எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள் பரிந்துரைத்த யாவரும் கேளிர் சிறுகதையினை படித்தபின் அவருக்கு நான் எழுதிய மடல்.
அன்புள்ள திரு.ஜெ மற்றும் திரு.சிவா-கிருஷ்ணமூர்த்தி,
இன்று இந்த யாவரும் கேளிர் சிறுகதையினை படித்தேன். ஒரு சிறிது நேர சந்திப்பில் ஒரு பெரிய உண்மையினை உணர்ந்தேன். கதை மிக நன்றாக இருந்தது.
இது போன்று ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு என் வாழ்வில் ஒரு தொலைப்பேசி உரையாடலில் என்னுள் இருந்த ஒரு உண்மையை உணர்ந்தேன் களைந்தேன். உங்களிடம் அதை (நேரம் கருதி முக்கியமான 2-3 கேள்விகளை மட்டும்) பகிர்ந்துகொள்ள எண்ணுகிறேன். 2010`இல் எனது தோழியுடன் பல மாதங்கள் கழித்து தொலைப்பேசியில் உரையாடுகையில் அவள் தனது மேற்படிப்பு பற்றி என்னிடம் பேசினாள். அவள் வீட்டில் அவளுக்கு வரன் பார்த்து கொண்டு இருப்பதனால், அவளிடம் கேட்டேன் உங்க வீட்ல வரன் பார்க்கிறார்கள், நீ படிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறாய். இரண்டும் ஒன்றாய் நேர்ந்தால் என்ன செய்வாய் ? அவள் அதற்கு என்னிடம் கேட்டாள் `அவுங்க(வருங்கால கணவர்) கல்யாணம் ஆனா பிறகு யு.ஸ்`ல படிக்க அனுமதிப்பார்களா? சொல்ல முடியாது. எல்லாரும் அதற்கு சம்மதிப்பார்களா என்று. அதற்கு அவள் பதில் கேட்டாள், அப்ப என்ன கல்யாணம் ஆனா புள்ள பெத்துப் போட்றத்துக்குத் தானா ? ஒரு 10 வினாடி என்னை நடு மண்டையில் குட்டியது போல் இருந்தது. பின்பு சில நாட்கள் என்னை நான் வெளியில் இருந்து கண்டேன். என்னுள் இருந்த ஒரு குறுகிய மனப்பான்மை நான் கண்டுக்கொண்டேன். அதுவரையில் பெண்கள் கல்யாணம் ஆன பிறகு படிக்க ஆசைப்பட்டால் ஒரிரு ஆண்டுகள் பிறகு படிக்கலாம் என்றே மனதில் பதிக்காத ஒரு எண்ணமாக இருந்தது என்னில் இருந்தது. அன்று முதல் பெண்கள் மீதான பார்வையை நான் மாற்றிக் கொண்டேன்.
யாவரும் கேளிர் எழுதிய திரு.சிவா-கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.அதனை தனது இனையத்தளத்தில் பரிந்துரைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி.
Best,
Rajesh
http://rajeshbalaa.blogspot.in/
FandFstores.com
மெல்லி நல்லாள் தோள்சேர்.
Meaning: Never cheat on your wife
சிவா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பதில்..
ReplyDeleteஅன்புள்ள ராஜேஷ்,
யாவரும் கேளிர் சிறுகதை உங்களுக்கு பிடித்திருந்தது குறித்து மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.
சிவா கிருஷ்ணமூர்த்தி