ஆ!
இந்த ஆண்டு எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பரிசு
நேற்று சென்ற ஆண்டைப் பற்றி எழுதியப்பொழுது நாளை 2014கைப் பற்றி சற்று சிந்தித்து எழுத வேண்டும் என்று எண்ணினேன். அப்படி எழுதலாம் என்று உட்கார்ந்து நினைக்கயில் திரு.ஜெயமோகன் அவர்களின் வலையத்தில் `வெண்முரசு - முதற்கனல்` பதிப்பை படித்தேன். முதல் பதிவே ஒரு ஆழமான துவக்கமாக அமைந்தது. இது மகாபாரதத்தின் கதைப் போல உள்ளதே என்ற சந்தேகம் இருந்தது. மற்றுமொரு ஒரு பதிவை அதில் படித்தேன். ஆண்டின் துவக்கத்திலேயே ஒரு பரிசு. ஜெயமோகன் அவர்கள் வெண்முரசு - என்ற தலைப்பில் மகாபாரதத்தை எழுதுகிறார். இந்த நாவல் 10 ஆண்டுகளுக்கு தினமும் தொடராக அவரது வலையத்தில் வர உள்ளது. இந்த செய்தி வாசித்தப்போது எனக்கு ஆ என்று வந்தது. ஆகவே தான் ஆ வென்று துவங்கினேன்.அவர் இப்படி எழுதியிருப்பார் `இது ஒவ்வொருநாளும் கொஞ்சமேனும் வாசிக்கக்கூடியவர்களுக்கான படைப்பு. ஒவ்வொருநாளும் வாசித்தவற்றைப்பற்றி தியானிக்கக்கூடியவர்களுக்கானது. அவர்களின் வாழ்க்கையை மேலும் சிலவருடங்கள் வியாசனின் மானுடநாடகம் ஒளியேற்றுவதாக! ` அப்படி வாசித்தவற்றை (எல்லாவற்றையும்) தியானிப்பேன் என்பதே இந்த ஆண்டின் முதல் தீர்மானமாக துவங்குகிறேன்.
எனது இந்த ஆண்டு தீர்மானங்கள்
1) அன்போடும் பண்போடும் இருத்தல் வேண்டும்.
2) கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
2) கல்லூரியில் அனுமதிப் பெற வேண்டும்.
3) 52 நூல்கள் (அதாவது, வாரம் ஒரு புத்தகம்) வாசிக்க வேண்டும்.
4) வெண்முரசு (மகாபாரதம்)- தினமும் வாசிக்க வேண்டும்.
5) திருக்குறள் - நாளும் ஒரு குறள் கற்க வேண்டும்.
6) வாசித்தவற்றை தியானிக்க வேண்டும்.
7) Coursera.Orgஇல் - Introduction to Financial Accounting, Data Analysis and Statistics, First Step in Entrepreneurship ஆகிய பாடங்களை கற்க வேண்டும்.
8) உடல் இடையை குறைக்க வேண்டும்.
9) மனதை ஆக்கபூர்வமான எண்ணங்களிலும் செயல்களிலும் மட்டும் திளைக்க விட வேண்டும்.
10) சமூக வலைதளங்களில் மிக மிக குறைவாக தான் ஈடுபட வேண்டும்.
11) பொருட்களை நாடாத ஒரு எளிய வாழ்வை பின்பற்ற வேண்டும். புதிய துணிமணிகள், மின் அணு பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
12) உணவு கட்டுப்பாடு வேண்டும்.
10) சமூக வலைதளங்களில் மிக மிக குறைவாக தான் ஈடுபட வேண்டும்.
11) பொருட்களை நாடாத ஒரு எளிய வாழ்வை பின்பற்ற வேண்டும். புதிய துணிமணிகள், மின் அணு பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
12) உணவு கட்டுப்பாடு வேண்டும்.
பாரதியார் சொன்னதுப் போல் -> http://rajeshbalaa.blogspot.in/2013/07/like-others-do-you-think-ill-fall-down.html
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.
No comments:
Post a Comment