புத்தக கண்காட்சி பற்றி - பேருருப் பார்த்தல்
பாரதி, காந்தி, ஜெயமோகன் - கனவுகள், திட்டமிடுதல், செயல் - பாரதியும் கனவுகளும்
கேளிக்கை - அரியணைச் சூதுகளும் வாசிப்பும்
கேளிக்கை - போதைமீள்கையும் வாசிப்பும்
அமெரிக்க நூலகச் சந்திப்பு - ஜெயமோகன் நேர்காணல் (Day Planning - என் நாளை எப்படி திட்டமிடுகிறேன், Indian Values)
நாம் எதைப்பற்றியாவது பெருமிதம் கொள்ளமுடியுமா?
ஒரே ஆசிரியரை வாசித்தல்
சகஜயோகம்
எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்… ; நம்பிக்கையிலிருந்து தொடங்குவது
யோகம்,ஞானம்
விற்பனை பற்றி - அகம்நக விற்பது - ஆட்டத்தின் ஐந்துவிதிகள் நூலுக்கான முன்னுரை
எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா?
எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? -2
மனப்பாடம்
யாதெனின் யாதெனின்…
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் - கம்பனும் குழந்தையும்
எரிமருள் வேங்கை
சேட்டை (புதுமைப்பித்தன், சப்த்மாதர்கள்)
இங்கிருந்து தொடங்குவோம்…
பொம்மையும் சிலையும்
கலை இலக்கியம் எதற்காக?
நூலகம் எனும் அன்னை
அசைவைக் கைப்பற்றுதல்
வயதடைதல் (துறவு, கல்வி, பிரம்மச்சர்யம், உபநயனம்)
பாத்தும்மாவுடைய ஆடும் இளம் பருவத்துத்தோழியும்
காமமும் கம்பனும்- ஒரு காலைநேரம்
கம்பனும் காமமும், இரண்டு
கம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது
மகள் மங்கலம் ,கம்பனும் காமமும் 6
ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்
கல்விச்சாலையில் இந்திய மரபிலக்கியங்கள்
பறக்கும் புல்லாங்குழல்
வெண்முரசு பற்றி
வெண்முரசு – இந்தியா டுடே பேட்டி
நகைச்சுவை / அனுபவம்
தோசைக்கல்லை புக் ஷெல்பிலே வச்சது யாரு? இப்ப தெரிஞ்சாகணும்!
பத்தினியின் பத்துமுகங்கள்
குடும்பத்தில் இருந்து விடுமுறை
நாட்டியப்பேர்வழி
குஷ்பு குளித்த குளம்
குடும்பத்தில் இருந்து விடுமுறை
யுவன் சந்திரசேகர் - பகடி
காலம்!
=====
==========
======
====
ஜெயமோகன் Quotes
தன்னிலை என்பது நாம் ஏற்று அணிந்துகொள்ளும் அடையாளம் அல்ல. நம்மில் உருவாகிக்கொண்டே இருப்பது. அழிந்து அழிந்து உருவாவது. [அத்வைத மரபின்படி ஒருவன் முதல்முழுமையின் பகுதியாக தன்னை அறுதியாக உணர்வதே முழுத்தன்னிலை. அதைக் கடந்து சென்று தன்னிலையழிவது வீடுபேறு]
- ஜெயமோகன் [இந்து என உணர்தல்- ஒரு கடிதமும் பதிலும்]
இங்கு நிகழும் நன்றுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது ஆணவம். தீதுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது மேலும் ஆணவம். இங்கு உங்களை எதிர்த்து நின்றிருப்போரின் வாழ்வை நீங்கள் அமைத்தீர்களா என்ன? இங்குவரை அவர்கள் தெரிந்து வந்தமைந்த வழியை வகுத்தீர்களா? முடிவுக்கு மட்டும் நீங்கள் எவ்வண்ணம் பொறுப்பேற்கிறீர்கள் என்ற உங்கள் சொல்லை நான் தலைக்கொண்டவன்.
இங்கனைத்திலும் நிறைந்திருக்கும் அழிவற்ற ஒன்றின் அலைகளே இவையென்று உணர்ந்தவன் துயரோ களிப்போ கொள்வதில்லை. எழுவதே அமையும். எரிவதே அணையும். எனவே இருமைகளற்று துலாமுள் என நிலைகொள்பவனுக்கு சோர்வென்பதில்லை என்றது உங்கள் மெய்வேதம்.
-ஜெயமோகன் [வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை-54]
ஆக, நான் முன்வைப்பது ஒரு முக்கியமான வேறுபாட்டை. போலிக்கும் அசலுக்குமான வேறுபாட்டை. உண்மையான கருத்தியல் நிலைப்பாட்டுக்கும் உள்நோக்கம் கொண்ட வெறுப்புக்குரலுக்கும் இடையேயான மாபெரும் தூரத்தை.
இந்நிலையில் செய்யக்கூடியது இந்த உண்மையை முடிந்தவரை உரத்துக்கூவுவதுதான். அதற்கு ஏதேனும் விளைவுகள் வருமென்றால் அதைச் சந்திப்பதுதான். அப்படி உரத்துக்கூவ முதன்மையான தகுதி நம் மடியில் கனமில்லாமல் இருப்பது. நமக்கு சுயலாப நோக்கங்கள் இல்லாமல், அவை பறிபோகுமா என்ற அச்சமில்லாமல் இருப்பது. அது எனக்கிருப்பதாக நம்புவதனால் இதைச் சொல்கிறேன்.
-ஜெயமோகன் [அவதூறு செய்கிறேனா?]
நான் எப்போதும் சொல்வதுதான் , ஒருவாழ்க்கையில் பல வாழ்க்கைகளை வாழ்பவனே வாழ்வை பொருள்கொள்ளச் செய்பவன். மெய்யாக வென்றவன் அவன். ஆனால் அவனுக்கு அறைகூவல்கள் மிகுதி. ஆகவே சோர்வும் கொந்தளிப்பும் மிகுதி. அவன் தன்னை மீண்டும் மீண்டும் தொகுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வரையறை செய்ய வேண்டியிருக்கிறது. அதன்பின்னர் அதைக் கடக்க வேண்டியிருக்கிறது. அது சிந்தனையினூடாக நிகழவேண்டும்.
- ஜெயமோகன் [வரையறுத்து மீறிச்செல்லுதல்]
தனிப்பட்ட வாழ்க்கையில் உருவாகும் இடர்கள் கற்பதற்கும் மேலே செல்வதற்கும் தடைகள்தான். ஆனால் அதை நாம் கடந்தே ஆகவேண்டும் அதற்கான உளக்கருவிகள், வழிமுறைகள் ஒவ்வொருவருக்கும் ஒன்று அதை நாம் கண்டடையவேண்டும். சிலருக்கு பிரச்சினையில் இருந்து மானசீகமாக விலகிக்கொள்வது, சிலருக்கு அதை சிறுகச்சிறுக எதிர்கொள்வது, சிலருக்கு அதை வேறு ஒன்றாக கற்பனைசெய்துகொள்வது.
ஆனால் விலகியாகவேண்டும் என்னும் உறுதியான எண்ணம் இருந்தால்போதும்
- ஜெயமோகன் [இரு தொடக்கங்கள்]
எப்போது நாம் தத்தளிப்பின் எல்லையில் இனியென்ன என்று தவிக்கிறோமோ அப்போது நமது அந்தரங்கத்திலிருந்து அதுவரை நாமறிந்திராத ஓர் உள்ளொளி உதயமாகி நம்மை புதிய சாத்தியங்களின் வாசல்களை நோக்கி இட்டுச் செல்கிறது. அது தரும் தன்னம்பிக்கையும் துணிவும் என்றும் நமது வழித்துணையாக இருக்கும். சற்றும் எதிர்பாராதபடி ஓர் எரிமலை நம்முள் உடைந்து தீக்கங்குகளை உமிழும்போது, வானைத் துழாவும் தீ நாக்குகளை நாம் செயலற்றுப் பார்த்திருக்குபோது, அவ்வொளியில் புதிய தோற்றம் தரும் வானம், பிறகு நம் வாழ்வின் மிக இனிய நினைவுகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது.
– யதி & ஜெயமோகன் [தும்பி]
வலியை எதிர்கொள்ள சிறந்த வழி என்பது வலியை கூர்ந்து கவனிக்க ஆரம்பிப்பதே. வலியில் நாம் நினைப்பவை எல்லாமே வலியுடன் தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன. எதையும் கூர்ந்து நோக்கும்போது நம்முடைய மனம் அதில் இருந்து மெல்ல விலகிவிடுகிறது. அதை வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கிறது. அந்த வேடிக்கை அவ்வனுபவத்தில் உள்ள அச்சம், துயரம், வலி போன்றவற்றை பெருமளவுக்குக் குறைத்து விடுகிறது
- ஜெயமோகன் [வலி]
மனிதர்களை எங்கும் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறோம். அவர்களின் அன்பு காழ்ப்பு சிறுமை பெருமைகளுடன். ஒன்றை வைத்து இன்னொன்றை எடைபோடாமலிருப்பது, ஒன்றைப் பெருக்கி இன்னொன்றைக் காணாமலிருப்பதுதான் பயிலவேண்டிய நிலை.
- ஜெயமோகன் [கொரோனா- கடிதங்கள்]
பாதைகள் இருப்பது மண்ணிலும் கால்களிலுமல்ல. அவை காற்றில் வானில் திசைகளில் இருக்கின்றன. அவற்றை மனம் எதிர்கொள்ளும் சாத்தியங்களில் இருக்கின்றன. பாதைகள் ஏற்கனவே நுண்வடிவில் இருந்துகோண்டிருக்கின்றன. தயங்கி ஐயுற்று துணிந்து மீண்டும் அஞ்சி மெல்லமெல்ல மனிதன் அவற்றுக்கு மண்ணில் ஒரு பருவடிவத்தை அளிக்கிறான்.
பலகோடி பாதைகளின் பின்னல்வலையால் முற்றிலும் சூழப்பட்ட இந்தபூமி ககனவெளியில் திரும்பித்திரும்பி பிற கோளங்களுக்கு நன் பாதைக்கோலத்தின் அழகைக் காட்டியபடிச் சுற்றி வருகிறது. பிரபஞ்சத்துக்கு அப்பாலிருந்து பார்க்கையில் கோள்களின் மீன்களின் மாபெரும் பாதைவலையே பிரபஞ்சமென்று தோன்றுமோ?
அப்படியே இருக்கட்டும் இந்தப்பாதை. அதன் மறுநுனியில் நானறிந்த அனைத்துமே இன்னும் மேலானதாக மேலும் மகத்தானதாக இருக்கட்டும். பாதை ஒரு வாக்குறுதி, வெளியே திறந்த வாசல்.
-ஜெயமோகன் [குன்றுகள்,பாதைகள்]
நான்கு வினாக்களை கேட்டுக்கொள்ளவேண்டும்.
1. எதைச் செய்தால் நான் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருப்பேன்?
2. எதைச்செய்ய என்னால் முடியும்?
3. அதில் எனக்கிருக்கும் தடைகள் என்ன?
4. அதைச்செய்வதற்கான திட்டங்கள் என்ன?
தொடங்குங்கள். வாழ்நாள் முழுக்கச் செல்லுங்கள். அப்படி தொடங்குவது ஒரு பிறப்பு. அது ஒரு பிறந்தநாள் சூளுரை. அது ஒன்று போதும்.
-ஜெயமோகன் [புத்தாண்டுச் சூளுரை]
ஆகவே உங்களிடம் நான் என்ன சொல்வேன்?
உங்களால் அரிது என்று மலைக்கப்படும் ஒரு செயலை இன்றே செய்ய தொடங்குங்கள்.
- ஜெயமோகன் [இருத்தலின் ஐயம்]
வாழ்வதன் அகலம் அல்ல, வாழ்வதன் ஆழமே முக்கியம்
நான் ஏன் செயலாற்ற வேண்டும் இந்த இனிமை போதுமே என்று கேட்கலாம். செயலாற்றுவதன் மூலம நாம் அடைவது தன்னிறைவு. செயல் போல் நிறைவளிக்கக்கூடியது ஏதுமில்லை. செயல் என்பதே நம்மை மற்ற உயிர்களிடத்தில் இருந்து பிரித்து காண்பிப்பது. செயலின்மை என்பது இனிய மது. செயலாற்றவே நாம் மனிதனாக பிறந்துள்ளோம். உண்மையில் எதையாவது செய்ய ஆரம்பித்து அதன் சவால்களைச் சந்தித்து அச்சவால்களைத் தூண்டுவது போல் சிறந்தக் கல்வி என ஏதுமில்லை. அது மிக மிக கூர்மையான கல்வி. அது செயல்முறைக் கல்வி. நமக்குப் பிடித்த தளத்தில் செயலாற்றுவதுதான் யோகம். அது நம்மை கண்டடையும் வழி. நம்மை முழுமைப்படுத்தும் வழி. வாழ்க்கை வெல்வதற்கும் நிறைவதற்கும் உரியது. பத்திரமாக பதுங்கி இருப்பதற்குரியதல்ல.
-ஜெயமோகன் [சரியான வாழ்க்கையா?] [தன்மீட்சி- கடிதம்]
No comments:
Post a Comment