஆண்டு 2013

ஒவ்வொரு ஆண்டு ஒரு பாடமே. இருப்பினும் பட்டு கற்று செல்வது சிறிது. அவ்வகையில் எனக்கு முந்தைய ஆண்டுகளை விட 2013 சற்று ஆக்கபூர்வமான ஆண்டாக அமைந்ததாக கருதுகிறேன்.

ஆண்டின் துவக்கத்தில் BYUவிற்கு விண்ணப்பித்துவிட்டு தென்கொரியா சென்றேன். வேலையில் ஒவ்வாமல் தான் வேலை செய்துக்கொண்டு இருந்தேன். ஆயினும் அலுவகத்தில் நான் செய்யவேண்டியதை செய்து முடித்தேன். BYUவில் இருந்து தொலைபேசி நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. நன்கு ஆயத்தமானேன். ஆனால் நேர்காணலின் முடிவு தோல்வியாக இருந்தது. மிகுந்த மனசோகத்தில் ஆழ்ந்தேன் என்பது தான் உண்மை. கொரியா செல்லும் பொழுது சில புத்தகங்கள் எடுத்துக் கொண்டு சென்றிருந்தேன். சில சிறுகதைகள், மதரின்(Mother) ஆன்மிக புத்தகங்கள், கல்வி இயக்க புத்தகங்கள், வேதம் சம்மதமானவை, ஜித்து (Jiddu) ஆகிய புத்தகங்கள். மன சோர்ந்திருந்த காலங்களில் வழக்கம் போல் உதாரித்தனமாக இருந்துவிட்டு பிறகு அவைகளை படித்தேன். பின்பு காந்தியின் சத்திய சோதனையை படித்தேன். என் வாழ்வில் ஒரு மிக பெரிய தாக்கதை ஏற்படுத்திய முதல் புத்தகம் அதுவே. அவர் எழுத்தில் இருந்த அந்த நேர்மையே என்னை ஆட்கொண்டது.

இப்படி காலம் சென்றுக் கொண்டு இருக்கையில் ஒரு நாள் கமல்ஹாசன் பங்கேற்ற நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் கடைசியில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் அறம் என்ற புத்தகத்தை பிரகாஷ்ராஜிற்கு பரிசாக அளிப்பதை கண்டேன். அதைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் விதையாக மனதில் விழுந்தது. இந்தியா வந்ததும் வாங்கி படித்தேன். அதிர்ந்துபோனேன். நேர்மை, அறம் போன்ற வார்த்தைகள் எவ்வளவு ஆழமானவை என்பது எனக்கு ஆழமாக விளங்கிற்று.

நடுவில் மணிகண்டனுக்கு Qualcomm (San Diego) வில் வேலை கிடைத்தது எனக்கும், பட்டுவிற்கும், அம்மாவிற்கும் மகிழ்ச்சியளிக்கும் வண்ணமாக அமைந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி பொழுது கழிப்பதை குறைக்க தொடங்கினேன். எழுத்தாளர் ஜெயமோகன் அவரின் வலைப்பை நாளும் படிக்க துவங்கினேன். அந்த வாசல் எனக்கு மிகப்பெரிய வாசலாக அமைந்தது. அதில் கட்டுரைகள், சிறுகதைகள், வாசகர் கடிதங்கள் படித்தது நன்றாக இருந்தது. 

எமது மேலாளர் ராஜாஜியுடன் காந்தியை பற்றி உரையாடினேன். அவருடன் உரையாடுவது மிகவும் ஆக்கபூர்வமாக அமையும். அவர் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுத் தருவார். அவர் அப்படி எனக்கு அறிமுக படுத்தியது தான் காந்தியின் சத்திய சோதனை. இந்த 2010 ஆண்டு அதை காந்தியின் சத்திய சோதனை படிக்க வேண்டும் என்று சொன்னார். அப்படி தான் எனக்கு அதில் ஒரு உந்துதல் உருவாயிற்று. பாருங்கள் 2013இல் தான் படித்து இருக்கிறேன். 

எனக்கு வேலையிலும் அவ்வளவு நாட்டமில்லை. ஒரு கட்டத்தில் நாம் செய்யும் வேலைக்கு நாம் நேர்மையாக இருக்கவில்லை என்ற எண்ணம் உருவாக துவங்கியது (சத்திய சோதனை, அறம் ஆகியவற்றின் தாக்கம்). மேலும் நான் இந்த ஆண்டும் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க துவங்கினேன். அந்த நேரம் பார்த்து அலுவகத்தில் ஒரு புதிய வேலை வந்தது. இதில் முழுதாக கவனம் செலுத்த முடியாது. விண்ணப்ப வேலைகள் பாதிக்க படும் என்று அஞ்சி வேலையை விட்டு விலக முடிவு செய்து விலகினேன். ஆனால் என் மேலாளர் ஒத்துக்கொள்ளவில்லை. மற்றும் எனக்கும் நிதி தேவை இருந்தது. ஆதலால் வேலையை தொடர்ந்தேன். விலகலை திரும்பப் பெற்றேன். 

இந்த சமையத்தில் தான் ராஜாஜி அவர்கள் எனக்கு COURSERA.ORG என்ற கல்விக்கூடத்தை அறிமுகம் செய்தார். நான் அதில் Introduction to Marketing என்ற பாடத்தை படித்து முடித்து தேர்ச்சிப் பெற்றேன் (Q1: 17/20, Q2: 19/20, Q3: 19/20, Final: 34/40). கொஞ்சம் காசுக் கொடுத்து படித்தாலும் இதுப் போன்ற செயல்கள் என் நேரத்தை ஆக்கபூர்வமாக அமைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கிறது. ஆனால் Introduction to Financial Accounting, Statistics போன்ற பாடங்களும் படிக்க வேண்டும்.

இப்படி சென்று கொண்டு இருக்கையில் 20 புத்தகம் படிக்க வேண்டும் என்று வைத்து இருந்த இலக்கை ஆகஸ்ட் மாதமே அடைந்தேன். பின்பு 30 புத்தகம் என்று இலக்கை உயர்த்தினேன். ஜெயமோகன் புத்தகங்கள், அவர் (மற்றும் அவரது வாசகர்கள்) சிபாரிசு செய்த புத்தங்களைப் படிக்க துவங்கினேன். புத்தகம் வாங்கி குவிக்க துவங்கினேன். இப்படி படித்து இந்த வருடம் 29 புத்தகங்கள் படித்து உள்ளேன். அது இல்லாமல் மூன்று நூல்கள் பாதியில் உள்ளன. ஜெ`வின் இன்றைய காந்தி  காந்தியை பற்றிய ஒரு மிகப்பெரிய கண் திறப்பாய் இருக்கிறது.

இப்போது கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து உள்ளேன். ராஜாஜி, நாகமணி, சுந்தரேசன் அம்மா, செவியர், நம்பியார் ஆகியோர் மிகுந்த உத்தாசியாக இருந்து பங்காற்றினார்கள். இந்த ஆண்டு ஒரு காணொளி நேர்காணல் கொண்டேன். முடிவிற்காக காத்து இருக்கிறேன். BYUவிற்கு மறுபடியும் விண்ணப்பித்து உள்ளேன். காத்திருக்கிறேன். நன்றாக செய்ய வேண்டும்.

விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு சென்று வந்தது ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது. வானவன் மாதேவி வல்லபி சகோதரிகளின் சந்திப்பு எனக்கு ஒரு திருப்பு முனை. வாழ்வில் நேர்தை வீண்செலவு செய்ய கூடாது என்பதை உணர்ந்தேன். தன்நம்பிக்கை என்றால் என்ன என்று கற்று கொண்டேன். 

பாலா, நம்பியார் கல்யாணங்கள், ஒரு ரயில் பயணம், நாகமணி-ரகு-ப்ரித்வி வீட்டிற்கு வந்து இருந்தது, TATA ELXSI-CHENNAI நண்பர்களுடன் ஒரு நாள் கூடியது, வீட்டில் கொலு, TBR uncle-நம்பியார் குடும்பங்களுடன் பழனி பயணம், 15 ஆண்டுகள் பின்பு சிவா குருக்கள் அண்ணனை சந்தித்து பேசியது, சேவியரின் ஜீவித்தன், வீட்டில் சிவா அண்ணன் செய்து வைத்த ஐயப்பன் பூஜை, பாட்டி என்னோட இந்த நேர்காணலின் போது சமைத்து உதவ வந்தபோது நிறை புத்தங்கள் படித்து இன்புற்றது, சில திரைப்படங்கள், சில பாடல்கள் ஆகியவை இந்த ஆண்டின் இன்பக்கீறல்கள்.

நண்பர் நாகமணியுடன் நாளும் ஒரு திருக்குறள் படிக்க வேண்டும் என்ற கூட்டு முயற்சி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன்.

மொத்தமாக இந்த ஆண்டின் ஆக்கபூர்வமாக நான் கருதுவது.
1) காந்தியின் சத்திய சோதனை படித்தது.
2) ஜெயமோகனின் புத்தகங்கள் (அறம்) மற்றும் கட்டுரைகள் படித்தது.
3) Introduction to Marketing பாடம் படித்து தேர்ச்சிப் பெற்றது.
4) புத்தக வாசிப்பின் 30 இலக்கில் 29 படித்தது.
5) குறிப்பிட தக்க தருணங்களை வலைப்பதிவு செய்து வருகிறேன். 2012 ஆண்டு காலமாக வலைப்பதிவு அவ்வளவு சீராக இல்லை.
6) Daily Thirukkural Project துவங்கியது. (ஒரு சின்ன துவக்கம் - மூன்று வாரமாக).
7) இரண்டு மாதமாக அலுவலகத்திற்கு மிதி வண்டியில் செல்கிறேன்.

2014ற்கு கொண்டு செல்ல கூடாதது
1) வீட்டில் கோவமாக பேசக் கூடாது.
2) துணுக்கு வலையங்களை படிக்கக் கூடாது. (இரண்டு வாரம் முன் கைவிடப்பட்டது).
3)  செய்தி வலையங்களை நாள் ஒன்றிற்கு 15 நிமிடம் மேல் பார்க்கவோ வாசிக்கவோ கூடாது. கண்டிப்பாக அடிக்கடி பார்க்கும் பழக்கம் அறவே கூடாது. 
4) மத்திய வேளையில் உறங்கக் கூடாது.
5) YouTube-இல் நேரத்தை விரையம் செய்யும் காணொளிகளை காணக் கூடாது.
6) வெட்டி தொலைபேசி அலைபேசி அழைப்புகள் கூடாது. 
7) மனதிற்கு ஆரோக்கியம் இல்லாத எந்த ஒரு செயலையும் செய்யவோ நினைக்காவோ கூடாது.
8) கடந்த கால நினைவுகளில் திளைத்திருக்க கூடாது.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

April 18, 2013

நா தேடும் உணவுகள் இவை. . .

தலை வாழை இலையில்

மெது வடை
மசால் வடை
வாழைப்பூ மசால் வடை
ஜெவ்வரிசி மசால் வடை
பச்சிரி கேரட் - வெள்ளேரிக்காய் பச்சிரி
வட இந்திய பூந்தி ரைந்தா (சாட் மசாலா தூவி)
வெண்டக்காய் தயிர் பச்சிரி  (ரய்தா) 
உளுந்து போண்டா (அ) மைசூர் போண்டா
மெது வடை
சாம்பார் வடை
தயிர் வடை
ரச வடை
ஆஞ்சநேயர் கோயில் மிளகு வடை
மள்ளாட்டை சாட் (Peanut Chaat / Masala Groundnuts Salad)

சேமியா பாயசம்
அரச்சு விட்ட தேங்காய் பாயசம்
பருப்பு பாய்சம்
ஜெவ்வரிசி பாய்சம்
சக்கரை பொங்கல்
பால் பூரி
அவள் பாயசம் (chef dheena)

பாதாம் கட்லி (Badam Katli) (Take Sundaresan Mom recipe)
பாதாம் முந்திரி கேரட் பாயசம் (Badam Cashew Carrot Kheer/ Payasam) (Take Pattu recipe)
தேங்காய் பாதாம் லட்டு (Coconut Badam Ladoo)

பீன்ஸ்/கொத்தவரங்கா/வாழைப்பூ பருப்பு உசுளி
தேங்காய் தூவி வெண்டக்காய் பொறியல்
கத்திரிக்கா கச கசா கரி
கத்திரிக்கா போடி கரி
பொடலங்காய் கரி
வெள்ளை வெளேர் என (பச்சை மிள்காய் போட்டு. காய்ந்த மிளகாய் அரவே கூடாது) கோஸ் கரி
சேனைக்கிழங்கு / கருணைக்கிழங்கு வருவல்
கருணைக்கிழங்கு மசியல்
கருணைக்கிழங்கு சிப்ஸ் / Chips
சேப்பங்கிழங்கு வருவல்
வாழைக்காய் சிப்ஸ் - மிளகாய் பொடி அல்லது மிளகு பொடி
வாழைக்காய் பொடிமாஸ் (கையில் மசித்து அல்லது துருவி)
உருளைக்கிழங்கு பொடிமாஸ்
வாழைத்தண்டு - பாசிப்பருப்பு பொறியல்
நன்கு வருத்த உருளைக்கிழங்கு வருவல்
அவியல் (அடை-க்கும்)
பீட் ரூட் கரி (Beetroot Carrot Curry - Stir Fry)
சௌ சௌ கரி (Chow Chow Curry)
பீன்ஸ் எள்ளு கரி (Beans Sesame Curry)
வெண்டக்காய் பொடி கரி (Vendakkai Podi Curry)
செட்டினாடு உருளை வருவல் Chettinad Potato Fry
கோவக்காய் பொரியல் (தொண்டெக்காய் பொரியல்) - Karnataka Style

டால் தொயி (Dal Toye / Dali Toye - Konkani style Dal)
ஒடியா (ஒடிஷா) டால்மா (Odiya / Orissa / Odisha Dalma) - Recipe 1, Recipe 2
பீட் ரூட் குருமா (Beetroot Kuruma)
அம்ரிஸ்ட்ரி கோபி மட்டர் மசாலா (Amristari Gobi Matar Masalak) (Added Bay Leaves, Star Anise, Cinnamon, Cardmamom, Cloves)
சோலே / சன்னா மசாலா (Chole Masala - Checkout Venkatesh Bhatt's recipe)
சன்னா மசலா (பட்டு style / south india style)
பூடி கிழங்கு (south india style)
கஷ்மீரி தம் ஆலூ (Kashmiri Dum Aloo in Punjabi Dhabha Style) (almost 2 hours)
குடை மிளகாய் மசாலா Capscicum Masala Gravy
வெண்டக்காய் பிண்டி பாதாம் மசாலா Bhindi Badam Masala Gravy
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala) (fry the panner with chilli and spices)
பன்னீர் புர்ஜீ (Dry Panner Bhurji)
நூல்கோல் குருமா (Knol Khol / Turnip Kuruma)
சோயா மசாலா (Soya Chunks Masala Gravy)
கொள்ளு டால் (Kulith / Horsegram / Kollu Dal)

பருப்பு (சாதரனம் / கடுகு-பச்சை-மிளகாய் தாளித்து)

மனத்தக்காளிக் கீரை
அரை கீரை
சிறு கீரை
முருங்கை கீரை
வல்லார கீரை
முடக்கத்தான் கீரை (தோசை)
அகத்திகீரை (அவுத்துகீரை) சாறு
கீரை மசியல்
கீரை மொலகூட்டல்
கீரை தண்டு மோர்க்கூட்டு

ஆந்திரா கீரை பருப்பு (Andhra Style Palakura Pappu)

சாம்பார்
சின்ன வெங்காயம் அரைத்து (அரச்சு) விட்டு  சாம்பார்
தேங்காய் அரைத்து விட்ட சாம்பார்

செட்டிநாடு மிளகு சாம்பார் (கத்திரிக்காய், சேப்பங்கிழங்கு)
மோர் குழம்பு (வெண்டக்காய், சேப்பங்கிழங்கு, சௌ சௌ, பக்கோடா)

பருப்பு உருண்டை குழும்பு

முருங்ககாய் பொரிச்ச குழம்பு (பீன்ஸ், பொடலங்காய்)

சுண்டைக்காய் வத்தல் குழும்பு சுட்ட அப்பளத்துடன்
சுண்டக்காய் அல்லது மனத்தக்காளி வத்தல் குழும்பு
காராமணி வத்தல் போட்டு வத்தல் குழம்பு
கருவேப்பிலை குழம்பு
மிளகு குழம்பு
அரைத்து (அரச்சு) விட்டு  கார குழம்பு
தேங்காய் அரைத்து (அரச்சு)விட்டு குழம்பு
எண்ணை கத்திரிக்காய் குழும்பு (Ask Pattu for recipe)
காரக் குழம்பு
மொச்சை-சேனை காரக் குழம்பு
பரங்கிகாய் குழம்பு
மருந்து குழம்பு
பூண்டு குழம்பு
புளிக் குழம்பு


தக்காளி சாதம்
தக்காளி சாதம் - புலவ் type
தக்காளி பாத் - வெங்கடேஷ் பட்
எலுமிச்சை சாதம்
புளி காய்ச்சல் (Try Pattu receipe)
புளி சாதம் - Mandya Melkote - Iyengar recipie - Subbana Mess
தேங்காய் சாதம்
கொத்தமல்லி சாதம்
பொறிச்ச குழம்பு பீன்ஸ் கேரட்அவரைக்காய்
ஊறுகாய் சாதம்
மள்ளாட்டை சாதம்
மாங்காய் சாதம்
புதினா சாதம் (வெங்காயம் பூண்டு இல்லாமல்)
மிளகு சாதம்
நெய் சாதம்
வேப்பம் பூ சாதம்
வாங்கி பாத் / vaangi bhat
பாப்பட் மாத் (Pappad Bath)
பகலா பாத் (Bagala Bath) /தயிர் சாதம்(Curd Rice)
பூண்டு சாதம்
பூண்டு சாதம் (Karnataka)
மள்ளாட்டை சாதம் (Groundnut / Peanut Rice)
மொச்சை பருப்பு சாதம் - வெங்கடேஷ் பட்

துவையல் / துகையல் (done)
துவரம் பருப்பு / பருப்பு துகையல் [வத்தல் குழும்புவுக்கு]
தேங்காய் துகையல்
வெங்காய துகையல்
பீர்க்கங்காய் / சொவ் சொவ் / பொடலங்காய் / புடலங்காய் / குடைமிளகாய் / கோஸ் துகையல்
பச்சை கருவேப்பிலை-பூண்டு-துகையல்
இஞ்சி துவையல்
கருவேப்பிலை துவையல்
பூண்டு துவையல்
கொத்தமல்லி துகையல்
புதினா துகையல் / பொதினா துகையல்
மனத்தக்காளி கீரை இலை துகையல்
பிரண்டை துகையல்
தூதுவளை துகையல்
வடகம் துகையல் / குழம்பு தாளிப்பு வாகம் துகையல்
வேப்பம் பூ துகையல் 

(done)
பருப்பு ரசம்
பைனாப்பிள் ரசம் / அண்ணாச்சிப் பழ ரசம்
ஜீரா ரசம்
வேப்பம் பூ ரசம்
கருவேப்பிலை ரசம்
மிளகு ரசம் (வறுத்து)
மிளகு ரசம் (வறுக்காமல்)
தக்காளி ரசம்
கொட் ரசம் (அவசர ரசம்)
அரைத்து (அரச்சு) விட்டு ரசம்
கண்டத் திப்லி ரசம்
எலுமிச்சை ரசம்
பூண்டுப் ரசம் (பூண்டுப் பல் ரசம்)
மைசூர் ரசம் அரிசி அப்பளம் அல்லது உருளைகிழங்கு பொறியல்
கத்திரிக்காய் ரசவங்கி
உடுப்பி / மெங்களூரு ரசம்
இளநீர் ரசம்
இஞ்சி ரசம்
கொள்ளு ரசம்
ரோஸ் இதழ் ரசம்
வெண்பொங்கல் (பச்சை அரிசி, வரகு, சாமை அரிசிகளில்)
ரவா பொங்கல்
இட்லி
பொடி இட்லி
ரவா தோசை - வதக்கிய வெங்காய சட்டினி
திருநெல்வேலி சோதி
வாங்கார தோசை (ஆழ்வார் திருநகரி கோயில் பிரசாதம்)
வாழைத்தண்டு தோசை
முடக்கத்தான் கீரை தோசை
கேழ்வரகு தோசை
கோதுமை தோசை (வெங்காய சட்டினி)
ஊத்தப்பம் (வெங்காயம்)
பிடி கொழுக்கட்டை
அரிசி உப்புமா
அடை அவியல்
மிளகு அடை
பனியாரம்
சேவை வகைகள் - எள்ளு, பருப்பு. தேங்காய்,  புளி, எலுமிச்சை, மாங்காய், புதினா, ஜீரகம்/மிளகு, இனிப்பு (தேங்காய், சர்க்கரை, நெய்), தயிர், உளுந்து
பரோட்டா
ஜவ்வரிசி ரொட்டி (Sabudana Thalipeeth)
ஜவ்வரிசி கிச்சடி (Sabudana Kichdi)



தேங்காய் சட்டினி (பொட்டுக்கடலை போடாமல், அதிக உளுத்தம் பருப்பு)
வதக்கிய வெங்காய சட்டினி
லஷன் சட்னி (மிளகாய் பூண்டு சட்னி)
எள்ளு சட்னி (தயிருடன்) (வெங்கட்டேஷ் பட்)
எள்ளு சட்னி (தயிர் இல்லாமல்) 
எள்ளு சட்னி (கூர்க்)
மாங்காய் சட்னி  (வெங்கட்டேஷ் பட்)
கொள்ளு சட்னி
வதக்கிய தக்காளி வெங்காய சட்டினி
அரைத்து வதக்கிய வெங்காய சட்டினி
கொத்தமல்லி சட்டினி
புதினா சட்டினி
கத்திரிக்கா கொத்ஸு
புதினா கொத்தமல்லி (வெங்காயம் பூண்டு தேங்காய்) சட்டினி (Mint Pudina Coriander Onion Garlic Coconut Chutney)
புதினா கொத்தமல்லி சட்னி
வாழைப்பூ சட்னி
உளுந்து சட்னி
கருவேப்பிலை சட்னி
நூல்கோல் சட்னி (Turnip Chutney)
தயிர் - கொத்தமல்லி சட்னி (Curd Coriander Chutney - 1) 
தயிர் - கொத்தமல்லி சட்னி (Curd Coriander Chutney - 2) 
தயிர் - கொத்தமல்லி சட்னி (Curd Coriander Chutney - 3) 
தயிர் - துவரம் பருப்பு சட்னி (Curd Tur Dal Chutney)
தயிர் - வெங்காயம் சட்னி (Curd Onion Chutney)
கொள்ளு சட்னி (Kollu Chutney)


பால் கொழுக்கட்டை
அப்பம்
அவல் கேசரி
அதிரசம்
பொரி உருண்டை

மோதகம் (பூரணம் கொழுக்கட்டை)
கொழுக்கட்டை (உப்பு - உளுந்து)
கொழுக்கட்டை (எள்ளு)
தேங்காய் போலி
பருப்பு போலி

குணுக்கு
உப்பு சீடை
கை முறுக்கு  (கையால் சுற்றியது)
தட்டை
தேங்குழல்
ரவா லட்டு
மனோகரம்

மசாலா மல்லாட்டை / வேர்கடலை சாட் (Masala Peanut Groundnut Chaat)

எள்ளூ பொடி
பருப்பு பொடி
தேங்காய் பொடி
கொள்ளு பொடி
கருவேப்பிலை பொடி
வாழைக்காய் பொடி
தோசை மிளகாய் பொடி
தோசை தேங்காய் பொடி
அஜீரண பொடி
மிளகு ஜீரா பொடி
தோசை மிளகாய் பொடி
கச கசா பொடி
புதினா பொடி
பிரண்டை பொடி
வேப்பம் பூ பொடி
மள்ளாட்டை பொடி / வேர்கடலை பொடி

வரகு அரிசி
குதிரை  வாலி
சாமை

சுட்ட அப்பளம்
அரிசி அப்பளம்
வெங்காய கருடான்
அரிசி அப்பளம்.
தளீர் அப்பளம் / கருடான்
ஜெவ்வரிசி கருடாண், வில்வ கருடான், கட்டை கருடான், தென்னம் பூ கருடான், வெங்காய கருடான்
கொத்தவரங்காய் வத்தல்

ஊறுகாய் - ஆவாக்காய், மாவடு, மாங்காய் தொக்கு, மாகாளி, இளம் மாங்காய் சிறிய துண்டாய் வெட்டிப்போட்டு தாலித்து
மோர் மிளகாய் (நீளம்)

கருவேப்பிலை, எலுமிச்சை / நார்த்தங்காய் இலை போட்ட மோர்
பெகலா பாத் (மாங்காய், மாதுளம், திராட்சை, வெங்காயம், கடுகு-தாளித்து)

நெல்லை பழரசம் 
மளாய் குல்ஃபி (chef Dheena)
Aam Shrikhand/ Aamras recipe 

North Indian
Aloo Bhuna Dhabba Style - Yours food lab
ISKCON Kichdi

Street Foods

Continental

Mexican
Guacamole - Tortilla Chips
Salsa - 1 (Tomato, Green Tomato, Pineapple, Mango, Spicy) - Tortilla Chips
Salsa - 2 (Tomato, Green Tomato, Pineapple, Mango, Spicy) - Tortilla Chips
Burrito Bowl

Grilled Vegetables in Indian Style

வாழையில் உணவு உண்பதைப் பற்றி
(Video updated on 26 July 2015)


மற்றவை
http://palakkadcooking.blogspot.com/p/traditional-palakkad-recipes.html
http://www.jeyashriskitchen.com/2013/06/tamil-brahmin-recipes-authentic-brahmin-recipes.html
http://www.iyerscorner.com/