"நீ ஏற்கனவே இருந்திருக்கிறாயா ஜனா ?" சிறுகதையை யுவன் சந்திரசேகர் எழுதிய `ஏமாறும் கலை` என்ற அவருடைய சிறுகதை தொகுதியில் படித்துக்கொண்டு இருந்தேன்.
இந்த கதையில் ஹிமாசலத்தில் இருக்கும் ஒரு மலைப்ரதேச பழங்குடி மக்களான பார்வாக்களை பற்றியது. அவர்களை பற்றிச் சொல்ல வரவில்லை. படிக்கும் போது என்னுள் சமீபக்காலமாக நான் நாத்திகன் ஆகிவிடுவேனோ, ஒரு சிலகாலம் நாத்திகனாக இருப்பேனோ என்று அச்சத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி மனதுள் ஒலித்தது. "கடவுள் இருக்கிறாரா ?" பொதுவாக கடவுள் நம்பிக்கை என்றென்பது ஒரு சமூகத்தில் பரவலாக இருக்கும். கடவுளே இல்லை என்று ஒட்டுமொத்தமாக என்னும் ஒரு சிறிய தேசம் கூட இருப்பதாக என்னறிவில் விடையில்லை.
ஆக சமீப காலங்களில் நான் காணும் கண்ணோட்டம் இது தான். மனிதர்கள் நெறியுடன் வாழ்க்கையில் செல்ல ஒரு அமைப்பு மதம். கடவுளை நோக்கி செல்லும் அறவழியே மதம். அதில் கண்ணுக்கு தெரியாமல் மக்களை அற நெறிகளில் வழி நடத்துபவர் கடவுள். வெற்றி வரும் போது நான் தான் எல்லாவற்றிருக்கும் காரணம் என்ற அகந்தையை விடுப்பவன் கடவுள். ஏனெனில் கடவுள் நம்பிக்கை உள்ளோர் சொல்வது `எல்லாம் அவன் செயல்`. சோர்வு வரும்போது நம்முடன் இருக்கும் மக்கள் நம்முடன் எல்லா நேரங்களில் இருப்பதில்லை. அப்போது `எல்லாம் அவன் பாத்துப்பான்’ என்று நாம் சொல்வது அவன் நம்முடன் இருக்கிறான் என்ற ஆறுதல் தருவது கடவுள் என்கிற நம்பிக்கை.
ஆக இந்த ப்ரபஞ்சத்திலோ அல்லது வேறு ப்ரபஞ்சத்திலோ கடவுள் இருக்கிறாரா ? தெரியாது. கடவுள் இருக்கிறார் என்ற சமூக அமைப்பை நகர் சார்ந்த மக்கள் வாழ்வின் ஒழுங்கு முறைக்கு உருவாக்கினார்கள் என்றால், மலைவாழ் பழங்குடியனர்களிடம் எவ்வாறு கடவுள் நம்பிக்கை உள்ளது ? அவர்கள் நகரங்களில் இருந்து தப்பித்தார்கள் என்ற வாதம் வெறும் வெற்று வாதம் தான். சமவெளிகளில் போன்றே மலைகளிலும் இயற்கையாக மக்கள் பிறந்திருப்பார்கள் என்றே நான் எண்ணுகிறேன். நான் இப்போழுது படித்த பார்வா மக்களுக்கு மரப்பல்லி தான் கடவுள் (உலகில் ஒரு உயிரினம் மட்டும் தான் கடவுள் என்று என்னும் சமூகம் உண்டோ என்று எழுத்தாளர் கேட்டுக்கொள்கிறார்). பார்வா மலைமக்கள் பல்லியை ஏன் கடவுளாக கருதுகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் ஒரு அடி அடித்தால் அந்த பல்லி அந்த இடத்திலேயே இறந்துவிடும். அது அவர்களுக்கும் தெரிந்திருக்கும். ஆனால் பல்லி தான் அவர்களை காக்கிறது என்று நம்புகிறார்களோ ? தெரியவில்லை. அவர்கள் ஒரு ஆதியை கடவுளாக கருதுகிறார்களா ? தெரியவில்லை. என்னை பொருத்த வரையில் ஆதிபகவன் முதல் எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. நம்பிக்கை தான் கடவுள். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.
அதுமட்டும் இன்றி `நான் கடவுள்` (அஹம் ப்ரம்மாஸ்மி), `நீ தான் கடவுள் (தத்தவமஸி), 'இவையனைத்திலும் ஈசா உறைகிறது' (ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம்) என்ற ஆப்த வாக்கியங்களை ஆழமாக புரிந்துக்கொள்ள வேண்டும்.
(முற்றிற்று)
(சற்றுமுன் படித்தது: நூல்கள் நெறிகளைச் சொல்கின்றன என்பது பெரும் மாயை. நெறிகளை வளைக்கும் முறையை மட்டுமே நூல்கள் கற்பிக்கின்றன.)
பார்வா மக்கள் பற்றி சில வார்தைகள் (நீ ஏற்கனவே இருந்திருக்கிறாயா ஜனா - சிறுகதையில் இருந்து)
பார்வா இனத்தின் சமூக அமைப்பு விசித்திரமானது. குடும்பம், கணவன் - மனைவி என்ற கிளை உறுப்புகள் எதுவும் கிடையாது. ஆண்களும் பெண்களும் தங்கள் இணைகளைத் தாங்களே தேர்ந்துகொள்ளவும் மாற்றிக்கொள்ளவும் செய்கிறார்கள். பெண்களின் விருப்பமும் சம்மதமும் மட்டுமே ஒரு நிபந்தனை.
தலைமைப் பொறுப்பு என்றும் எதுவும் இல்லை. வயதில் மூத்தவர்கள் தன்னியல்பாகக் கூறும் ஆலோசனைகளையும் அறிவுரைகலையும் மற்றவர்கள் கேட்டு நடக்கிறார்கள். சொத்து, குடும்பம் என்கிற தனிநபர் ஏகபோகங்கள் இல்லாததால் இயற்கையான அறவுணர்வும் பொதுமை எண்ணமும் அந்த மக்களிடத்தில் செயல்படுகின்றன.
ஆண்கள் கடும் உழைப்பாளிகள். எறும்புகள்போல்ச் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள். எறும்புகள் மாதிரியே, மழைக்காலத்துக்காகச் சேமிக்கும் அளவு மட்டுமே உணவுப் பொருள் சேகரிக்கிறார்கள். பணம் என்ற சொல்லையே கேள்விப்படாதவர்களாக இருக்கிறார்கள். வனத்தில் சேகரித்த பொருட்ட்களுடன் தேவப்ப்ரியாகைக்கு இறங்கிச் சென்று, பண்டமாற்றாகத் தமக்கு வேண்டியவற்றை வாங்கி வரும் பொறுப்பும் ஆண்களுடையது தான்.
முகக் கண்ணாடியே பயன்படுத்தாத சமூகம் அது. `ஏன்` என்றால் - கண்ணாடியில் நிகழ்காலம் மட்டும் தான் இருக்கிறது. இறந்த காலத்தின் உதவியும், எதிர் காலத்தின் அச்சுறுத்தலும் இன்றி மனித வாழ்க்கை நடப்பது சாத்தியமேயில்லை.
பாரம்பரிய ஞானத்திலும், விவேகத்திலும் செழுமையானவர்கள் பார்வாக்கள். நாகரிகமுற்றதாகச் சொல்லப்படும் பிற சமூகங்களுக்குச் சற்றும் இளைத்ததில்லை அவர்களது சமூகம். உதாரணம்: ஒரு பாடகன் சொல்கிறான்: நான் எட்ட வேண்டிய இடத்தை முதலிலேயே மனத்தால் பார்த்துவிடுவேன். பிறகு அந்த இடத்திற்கு என் குரலை உயர்த்தவோ அமிழ்த்தவோ முயல்வேன். .. கேள்வி: மற்றவர்களெல்லாம் உடலால் கடுமையாக உழைக்கும்போது, நீங்கள் வெறுமனே பாடிக்கொண்டு மட்டும் இருப்பது குற்ற உணர்ச்சியைத் தூண்டவில்லையா ? பதில்: `எதற்காக அவ்வாறு உணர வேண்டும் ? என் ஜனங்கள் அனைவரின் துயரத்தையும் என் தொண்டைக் குழிக்குள் சுமந்து திரிகிறேனே, பிறகென்ன ?
பார்வாக்களில் ஆண்களும் பெண்களும் மேலாடை அணிவத்தில்லை. இதை கேட்டு சிரித்தால் மனத்தின் ஆழத்திலிருந்து சிரிக்கும் பார்வாக்களின் நன்னயம்.
No comments:
Post a Comment