இன்று காலை ஏனோ மிதிவண்டியில் அலுவலும் வருகையில் எங்கிருந்தோ இப்பாடல் என் உதடுகளில் வந்தது. பல மாதங்களுக்கு பின் ஒரு திரைப்பாடல் தனை பதிவு செய்கிறேன்.
இந்தப் பாடல் என்னில் எப்போதும் ஒலிக்கும் ஒரு பாடல். நான் கல்லூரியில் படிக்குமோது வந்த திரைப்படம் 5-ஸ்டார். இந்தப் படத்தில் இன்னும் இரண்டுப்பாடல்கள் (ரயிலே ரயிலே, திரு திருடா திரு திருடா) எனக்கு பிடிக்கும். இப்பாடல் அந்நாட்களிலேயே எனக்கு பிடிக்கும். இப்பொழுதும்.
இந்தப் பாடல் என்னில் எப்போதும் ஒலிக்கும் ஒரு பாடல். நான் கல்லூரியில் படிக்குமோது வந்த திரைப்படம் 5-ஸ்டார். இந்தப் படத்தில் இன்னும் இரண்டுப்பாடல்கள் (ரயிலே ரயிலே, திரு திருடா திரு திருடா) எனக்கு பிடிக்கும். இப்பாடல் அந்நாட்களிலேயே எனக்கு பிடிக்கும். இப்பொழுதும்.
இந்த பாடல் எப்பொழுதும் வரும் (ஆண்கள் பிரிவால் வாடும்) பாடகளைவிட சற்று வித்தயாசமானது. ஹிந்துஸ்தானி இசைச் சாயல் இருக்கும். ஒரு பெண் ஏங்குவதுப் போன்ற பாடல்கள் அக்காலத்தில் (இக்காலத்திலும்) குறைவே. ஆதலாலே இது இன்னும் சிறப்பு பெரும்.
படத்தில் தலைமகனுக்கும் தலைமகளுக்கும் நடுவில் சொல்லிக்கொள்ளும் படியான நேரடி ஊடல் இல்லை. ஆனால் தலைமகன் தலைமகளை விட்டுப் பிரிந்துச் சென்றமையால் தலைமகள் பிரிவால் வாடுகிறாள். அப்போது ஒரு கல்யாண நிகழ்ச்சியில் தலைமகள் பாடும் பாடல். முதலில் இது ஒரு கல்யாணப் பெண் பாடுவது போல் இருக்கும். ஆனால் கடைசியில் விழாக்களில் இவள் தனித்திருக்கிறாள் என்று பாடும்பொழுது அவளை அறியாமலையே அவளுள் உள்ள சோகம் வெளிவந்துவிடும். பின்பு அந்தப் பாடலை முதலில் இருந்துப் பார்த்தாள் அவளின் சோகம் முதல் வரியில் இருந்து தென்படுகின்றது என்பது புரியும். இதனை ஒரு பெண் கவிஞர் (தாமரை) எழுதியது குறிப்பிடத்தக்கது.
பாடல்
எங்கிருந்து வந்தாயடா?
எனைப்பாடு படுத்த-நீ
எனைப்பாடு படுத்த
எங்கு கொண்டு சென்றாயடா
எனைத்தேடி எடுக்க-நான்
எனைத்தேடி எடுக்க
இன்பதுன்பம்
துன்பம் இன்பம் இன்பமென்று
நீ சோகம் ரெண்டும் கொடுக்க
சுகம் ரெண்டும் கொடுக்க.... ( நீ எங்கிருந்து )
வானவில்லாய் ஆணும்
வண்ணம் ஏழாய் பெண்ணும்
இருந்தால் இன்னும்
வானின் அழகு கூடும்
சுட்டு விரலாய் நீயும்
கட்டைவிரலாய் நானும்
எழுதும் எதுவும் கவிதையாக மாறும்
விடாமலே உனை தொடர்ந்திடும் எனை
ஒரே ஒருமுறை மனதினில் நினை
ம்ம்ம்ம்ம் என்னை என்ன செய்தாயடா (எங்கிருந்து)
வாசல்வாழையோடு வார்த்தையாடலாச்சு
இனியும் பேச புதிய கதைகள் ஏது
ஒருவர் வாழும் உலகில்
மௌனம்தானே பேச்சு
மொழிகள் எதுக்கு
இருவர் இணையும் போது
விழாக்களில் இவள் தனித்திருக்கிறாள்
கனாக்களில் தினம் விழித்திருக்கிறாள்
ம்ம்ம்ம் .. என்னை என்ன செய்தாயடா? (எங்கிருந்து)
திரைப்படம் : 5 ஸ்டார்
பாடியவர் : சந்தனா பாலா
இசை : அனுராதா ஸ்ரீராம் - பரசுராம்
பாடல் இயற்றியவர் : கவிஞர் தாமரை
[இந்தப் படம் வந்தப் பிறகு, பின்னனிப் பாடகி அனுராதா ஸ்ரீராமிடம் (மற்றும் அவரது கணவர் பரசுராம்) இருந்து இன்னும் சில படங்களை எதிர்ப்பார்த்தேன். ஏனோ பிறகு அவர்களிடம் இருந்து திரைப்படங்களுக்கு இசை இல்லை]
No comments:
Post a Comment