Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

Showing posts with label கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும். Show all posts
Showing posts with label கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும். Show all posts

October 02, 2020

மலர்கள்

 

பெருநிர்வாகங்களில் பல தொழிற்துறைகள் உண்டு
ஒன்று நலிந்தாலும் மற்றவை அப்பாதிப்பை தாங்கிப்பிடிக்கும்
அதுப்போல் ஒரு பூந்தொட்டியில் ஒரு மலர் வாடினாலும்
அவ்விழப்பை மற்ற மலர்கள் சமன்செய்யும்
வாழ்வில் ஒன்றை மட்டும் அணுகாது
பல மலர்கள் இருப்பது நன்று
அகன்று பார்க்கவும் நன்று




May 28, 2019

மாரீசம் யாதோ?

சில வருடங்கள் முன்பு திருக்குறளை நாளும் வாசித்து அர்த்தம் விளங்கி தியானித்து வந்தேன். ஒரு சமயம் ஜெயமோகன் அவர்கள் திருக்குறளையும் மற்ற சூத்திர நூல்களையும் (பாடல்களையும்) எப்படி வாசிக்க வேண்டும் என்று மனப்பாடம் என்னும் தலைப்பில் எழுதியிருந்தார். குறள்களை தியானித்தால் அது வேறு ஒரு நேரத்தில் நமக்குள் திறந்துக்கொள்ள வேண்டும் என்பதே சாராம்சம். அதுப்போல் எனக்கு பல குறள்கள் திறந்துக்கொண்டு உள்ளன. உதாரணமாக "பொருளல்லவற்றை பொருள் என்று உணரும்", "யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது", "தத்தம் கருமமே கட்டளை கல்", "யாதனின் யாதனின் நீங்கியான்", "காலம் கருதி இடத்தாற் செயின்", "கொக்கொக்க கூம்பும் பருவத்து", "இருள்நீங்கி இன்பம் பயக்கும்" போன்ற என்னற்ற குறள்கள் என் நினைவுக்கு பல சந்தர்ப்பங்களில் வந்துள்ளன.

அப்படி சமீபத்தில் மிக சோர்வுற்ற ஒரு சமயத்தில் என்னை (சொல்லினால் திகைக்கிற) சிறுமை செய்த போது குறள்களில் இருந்து இரு வார்த்தைகள் மனதில் எழுந்தன. ஒன்று “அஞ்சு", மற்றொன்று “சிறுமை நமக்கொழிய”. 

முதலாவது வார்த்தை எனக்கு சொல்லிகொடுத்தது நான் எதனை அஞ்ச வேண்டும். ஆதலால் அதனை நீங்க வேண்டும் (யாதனின் யாதனின் நீங்கியான் அதனினும் அதினும் இல). அவ்வாறு அதனை (பெருவாரியாக) நீங்கினால் நமக்கு பெருவாரியான நன்மையே. சற்று கடினமான காரியம் ஆயினும் அகம் ஒப்பாமல் புறவயமாய் ஒப்புவதால் நேரமே வீண். ஆதலால் நீங்குவோம். சில சமயம் சில இடைவெளிகளும் சில கால இடைவெளிகளும் நன்மைக்கே என்பதை முன்பே உணர்ந்திருக்கிறேன். "காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல்". "அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்."

இரண்டாவது வார்த்தை காமத்துப்பாலில் இருந்து வரும் ஒரு குறள். அதனுடைய அர்த்தம் சிறுமை நமக்கல்ல தோழி நம்மை இத்தனை காலம் பிரிந்து சென்றவருக்குதான் என்பதாகும். இப்பொருள் என்னுடைய சூழ்நிலைக்கு பொருந்தவில்லை என்றாலும் அக்குறளின் முதல் வரி “சிறுமை நமக்கொழிய” என்பது இங்கே என் சுழ்நிலைக்கு நன்கு பொருந்துகிறது.  "நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு" என்பதை அறியாதாவர்கள். ஒருபொழுதும் ஒன்றும் துளங்காது நம்மை சிறுமை செய்பவர்களால் சிறுமை நமக்கல்ல ஏனெனில் "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்" என்பது வள்ளுவன் வாக்கு. "மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று" அன்று (மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது). 

(Prambanan Temple, Yogyakarta)

சொல்லுய்த்து மெய்யுணர்ந்தேன் மாரீசம் ஆதலால்
அஞ்சுகிறேன் அணுகாது நிற்கிறன்

பலாப்பழமென நினைந்தேன் பலூன் பழத்தில் 
அபானவாயுவே நிறைந்திருந்தது துர்க்கந்தம்

இழப்பு ஆங்கிழப்ப ஆகாது ஆதலால்
இழப்பு இங்கும் அல்ல

"இனம்போன்று இனமல்லார்" அவர் "உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க" ஆதலால் "நகுதற்கு இல்லை" என் நேரம் ஏனெனில் "கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது" ஆதலால் சிறுமைக்கு உண்டு "அடைக்குந்தாழ்" என்னும் முடிவை வந்தடையும் பொழுது “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு”  என்பதை கூறிக்கொள்கிறேன். ஊழிற் பெருவலி  என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

😢