ஏன் என்று தெரியவில்லை நேற்று காலை வண்டியில் அலுவலகம் செல்லும் பொழுது இப்பாடலை வாய்விட்டுப் பாட ஆரம்பித்தேன். ஆனால் கடந்த இரு நாட்களாக இப்பாடலை மனதுள் பாடிக்கொண்டே இருக்கிறேன். நெஞ்சின் மிக அருகில் உள்ள சில வரிகள் இதோ.
நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை;
தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை;
ஜீவன் வந்து சேரும் வரும் வரை தேகம் போல் நான் கிடப்பேன் ;
தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்.
நித்தம் சொல்வேன் என்னுள் அவள் இருக்கிறாள். அவளை தவிர வேர் யாரும் இப்பாடலில் எனக்கு தெரியவில்லை.
(முழு பாடல்)
வண்ணம் கொண்ட வெண்ணிலவே ;
வானம் விட்டு வாராயோ;
விண்ணிலே பாதை இல்லை ;
உன்னை தொட ஏணி இல்லை ;
பக்கத்தில் நீயும் இல்லை ;
பார்வையில் ஈரம் இல்லை;
சொந்தத்தில் பாஷை இல்லை ;
சுவாசிக்க ஆசை இல்லை ;
கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் மில்லை;
நீலத்தைப் பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை;
தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை;
வண்ணம் கொண்ட வெண்ணிலவே ;
வானம் விட்டு வாராயோ;
நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன்;
நங்கை வந்து சேர வில்லை நட்சத்திரம் வாடுதடி;
கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன் ;
ஜீவன் வந்து சேரும் வரும் வரை தேகம் போல் நான் கிடப்பேன் ;
தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்.
பாடல் ஆசிரியர்: வைரமுத்து.
பாடி இயற்றியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியன்
திரைப்படம்: சிகரம்
பாடலின் ஒளிப்பதிவு இணைப்பு: http://www.youtube.com/watch?v=e7fXQrIg21o
No comments:
Post a Comment