Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

December 27, 2013

மீன்கள் - தெளிவத்தை ஜோசப் - சிறுகதை தொகுப்பு

சென்ற வாரம் விஷ்ணுபுரம் விருது விழாவில் பங்கேற்க செல்லும் முன் இவ்வாண்டின் விழா நாயகர் எழுத்தாளர் திரு.தெளிவத்தை ஜோசப் (இலங்கை மலையக பகுதி எழுத்தாளர். பூர்வீகம் - தமிழ்நாடு) அவர்களின் மீன்கள் சிறுகதையை மட்டும் படித்தேன். வலையங்களின் இன்னும் சில சிறுகதைகள் இருந்தன ஆனால் பின்புப் புத்தக வடிவில் வாங்கி படிக்கலாம் என்று எண்ணிப் படிக்கவில்லை. இன்று படித்தேன். 

நான் நிரம்ப சிறுகதைகள் முன்பின் படிக்காவிட்டாலும், எனது பாட்டியும் படித்து கருத்துக் கூறியதால், நானும் சற்று ஆழ்ந்து படித்தமையால் என்னால் ஒன்று சொல்ல முடியும் - மீன்கள் சிறுகதை தொகுப்பு (நற்றிணை பதிப்பகம்) படிக்க வேண்டிய ஒரு மிகசிறந்த தொகுப்பு. 

நான் சிறிது அறிந்துக்கொண்டவற்றில் சில 

(சிறுகதையின் வலையத்தல சுட்டி உள்ளது. தட்டவும்)

ஒரு மிக சிறிய வீட்டில் இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகளுடன் ஒரு கணவன் மனைவி வாழ்கின்றனர். கதையின் துவக்கமே ஒரு பெரிய திகைப்போடு (கதையின் முடிவுடன்) துவங்குகிறது. இப்படி பட்ட சிறிய வீட்டில் இவர்களுக்கு அந்தரங்கமே கிடையாது. அந்தரங்கம் இல்லாத் வாழ்வு ஒர் வாழ்வா ? இவர்கள் ஒரு குடிசையைக் கூட மற்றவர் அனுமதி இன்றி கட்டிகொள்ள முடியாது. இவர்களுக்கு இன்னொரு வீடு கேட்க கங்கானியை காண செல்கிறான். அங்கு என்ன நடப்பது என்பது தான் கதை. 

கதையில் வரும் வரி - "எவ்வளவு சிறிய மீனாக இருந்தாலும் தன்னிலும் சிறியதை விழுங்கத்தானே செய்கிறது!" என்பதே கதையின் சாரம்சம்.

ஒரு கல்யாணம் ஆன தமிழன் தன்னுடன் வேலை புரியும் சிங்கள பெண்ணுடன் நாளடைவில் பழகி உறவு கொள்கிறான். இதனை அவனின் மனைவி மூலம் அறியும் அவனது நண்பர் ஆச்சர்யப்படுகிறார். இந்த விவகாரம் துவங்கும் முன் கேள்விப் பட்ட போது நம்பவில்லை ஏனென்றால் அலுவகத்தில் கிசுகிசுக்கள் சகஜம்.  அவன் நினைப்பது இது தான் "பிலாக்காய் என்றால் பிளந்து பார்த்துவிடலாம். மனிதனை எப்படிப் பார்ப்பது என்று". 

மனைவியை (அவள் சொந்த ஊரிக்கு அனுப்பி) ஒதுக்கி வைத்து அந்த சிங்கள பெண்னை கல்யாணம் செய்து கொள்கிறான். பெண் குழந்தை. காலம் செல்கிறது. புதிய பெண்டாடி இத்தனை ஆண்டுகளுக்குள் வியூகம் அமைக்கிறாள். மொழி, மதம், இனம், சுற்றம், சூழல் சமூகம், எனப் பல படிகள் கொண்ட வியூகம் அது. வெளித்தோற்றம் காட்டாத உள் மன விலங்குகள்.

இப்போது முதல் மனைவியின் குடும்பம் எப்படி இருக்கும் என்று எண்ணுகிறான் நண்பன். காலம் எப்படி எல்லாம் மனித மனங்களின் காயங்களை குணப்படுத்திவிடுகிறது. குணப்படுத்தி விடுகிறதா அல்லது மறைத்து வைத்துக் கொண்டு மறக்கடித்து விடுகிறதா…! அந்த பெண் குழந்தைக்கு கல்யாணம் ஆகும் நேரம் ஒரு சிக்கல். இவன் கிறுஸ்துவனாக மாறவேண்டும். இவன் எதிர்கிறான். ஆனால் அவர் சூழ்நிலைகளின் கைதியாக வெகு காலமாகிவிட்டது.

இந்த கதை திபாவளி நாளை மத்தியமாக கொண்டு மூன்று நாட்களில் நகர்கிறது. 

பஸ்ஸில் – ரயிலில் – தியேட்டரில் ஒரு நல்ல இடம் பிடித்துக் கொள்வதற்கு முட்டி மோதும் அளவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல இடம் பிடிப்பதற்கு நம் மக்கள் முட்டுவதில்லை. மோதுவதில்லை. - என்று துவங்குகிறது கதை.

பஸ்ஸில் ஒரு பிச்சைகாரனுக்கு காசுப் போடும் மக்களின் மனநிலையை படம் பிடித்து காண்பிக்கிறது இக்கதை. 

ஒரு பேருந்தில் நடக்கும் பயணமே கதை. இதில் சிங்களவர்களுக்கும் மலையக தமிழ் மக்களுக்கும் பேருந்தில் நடக்கும் பாரபட்சமே கதை. 

இது ஒரு சின்னப் பயணம். பத்துமைல் தூரம் ஓடும் பஸ் பயணம். இதே இந்த மக்களுக்கு இத்தனை சிரமமானதும், சிக்கலானதுமாக இருக்கிறதென்றால் வாழ்க்கை எனும் பெரும்பயணம்…..?

ஒரு சிங்கள டாக்டர் ஒரு தமிழரின் வீட்டில் காந்தி, நேரு, போஸ் படங்களை பார்த்து, நீங்கள் எங்கள் நாட்டு தலைவர்களின் போட்டோகளை வைக்காமல் உங்கள் பூர்விக நாட்டு தலைவர்கள் போட்டோவை வைத்து உள்ளீர். ஆனால் இங்கு குடியுரிமை கேட்கின்றீர். கடைசி தமிழன் வரை அனுப்ப வேண்டும் என்கிறார். படத்தில் உள்ளவர் யார் என்று சிங்கள டாக்டர் கேட்கிறார். தமிழனின் பதில் : 

காந்தியின் படத்தைப் பார்த்து இது யாருடைய படம் என்று கேட்பதன் மூலம் தனக்கும் எனது தலைவர்களுக்கும் பெருமைத் தேடிக் கொள்வதாக எண்ணிக்கொள்ளும் அய்யாவின் அறியாமை அவனுக்கு சிரிப்பூட்டியது.

“இது யாருன்னு அய்யாவுக்குத் தெரியலையா… அடப்பாவமே! ‘மனிதர்கள் தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள் என்பதால் மற்ற நாட்டை வெறுக்கிறார்கள் என்பதல்ல பொருள்’ என்று கூறிய மகாத்மா இவர்தான்.

மற்றவர்களுடைய தலைவர்களை, மற்ற நாட்டவர்களை வெறுப்பதன் மூலம் மட்டுமே உங்கள் நாட்டை, உங்கள் தலைவர்களை, உங்கள் நாட்டவர்களை நேசிப்பதாக கற்பனை பண்ணிக் கொள்ளும் உங்கள் போன்றவர்களுக்கு உலகத்துக்கே ஒப்பற்றவரான ஒரு மனிதரைத் தெரிய முடியாதுதான்….”

ஒரு இரண்டு வயது குழந்தை குளியல் அரையில் தாழ்ப்போட்டுக்கொண்டு மாட்டிக் கொள்கிறாள். இருட்டில் அவள் உற்சாகம் இன்றி இருக்கிறாள். வீட்டில் உள்ள உறவினர்கள் தவிக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி இந்த நேரத்தில் குழந்தையுடன் பேசவேண்டும் என்று தெரியவில்லை. 

தாத்தா குழந்தையிடம் நான் உங்களிடம் வருகிறேன் என்று பேசியப் பின் குழந்தை மனதில் ஒரு உற்சாகம். பின்பு குழந்தையிடம் லாவகமாக பேசி குழந்தை வைத்தே கதவை திறக்கிறார் தாத்தா. 

குழந்தை வந்தவுடன் இனிமேல் குழந்தை பிரச்சனையில் மாட்டிகொள்ளாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கூச்சல் இடுகிறார்கள். ஆனால் ஒரு சிக்கலில் (இருக்கும் குழந்தை) எப்படி செயல் படவேண்டும் என்ற பாடத்தை அங்கு யாரும் கற்கவில்லை.

ஒருவன் கொழும்புவில் இருந்து தன் உடம்பு சரியில்லாத (சாக கிடக்கும்) அம்மாவை காண தனியாக அவன் சொந்த ஊர்க்கு செல்கிறான். அவன் குடும்பம் வரவில்லை. 

முன்பு அவன் வந்தால் "அந்த வயதிலும் அந்தக் குளிரிலும் அம்மா சிட்டைப்போல் பறப்பதாகத் தெரியும் அவனுக்கு. உழைத்து உரமேறிய உடல் சீக்கிற்கோ தளர்வுக்கோ அது இடமளிக்காது. அவனுடைய வருகையும் அவளுக்கு ஒரு புதுத் தென்பைக் கொடுக்கிறது. உடலிலே ஒரு இளமை@ நடையிலே ஒரு துள்ளல்!"

தங்களைச் சுற்றி சுற்றியே வலம் வரும் அம்மாவின் அன்புப் பார்வை அவனைத் தடுமாறச் செய்கிறது.

அம்மாவுக்கென்று அவன் என்ன செய்திருக்கின்றான்? படித்து பாஸாகி உத்தியோகம் தேடி காதலித்துக் கல்யாணம் கட்டிக் குழந்தை பெற்று …..

என் மகன் இப்படி இப்படி இருக்கிறான் என்று கூறிக் கூறிப் பெருமை படும் நெஞ்சம் அது!

மருமகளிடம் அம்மா மூச்சு விடமாட்டார்கள். ‘ வாம்மா, இரும்மா’ என்றுகூடச் சொல்லமாட்டார்கள்: ‘வாங்க, இருங்க’ தான். மருமகள் அம்மாவுக்கு ஒரு மகாராணி மாதிரி! என் மகளை நம்பி வந்தவளாயிற்றே என்னும் நினைவு.


எனக்கு என்ன செய்தாய் என்று எதிர்ப்பார்க்கும் நெஞ்சமல்ல… இப்படி ஒருநாள் வருவதுவும் “இனி எப்பப்பா?…..” என்னும் கேள்வியுடன் விடை பெறுவதுவும்தான்; அவன் செய்வது!

என்று அம்மாவின் பாசத்தை உணர்த்துகிறார். 

ஆனால் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என்று ஏற்கனவே மூன்று முறை குடும்பத்துடன் வந்து பார்கிறான். சிறிய இடமென்பதால் ஒரே நாளில் ஊருக்கு திரும்பிச் செல்கிறான் ஒவ்வொரு தடவையும். இந்த தடவை தனியாக வருகிறான். இந்த நிலையில் அவர்களின் மனதை காண்பிக்கிறார். இங்கு வந்து செல்வது ஒரு நடுத்தர வர்கனான அவனுக்கு எவ்வளவு நிதி சுமையாக இருக்கிறது என்று காண்பிக்கிறார். 

திடீரென்று குஷி வந்து விட்டால் இருநூறு ரூபாய்க்கு ஐஸ்கிரிம் வாங்கி தின்பார்கள். நூறு ரூபாய்க்குக் குடைவாங்க சங்கடப்பட்டுக்கொண்டு கழுத்தில் டையுடன் மழைக்கு கையை தலையில் வைத்துக் கொண்டு றோட்டில் ஓடுவார்கள்.. அந்த வர்க்கத்தின் அச்சொட்டான பிரதிநிதிதான் இவனும்… இல்லாவிட்டால் ழும்பது ரூபாயில் பஸ்ஸில் செல்வதை விடுத்து ஐநூறு ரூபாய் செலவு செய்து காரில் போவானா?

இந்த தடவை அவனிடம் காசு அவ்வளவு இல்லை. வட்டிக்கு வாங்குவது அதிகம். அலுவகத்தில் Death Fund Scheme இல் போலிசி எடுக்க விண்ணப்பிகிறான். அவர்கள் மூன்று மாத சம்பளம் கொடுப்பார்கள் ஆனால் அம்மா இறந்தால் தான்.  அவன் என்னுகிறான் இந்த தடவை அம்மா ஏமாற்ற மாட்டார்கள்.

பாவ சங்கீர்த்தனம் (மின் அணு பதிப்பு (சுட்டி) இல்லை)
ஒரு வயதில் பெரியவர் ஒரு பெண்னை பார்த்து மனதில் எப்படி பட்ட எண்ணங்களை கொள்கிறார் என்று கதை சொல்கிறது. அந்த பெரியவரின் கடவுள் வழிபாடுகளை கூறுகிறார்.

மந்திரங்களை கீழ்வகுப்புப் பிள்ளைகள் பெருக்கல் வாய்ப்பாடு ஒப்பிப்பதுபோல

உலகத்தின் அசுர வேகத்துடன் இணைந்தோட இறை வணக்கத்திலும் ஒரு வேகம். வெறும் உதட்டாட்டம். ஜபத்தின் கருத்து மனத்தைத் தீண்டமுடியாத ஒரு வேகம்.

எண்ணிப் பாத்தால் என்ன சுவாமி இருக்கிறது இவ்வுலக வாழ்வில் - ஒன்றுமே இல்லை.

இவர் உத்தியோகத்தில் மட்டுந்தான் பெரியவர்.

கோவிலில் மண்டியிட்டுக் கூறமட்டும்தான் ஜபம் என்றால் அந்த ஜபத்தை படிக்க வேண்டிய அவசியம் ... ?

பெண்ணின் கண்ணீருக்குச் சக்தி. கண்ணீரைவிட அந்தக் கண்களுக்கே சக்தி அதிகம்.

ஒருவாரம் செய்த பாவங்களைச் சுவாமியார் ஒருவரிடம் சொல்லிவிட வேண்டியது. அடுத்த வாரத்துக்கான பாவங்கள் அடுத்த வாரத்தில் ஒரு நாள்.

குப்பைத் தொட்டி நிறைவதும் காலிபண்ணுவதும் பிறகு நிறைவதும்போல. அதுவா பாவ சங்கீர்த்தனம் ? அவருக்குமா பாவ மன்னிப்பு கேட்கிறது ?

No comments:

Post a Comment