Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

Showing posts with label Short_Stories. Show all posts
Showing posts with label Short_Stories. Show all posts

April 11, 2019

துல்லியம் - ஒரு குட்டி கதை

மூன்றையும் எட்டையும் பெருக்கினால் என்ன? இருபத்திமூன்று என்று உன் நண்பன் சொன்னால் அவனிடம் நீ சண்டைக்கு போக கூடாது.  பரவாஇல்லை, நீ இருப்பத்திமூன்று நு நினைச்சு இருக்க, எனக்கு இருப்பத்திநாலு நு எங்க வாத்தியாரு சொல்லிகொடுத்து இருக்காரு. உங்க வாத்தியாரு இருப்பத்திமூனு நு சொல்லிகொடுத்து இருக்காரு. அதுல்லாம வாய்ப்பாடில் பலவிதம் இருக்கல. அதில இது ஒரு விதம். அதனால பரவாஇல்லை. அப்படி இருந்தால் நன்மை நமக்கே. வாழ்க்கைல துல்லியம் பின்சென்றால் நமக்கு தான் கேடு.

அதேப்போல் ஒரு மாணவன் வங்கியிற்கு நேர்காணலுக்கு சென்று இருக்கிறான். எட்டை மூனால் பெருக்கினால் என்ன என்று கேட்கிறார்கள். மாணவன் இருப்பத்தின் மூன்று என்று சொல்லிவிட்டு வருகிறான். வீட்டுக்கு வந்து ஐயோ நம்ம இவ்ளோ கிறுக்கா பதில் சொல்லி இருக்கோமே நமக்கு கிடைக்காது வேலைனு இருக்கான். ஒருவாரம் கழித்து வேலைக்கான அப்பாய்ன்மண்ட் ஆர்டர் வருகிறது. வேலையில் சேர்ந்து ஒருவருடன் பின் பணி நிரந்திரம் ஆனப்பிறகு மேலாளரிடம் கேட்கிறான், சார் நீங்க அன்னிக்கி அப்படி ஒரு கேள்வி கேட்டீங்க, நான் தப்பா சொல்லிட்டேன். நீங்க கவனிக்கல போல. மேலாளர் சொல்கிறார் அதலான் இல்ல தம்பி. இப்ப இனிமே நம்ம மாத்த முடியாது. அன்னிக்கி 294 பேர் நேர்காணல்க்கு வந்தாங்க. எல்லார்கிட்டையும் இந்த கேள்விய கேட்டேன். உன் பதில் தான் சரியான பதிலுக்கு பக்கத்துல இருந்த்துச்சு (nearest correct answer). அதனால உனக்கு வேலைய கொடுத்தேன். நான் ஒன்னும் தப்பு செய்யல. 

ஆதலால் வாழ்க்கையில் வெற்றி பெற nearest correct answer அதான் பார்க்கனும். ஆனா science'la perfection நு பாக்கனும். வாழ்க்கைல perfection/accuracy பாக்ககூடாது.

Perfection பத்தி சொல்லனும் நா, நம்ம பாக்கற்துலான் அழகா இருக்கு தானே தவிர அழகா இருப்பத்தை யெல்லாம் நாம் பார்ப்பத்தில்லை. அதனால் தான் ஒரு நீக்ரோ விற்கு ஒரு நீக்ரோவை பிடித்து இருக்கிறது. நமக்கு வித்தியாசமா இருக்கு. ஆதலால் வாழ்க்கைல துல்லியம் (perfection/accuracy) லான் பார்த்து வாழ்க்கைய வீண் அடிக்க கூடாது.

(நண்பனுக்கு)

March 18, 2014

அனசூயை - தத்தாத்ரேயன்

ஜெயமோகனின் வெண்முரசுவில் இருந்து...

பொறாமையை வெல்லும் பொறைநிலையோ கலையின் முதிர்நிலையே ஆகும். அனசூயை வாழும் பிரஜாபதியின் துணைவியாக பல்லாயிரம் மண்ணகங்களை தன் மடியில் தவழும் குழந்தைகளைப்போல காத்துவந்தாள். அன்றொருநாள் பூமி மீது இந்திரன் சினம் கொண்டான். வானில் அவன் வில் தோன்றாமலாயிற்று. தன் வஜ்ராயுதத்தை வளைதடியாக்கி மேகக்கூட்டங்களை வெள்ளாடுகளைப்போல அவன் ஓட்டிச்சென்று மேற்குத்திசையின் இருண்ட மடிப்பு ஒன்றுக்குள் ஒளித்துவைத்தான். மழையின்மையால் பூமி வெந்து வறண்டது. தாவரங்கள் பட்டு கருகின. கங்கை மணல்வரியாக மாறியது.

வைதிகர் தேவர்களுக்கு அவியிட்டு மும்மூர்த்திகளையும் வணங்கி காக்கும்படி மன்றாடினர். நாகர்கள் தங்கள் முதுநாகத்தெய்வங்களுக்கு பலிகொடுத்து வெறியாட்டாடி வணங்கினர். மானுடர் தங்கள் தேவர்களை வணங்க ஊர்வனவும் பறப்பனவும் நடப்பனவும் நீந்துவனவும் தங்கள் தெய்வங்களை வணங்கி மன்றாடின. மும்மூர்த்தியரும் தேவர்களும் இந்திரனைத் தேடி அலைந்தனர். அவனோ விண்ணக இருளுக்குள் ஒளிந்திருந்தான்.

நெய்யகன்ற அகலென பூமி தன் ஒளியவிந்து அணையும் நாளில் மண்ணில் வாழ்ந்த எளிய புழு ஒன்று தான் புழுவென்றறிந்தமையால் பொறாமையை வென்றது. அது தாகத்தால் வாடி இறக்கும் கணத்தில் அனசூயையை வேண்டியது. அன்னையே நான் இறப்பினும் என்குலம் அழியாது காத்தருள்க என்றது.

அதன் கோரிக்கையை அன்னை ஏற்றாள். அவள் கருணை மண்மீது மழையாகப் பொழிந்தது. மண்ணில் அனைத்துத் தாவரங்களும் எழுந்து விரிந்து தழைத்து மலர்ந்து கனிந்து பொலிந்தன. தேவர்கள் கோர அன்னை கருணைகொண்டாள். அவள் தவத்தாணையால் விண்ணிலும் மண்ணிலும் பத்து வெளியக நாட்கள் இருள் நிறைந்தது. விண்ணகம் இருளானபோது ஒளிந்திருந்த இந்திரன் தன் வஜ்ராயுதத்துடன் வெளியே வந்தான். அவனை தேவர்கள் கண்டடைந்தனர். தேவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்திரன் கனிந்து மழைமுகில்களை விடுவித்தான்.

அந்நாளில் கைலாயத்துக்குச் சென்ற நாரதர் முக்கண்முதல்வனை வணங்குவதற்கு முன்பு அனசூயையை எண்ணி வணங்கினார். அதற்குக் காரணம் என்ன என்று சிவன் கேட்டபோது மும்மூர்த்திகளும் தோற்ற இடத்தில் வென்றவள் அனசூயை அல்லவா, அவள் வல்லமையே முதன்மையானது என்றார் நாரதர். அவ்வண்ணமே சொல்லி மும்மூர்த்திகளையும் யோகத்திலிருந்தும் துயிலிலில் இருந்தும் மோனத்திலிருந்தும் எழச்செய்தார். அனசூயையின் வல்லமையை அறிவதற்காக மும்மூர்த்திகளும் அத்ரி முனிவரின் தவச்சாலைக்கு மூன்று வைதிகர்களாக வந்தனர். தங்களுக்கு தாங்கள் விரும்பியவண்ணமே உணவளிக்கவேண்டுமென்று கோரினர். அவ்வண்ணமே ஆகுக என்று சொன்ன அத்ரி பிரஜாபதி தன் துணைவியிடம் அவர்கள் கோரும்படி உணவளிக்க ஆணையிட்டார்.

வான்கங்கையாடி உணவுண்ண வந்தமர்ந்த மூன்றுவைதிகர்களும் அனசூயையிடம் தங்களுக்கு குலப்பெண் ஆடையின்றி வந்து அன்னமிடுவதே நெறி என்றனர். கணவனின் ஆணையையும் கற்பின் நெறியையும் ஒரேசமயம் அவள் எப்படி காத்துக்கொள்கிறாளென்று அறிய அவர்கள் விழைந்தனர். அனசூயை அவர்கள் மூவரையும் தன் புல்லை அமுதாக்கும் காமதேனுவின் கைநீட்டி நெஞ்சுடன் அணைத்துக்கொண்டாள். அவர்கள் கண்களில் பால்படலம் மறையாத கைக்குழந்தைகளாக மாறி அவள் மடியில் தவழ்ந்தனர். அவள் ஆடையின்றி வந்து மூவருக்கும் முலையமுதூட்டினாள்.
அவர்கள் அவள் மடியில் மதலைகளாக வாழ்ந்தனர். முதல்பொருளின்றிப் பிறந்த மூலவர்கள் அவள் வழியாகவே அன்னையின் பேரன்பை அறிந்து களித்தனர். முத்தொழிலை ஆற்றும்பொருட்டு அவர்கள் மீண்டும் தங்களுருக்கொண்டபோதிலும் அன்னையின் அன்பை முழுதறியும் பொருட்டு அவள் உதரத்திலேயே ஒரேகுழந்தையாகப் பிறந்தனர். அந்த மகவு தத்தாத்ரேயன் என்றழைக்கப்பட்டது.

மும்மூர்த்திகளையும் மூன்று முகங்களாகக்கொண்டு ஆறுகரங்களுடன் பிறந்த தத்தாத்ரேயர் இளமையிலேயே நான்கு அறங்களையும் துறந்தார். ஐம்புலன்களையும் வென்றார். களைவதொன்றுமில்லாத நெஞ்சுகொண்டிருந்தமையால் அவர் அறியவேண்டியதென்று ஏதுமிருக்கவில்லை. ஞானங்களின் கொடுமுடியான வேதங்களைக் கற்கும்பொருட்டு தன் தந்தையான பிரம்மதேவனைத் தேடிச்சென்றார் தத்தாத்ரேயர். அவரைக்கண்டதும் பிரம்மனின் கையில் வாடாததாமரைகளாக மலர்ந்திருந்த நான்கு வேதங்களும் தத்தாத்ரேயரின் உடலில் வீசிய அன்னையின் முலைப்பால் வாசனையை உணர்ந்து நான்கு நாய்களாக மாறி அவரைத் தொடர்ந்தன.

“மும்மூர்த்திகளையும் முலையூட்டி வளர்த்தவளை வாழ்த்துவோம். பிரம்மத்தை ஞானமாக பெற்றெடுத்தவளை வாழ்த்துவோம். பிறிதொன்றிலாத பார்வை கொண்ட அனசூயை அன்னையை வாழ்த்துவோம். ஆம், அவ்வாறே ஆகுக!”

February 28, 2014

மீன் குழம்பு [குடைநிழல் - தெளிவத்தை ஜோசப்]

மகள் எப்போதுமே என் கட்சிதான். எப்போதும் எதற்கும் அப்பா வேண்டும் அவளுக்கு. அம்மாவுடனான, அண்ணாவுடனான சின்னச்சின்ன பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண அவளுக்கு அப்பா வர வேண்டும்.

நேற்று பகல் சாப்பாட்டின் போதுகூட அம்மாவுடன் ஒரு றகளை.

நேற்று பகல் எங்கள் வீட்டில் மீன் குழம்பு.

மகள் மீன் சாப்பிடுவதில்லை! அவளது மறுப்பின் நியாயம் கருதி நானும் வற்புறுத்தவில்லை.

முன்பெல்லாம் மீன் என்றால் விரும்பி சாப்பிடுவாள். சின்ன மீன் என்றால் மாத்திரம் சற்றே சங்கடப்படுவாள். துண்டு மீன் என்றால் முள் பிரச்சினை கிடையாது. மிகவும் விரும்புவாள். அம்மாவின் மீன் குழம்பு வைப்பே ஒரு தனித்துவமானது. தனிச்சுவையானது. கிராமப் புற சிங்களப் பெண்கள் பலாக்காய்கறி சமைப்பதுபோல, ஒரு அருமையான கைப்பக்குவம் அது!

வெறும் குழம்பை வெறும் தட்டில் விட்டு வழித்து வழித்துச் சுவைப்போம். நானும் மகளும். அப்படி இருந்தும் இப்போது மீன் குழம்பு சாப்பிட மறுக்கின்றாள் என்றாள் அதற்கான் வலுவான காரணங்கள் உண்டு.

கொஞ்ச காலத்துக்கு முன் எதுவிதமான் கேள்வி கேட்பாடுகளுமின்றி இளைஞர் யுவதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். டயர் போட்டு எரிக்கப்பட்டனர்.

காலெரிந்த, அரையெரிந்த பிணங்கள் காடு மேடென்று கிடந்தன. கூடுதலானவை ஆறுகளில் எறியப்பட்டன.

வாயுப்பி வயிறுப்பிக் கரையொதுங்கி மனிதர்களை பயமுறுத்தியவை ஒன்றிரண்டு! மீதியெல்லாம் ஆற்றிலோடி கடலுக்குள் சங்கமித்து மீன்களுக்கு உணவாகின.

மனிதர்கள் மட்டுமா மீன் தின்னலாம்! மீன்களும் மனிதர்களைத் தின்ன வேண்டாமா! ஓடம் வண்டியிலும் வண்டி ஓடத்திலும் ஏறும் வரலாறுகள் தான்.

அரச இயந்திரத்தை செயலிழக்கச் செய்யும் உறுதியுடன் மேற்கிளம்பிய தென்னிலங்கைச் கிளர்ச்சிக்காரர்களை அரசு அடக்கி காட்டியவிதம் இது.

ஒருநாள் மனைவி சமையலுக்காக மீன் அரிந்து கொண்டிருந்தாள். வழக்கம்போல் மகளும் உடனமர்ந்து ஒத்தாசை செய்து கொண்டிருந்தாள். அரிந்த மீனின் அடிவயிற்றை நசுக்கிக் குடல் எடுக்கும்போது பிதுக்கிய வேகத்தில் விரல்களுக்கூடாக நழுவி ஒடித் தனியாக தரையில் விழுகிறது ஒரு விரல் துண்டு. மனித விரல்! வர்ணம் பூசிய நகத்துடனான ஒரு சுண்டு விரல் துண்டு.

மகள் பயப்படக்கூடும் என்பதால் தாய் லாவகமாக மறைக்க முயன்றிருக்கின்றாள். சின்னஞ்சிறிசுகள் ஆர்வம் மிக்கவர்களாயிற்றே.

‘அது என்னம்மா’ என்றவள் தெறித்தோடி விழுந்த விரல்துண்டைக் கண்டுவிட்டதும் ‘சீக்கே’ என்றப்படி எழுந்தோடிவிட்டள். அந்த சம்பவத்துக்குப் பிறகு மீன் என்றாலே அவளுக்கு ஒரு அறுவறுப்பு சாப்பிட மறுப்பாள். சாப்பிட மாட்டாள். நானும் வற்புறுத்துவதில்லை.

வீட்டில் மீன் குழம்பு என்றால் ஏதாவது மகளுக்கு தனியாக இருக்கும். நேற்றும் மீன் தான். தனியாகச் சமைத்திருக்கும் குழம்பை எடுத்துக் கொடுக்காமல் தாய் மீன் குழம்பை மகளிடம் தள்ள ‘பாருங்கப்பா’ என்று மகள் சிணுங்க. நான் எழுந்துபோய் மற்ற குழம்பை எடுத்து வந்து மகளுக்கு ஊட்டினேன். 

‘நீங்கள்தான் அவளை கெடுக்கிறது’ என்று பொய்யாகச் கோபித்துக்கொண்டாள் மனைவி. மகள் ஒரு நமுட்டுச் சிரிப்புடன் தாயைச் கேலி செய்தபடி ஓரக்கண்ணால் என்னை நோக்கி கண் சிமிட்டுவாள்.

HE IS MY EVERTHING
HE IS MY ALL - HE IS MY EVERYTHING
FOR GREAT THINGS AND SMALL
HE GAVE HIS LIFE FOR ME.

என்று ஏசுவின் நவநாள் பிரார்த்தனையின் போது படிக்கப்படும் பாடலை உயர்ந்த குரலில் பாடினாள். அம்மாவை உசுப்பிவிட.

(இலங்கை மலையக பகுதி எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களின் குடைநிழல் [2010] குறுநாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி அல்லது சிறுகதை என்றும் சொல்லலாம்)

மலையக பகுதி - யாழ்ப்பாணம் அல்ல. இந்தியாவில் இருந்து தேயிலை தோட்டதிற்கு அடிமைகளாக சென்றவர்கள்.

February 12, 2014

சுப்ரை

இன்று எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசுவில் (மகாபாரதம் தமிழில் மறு ஆக்கம்) சுப்ரை என்ற ஒரு பறவையை பற்றிய ஒரு (தாய்மை பற்றிய) கதைப் படித்தேன். மிக அருமையாக இருந்தது.

அந்த கதையை இங்கு வெட்டி ஒட்டி உள்ளேன்.

சுட்டிகள் (சொடுக்கலாம்)

முன்னொரு காலத்தில் இந்திராவதி என்னும் ஆற்றின் கரையில் கௌரன் என்னும் சாதகப் பறவை தன் துணையுடன் வாழ்ந்து வந்தது. மழைநீரை வானிலிருந்து அருந்தும் சாதகப்பறவை பிற உயிர்கள் அறியாத ஆற்றிடைக்குறைக்குச் சென்று அங்குள்ள மரப்பொந்தில் முட்டையிடும் வழக்கம் கொண்டது. தந்தை அமைக்கும் மரப்பொந்துக்குள் சென்று அமரும் தாய்ப்பறவை உள்ளே முட்டையிட்டு இறகுகளால் பொத்தி அடைகாக்கும். ஆண்பறவை பறந்துசென்று இரைதேடிக்கொண்டுவந்து தன் துணைக்கு உணவூட்டும்.

காட்டெருதின் கொம்புகளைப் பிணைத்ததுபோல் அலகுள்ள சாதகப்பறவையான கௌரன் தன் துணைவி சுப்ரை ஐந்து முட்டைகளுடன் மரப்பொந்துக்குள் முட்டைமீதமர்ந்து தவம் செய்யத்தொடங்கியதும் அதை உள்ளே வைத்து தன் உடற்பசையால் மூடியது. பின்பு காட்டுக்குள் சென்று உணவுகொண்டு வந்தது. நாற்பத்தொருநாட்கள் அவ்வாறு கௌரன் தன் மனைவிக்கு ஊட்டியது. ஒருநாளில் நூறுமுறை அது உணவுடன் வந்தது. கிடைக்கும் உணவில் ஏழில் ஒருபங்கை மட்டுமே அது உண்டது. மெலிந்து சிறகுகளை வீசும் வல்லமையை இழந்தபோதிலும் கௌரன் சோர்வுறவில்லை.

ஒருநாள் வானில் உணவுதேடிச்சென்ற கௌரன் சிறகு ஓய்ந்து ஒரு மரத்தில் அமர்ந்திருக்கையில் ஒரு வேடன் அதை அம்பெய்து வீழ்த்தினான். இறகுகள் முழுக்க உதிர்ந்து கருக்குழந்தைபோல ஆன சுப்ரை சிறகுகள் முளைக்காமல் புழுக்கள் போல நெளிந்த சிறு குஞ்சுகளுடன் மரப்பொந்தில் காத்திருந்தது. ஐந்து குஞ்சுகளும் தீராப்பெரும்பசியுடன் அன்னையை முட்டி உணவுக்காகக் குரலெழுப்பின. இரண்டுநாள் காத்திருந்தபின் சுப்ரை என்ன நடந்திருக்குமென புரிந்துகொண்டது.



சுப்ரை தன் குஞ்சுகளிடம் சொன்னது, ‘குழந்தைகளே, இந்த ஆற்றிடைக்குறையில் இருந்து நாம் தப்ப ஒரேவழிதான் உள்ளது. நீங்கள் என்னை உண்ணுங்கள். முதலில் என் குருதியைக் குடியுங்கள். பின்பு என் கால்களை உண்ணுங்கள். அதன்பின் என் கைகளை. என் இதயத்தை கடைசியாக உண்ணுங்கள். உங்கள் சிறகுகள் வளர்ந்ததும் பறந்துசெல்லுங்கள். என்னை நீங்கள் சிறிதும் மிச்சம் வைக்கலாகாது.’

அன்னையின் ஆணைப்படி ஐந்து குஞ்சுகளும் அதனை உண்டன. அதன் குருதியை அவை குடித்து முடித்ததும் சுப்ரை வெளுத்து வெண்ணைபோல ஆகியது.  அவை அதன் கால்களையும் கைகளையும் உண்டன. கடைசியாக மெல்ல அதிர்ந்துகொண்டிருந்த இதயத்தை உண்டன. அன்னையை சற்றும் மிச்சமில்லாமல் உண்டு முடித்த அவை புதியசிறகுகளுடன் வானில் எழுந்து பறந்து சென்றன. அந்த ஐந்து குஞ்சுகளில் ஒன்றுக்கு மட்டும் அன்னையின் கடைசி ஆணை நினைவில் இருந்தது. அது திரும்பி வந்தது. அந்தப்பொந்தில் அன்னையின் வாசனை எஞ்சியிருப்பதை அதுமட்டும்தான் அறிந்தது. அதை எப்போதும் போக்கமுடியாதென்பதை புரிந்துகொண்டது.

தேவருலகு நோக்கி ஒளிமிக்கச் சிறகுகளுடன் பறந்துகொண்டிருந்த சுப்ரையை மூதாதையரின் உலகில் கௌரன் சந்தித்தது. ‘நான் உன் துணைவன்.. என் சிறகுகள் ஏன் ஒளிபெறவில்லை?’ என்று கேட்டது. ‘நான் மண்ணில் தாய்மையின் பேரின்பத்தை அடைந்து முழுமைகொண்டேன். என் பிறவிக்கண்ணி அறுந்தது’ என்றது சுப்ரை. ‘ஆம், நான் என் இச்சை அறாமல் இறந்தேன்’ என்றது கௌரன். ‘நீ மண்ணில் மீண்டும் பிறந்து நான் பெற்ற முழுமையைப் பெறுவாய்’ என சுப்ரை கெளரனை வாழ்த்தி விண் ஏகியது.’