Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

June 30, 2015

அலைக்கழிக்கப்பு | நான்கு வேடங்கள்

நான் சமீப காலங்களில் படித்த கட்டுரைகளில் முக்கியமான கட்டுரை இது. இலக்கிய உலகில் வரும் பெரும்பாலானோர் சிக்கித்தவித்து அலைக்கழிக்கப்படும் மனநிலைக்கு காரணம் என்னவென்று எழுத்தாளர் ஜெயமோகன் தர்க்க பூர்வமாக விளக்குகிறார்!

மூலம் :  (கீழ்காணும் தலைப்புகளை/ சுட்டிகளை தட்டவும்)
தன்வழிகள்

நான்கு வேடங்கள்

எழுதலின் விதிகள்

இரண்டு முகம்

தேடியவர்களிடம் எஞ்சுவது

தன்னறம்

தன்வழிச்சேரல்

பதுங்குதல்

ஒருமரம்,மூன்று உயிர்கள்

செயலின்மையின் இனிய மது

தன்னறத்தின் எல்லைகள்

தன்னறமும் தனிவாழ்வும்-கடிதம்

விதிசமைப்பவர்கள்

சராசரி

விதிசமைப்பவனின் தினங்கள்

தேர்வு செய்யப்பட்ட சிலர்


படிமங்கள்

பல்லாயிரம் முறை நான் உணர்ந்து பாடிய வாசித்த வரிகள் இன்று புதியதாய் தோன்றுகிறது. வாழ்க்கையில் இதற்கு முன்பும் நான் இது போல் நினைத்ததுண்டு. எங்கெங்கு காணினும் படிமங்கள்! 

June 29, 2015

இவள் இன்னருள் வேண்டுமடா!

பாரதியாரின் வரிகளே என் நெஞ்சினில் ஓடிக் கொண்டு இருக்கின்றது. 

June 27, 2015

ஏன் உள்ளமே ?

ஏன் உள்ளமே ?
எழுதியதை வெளியிடவில்லை
கரங்களை எழுதவிடவில்லை
கண்களை தீண்டவிடவில்லை
செவிகளை இன்புற்றவில்லை
இரு நாளாய்
சரியாக துயிலவில்லை

June 26, 2015

டா

என் வயது பெண் தோழிகளில் என்னை டா என்று அழைத்த தோழிகள் சிலர் உண்டு. அதுவும் ஓர் இரு முறை மட்டுமே. ஏன் என்றால் எங்கள் ஊர்களில் நாங்கள் படிக்கும் காலத்தில் அப்படி ஓர் பழக்கம் கிடையாது.  

23-ஜூன் 2015 அன்று மாலை, நான் உனக்கு பிடிக்காத பச்சை சட்டையை போட்டு இருக்கேனே, உன்னை பார்க்கும் முதல் நாளே! என்று அப்பெண்ணிடம் கேட்டேன். அவளோ, "நீ போட்டுக்கலான் டா. அதெல்லாம் எனக்கு பிரச்சனை இல்ல டா. நானே நிறையா பேருக்கு வாங்கித்தருவேன்" என்றாள். அந்த டா-வின் ஓசையில் செவியினால் உணரலாகாத ஓர் எழில் உள்ளது. சிறிது நேரம் பின்பு அடுத்தவாட்டி பேசணும்னா என்கிட்ட சொல்லு இல்லாட்டினா வேற எதுவும் பேச இல்லனா உங்க வீட்டுல சொல்லிரு (முடிவை) என்று நான் சொல்ல. அவளோ! "நீ  எப்ப வேணாலும் பண்ணு டா!" என்றாள்.  டா-விலும் ஒரு காஞ்சனை உண்டு என்பதை அதை அசைப்போடும் பொழுது தான் உணர்கிறேன்! 
(முற்றிற்று)

(முளைந்த பின் 1-ஜூலை அன்று எழுதியது பகுதி) 
வஞ்சியிடம் இருந்து மலர்ப்போல் 
வாஞ்சையாக டா உதிர்ந்தால்
பாவலன் அதை இதயத்தில் 
முடிந்து முளைக்க வைத்து
பாவைக்கு கவிதை எழுதுவான்
அதையே நான் செய்தேன்
ஒன்பது நாள் பின்பு

பி.கு : இது என்ன குருட்டுத்தனமா ஒரு கிறுக்குத்தனம் என்று முட்டாள்த்தனமாய் தோன்றினாலும் அது ஒரு முட்டாள்த்தனம் என்று அறியும் ஆற்றலே அரிது. ஏன்  முட்டாள்த்தனம் என்றால் நான் சொன்ன அதுவே பிரபஞ்சத்தின் ஓர் மலரிதழ். [பிரபஞ்ச லீலைகளை அனுபவிக்க வேண்டும் காலவெளியில் பூத்த முடிவிலா இதழ்கள் கொண்ட ஒரு மலர் மட்டுமே. ‘ஒரு சிறிய மலரில் இருந்து இப்பிரபஞ்சமெனும் ஆனந்த வெளியை நாம் சென்றடைய முடியும். பூவை அறிய முடியாதவனுக்கு பிரபஞ்சத்தையும் அறிய முடியாது - சாய்ந்த வரிகள்/எழுத்துக்கள் எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளித்தில் பாரதியாரின் ‘கண்ணன் பாடல்கள் ஒரு கடிதம்’ என்ற ஒரு பதிவில்/கட்டுரையில் இருந்து எடுத்தது]

P.S: Translation of this post is available in the comments section

June 25, 2015

ரதி சுக சாரே கதம் அபி சாரே [Rati Sukha Sare Gatam Abhi Sāre]

[Archiving from my FB Post date 08-June-2015. i.e., a day before my birthday 09-June-2015]

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் [Thirukkural Link at the end]


Is it time? This weekend I learnt about this song ‘Rati Sukha Sare’ (translation and video are in appendix) (of Poet Jayadev’s Geeta Govind /Astapathi / Krishna’s Love songs) from my favorite writer Jeyamohan. I found a soulful rendition of that song by Mrs.Niranjana Srinivasan in youtube. When I was wandering in that paradise, thought about getting immersed in the Ocean of Love (Kammathuppaal of Thirukkural by Thiruvalluvar). When I was neck deep in it wrote a prose of this couplet (meaning in comments) thinking about the charming girl.

இது தான் நேரமோ தெரியவில்லை. பிறந்தநாளிற்கு ஓர் நாள் முன்பு எனது ஆஸ்தான எழுத்தாளர் ஜெயமோகன் மூலமாக (ஜெயதேவ-இன் கீத்கோவிந்தில் / அஷ்டபதியில்) “ரதி சுக சாரே கதம் அபி சாரே” என்ற பாடலை பற்றி அறிந்தேன். பின்பு யூட்யூபில் தேடி கடைசியில் ஸ்ரீமதி நிரஞ்சனா ஸ்ரீனிவாசன் ஆத்மாத்மார்த்தமாக நன்கு பாடிய நல்ல அப்பாடலை கேட்டேன். அவ்வின்ப வெள்ளத்தில் தத்தளிக்கும் நான் ஏன் நாம் வள்ளுவனின் இன்பத்துப்பாலில் திளைக்கக்கூடாது என்று என் மங்கல் ராதையை மிகுதியாக உள்ளியதால் ஒரு குறள் எடுத்து எழுத முற்பட்டேன்! அதன் மடல் இதோ (சுட்டியை தட்டவும்)

Appendix

Video / காணொளி

Rati Suka Sare [Translation/Meaning of Lyrics]

Oh Radha, Krishna is sitting in the same cottage where you met happily before. He is chanting your name like Mantra incessantly. He is yearning to enjoy the happiness of your embrace.


Oh dear Radha, go quickly to meet your beloved Krishna who is beautiful like Manmadha.The breeze is blowing gently. Krishna is waiting in Brundavana on the bank of Yamuna river. His hands play on the breasts of Gopikas. 

Krishna is playing flute calling your name, indicating where he was waiting for you. He admires even the breeze passing over you and reaching him.


He is alarmed even when a feather or dry leaf drops. He is setting on bed of tender leaves and is excited about your arrival.

Oh Radha, leave off your anklets lest they make noise when you meet him. Please go to that bower during night in black dress. 

When you meet Krishna your pearl necklaces fall on his chest. You shine like lightening on his chest which resembles dark clouds with white Sarasa birds.


Your eyes are beautiful like lotus flower. You are treasure of beauty lying on bed of tender leaves. You are bestower of happiness. 

Krishna is a person with self-respect. The night is ending He would be angry if you make delay. Go soon and fulfill his wish. 

Poet Jayadeva tells this delightful story of love between Radha and Krishna with utmost devotion. Oh devotees, bow to the most benevolent lord Krishna with pious hearts.


Meaning of the Couplet(Thirukkural)
My maiden perhaps thinks that now the night has set in, I would not be thinking of the act of riding the palm-horse. She is ignorant to understand my resolve; even in the middle of the night, I am only thinking of that without closing the lids of my eyes, says the man, making the intensity of his love known to her.

This way, he tries to let her know not only his mind but further his sleepless state, desiring her, perhaps, in a way to infuse sense of guilt in her.
(Courtesy: AshokSubra)

(Meaning in Tamil)
நான் பகல் வேளையில் மடலூர்தலை பற்றி நினைத்துக்கொண்டு இருப்பேன் இரவில் நினைக்க மாட்டேன் என்று நினைக்கும் அறிவில்லா பேதையே! நான் நள்ளிரவிலும் இமை மூடாமல் கண்விழித்து உன்னை எண்ணி எண்ணி மிக தெளிவாகவும் உறுதியாகவும் மனதில் நினைத்து கொண்டிருப்பது என்ன தெரியுமா ? (நாளை பகலில்) மடலூர்தலை(உன்னை அடைவதற்காக ஊர் மக்கள் முன்பு வெளிப்படையாக ஒரு குறீயிட்டின் (மன் குதிரையில் ஏறுவது) மூலம் தெரிவிப்பது) பற்றியே!

நம் காதலை இன்னும் சபைக்கு கொண்டுவராத குற்றவுணர்வு உனக்கில்லையா ?

Complete prose of the Thirukkural 1136 in tamil (Click the link)

June 21, 2015

நினைப்பதெல்லாம் . . .

உளமார எழுத வேண்டிய தருணம் இது.

2013 எனது எம்.பி.ஏ கனவுகளில் ஆயுத்தமாகி எனது மனதை முழுமையாக அதற்கு ஒப்படைத்தேன். அதன் விளைவாக எம்.பி.ஏ-வுக்கு நுழைவுக்கிடைத்தது.  அப்போழுது 2014 ஏப்ரல்-ஜூலை ஒய்வு விடுப்பு நேரத்தில் கல்யாணம் பேச்சும் எண்ணமும் ஒலித்தது வீட்டிலும் மனதிலும். எனக்கு அவளின் முகமும் ஞாபகத்திற்கு வந்தது. அவளை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அவளுக்கும் எனக்கும் ஒற்றுமைகள் பல உண்டு. அப்படி இருவருக்கும் ரசனை, குறிக்கோள்கள் (சொல்ல போனால் அவளிடம் நான் நன்றாக பேசிய பொழுது அவளின் லட்சியங்களை கேட்டே அவள் மீது மதிப்புக் கொண்டு அவளின் நட்பு பாராட்ட விரும்பினேன்) உயர்வாக இருப்பதனால் இருவரும் வாழ நன்றாகவும் ஆனந்தமாகவும் இருக்குமே என்று நினைத்தேன்.

நினைவுகள் இருந்தாலும் நாங்கள் இருவரும் வேவ்வேறு பிரிவை சார்ந்தவர்கள். எனது தங்கையின் கல்யானத்தால் ஆன குழப்பமே அதிகம். நான் வேறா ? தம்பியின் கல்யாணமும் சிக்கல்களுக்கு உள்ளாகும். எல்லோரும் முழு நிறைவு என்பது சற்று குறைவாக இருக்க சாத்தியம் அதிகம். முக்கியமாக நான் எம்.பி.ஏ படிக்க போனால் கல்யாணம் நடத்த தாமதம் ஆகும். அவளுடைய வீட்டில் எப்படி சொல்லி கல்யாணத்தை தாமத படுத்தவும் முடியாது. அதுவும் மூன்று நான்கு ஆண்டுகளாக பெண்ணுக்கு வரன் பார்க்கும் பெற்றோர்களிடம். ஆதலால் என் எண்ணத்திற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தேன்.

ஆனால் அவ்வெண்ணம் விளைந்தது. என்னை விட்டு நீங்கா வண்ணம் இருந்தது. இப்படி போய் கொண்டு இருக்கையில் எங்கள் வீட்டிலும் பெண் பார்க்கும் படலம் தீவிரமாய் சென்று கொண்டு இருந்தது. அந்த சுழற்சியிலும் என்னை வேறு வழியின்றி ஆட்படுத்திக்கொண்டேன்.  ஒன்றும் அமையவில்லை.  இப்படி சென்றுக்கொண்டு இருக்கையில் எனது கல்லூரியில் ஒரு பெண் மீஷாவிடம் பல நாள் நடந்த பேச்சுகளில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால் - நீ எடுக்கும் முடிவை நீ வாழ்நாள் முழுவதும் சுமப்பாய். இதில் உன் குடும்பத்திற்கு என்று பார்த்தால் உன் மகிழ்ச்சி கேள்விக்குள்ளாகும். ஒருவேளை வீட்டில் பார்க்கும் பெண் சரியில்லை என்றால் என்ன செய்வாய் ? உனக்கு பிடித்ததை செய். வீட்டில் உள்ளவர்கள் உன் வாழ்க்கையில் இருக்கும் நேரம் குறைவு.

அதன் பின் நான் என்னை பற்றி அதிகம் யோசிக்க துவங்கினேன். நான் எனது வாழ்விற்கு என் நலனிற்கு என் அமைதியிற்கு என் மகிழ்ச்சியிற்கு வாழவேண்டிய நேரம் வந்து ஆயிற்று. கடந்த 10 ஆண்டுகளாக குடும்பம் என்னும் வண்டி தனை ஓட்டி ஆயிற்று. போதும். ஆதலால் என் மனதில் உள்ள நியாயமான எண்ணதிற்கு தர வேண்டிய இடத்தை தர நினைத்தேன்.  முதலில் தம்பியிடம் கூறினேன். அவன் சற்று குழப்பினான். இருப்பினும் என் முடிவு சரி என்றே எனக்கு பட்டது. ஊரில் இருந்து கிளம்பும் முன் அம்மாவிடம் மணக்குள விநாயகர் கோவிலில் வைத்து சொன்னேன். அம்மாவிடம் எதிர்ப்பு எதையும் எதிர்ப்பார்க்கவில்லை. அதேப் போல் அம்மா எதிர்க்கவில்லை. நீ ஒரு முடிவு எடுத்தால் நீ யோசித்து எடுப்பாய். ஆதலால் நான் சம்மதிக்கிறேன் என்று கூறினார்கள். பாட்டியிடம் கூறினேன். நீயுமா ? என்றாள். ஆம் பாட்டி. இவளை எனக்கு பிடித்து இருக்கிறது. நல்ல பெண் குணம் ரசனை என்றேன். பாட்டி முழு சரியும் சொல்லவில்லை முழு மறுப்பும் சொல்லவில்லை. சமூக சூழலில் பழைமைவாதியின் பின்புலத்தில் வாழ்க்கையில் அவள் பட்ட பாடத்தின் பின்னனியில் வைத்து பார்க்கையில் அதை தான் அவளிடம் எதிர்ப்பார்க்க முடியும். ஆனால் அவள் ஆசி எனக்கு இருநூறு சதவிகிதம் உண்டு என்று எனக்கு தெரியும்.  ஆதலால் துணிந்தேன்.

இருப்பினும் இப்பொழுது தான் மிகவும் கடினமான கட்டதிற்கு வந்தேன். அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற தயக்க போராட்டம். துன்னுள் விழைந்து மோதினேன். நண்பர்களை நாடினேன். அனைவரும் என்னை ஆதரித்தார்கள். கொலம்பஸ், இண்டியானவில் என் தூக்கங்கள் தொலைந்தது. எண்ணங்கள் அலைந்தது. கொலம்பஸில் வந்த முதல் வாரமே சொல்ல முற்பட்டேன். சொல்லக்கூடிய உன்னதமான தருணம் அல்ல. ஆதலால் பயணத்தை தள்ளிப்போட்டேன். ஆனால் அது எத்தனை உரக்கங்களை தள்ளிப்போட்டது தெரியுமா ? அதற்கு அடுத்த வாரம் சொல்ல முற்பட்டேன் . அதுவும் வேலைக்கு ஆகவில்லை. சரி இந்த வாரம் செல்லலாம் என இருந்தேன். செல்ல முடியாத சூழலில் அவள். வேறு வழியில்லை அலைப்பேசியில் சொல்வது தான் இப்போதைய வழி என்று முடிவு எடுத்தேன்.

இதற்கு ஆயுத்தம் என்பது அப்படி ஒரு முதன்மையான் செயல். ஆதலால் என் மனதில் உள்ளதை மிக தெளிவாக சொல்ல வேண்டும். ரத்தினச்சுருக்கமாக சொல்ல வேண்டும். ஆழமாக சொல்ல வேண்டும். அழகின்மையோடு சொல்லவேண்டும். ஆனால் நெஞ்சை பிராண்டும் அளவிற்கு மானே தேனே என்று எல்லாம் சொல்லக்கூடாது. பொதுவாக நான் எனது எம்.பி.ஏ வியூகங்களை வெளியே பேசுவதில்லை. ஆனால் நான் மார்கேட்டிங் ஃபில்ட் ஸ்டடியில் கற்றுக்கொண்டது என்னவென்றால் நீ சொல்வது மிக முக்கியம். அதுவே அடுத்தவர்களுக்கு போய் சேரும். உன் மனதில் என்ன நினைக்கிறாய் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும் ஆதலால் சொல்வதை நன்றாய் ஆராய்ந்து ஆழமாக தெளிவாக அழகாக சுருக்கமாக சொல்.  ஆதலால் நான் சொல்ல வேண்டியதை தற்காலிக மின் மடலில் கொட்டினேன். சரி செய்தேன். கூட்டினேன். முறைப்படுத்தினேன். வார்த்தைகளை மாற்றினேன். இரண்டு நாட்களாக.  பாரதி சொன்ன மதி தனில் மிக தெளிவு வேண்டியதை பெற்றேன். 

இவ்வளவு ஆயுத்தமாகியும் அவளிடம் சொல்ல நேரம் நெருங்கும் பொழுது அப்படி ஒரு பட படப்பு. ஆனால் ஆயுத்தமாவது எவ்வளவு நன்மை பயவிக்கும் என்பதை அப்பொழுது உணர்ந்தேன். நான் பேச நினைத்தது தெளிவாக இருந்தது. பேசக்கூடாததும் தெளிவாக இருந்தது. முதலில் ஆங்கிலத்தில் தான் எழுதி வைத்துக்கொண்டேன். ஆங்கிலத்தில் சொல்வது ஈசியாக இருக்கும் ஏனென்றால் நம்ம ஓர் அளவு மனப்பாடம் செய்தே பழகிய மொழி. ஆனால் தமிழில் தான் சொல்லுவேன் என்று மனசங்கல்ப்பம் செய்து கொண்டேன். தமிழிலும் ஆயுத்தமானேன். ஏன் என்றால் அது தான் உள்ளார்ந்து வரும் (internalize என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்)

இன்று ஜுன் 19 2015 வெள்ளி அன்று மாலை 7 மணி. அவளிடம் பேசுவது முன்பு கை பட பட வென்று இருக்கிறது. கால்களோ உட்காரவில்லை. முகத்தை அலம்பினேன். தலைவாரினேன். என்னை பார்த்து கண்ணாடியில் சிரித்துக்கொண்டேன். இது நடந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன். மகிழ்ச்சியும் அடைந்தேன். ஆனால் இனம்புரியாத ஒரு நடுக்கும் இருந்துக்கொண்டே தான் இருந்தது. குளிர்சாதன அரையில் திடீர் என்று ஐந்து-ஆறு டிகிரி குறைந்தால் ஏற்படும் நடுக்கம் போல. மாலை7:35க்கு அவளுக்கு போன் செய்தேன். போனை எடுத்துப் பேசினாள். எடுத்த உடனே சொல்லாதே. அவள் கேட்கும் மனநிலையில் இருக்கிறாளா அல்லது வேறு வேலையா இருக்கிறாளா என்பதை தெரிந்துக்கொள். ஒரு 5-10 நிமிடம் மொக்கையை போட்டேன். பின்பு அவளிடம் சொன்னேன். உங்கிட்ட ரொம்ப நாளா ஒன்னும் சொல்லனும் சொல்லனும்’னு நினைக்கிறேன். இம்பார்டண்ட் மேட்டர். சொல்லலாமா. இப்ப பேச முடியுமா என்று கேட்டேன். என்ன விஷயம் சொல்லு என்றாள். "நான் எம்.பி.ஏ காலேஜுக்க்கு வருவதற்கு முன்பு எனக்கு இவ்வெண்ணம் தோன்றியது. அப்போழுது இரண்டு வருடம் காத்திருக்க சொல்ல என்னால் முடியவில்லை. பெண் வீட்டிலும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். எங்க வீட்டிலும் பார்க்க துவங்கவில்லை. சரி மேலே படிப்போம். இந்த எண்ணம் வளருதா பார்ப்போம் என்று இருந்தேன். சரி கேட்கலாம்னு தான் நெனச்சு இந்த முடிவுக்கு வந்தேன். (உம்ம்ம் என்றால். அவள் முகத்தில் ஒரு புன்னகையை கண்டேன். நீயா ராஜேஷ்  என்று அவளுக்கு ஒரு எண்ணம் போல) நம்ம இரண்டு பேருக்கும் பல விஷயம் ஒத்துப்போது. we have many things in common. நம்ம இரண்டு பேரும் கல்யாண வாழ்க்கைல சந்தோஷமா இருக்க முடியும்’னு நினைக்குறேன். நீயும் அப்படி நெனச்சா எனக்கு ரொம்ப சந்தோஷம். யோசிச்சு சொல்லு. ஒன்னும் அவசரம் இல்லை. பொறுமையா சொல்லு. எனக்கு புரியுது உனக்கு கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். எனக்கு அப்படி தான் இருந்துச்சு. ரொம்ப நாள் யோசிச்சு தான் நான் கேக்குறேன்".  (பி.கு இதுவரை சொன்னவற்றில் ஒரு 90 சதவிகிதம் சொன்னேன். சில விஷயங்கள் பின்பு தொடர்ந்து பேசும் பொழுது சொல்லி இருப்பேன்) அப்பாடா என்று மூச்சு விட்டேன். 

ஆனால் அவளோ. நான் அப்படி எல்லாம் நினைக்கவில்லை என்றாள். மறுபடியும் (பொதுவாக மிக அதிக படியாக பெண்கள் சொல்லும்)அதே வார்த்தைகளா என்று என் மனம் கன கனத்தது.  (இல்ல நீ இப்ப எதுவும் சொல்லாதே. யோசிச்சு சொல்லு என்று மனதில் நினைத்தேன். வாயும் வந்தது). ஆனால் உடனே சொல்லிவிட்டாள். நீ சொல்லுவது சரி. ஆனால்  எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது. உண்மையை சொல்லி விடுகிறேன் என் வீட்டில் ஒரு விஷயம்(கல்யானம்) முடிவு அடையும் நிலையில் உள்ளது. நான் அந்த பையனிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்று சொன்னாள். அப்படியா. ரொம்ப சந்தோஷம். Happy for you. Wish you good luck என்றேன். எப்ப கல்யாணம் என்று கேட்டேன். அது போய் கொண்டு இருக்கு. கொஞ்சம் இழுவையாதான் இருக்கு. அடுத்த மாசம் ஆகும் என்றாள். என்ன மன்னிச்சுரு. நான் உன்ன ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம். இப்ப என்ன நிலைமைல கல்யாண தேடல் போய்னு இருக்குனு கேட்டு இருக்கலாம். இல்ல ராஜேஷ், நீ கேட்டு இருந்தாலும் சொல்லி இருக்க மாட்டேன் என்றாள். முடியும் வரை சொல்ல வேண்டாம் என்றே சித்தம் (பாடங்கள்) .  உனக்கு தோனிச்சானா எனக்கு தெரியாது. எனக்கு தோனிச்சு கேட்டேன். சாரி என்றேன். பரவா இல்லை ராஜேஷ். அது மிக இயற்கையான ஒரு எண்ணம் ஒரு தவறும் இல்லை. நீ இருக்கும் சந்தர்பத்தில் நானும் இதை தான் செய்வேன். தவறு இல்லை. நீ தவறாகவும் கேட்கவில்லை. நீ நேராக என்னிடம் கேட்டதே நல்ல விஷயம் தான்.  ஒன்னும் தப்பு இல்லை என்றாள். நம்ம நல்ல நண்பர்களா இருப்போம் என்று சொன்னாள். (ஆமா முஸ்தபா முஸ்தபா-வே தான்) கேட்க நல்ல தான் இருந்துச்சு. ஆனா என் மனதிற்கு அது அதிர்ச்சியே (ஆதாவது அவளுக்கு முடியும் தருவாயில் இருந்தது. ஏனெனில் சென்ற மாதம் தான் அவளின் கல்யானத்தேடல் சொதப்பி கொண்டு இருப்பதாக சொன்னாள்). பின்பு அவளின் கதையை கேட்டு கொண்டு இருந்தேன்.   பிறகு ஒரு 15-20 நிமிடத்திற்கு இடையில் ஒரு 5 நிமிடம் ஒன்றுமே நிகழாததுப் போலவே இருவரும் பேசிக்கொண்டு இருந்தோம். அவளிடம் பேசிய பின்பு வாய்விட்டு சிரித்தேன். சிரித்தேன். சிரித்தேன். ஆனா ரொம்ப சந்தோஷப்பட்டேன். அவளுக்கு விரைவாக நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணினேன்.

ஆயிரம் இருந்தாலும் அந்த அளவுக்கு ஒரு பக்குவத்தோட அவ எடுத்துக்குட்டதும் அதுக்கு அப்புறம் அவ பேசினதும் ரொம்ப ஆறுதலா இருந்துச்சு. ஏனா பல பேரு ஏதோ தலைக்கு வந்த தலை வலி தீடீர் என்று இடம் பெயர்ந்து நெஞ்சு வலி வந்தத்து போன்று அவள் பேசுவில்லை. அதுவும் அது இயற்கை என்று சொல்லுவதற்கு வாழ்வின் ஒரு புரிதல் வேண்டும் அல்லவா. ஒரு விதத்துல எனக்கு வருத்தம் (அதன் பின்பு நான் எவ்வளவு தான் நிகழ்ந்ததை நினைத்து வாய்விட்டு சிரித்தாலும் சில உண்மைகள் சிரிது நேரத்திற்கு கொஞ்சம் கசக்கத்தான் செய்யும்) இருப்பினும் பெரிய வருத்தம் இல்லாததிற்கு அவள் அதை எடுத்துக்கொண்டு என்னிடம் பேசிய விதமே காரணம்.  என் எம்.பி.ஏ கம்யூனிகேஷன்ஸ் ஸ்கில்ஸ் வகுப்பில் சொல்லி தந்தது தான் ஞாபகத்துக்கு வருது. எந்த ஒரு தருணத்திலும் நாம் சந்தர்ப்பத்திலும் (situation) சூழலிலும் தான் கவனம் செல்லுத்த வேண்டும். தனி நபர்(people) மீது கவனம் செலுத்தக்கூடாது என்று சொல்லி கொடுத்து உள்ளார்கள். (In difficult situations focus on situation not on people). அதை தானே அவள் அவ்வளவு அழகாக செய்தாள்.

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை!!  
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

அதனால் தான் நினைப்பதெல்லாம் என்று இப்பதிவின் தலைப்பாக வைத்தேன். சொன்னவை யாவுமே நான் இப்பொழுது நினைப்பது. 

இப்பொழுது . . .
என் நெஞ்சுக்குள் முடிந்துவிட்டு
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்