Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

September 10, 2013

ஊக்கம்

"இந்த விதை தன் மேல் கிடந்த பாறைகளை முட்டி முட்டியே முளைத்தது" - இந்த வரியை இன்று நான் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் (Thamizh Pechu Engal Moochu : Sep 8, 2013 - கடைசி 10 நிமிடத்தில் வரும்) கேட்டேன். நரம்புகள் சிலிரிக்கும் படியாக இருந்தது. எனது வாழ்க்கையில் குறிப்பிட்ட காலம் வரை மேற்சொன்னவாரு தான் இருந்தது. இன்று என் மேல் எனக்கு கேள்விகள் அதிகம் உள்ள இந்நாட்களில் இந்த வாக்கியம் மிகுந்த உத்வேகத்தை தருகிறது.

September 06, 2013

யாவரும் கேளிர் - கடிதம்


எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள் பரிந்துரைத்த யாவரும் கேளிர் சிறுகதையினை படித்தபின் அவருக்கு நான் எழுதிய மடல்.

யாவரும் கேளிர்  => http://www.jeyamohan.in/?p=36570

அன்புள்ள திரு.ஜெ  மற்றும் திரு.சிவா-கிருஷ்ணமூர்த்தி,

இன்று இந்த யாவரும் கேளிர் சிறுகதையினை படித்தேன். ஒரு சிறிது நேர சந்திப்பில் ஒரு பெரிய உண்மையினை உணர்ந்தேன். கதை மிக நன்றாக இருந்தது. 

இது போன்று ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு என் வாழ்வில் ஒரு தொலைப்பேசி உரையாடலில் என்னுள் இருந்த ஒரு உண்மையை உணர்ந்தேன் களைந்தேன். உங்களிடம் அதை (நேரம் கருதி முக்கியமான 2-3 கேள்விகளை மட்டும்) பகிர்ந்துகொள்ள எண்ணுகிறேன். 2010`இல் எனது தோழியுடன் பல மாதங்கள் கழித்து தொலைப்பேசியில் உரையாடுகையில் அவள் தனது மேற்படிப்பு பற்றி என்னிடம் பேசினாள். அவள் வீட்டில் அவளுக்கு வரன் பார்த்து கொண்டு இருப்பதனால், அவளிடம் கேட்டேன் உங்க வீட்ல வரன் பார்க்கிறார்கள், நீ படிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறாய். இரண்டும் ஒன்றாய் நேர்ந்தால் என்ன செய்வாய் ? அவள் அதற்கு என்னிடம் கேட்டாள் `அவுங்க(வருங்கால கணவர்) கல்யாணம் ஆனா பிறகு யு.ஸ்`ல படிக்க அனுமதிப்பார்களா? சொல்ல முடியாது. எல்லாரும் அதற்கு சம்மதிப்பார்களா என்று. அதற்கு அவள் பதில் கேட்டாள், அப்ப என்ன கல்யாணம் ஆனா புள்ள பெத்துப் போட்றத்துக்குத் தானா ? ஒரு 10 வினாடி என்னை நடு மண்டையில் குட்டியது போல் இருந்தது.  பின்பு சில நாட்கள் என்னை நான் வெளியில் இருந்து கண்டேன். என்னுள் இருந்த ஒரு குறுகிய மனப்பான்மை நான் கண்டுக்கொண்டேன்.  அதுவரையில் பெண்கள் கல்யாணம் ஆன பிறகு  படிக்க ஆசைப்பட்டால் ஒரிரு ஆண்டுகள் பிறகு படிக்கலாம் என்றே மனதில் பதிக்காத ஒரு எண்ணமாக இருந்தது என்னில் இருந்தது. அன்று முதல் பெண்கள் மீதான பார்வையை நான் மாற்றிக் கொண்டேன். 

யாவரும் கேளிர் எழுதிய திரு.சிவா-கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.அதனை தனது இனையத்தளத்தில் பரிந்துரைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி. 

Best,
Rajesh
http://rajeshbalaa.blogspot.in/
FandFstores.com

மெல்லி நல்லாள் தோள்சேர்.
Meaning: Never cheat on your wife

September 03, 2013

அவளது வாசனை - குறுந்தொகை

வெளியே மழை
உள்ளே மின்சாரமில்லை
மெழுகு வற்தியுடன் குறுந்தொகை
கண்மூடி திறந்தேன்
இப்பாடல் வந்தது
இதோ . . .

168. பாலை - தலைவன் கூற்று

மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை
இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து
பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன
நறுந்தண் ணியளே நன்மா மேனி
புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள்
மணத்தலுந் தணத்தலு மிலமே
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே.
-சிறைக்குடி யாந்தையார்.

விளக்கம் (சுஜாதவின் குறுந்தொகை - ஒரு எளிய அறிமுகம் புத்தகத்தில் இருந்து).

(அவளது வாசனை)
மழையில் மலரும்
பிச்சிமலர்களின்
நனைந்த அரும்புகளை
பனங்குடையில் சேகரித்து
மழை பெய்யும் விடியற்காலையில்
விரித்துவிட்டது போல
மணக்கும்
அந்தப் பெண்ணின் தோளை
அணைக்கவும் முடியவில்லை
பிரியவும் முடியவில்லை
பிரிந்தால் உயிர் வாழ்வது
அதனினும் இல்லை

Meaning: Never cheat on your wife

பொய் - பாரதி

பொய் சொல்வதை பற்றி நகைச்சுவையாக ....

பானையிலே தேளிருந்து
பல்லால் கடித்ததென்பார்
வீட்டிலே பெண்டாட்டி
மேல்பூதம் வந்ததென்பார்
பாட்டியார் செத்துவிட்ட
பன்னிரண்டாம் நாளென்பார்
   --- மகாகவி சுப்ரமணிய பாரதியார்

(தேள் பல்லால் கடிக்காது, பெண் மேல் பூதம் வராது, பன்னிரண்டாம் நாளென்று `காரியங்'களில் கிடையாது)

September 02, 2013

சில திரைப்பதிவுகள்

யார் பாரதி ?

1) நெல்லை கண்ணன்


2) பாரதி பாஸ்கர் & பட்டிமன்றம் ராஜா



சிந்திப்போம் - நெல்லை கண்ணன் @ ஈரோடு புத்தக கண்காட்சி
(மொத்தம் - 10 திரைப்பதிவுகள்)

August 18, 2013

காதல் - பாரதி

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால்,காதல் செய்வீர்;உலகத்தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்.
   --- மகாகவி சுப்ரமணிய பாரதியார்

August 15, 2013

ஆங்கில கல்வி - பாரதியின் பார்வை

கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்,பின்
கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்;
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்தி ருக்கும் கவிளம் காண்கிலார்;
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்;
வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்
துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள்
சொல்லு வாரெட் டுணைப்பயன் கண்டிலார். 23

கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
காளி தாசன் கவிதைபு னைந்ததும்,
உம்பர் வானத்துக் கோளை மீனையும்
ஓர்ந்த ளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்,
நம்ப ருந்திற லோடொரு பாணினி
ஞால மீதில் இலக்கணங் கண்டதும்,
இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்
இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும், 24

சேரன் தம்பி சிலம்மை இசைத்ததும்,
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்,
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார ளித்ததும் தர்மம் வளர்த்ததும்,
பேரு ருட்சுடர் வாள்கொண் டசோகனார்
பிழைப டாது புவித்தலங் காத்ததும்,
வீரர் வாழ்த்த மிலேச்சர்தந் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும். 25

அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;
முன்னர் நாடுட திகழ்ந்த பெருமையும்
மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார்
பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்;
என்ன கூறிமற் றெங்ஙன் உணர்த்துவேன்
இங்கி வர்க்கென துள்ளம் எரிவதே! 26

--- மகாகவி சுப்ரமணிய பாரதியார்

குறிப்பு -
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;

என்பதனை கீழ்வருமாறு படிக்கவும்
    அன்ன யாவும் அறிந்திலர்  பாரதத்து
    ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்

நன்றி - http://temple.dinamalar.com/news_detail.php?id=8149 

தொன்மை மறவேல்.
Meaning: Don't forget antiquity 

August 07, 2013

இனி

இனி எனது பெஸ்புக்-இலோ அல்லது மற்ற தளங்களிலோ சினிமா, அரசியல் போன்ற பொருள் அற்ற (விவாத) மேடைகளில் நான் பங்கேற்க மாட்டேன் என்று உறுதி பூண்டு உள்ளேன்.

August 06, 2013

When you are away Nothing to tell as Life

ஏன் என்று தெரியவில்லை நேற்று காலை வண்டியில் அலுவலகம் செல்லும் பொழுது இப்பாடலை வாய்விட்டுப் பாட ஆரம்பித்தேன். ஆனால் கடந்த இரு நாட்களாக இப்பாடலை மனதுள் பாடிக்கொண்டே இருக்கிறேன். நெஞ்சின் மிக அருகில் உள்ள சில வரிகள் இதோ. 

நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை;
தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை;

ஜீவன் வந்து சேரும் வரும் வரை தேகம் போல் நான் கிடப்பேன் ;
தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்.

நித்தம் சொல்வேன் என்னுள் அவள் இருக்கிறாள். அவளை தவிர வேர் யாரும் இப்பாடலில் எனக்கு தெரியவில்லை.

(முழு பாடல்)
வண்ணம் கொண்ட வெண்ணிலவே ;
வானம் விட்டு வாராயோ;
விண்ணிலே பாதை இல்லை ;
உன்னை தொட ஏணி இல்லை ;

பக்கத்தில் நீயும் இல்லை ;
பார்வையில் ஈரம் இல்லை;
சொந்தத்தில் பாஷை இல்லை ;
சுவாசிக்க ஆசை இல்லை ;

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் மில்லை;
நீலத்தைப்  பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை;
தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை;

வண்ணம் கொண்ட வெண்ணிலவே ;
வானம் விட்டு வாராயோ;

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன்;
நங்கை வந்து சேர வில்லை நட்சத்திரம் வாடுதடி;

கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன் ;
ஜீவன் வந்து சேரும் வரும் வரை தேகம் போல் நான் கிடப்பேன் ;
தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்.


பாடல் ஆசிரியர்: வைரமுத்து.
பாடி இயற்றியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியன்
திரைப்படம்: சிகரம்
பாடலின் ஒளிப்பதிவு இணைப்பு: http://www.youtube.com/watch?v=e7fXQrIg21o

August 01, 2013

அறம் - திரு.ஜெயமோகன் (Aram by Jeyamohan)

கடந்த சில நாட்களாக திரு.ஜெயமோகன் அவர்களின் ”அறம்” என்கின்ற சிறுகதைகள் தொகுப்புப் நூலினை வாசித்து வந்தேன். நான் வாசித்த சில நூல்களில் சிறந்த நூல்களில் இது முதன்மை பெரும். இச்சிறுகதைகள் அனைத்துக்கும் மையச்சரடு என்பது இவை உண்மை மனிதர்களின் கதைகள்தான் என்பதே. அனைத்தையும் விட மேலாக இக்கதைகளில் காண்பது இன்னொருவரிடம் தொற்றிக்கொள்ளக்கூடிவை.

ஒரிரு கதைகள் தவிர் மற்றவை யாவும் எனக்கு மிக மிக பிடித்தது. அறம், சோற்றுக்கணக்கு, யானை டாக்டர், நூறு நாற்காலிகள், உலகம் யாவையும், ஓலைச்சிலுவை, பெருவலி, வணங்கான்,  மெல்லிய நூல், தாயார் பாதம் ஆகியவை கண்டிப்பாய் படிக்கபட வேண்டியவை. அதிலும் அறம், சோற்றுக்கணக்கு,  யானை டாக்டர், நூறு நாற்காலிகள், உலகம் யாவையும் ஆகிய ஐந்து சிறுகதைகளும் என்னை நிமிரச்செய்து படிக்க வைத்தவை.

இந்நூல் என்னுள் ஒரு வேற் ஒர் பரிமாணத்தை போர்த்தியுள்ளது. அதனின் தாக்கம் என்னில் இருந்த பல கேள்விகளுக்கு நன்விடையை தேடி செல்லும் பாதையை வகுத்து அதில் விளக்காய் ஒளிர்கின்றது.

’அறம்’தனை உங்களுக்கு மிகுந்த நன்மதிப்புடன் பரிந்துரை செய்கிறேன்.

இதனை நீங்கள் திரு.ஜெயமோகன் அவர்களின் வலையதளத்திலும் இலவசமாய் படிக்கலாம். http://www.jeyamohan.in/?page_id=17097(அறம் சிறுகதைகள்).

(Translation)
Last few days, I have been reading a short stories collection "Aram" [Idealism] by Jeyamohan. Among the books I have read, among the bests, this book will be in the top of the list. The main thread in all these stories is, it is based on real life stories. Most importantly, above all the traits seen in these stories can catch on us.

Except couple of stories, I liked every story very much. Among them, Aram [Idealism], Sotrukanakku [Food Accounts], Yaanai Doctor [Elephant Doctor], Nooru Naarkaaligal [100 chairs], Ulagam Yaavaiyum [Entire World], Olai siluvai [Palm Christ Cross], Peruvali [Big Pain], Vanangaan [Unbendable person], Melliya Nool [Mild book],  Thaayar Paadam [Feet of Mother] are must reads. Especially, Aram, Sotrukanakku, Yaanai Doctor, Ulagam Yaavaiyum hit me hugely. 

This book has blanketed a different perspective upon me. Its impact has paved way, as well as serving as  a lamp, towards the answers for plenty of questions I have for a long time. 

With huge regards, I highly recommend 'Aram'.

You can read all these short stories in Jeyamohan's website itself.  
http://www.jeyamohan.in/?page_id=17097

(click to view original size)


வீடு பெற நில்.
Meaning: Stand to gain Liberation
முக்திக்கான வழியை அடைய முயற்சி செய்ய வேண்டும்

July 22, 2013

Do you think, like others, I'll fall down ?

The below poem by Mahakavi Subramaniya Bharathiyar is one of the best poems I have read. These lines take us to give a deep thought about our actions. It is highly inspiring to lead a meaningful life. I am striving hard to make a positive change for myself but others.

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...

              - மகாகவி சுப்ரமணிய பாரதியார்

Translation:
Searching for and having food daily,
And chattering with lots of small talk,
With the mind suffering in pain,
And your deeds making others suffer as well,
Then you age and become old ,
And face the grim reaper in death.
Like lots of other people,
Do you think I'll fall down?

I shall ask you a few boons ,
You shall directly grant me those.
Any evil deeds in my past and their effects,
Shall not come back to life again.
Hereby shall I be given a new life
With no worries for me.
Give me a clarity of thought ,
And making me happy forever.
- (Originally poem written by) - Mahakavi (Great Poet) Subramaniya Bharathiyar

Translation Courtesy: Thought Trickles

Translation 2: (Courtesy: Dhilip Shiva/newmaldentamilschool.org.uk)
Search! Search for food every day!
Speak! Speak of unwanted things through out!
Worry! Worry myself with thoughts!
Hurt! Hurt others in the way of pointless things!
Get! Get old day by day!
Die! Succumb to vileness, die and finally go without a trace!
I am not them! I am not you(them)!
Don’t you ever dare to think that, I would give up! I never give up! ​

பொருள்தனைப் போற்றி வாழ்.
Meaning: Do not spend naively. Protect and enhance your wealth.