நான் ஜூன் 1984 பிறந்த குழந்தை. செப்டெம்பர் 1984 இல் (மாத கடைசியாக இருக்கலாம்) சற்று குளிராக இருந்ததாம். நான் எனது பாட்டியை அரவனைத்துக் கொண்டேனாம். இதைப் பார்த்த எனது பட்டு என்னை அப்படியே விட்டுவிட்டு தாத்தாவிடம் கடைக்குச் செல்கிறேன் என்று சொல்லி உடனடியாக கிளம்பிவிட்டார்கள். பாண்டிக்குச் சென்று (டவுனுக்கு சென்று) ஷப்னமில் எனக்கு ஒரு ஸ்வெட்டர், குல்லா, கை கால்களுக்கு சாக்ஸ் வாங்கி வந்தார்கள். அதை முதல் வேலையாக எனக்கு போட்டுவிட்டு பார்த்தார்களாம். தாத்தாவும் எதற்கு இப்படி அவசர அவசரமாக சென்று வந்தாய், ஏன் இதனை அவசர அவசரமாக வாங்கினாய் என்று ஒரு வார்த்தை கேட்கவில்லையாம். இந்த குல்லாவை போட்டுப் பார்த்தப்பிறகு தான் பட்டுவுக்கு திருப்தியாக இருந்ததாம். மற்றும் அந்த பழுப்பு (மேரூன்) நிறக் குல்லாவில் நான் சூப்பராக இருந்ததாக பட்டு குறிப்பிடார்கள் இன்று சற்றுமுன் பேசிக் கொண்டிருக்கையில். அவ்வன்பின் கதகதப்பில் நான் இன்றும் குளிர்காய்ந்துக் கொண்டு இருக்கிறேன். அந்த குல்லா இன்னும் வீட்டில் எங்கேயோ இருக்கிறதாம். இருப்பின் அதை பாதுகாக்க வேண்டும்.
No comments:
Post a Comment