ஒவ்வொரு ஆண்டு ஒரு பாடமே. இருப்பினும் பட்டு கற்று செல்வது சிறிது. அவ்வகையில் எனக்கு முந்தைய ஆண்டுகளை விட 2013 சற்று ஆக்கபூர்வமான ஆண்டாக அமைந்ததாக கருதுகிறேன்.
ஆண்டின் துவக்கத்தில் BYUவிற்கு விண்ணப்பித்துவிட்டு தென்கொரியா சென்றேன். வேலையில் ஒவ்வாமல் தான் வேலை செய்துக்கொண்டு இருந்தேன். ஆயினும் அலுவகத்தில் நான் செய்யவேண்டியதை செய்து முடித்தேன். BYUவில் இருந்து தொலைபேசி நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. நன்கு ஆயத்தமானேன். ஆனால் நேர்காணலின் முடிவு தோல்வியாக இருந்தது. மிகுந்த மனசோகத்தில் ஆழ்ந்தேன் என்பது தான் உண்மை. கொரியா செல்லும் பொழுது சில புத்தகங்கள் எடுத்துக் கொண்டு சென்றிருந்தேன். சில சிறுகதைகள், மதரின்(Mother) ஆன்மிக புத்தகங்கள், கல்வி இயக்க புத்தகங்கள், வேதம் சம்மதமானவை, ஜித்து (Jiddu) ஆகிய புத்தகங்கள். மன சோர்ந்திருந்த காலங்களில் வழக்கம் போல் உதாரித்தனமாக இருந்துவிட்டு பிறகு அவைகளை படித்தேன். பின்பு காந்தியின் சத்திய சோதனையை படித்தேன். என் வாழ்வில் ஒரு மிக பெரிய தாக்கதை ஏற்படுத்திய முதல் புத்தகம் அதுவே. அவர் எழுத்தில் இருந்த அந்த நேர்மையே என்னை ஆட்கொண்டது.
இப்படி காலம் சென்றுக் கொண்டு இருக்கையில் ஒரு நாள் கமல்ஹாசன் பங்கேற்ற நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் கடைசியில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் அறம் என்ற புத்தகத்தை பிரகாஷ்ராஜிற்கு பரிசாக அளிப்பதை கண்டேன். அதைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் விதையாக மனதில் விழுந்தது. இந்தியா வந்ததும் வாங்கி படித்தேன். அதிர்ந்துபோனேன். நேர்மை, அறம் போன்ற வார்த்தைகள் எவ்வளவு ஆழமானவை என்பது எனக்கு ஆழமாக விளங்கிற்று.
நடுவில் மணிகண்டனுக்கு Qualcomm (San Diego) வில் வேலை கிடைத்தது எனக்கும், பட்டுவிற்கும், அம்மாவிற்கும் மகிழ்ச்சியளிக்கும் வண்ணமாக அமைந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி பொழுது கழிப்பதை குறைக்க தொடங்கினேன். எழுத்தாளர் ஜெயமோகன் அவரின் வலைப்பை நாளும் படிக்க துவங்கினேன். அந்த வாசல் எனக்கு மிகப்பெரிய வாசலாக அமைந்தது. அதில் கட்டுரைகள், சிறுகதைகள், வாசகர் கடிதங்கள் படித்தது நன்றாக இருந்தது.
எமது மேலாளர் ராஜாஜியுடன் காந்தியை பற்றி உரையாடினேன். அவருடன் உரையாடுவது மிகவும் ஆக்கபூர்வமாக அமையும். அவர் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுத் தருவார். அவர் அப்படி எனக்கு அறிமுக படுத்தியது தான் காந்தியின் சத்திய சோதனை. இந்த 2010 ஆண்டு அதை காந்தியின் சத்திய சோதனை படிக்க வேண்டும் என்று சொன்னார். அப்படி தான் எனக்கு அதில் ஒரு உந்துதல் உருவாயிற்று. பாருங்கள் 2013இல் தான் படித்து இருக்கிறேன்.
எனக்கு வேலையிலும் அவ்வளவு நாட்டமில்லை. ஒரு கட்டத்தில் நாம் செய்யும் வேலைக்கு நாம் நேர்மையாக இருக்கவில்லை என்ற எண்ணம் உருவாக துவங்கியது (சத்திய சோதனை, அறம் ஆகியவற்றின் தாக்கம்). மேலும் நான் இந்த ஆண்டும் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க துவங்கினேன். அந்த நேரம் பார்த்து அலுவகத்தில் ஒரு புதிய வேலை வந்தது. இதில் முழுதாக கவனம் செலுத்த முடியாது. விண்ணப்ப வேலைகள் பாதிக்க படும் என்று அஞ்சி வேலையை விட்டு விலக முடிவு செய்து விலகினேன். ஆனால் என் மேலாளர் ஒத்துக்கொள்ளவில்லை. மற்றும் எனக்கும் நிதி தேவை இருந்தது. ஆதலால் வேலையை தொடர்ந்தேன். விலகலை திரும்பப் பெற்றேன்.
இந்த சமையத்தில் தான் ராஜாஜி அவர்கள் எனக்கு COURSERA.ORG என்ற கல்விக்கூடத்தை அறிமுகம் செய்தார். நான் அதில் Introduction to Marketing என்ற பாடத்தை படித்து முடித்து தேர்ச்சிப் பெற்றேன் (Q1: 17/20, Q2: 19/20, Q3: 19/20, Final: 34/40). கொஞ்சம் காசுக் கொடுத்து படித்தாலும் இதுப் போன்ற செயல்கள் என் நேரத்தை ஆக்கபூர்வமாக அமைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கிறது. ஆனால் Introduction to Financial Accounting, Statistics போன்ற பாடங்களும் படிக்க வேண்டும்.
இப்படி சென்று கொண்டு இருக்கையில் 20 புத்தகம் படிக்க வேண்டும் என்று வைத்து இருந்த இலக்கை ஆகஸ்ட் மாதமே அடைந்தேன். பின்பு 30 புத்தகம் என்று இலக்கை உயர்த்தினேன். ஜெயமோகன் புத்தகங்கள், அவர் (மற்றும் அவரது வாசகர்கள்) சிபாரிசு செய்த புத்தங்களைப் படிக்க துவங்கினேன். புத்தகம் வாங்கி குவிக்க துவங்கினேன். இப்படி படித்து இந்த வருடம் 29 புத்தகங்கள் படித்து உள்ளேன். அது இல்லாமல் மூன்று நூல்கள் பாதியில் உள்ளன. ஜெ`வின் இன்றைய காந்தி காந்தியை பற்றிய ஒரு மிகப்பெரிய கண் திறப்பாய் இருக்கிறது.
இப்போது கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து உள்ளேன். ராஜாஜி, நாகமணி, சுந்தரேசன் அம்மா, செவியர், நம்பியார் ஆகியோர் மிகுந்த உத்தாசியாக இருந்து பங்காற்றினார்கள். இந்த ஆண்டு ஒரு காணொளி நேர்காணல் கொண்டேன். முடிவிற்காக காத்து இருக்கிறேன். BYUவிற்கு மறுபடியும் விண்ணப்பித்து உள்ளேன். காத்திருக்கிறேன். நன்றாக செய்ய வேண்டும்.
விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு சென்று வந்தது ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது. வானவன் மாதேவி வல்லபி சகோதரிகளின் சந்திப்பு எனக்கு ஒரு திருப்பு முனை. வாழ்வில் நேர்தை வீண்செலவு செய்ய கூடாது என்பதை உணர்ந்தேன். தன்நம்பிக்கை என்றால் என்ன என்று கற்று கொண்டேன்.
பாலா, நம்பியார் கல்யாணங்கள், ஒரு ரயில் பயணம், நாகமணி-ரகு-ப்ரித்வி வீட்டிற்கு வந்து இருந்தது, TATA ELXSI-CHENNAI நண்பர்களுடன் ஒரு நாள் கூடியது, வீட்டில் கொலு, TBR uncle-நம்பியார் குடும்பங்களுடன் பழனி பயணம், 15 ஆண்டுகள் பின்பு சிவா குருக்கள் அண்ணனை சந்தித்து பேசியது, சேவியரின் ஜீவித்தன், வீட்டில் சிவா அண்ணன் செய்து வைத்த ஐயப்பன் பூஜை, பாட்டி என்னோட இந்த நேர்காணலின் போது சமைத்து உதவ வந்தபோது நிறை புத்தங்கள் படித்து இன்புற்றது, சில திரைப்படங்கள், சில பாடல்கள் ஆகியவை இந்த ஆண்டின் இன்பக்கீறல்கள்.
நண்பர் நாகமணியுடன் நாளும் ஒரு திருக்குறள் படிக்க வேண்டும் என்ற கூட்டு முயற்சி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன்.
மொத்தமாக இந்த ஆண்டின் ஆக்கபூர்வமாக நான் கருதுவது.
1) காந்தியின் சத்திய சோதனை படித்தது.
2) ஜெயமோகனின் புத்தகங்கள் (அறம்) மற்றும் கட்டுரைகள் படித்தது.
3) Introduction to Marketing பாடம் படித்து தேர்ச்சிப் பெற்றது.
4) புத்தக வாசிப்பின் 30 இலக்கில் 29 படித்தது.
5) குறிப்பிட தக்க தருணங்களை வலைப்பதிவு செய்து வருகிறேன். 2012 ஆண்டு காலமாக வலைப்பதிவு அவ்வளவு சீராக இல்லை.
6) Daily Thirukkural Project துவங்கியது. (ஒரு சின்ன துவக்கம் - மூன்று வாரமாக).
7) இரண்டு மாதமாக அலுவலகத்திற்கு மிதி வண்டியில் செல்கிறேன்.
2014ற்கு கொண்டு செல்ல கூடாதது
1) வீட்டில் கோவமாக பேசக் கூடாது.
2) துணுக்கு வலையங்களை படிக்கக் கூடாது. (இரண்டு வாரம் முன் கைவிடப்பட்டது).
3) செய்தி வலையங்களை நாள் ஒன்றிற்கு 15 நிமிடம் மேல் பார்க்கவோ வாசிக்கவோ கூடாது. கண்டிப்பாக அடிக்கடி பார்க்கும் பழக்கம் அறவே கூடாது.
4) மத்திய வேளையில் உறங்கக் கூடாது.
5) YouTube-இல் நேரத்தை விரையம் செய்யும் காணொளிகளை காணக் கூடாது.
6) வெட்டி தொலைபேசி அலைபேசி அழைப்புகள் கூடாது.
7) மனதிற்கு ஆரோக்கியம் இல்லாத எந்த ஒரு செயலையும் செய்யவோ நினைக்காவோ கூடாது.
8) கடந்த கால நினைவுகளில் திளைத்திருக்க கூடாது.
8) கடந்த கால நினைவுகளில் திளைத்திருக்க கூடாது.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
No comments:
Post a Comment