Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

October 25, 2013

சில நேரங்களில் சில மனிதர்கள்

திரு.ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய மகத்தான நாவல் சில நேரங்களில் சில மனிதர்கள். இந்நாவல் சிறப்பு வாய்ந்த சாஹித்திய அகாடமியின் விருதை பெற்றது. பின்பு 1975ஆம் ஆண்டில் திருமதி.லஷ்மி மற்றும் திரு.ஸ்ரீகாந்த் ஆகியோரின் சிறப்பான நடிப்பில் நாவலின் பெயர்க் கொண்டே திரைப்படமாய் வெளிவந்தது. இவை பெரும்பாலவனர்களுக்கு தெரிந்தவையே.

 


நேற்று இப்படத்தை யூடுயுபில் பார்த்தேன்.  முதலில் நான்கு நாட்களில் பார்க்கலாம் என்று தான் இருந்தேன். முந்தாநாள் முதல் அரை மணி நேரம் பார்த்தேன். நேற்றும் இரண்டாவது அரை மணி நேரம் பார்க்கலாம் என நினைத்தேன். ஆனால் படம் என்னை கட்டிப்போட்டுப் ஒரே வீச்சில் பார்க்கச் செய்தது. 

கண்டிப்பாய் சொல்ல வேண்டும். தரமான படம். இன்று நான் துயிலில் இருந்து எழும் வரை நேற்று இரவு உறக்கத்தில் இப்படம் என் நினைவில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. இப்பொழுதும். என்னை மிகுந்த ஒரு சலனத்தில் இருந்து தெளிவுப்படுத்திய உணர்வை இப்படம் கொடுத்தது என்று சொல்வேன். இது பீம்சிங்ப் போன்ற இயக்குனர் கையாண்ட விதம் போற்றுதலுக்குரியது. 

அனைத்து கதாபாத்திரங்களுக்கும் அற்புதமான கதாபாத்திர வடிவமைப்பு. அனைவரும் ஒப்பனை என்று சொல்லாதவகையில் உடலும் சதையுமாய் நடித்திருந்தனர். குறிப்பாக லஷ்மி கங்காவாகவும் ஸ்ரீகாந்த் ப்ரபுவாகவும் வாழ்ந்திருந்தார்கள். கங்காவின் மாமாவாக வை.ஜி.பார்த்தசாரதியும், ஸ்ரீகாந்தின் மகள் மஞ்சுவாக ஜெயகீதா மனதில் பதிகின்றனர்.



இப்படிபட்ட துணிவான கதைக்களத்தில் 1975ஆம் ஆண்டிலேயே இப்படம் வந்தது ஆச்சர்யம் தான். இன்று இப்படி ஆண் பெண் உறவையும் அதில் உள்ள உளவியலையும் முன்னிலைப் படுத்தி திரைப்படம் வெளிவருமா என்றென்பது கேள்வியளவே இருக்கின்றது.  இன்றும் இதுப் போன்ற திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றிப் பெறுவதில்லை என்பது வருத்தத்துக்குரிய நிலையாகும்.
 

  

கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம். அதுவும் 17 முதல் 20 வயதிற்குள் இருப்பவர்கள் பார்க்கவேண்டிய படம். இந்த நாவலை படிக்கலாம் என்று சென்ற மாதம் வாங்கினேன். இன்னும் படிக்கவில்லை. கண்டிப்பாய் படம் தொட்ட ஆழத்தை விட இன்னும் ஆழமாய் தொட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

ரம் சொல்லேல்.
பொருள்: ஒருதலைப் பட்சமாகக் பேசக் கூடாது. 
Meaning: Let your argument never be biased.

No comments:

Post a Comment