நேற்று (30-டிசம்பர்-2025) நான் ஆரோமலே படம் பார்த்தேன்.
எனக்கு அது குணப்படுத்தும் மருந்தாக ஒரு அழகிய நினைவாக இருந்தது எனலாம். கொஞ்சம் trans regressive ஆகும் இருக்கும்
2010 இல் நான் வெண்தாமரையை விரும்பி என் காதலை சொன்னேன். ஆனால் அவள் நிராகரித்துவிட்டால். அப்போது மனதளவிலும் அறிவிலும் நான் மிக பலகீனமாக இருந்தேன். அதை எப்படி கையாள்வது என்றே தெரியவில்லை. அவளிடம் மன்றாடினேன்..நல்லவேளை நான் அப்போது ஒருவாரத்தில் தென் கொரியா சென்றுவிட்டேன். இல்லையேல் அவளிடம் மன்றாடி அவளுக்கு தர்மசங்கடமும் மன உளைச்சலும் கொடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால் அக்காலகட்டத்தில் நான் ஒரு depression இல் இருந்தேன். கட்டினா அவளை தான் கட்ட வேண்டும். வெளிநாட்டில் படித்து ஒரு நல்ல முன்னேறிய நிலைமைக்கு வந்து அவர் பெற்றோரிடம் பெண் கேட்கவேண்டும் என்ற மனக்கோட்டையெல்லாம் கட்டி இருந்தேன். 2014 இல் வெளிநாட்டிற்கு படிக்கவும் சென்றேன்.
ஆனால் 2015 இல் internship இல் இருந்த சமயம் வசந்த் போன் செய்து வெண்தாமரைக்கு கல்யாணம் ஆகிவிட்டதாக சொன்னான். எனக்கு உண்மையிலேயே சந்தோஷம். அவளுக்கு கல்யாணம் ஆனதற்காக அல்ல. அப்பாடா இந்த ரோட் இங்கே முடிந்தது, இனிமேல் take diversion போன்ற நிறைவு. ஒரு ஆசுவாசம். இனிமேல் மனம் பகற்கனவுகளில் உழலாதல்லவா? (உண்மையாக take diversion என்பது போல் அடுத்த பெண்ணை பார்க்க ஆரம்பித்தேன் 😜)
பின்பு முத்து, விவேக் போன்ற சில நண்பர்களிடம் இதைப்பற்றி பேசி இருக்கிறேன். எல்லோருமே இதை போல் தான் அந்த நிராகரிப்பையை கையாள்வதில் சிக்கல்கள் இருந்ததாக சொன்னார்கள்.
ஜெயமோகனை படித்து ஆரம்பித்த சில ஆண்டுகள் அப்போது. பல கடிதங்களில் ஒரு கடிதம் இந்த காதல் நிராகரிப்பை பற்றி. ஜெயமோகன் தயவு சாட்சிநியம் இன்றி நீங்க புண்பட்டது உங்கள் அகங்காரத்தால் என்று அந்த வாசகருக்கு பதில் அளித்து இருந்தார். அது என் மனதை தைத்தது என்றே சொல்லலாம். நம்மை சிதில் சிதிலாய் உடைத்து பின்பு கட்டி எழுப்புவது தானே இலக்கியம். அதுதான் ஜெ கடிதம் செய்தது.
நாம் அதுவரை அடைந்த வெற்றிகள் முன்னேற்றங்கள் நம்மை எந்தப் பெண்ணும் நிராகரிக்க மாட்டாள் என்ற ஆணவம். மேலும் நம் குறைகளை அவர்கள் காணுவார்கள் என்பதை காணத் தவறியது. மேலும் அந்த பெண்ணை impress/கவரும் அளவு நான் எதுவும் பெரிதாய் செய்யவில்லை. நானும் ஒரு சராசரியாகவே இருந்தேன். பின்பு எனது தவறுகளை உணர்ந்தேன். அதுவே எனக்கு மருந்தாக இருந்தது எனலாம்.
ஆயினும் எப்போதும் அவளை அடுத்த முறை airport போன்ற இடத்தில் சந்தித்தால் அவளுக்கும் ஒரு நல்ல தருணமாக ஒரு வேளை அவளுக்கும் ஒரு closure வேண்டுமெனில் எங்கள் சந்திப்பு அத்தகையதாக அமைய வேண்டும். பால்ய கால குடும்ப நண்பரையோ அல்லது குடும்ப நண்பர்(uncle இல்) பிள்ளைகளையோ நாம் ஊருக்கு வரும்போது எதேச்சையாக பார்க்கும் கதைக்கும் பொது வரும் வாஞ்சை போல.
பின்பு வாழ்க்கை இல்லாத வாழ்க்கையில் பல ஹேர்பின் வளைவுகள். பெரிதாக ஒன்றும் இல்லை.
இத்தகைய நிலையில் நவம்பர் 2025 மாதம் எனது hard disk இல் இடம் இனிமேல் இல்லை என்ற சூழ்நிலை வந்தது. கண்டிப்பாய் பார்க்க மாட்டேன் என்ற படங்களை நீக்கினேன். பின்பு சில படங்களை தேர்ந்தெடுத்து பார்த்தேன்.
டிசம்பர் கடைசி வாரத்தில் Alt+Tab - Life of Ram என்ற சிStand up comedian Ramkumar இன்' 2 மணி நேர நகைச்சுவை நிகழ்ச்சியை youtube இல் பார்த்தேன். Ramkumar உம் 1984 பிறந்தவர் தான். அவர் அவருடைய கல்லூரி , IT career, weight loss, standup comedy career வாழ்க்கை தழுவி ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியை செய்து இருந்தார். அதில் கௌதம் வாசுதேவ் மேனன் படங்கள் போல் காதல் நம் வாழ்வில் இல்லை. Onsite இல்லை என்று பேசி இருப்பார். அப்போதே என் மனநிலை வாரணம் ஆயிரம் விண்ணைத்தாண்டி வருவாயா படங்கள் தரும் கிரக்கத்திலிருந்தது. விண்ணைத்தாண்டி வருவாயவில் அரும் ஆரோமலே பாடல் அப்படம் வந்த சமயத்தில் எனக்கு மிக பிடித்த பாடலாக என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது
வருட கடைசி ஆயிற்றே என்று 30 டிசம்பர் அன்று ஒரு நாள் பீல் குஃட் பார்க்கலாம் என்று ஆரோமலே படம் பார்த்தேன். எவ்வளவு நல்ல தேர்வு.
ஒரு கல்லூரி படிக்கும் இளைஞன் அஜித் (கிஷென் தாஸ்) சினிமா பார்த்து சினிமாவில் வருவதுபோல் காதல் அமையும் என்று கனவுலகத்தில் (fantasize செய்து கொண்டு) சஞ்சரிக்கிறான். அவனுக்கு பள்ளி கல்லூரிகளில் காதல் தோல்விகள். ஒரு கட்டத்தில் வேலைக்கு செல்கிறான். அங்கு ஒரு பெண்ணை பார்க்கிறான். அவள் மீதும் காதல் fantasy கொள்கிறான். ஆனால் அந்த அஞ்சலி (ஷிவாத்மிகா) பெண்ணோ மிகவும் உறுதியான பெண். இளவயதிலேயே கவனம் குவித்து உழைத்து முன்னேறியவள். இவனுக்கு மேலாளர். இவன் சோம்பலை முதல் meeting இறுதியில் திடமாய் கண்டிக்கிறாள். பின்பு இருவருக்கும் ஒரு cold professional உறவு தான் இருந்து வந்தது.
ஒரு கட்டத்தில் அஞ்சலி அஜித் இன் வேலை பிடிக்காமல் அவனை வேலையைவிட்டு நீக்கிவிடுவாள். அது வாக்குவாதமாக மாறி இருவருக்கும் இடையில் சண்டைமூண்டுவிடும். அப்போது அங்கு இருக்கும் நரசிம்மன் கதாபாத்திரத்தால் ஒரு சவாலிற்காக அவன் மீண்டும் வேலையில் சேருவதுபோல் ஆகும். பின்பு ஒருகட்டத்தில் நரசிம்மன் (நடிகர் VTV கணேஷ்) இருவரையும் திட்டிவிடுவார். அதனால் அஞ்சலி 2-3 நாட்கள் அலுவகத்திற்கு வரமாட்டாள். அஜித்தோ இவனால் தான் இந்த நிலைமை என்ற குற்ற உணர்ச்சியால் அவள் வீட்டிற்கு சென்று என்ன ஆயிற்று என்று கேட்பான். அதுவே அவர்களுக்கு ஒரு உறவு முளைக்க பாலமாய் அமைந்தது. பின்பு இருவரும் நட்பு பாராட்டுவார்கள். இவர்கள் ஈஷுவதைப்பார்த்து அலுவலகமே கண்ணு போடும் (இதைப் போல் கண்ணு போடத்தா இந்த உலகமே இருக்கிறதே. எனது ரூட் 4 பஸ்ஸில் கண்கள் எல்லாம் நினைவிற்கு வருகிறது.அக்கண்களை சபிக்கிறேன். இதன் வாயிலாக).
இருவருக்கும் இடையில் காதல் தான் என்று கூட இருக்கும் நண்பன் சச்சின் சொல்லுவான். அதனால் அஜிதுக்கு ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வான் சச்சின். அஞ்சலி அவனுக்கு அவர்கள் இருவரும் இருக்கும் ஒரு புகைப்படத்தை ஓவியமாக தீட்டு பரிசளிப்பாள். அதை பார்த்து இது காதல் என்று நினைத்துக்கொள்வான் அஜித். அந்த நம்பிக்கையில் அவளிடம் தன் காதலை சொல்ல தயாராவான். இருவரும் இருட்டில் ரோட்டில் அவள் கார் வரையில் நடந்து செல்வார்கள். அப்போது இந்த ஓவியம் பற்றி பேசுவார்கள். பின்பு அவள் நேரம் ஆயிற்று. நாளை பார்க்கலாம் என்று சொல்லி இவனை மெலிதாக அரவணைத்திவிட்டு செல்ல முற்படுவாள். அஞ்சலி அஜிதை அரவணைக்கும்பொழுது “நாம இப்படியே இருந்துவிடுவோமா” என்று அஜித் சொல்லுவான். அஞ்சலிக்கு ”பழைய” நினைவுகள் வரும். ஆனால் அவள் சூழ்நிலையை நன்றாக கையாளுவாள். நாம் பின்பு நாளை பேசுவோம் என்று. ஆனால் (என்னை போன்ற சராசரி) அஜித் இருக்கானு சொல்லு என்று கேட்டு தொந்தரவு கட்டாயப்படுத்துவான். அஞ்சலி தவிர்பாள். ஆனால் அஜித் விடமாடான். அந்த பொழுதே break up ஆகிவிடும். அஞ்சலி கண்காணா இடத்திற்கு சென்றுவிடுவாள்.
விஜய் சேதுபதி, திரிஷா, ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் நடித்த 96 படத்தில் ராமசந்திரனும் என்ற ராமும், ஜானகி என்ற ஜானுவும் பள்ளியில் சொல்லிக்கொள்ளாமல் காதலிப்பார்கள். பின்பு வீட்டின் சூழ்நிலையால் சொல்லிக்கொள்ளாமல் ஊரைவிட்டு காலி செய்து சென்றுவிடுவான். பின்பு 25 ஆண்டுகள் கழித்து ஒரு reunion இல் சந்திப்பார்கள். ஜானுவிற்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கும். ராம் இன்னமும் ஒண்டிகட்டை. அந்த reunion முடிந்தப்பின்பு அன்று இரவு ஜானுவும் ராமும் ஒன்றாக பொழுதை பகிர்ந்துக்கொள்வார்கள். அந்த இரவில் ஒரு இரவுநேர restaurant இற்கு செல்வார்கள். அங்கு ராமின் assistance photographers பெண்கள் அவர்களில் ஒருவருடைய பிறந்தநாளை கொண்டாட வந்திருப்பார்கள்.
அவர்கள் ஜானுவையும் ராமையும் எதேச்சையாக பார்த்துவிடுவார்கள். இருவரும் கணவன் மனைவி என்று தவறாக நினைத்து பேசிக்கொண்டு இருப்பார்கள். ஜானும் ஆம் என்பதுபோல் அந்த பொய்யை சிறிது நேரம் நடிப்பாள். அப்போது இது பள்ளிக்கால காதல் என்று தெரிய வரும். யார் propose செய்தார்கள் என்று கேட்க ராம் என்று ஜானு சொல்லுவாள். அந்த தருணத்தை விளக்கவும். அதுவே எனது பிறந்தநாள் பரிசு என்று பிறந்தநாள் பெண் அன்புகட்டளை இடுவாள்.
ஜானு அப்போது அவர்கள் இருவரும் கல்லூரியில் சந்திக்க இருந்த தருணம் காலத்தின் ஒரு விளையாட்டால் கைவிட்டுப்போன அந்த தருணத்தை மாற்றி ராம் எப்படி propose செய்தான் (செய்து இருப்பான்) என்று சொல்லுவாள். அந்த காட்சிக்கு தியேட்டரே ஆராவரமிட்டு கை தட்டியது. கேட்கும் அந்த assistants ராம் அதை சொன்ன ஜானும் (நாமும்) கண்கலங்கிவிட்டார்கள். அது ஒரு happy ending எனலாம். ஆனால் இயல்புவாழ்க்கையில் அன்று அதிகாலை ஜானு விமானம் பிடித்து சிங்கப்பூர் சென்றுவிடுவாள். எதற்கு எதை சொல்கிறேன் என்றால் திரையில் ஒரு பொய் happy ending ஆக நடக்கும். அது இருவருக்குமே மிக இதமாக இருக்கும். நமக்கும் தான். ராமிற்கு அது ஒரு பெரிய closure எனலாம்.
அதுபோல் எல்லோரும் கற்பனை செய்துத்தான் பார்ப்போம் அல்லவா?
அஜிதோ பித்திபிடித்தவன் போல் சவமாய் அலைவான். அப்போது அவன் அம்மா (நடிகை துளசி) அஜித்க்கு தனது கதையை தனது அப்பாவிற்கும் அம்மாவிற்கு உள்ள கல்யாண உறவைப்பற்றி சொல்லுவாள். அதன்பின்பு அஜித் தனது தவறை உணருவான். (தவறை உணர்வதாக காண்பிக்க மாட்டார்கள். அது ஒரு போதனை).
பின்பு படத்தின் இறுதியில் ஒரு client இன் கல்யாணத்தில் அஜித் அஞ்சலியை சந்திப்பான். அவள் ஆஸ்திரேயாவிற்கு உடனே கிளம்புவதாக சொல்லுவாள். பிரியும் பொழுது கார் வரையில் வரமுடியுமா என்று கேட்பாள். அப்போது அவள் அன்று காதல் இருக்கிறதா என்று கேட்டாய். எனக்கு தெரியலை அஜித் என்று சொல்லுவாள். அப்போது அஜித் நீ எதுவும் சொல்ல வேண்டாம் அஞ்சலி. என்னோட life முழுக்க எதுவும் சொல்ல வேண்டாம். நான் செய்தது தவறு. என்னை மன்னித்துவிடு. பராவாயில்லை என்று சொல்லுவான். அப்போது அஞ்சலி முகத்தில் ஒரு healing தெரியும். அந்த பதிலைக்கேட்டு சந்தோஷப்படுவாள். அது cinematic ஆக எல்லாம் காண்பிக்க மாட்டார்கள். வாவ். நல்ல இயக்குனர் சாரங் தியாகு (நடிகர் தியாகுவின் மகன்). பின்பு இருவரும் கொஞ்சம் நடந்தப்பின்பு கார் ஏறப்போகும் தருவாயில் இருவரும் ஒன்று சேர்வர்.
என்னடா டப்புனு கதைய சொல்லிட்டேனு நினைக்காதீங்க. படத்தைப்பாருங்க. உங்களுக்கு நிறையாவே இருக்கும். நான் சொன்னது கொஞ்சம் தான்.
காரிற்கு அஞ்சலியுடன் உடன் செல்லும் அஜிதாய் தான் உணர்கிறேன். சுமைகள் அற்று. இலகுவாக. எந்த validation உக்கும் ஏங்காதவனாக. அஞ்சலியைப் போன்று வெண் தாமரையும் கண்டிப்பாய் கொஞ்சம் இலகுவாக உணருவாள் என்று நினைக்கிறேன். அன்றாடத்தில் நடக்குமோ என்னம்மோ ஆனால் எனக்கு ஆரொமலே படத்தின் இறுதிகாட்சி என் வாழ்விற்கு நடந்த ஜானுவிற்கும் ராமிற்கும் நடந்தது போன்ற ஒரு ஜோடையான happy ending.
இப்படியாக 2025 இலகுவாக முடிந்தது. இதனை நான் 2026 க்குள் எழுத்தாய் வடித்து சேமித்துக்கொண்டேன்.
நடிகர் கிஷன் சிறப்பாய் நடித்திருந்தார். அதுவும் அஞ்சலியுடன் உறவு மலர்ந்தப்பின்பு இறுதி வரை நடிப்பு மிக நன்றாக இருந்தது. அவரின் முதல் நீ முடிவும் நீ படத்திற்கும் நான் ரசிகன். நடிகை ஷிவாத்மிகாவும் சிறப்பாய் நடித்திருந்தார். ஒரு bold strong girl ஆக கச்சிதமாய் நடித்திருந்தார். கொஞ்சம் அதிகமாய் செய்திருந்தாலும் ஒரு ஆணவமிக்க பெண் பாத்திரமாக மாறியிருக்கும். ஆனால் அளவான நடிப்பு. அஜித்தின் அம்மா கதாபாத்திரத்தில் நடிகை துளசியும் அருமையாக நடித்திருப்பார்.
அன்பின் வழியது உயிர்நிலை. அன்பு செய்க!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அன்பு
ராஜேஷ்
No comments:
Post a Comment