Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

December 11, 2015

நின்னயே ரதி என்று

இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாள்!
பல வருடங்களாக எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் ஒன்று.

நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
I think you are the most beautiful women, Oh Lover (Kannammaa)!
தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் !... கண்ணம்மா!....(நின்னையே!)
I thought you as my friend and surrendered to you Oh Lover(Kannammaa)!

பொன்னயே நிகர்த்த மேனி, நின்னையே நிகர்த்த சாயல்!..
Gold might equal your skin! Nothing to equal you(or only your resemblance can equal you)!
பின்னையே,, நித்ய கன்னியே! கண்ணம்மா!..... (நின்னையே!)
And then you are the young angel! Oh Lover(Kannammaa)

மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ!
The king is showering me with arrows... at that time
கண் பாராயோ! வந்து சேராயோ!... கண்ணம்மா! ...... (நின்னையே!)
Look at me! Reach out to me (to save me)! Oh Lover(Kannammaa)

யாவுமே சுகமினிகோர் ஈசனாம் எனக்கும் தோற்றம்!
Everything is bliss now onwards when united with the God(Lover) is what it appears to me!
மேவுமே!, இங்கு யாவுமே கண்ணம்மா..... (நின்னையே!)
​Love! Love Everything here! Oh Lover (Kannammaa)!

December 07, 2015

தாமதம்

வாழ்வில் முடிவுகளை தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளும் எவ்வளவு கொடியது என்பதை முடிவு எடுத்தப்பின்பு அறிந்துக்கொள்கிறேன். சில சமயம் தாமதத்தின் தாக்கம் தற்செயலில் நம் ஆற்றாமையால் விளங்குகிறது. சில சமயம் முடிவின் முடிவு நல்லவையாக இருக்கும். ஆனால் முடிவிற்கு முன் நாம் தயங்கிய ஒவ்வொரு நாளும் நரகம். இரு விதத்திலும் தாமதம் கொடியதே. இரவு துயிலும் பொழுது உரக்கம் இல்லையென்றால், சிந்தனைகள் தற்செயலில் முழுமனதுடன் குவிக்க முடியவில்லையென்றால் அது துன்பத்திற்கு அறிகுறி. சில முடிவுகளுக்கு மிகபெரிய பரிசுகளை கொடுத்துள்ளேன்.

October 09, 2015

உன் மீது வைத்திருப்பேன்

முன்பு சில பெண்கள் மீது
ஏன் அன்பை வைத்தேனொ
தெரியவில்லை
எல்லா அன்பையும்
உன் மீது வைத்திருப்பேன்
இனி ஒவ்வொருநாளும்
இன்னும் அதீதமாய்
காதல் கொள்வேன் ஹம்சினி

உன்னை காதலிக்கிறேன்
என்று நீ
ஒவ்வொரு முறை
உச்சரிக்கும் போதும்
என் மனம்
கள்வெறிக்கொள்ளுதடி
செல்லமே
உன் அதரத்தில்
பரிசிக்கை செய்வேன்

August 07, 2015

கவிப்ரசங்கி!

உன்னுடன் பழகிய பின்பு
உனக்காக கவியெழுத அமர்ந்தேன்
கவிக்கு கவியெழுதும்
கவிப்ரசங்கியோ நான்
என்று நினைத்தேன்!

July 30, 2015

உருவாய் அருவாய் | முருகர் பாடல்

சில வாரங்களாக முன்பு  முருகபெருமானுக்கு பாடும் இப்பாடலை பற்றி அறிந்தேன். தமிழ்ப்பாடல் ஆயினும் எனக்கு இதன் அக அர்த்தம் விளங்கவில்லை. சற்று நேரடியாக இல்லை. ஜெயமோகனின் வளையத்தில் தற்செயலாக படிக்க நேரிட்டது. எப்படிப்பட்ட வரிகள் இவை என்பதை நீங்களே படித்து தெரிந்துக்  கொள்ளுங்கள்!

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வளையத்தில் இருந்து பொருள் இங்கே 

அதிலும் அருணகிரிநாதர் நுட்பமான சம்ஸ்கிருத தத்துவக் கலைச்சொற்களை தாராளமாகவே பெய்து தன் பாடல்களைப் பாடியிருக்கிறார். இருபெருமொழிகளிலும் ஆழ்ந்த ஞானம் உடைய ஒருவரால் மட்டுமே அந்நூலின் அகம் காணமுடியும், அனுபூதியும் கனியுமென்றால். கந்தரனுபூதியும் அப்படிப்பட்ட நூலே.

நீங்கள் சொன்ன கவிதை இது. பெரும்பாலான சைவர்களுக்குத் தெரிந்த பாடல் இதுவாகவே இருக்கும்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!


மிக எளிமையாக ‘முருகனே நீ வந்து எனக்கு அருள்வாய்’ என்று கூவும் வரிகள் இவை என நம்மில் பலர் சொல்லலாம். ஆனால் இவ்வரிகள் வழியாகச் செல்லும் ஒரு கூர்ந்த மனம் அடையும் பொருள்நிலைகள் முடிவிலாதவை.

முருகனை பரம்பொருளாகக் கண்டுவணங்குகிறது இக்கவிதை. பொதுவாக நம் மரபில் உருவம் கொண்ட எந்த ஒரு தெய்வத்தையும் தோத்திரங்களில் உருவங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட பிரம்ம வடிவமாக, நினைப்புக்கு எட்டாத எல்லையற்ற பரம்பொருளாக உருவகித்துப் பாடுவதே வழக்கம்.

அந்தப் பரம்பொருளின் சித்திரத்தை இக்கவிதை அளிக்கும் விதமே கூர்ந்து கவனிக்கவேண்டியது. ‘உருவமாகவும் அருவமாகவும், மொட்டாகவும் மலராகவும், மணியாகவும் அதன் ஒளியாகவும், கருவாகவும் அதன் உயிராகவும், செயலாகவும் அதன் விதியாகவும் இருப்பவனே நீ குருவாக வந்து அருள்வாய்’ என்று இறைஞ்சுகிறது.

இந்தவரிகளில் அருவமான பரம்பொருள் உருவவடிவம் கொண்டு வருவதன் ஒரு நுண் சித்திரத்தை அருணகிரிநாதர் அளிக்கிறார். இப்பிரபஞ்சவெளியின் சாரமாக உள்ள அலகிலா ஆற்றல், அல்லது இப்பிரபஞ்சத்தின் அடிப்படையாக உள்ள பெருங்கருத்து, அல்லது இப்பிரபஞ்சமேயாக மாறித்தெரியும் அது எவ்வாறு நாமறியும் நூறாயிரம் பொருட்களாக, அவற்றில் நாம் கண்டு வணங்கும் தெய்வங்களாக, உருமாற்றம் கொண்டது? இன்றைய இயற்பியலாளனின் பெருவினாவும் அதுவே என நாம் அறிவோம்.

‘உருவாய் அருவாய்’ என்ற எதிரீடு முதலில் முன்வைக்கப்படுகிறது. நாம் காணும் அனைத்துமே உருவமாக உள்ளன. அவ்வுருவங்கள் அனைத்துமாக தன் இறைவனை உருவகிக்கும் இக்கவிதை பொருள்வயப்பிரபஞ்சமாகவே அவனை முன்னிறுத்துகிறது. அந்தப்பொருள்வயப்பிரபஞ்சம் அல்லாத அருவமான வெளியாகவும் அவனை உருவகிக்கிறது.

உருவம் கொண்ட இறைவடிவமாகவும் உருவமில்லாத இறைவடிவமாகவும் இருப்பவன் எனச் சொல்லிவிட்டு அதன்பின் அதற்கு இணையாக பிற எதிரீடுகளை வைத்துச் செல்கிறது கவிதை. ‘உள்ளதாகவும் இல்லாததாகவும்’ என்பது அடுத்த எதிரீடு. உள்ளது உருவம். இல்லாதது அருவம். உள்ளவை எல்லாம் அவனே. இல்லை என்ற நிலையிலும் அவனே இருக்கிறான். பெருவெளியில் இன்மையும் கூட  ஓர் ஆற்றலாக, பரம்பொருளின் இருப்பாக ஆகலாம். அது இல்லாமல் இருக்கும்நிலைகூட அதுவே!

அடுத்த எதிரீடு எளிய உவமை. ‘மொட்டாகவும் மலராகவும்’ என்ற வரி இந்திய வேதாந்த மரபை உணர்ந்தவர்களுக்கு ஒரு ஆச்சரியத்தை அளிக்கும். ‘பரம்பொருள் அருவ நிலையில் இருந்து உருவமாகி வருகிறது’ என்பதே வேதாந்த தரிசனம். அருவநிலையே உண்மையானது, உருவநிலை அந்த அருவநிலை உருவாக்கும் ஒரு மாயத்தோற்றமே என அத்வைதம் வாதிடும்.

ஆனால் இந்த வரி உருவப்பிரபஞ்சத்தை முதல்நிலை உண்மையாக முன்வைத்து அதன் நுண்வடிவமாக அருவநிலையை உருவகித்துக்காட்டுகிறது.  உருவத்துக்கு மொட்டும் அருவத்துக்கு மலரும் உவமையாக ஆக்கப்பட்டிருக்கிறது. உருவம் கொண்டு நம் முன் நிற்கும் இந்த பெருவெளி என்ற மொட்டு மலர்ந்த நிலையே உருவமிலா பரம்பொருள் என்று சொல்லப்பட்டிருக்கிறது!

அடுத்த எதிரீடு இன்னொரு உவமைமூலம் அதையே மேலும் வலியுறுத்துகிறது. ‘மணியாகவும்  ஒளியாகவும்’. இந்த பருப்பிரபஞ்சம் மாணிக்கம் என்றால் அதன் ஒளிதான் அலகிலாத ஆற்றலாக விரிந்த பரவெளி. அருவம் என்பது உருவமாகி நிற்பவற்றின் சாரமாக உறையும் ஒளியே என்கிறது இந்த உவமை!

மேலும் வலியுறுத்துகிறது அடுத்த எதிரீடு. ‘கருவாகவும் உயிராகவும்’ கரு என்று இந்த பொருள்வயப்பிரபஞ்சமே சொல்லப்படுகிறது. அந்தக் கருவுக்குள் உள்ள உயிரே ஆற்றல்பிரபஞ்சம் அல்லது அருவ வெளி!

கடைசி எதிரீடு பௌத்த தரிசனத்துடன் தொடர்புடையது. பௌத்தம் இப் பொருள்வயப்பிரபஞ்சம் என்பது ஒரு முடிவிலா நிகழ்வே என்று வகுக்கிறது. இந்நிகழ்வின் இயங்குவிதியாக உள்ளதே பேரறம் அல்லது மகாதர்மம்.  ‘கதியாகவும் விதியாகவும்’ என்ற வரி அதையே சுட்டுகிறது. கதி என்றால் நிகழ்வு. அந்நிகழ்வாகவும் அதன் விதியாகவும் முருகனை உருவகிக்கிறது இவ்வரி.

எதிரீடுகளின் வரிசையை வைத்துப் பார்த்தால் உருவமாக, உள்ளதாக, மொட்டாக, மாணிக்கமாக, கருவாக சொல்லப்பட்ட பொருள்பிரபஞ்சத்தையே கதி என்று சொல்கிறார் அருணகிரிநாதர். இப்பருப்பிரபஞ்சம் ஒரு கதி [இயக்கமுறை] மட்டுமென்றால் அதன் சாரம் அதன் விதி. அந்த விதியே அருவம், இன்மைநிலை, மலர் , ஒளி, உயிர்… இரண்டும் அவனே என்று சொல்கிறது.

கடைசி வரி மிக இனிய ஒரு முடிச்சுடன் முடிகிறது. ‘குருவாய் வருக’ என்று முருகனை அழைக்கிறது அது. குரு என்பது இங்கே உருவமாக, உள்ளதாக, மொட்டாக, மாணிக்கமாக, கருவாக சொல்லப்பட்ட முதல்நிலையின் இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் அருவம், இன்மை, மலர் , ஒளி, உயிர் எனச் சொல்லப்பட்ட இரண்டம்நிலையில் இருப்பது எது?

மொட்டு மலராவதுபோல, மணியில் ஒளி பிறப்பதுபோல, கருவில் உயிர் நிகழ்வது போல குருவின் விளைவாக உள்ளது ஞானமே. அனுபூதியே உயர் ஞானம். குருவாக முருகன் வந்தால் ஞானமுமாக அவனே நிற்பான் என உரைக்கிறது பாடல். குருவாய் வருக என்ற அழைப்பு அவ்வகையில் மேலும் முன்னகர்ந்து ஞானமுமாக வருக என முடிகிறது.

இவ்வரிகள் கந்தரனுபூதியின் கடைசிப் பாடல். இவ்வரிகளில் இருந்து பின்னால்நகர்ந்து முன்னாலுள்ள வரிகளை எட்டினால் பல வரிகளின் ஆழமும் தீவிரமும் நம்மை திகைக்கச் செய்யும்.

‘தன்னந் தனி நிற்பது தானறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ’

என்ற வரி ஓர் உதாரணம். வேதங்கள் முடிவிலா பரவெளியின் ஈடிணையற்ற தனிமையை பாடுகின்றன. அது அல்லாமல் வேறொன்றுமில்லை என்ற நிலையின் தனிமை. பரம்பொருளின் தனிமை. அந்த எல்லையற்ற தன்னந்தனிப்பொருள் தன்னை இன்னொருவருக்கு எப்படி அறிவுறுத்த இயலும்?

அவ்வினாவுக்கு விடையாகவே குருவாக வருக என்ற அழைப்பு. குருவாகி அது வருகையில் ஞானத்தின் அனுபூதி அதன் விளைவாக நிகழ்ந்தாகவேண்டும் அல்லவா?

கந்தரனுபூதி சைவசித்தாந்தத்தில் கிளைத்த நூல். ஆகவேதான் அது வேதாந்த மரபைப்போல உருவத்தை நிராகரிக்கவில்லை. பருப்பிரபஞ்சமும் அதற்கு ஓர் உண்மையே. அது மாயத்தோற்றம் அல்ல. மாயை என்பது அதை முழுதுணராது மயங்கும் நமது குறைநிலையே. பருப்பிரபஞ்சத்தை அல்லது உருவத்தை முதல் நிலையாக்கி அதில் இருந்து அதன் நுண்நிலையாக பரவெளியை அல்லது அருவத்தைக் கண்டு முன்வைக்கிறது இப்பாடல்.

ஆனால் இந்தியமெய்ஞான மரபுகள் அனைத்துமே உச்சநிலையில் ‘ஆற்றல் X ஜடம்’ அல்லது ‘உருவம் X அருவம்’ என்னும் எதிரீடுகளை தாண்டிய ஒருமையையே முன்னைக்கின்றன. அதையே பாம்பொருள்த்தன்மையாக காட்டுகின்றன. மேலும் பின்னால் சென்றால் இன்னொரு வரியில் அதைக் காணலாம்

அறிவு ஒன்று அற நின்று அறிவார் அறிவில்
பிறிவொன்று அற நின்ற பிரான் அல்லையோ?

‘அறிவு என்ற ஒன்று அழியும் நிலையில் நின்று அறிபவர்களின் அறிவில் பிறிது என்ற ஒன்றே அழியும்படியாக நின்ற பிரான் அல்லவா நீ?’ அறிவின் உச்சம் என்பது அறிகிறேன் என்னும் நிலை இல்லாமலாதல். அறிவுடன் அறிபவனும் ஒன்றாதல். அந்நிலையில் நின்று அறிபவர் நெஞ்சில் அவர்களில் இருந்து பிறிதாக அல்லாமல் நிற்கும் அதுவே அவன் என்கிறார் அருணகிரிநாதர். அனுபூதி என்பது அந்நிலையே.

July 27, 2015

செவியோடு பேசியவள்

செவியோடு பேசியவள்
கவியேழுத வைத்தாள்
போகட்டுமா'னு கேட்டவள்
எதற்காக காத்திருந்தாள் ?
திங்கள்விதி சமைத்தவளின்
நினைவுகள் எனக்கு
திஞ்சுவை மீட்சியரிதாதல்

July 25, 2015

சின்சின்னாடி | Cincinnati

நேற்று 24-ஜூலை 2015 அன்று எனக்கு பிடித்த பாடகி ஷ்ரேயா கோஷல் அவர்களின் கச்சேரியினை காணச்சென்றேன். அது மட்டும் இன்றி நண்பன் ஜூட் சத்யனும் வந்தான். நான் ஃபஸ்புகில் ஒருவரிடம் டிக்கேட்டை வாங்கினேன்.  நாங்கள் சரியாக ஒரு வருடம் பின்பு பார்த்துக்கொண்டோம்.  

ஷ்ரேயா கோஷலின் பாடல்கள் அவ்வளவு இனிமை. அவர்களின் குரலும் தேன் சொட்டும் மதுரம். ஒலி பொறியாளர் குரலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசையை குறைத்துவிட்டார். நல்லாதாய் போயிற்று. ஆனால் ஷ்ரேயா கோஷலின் குரல் அவ்வரங்கத்தையே நிறைத்தது. சிலசமயம் இசை இல்லாமல் பாடல் மட்டும் பாடினார்கள். அவை அனைத்தும் அப்படி ஒரு மதுரம். அவர்களின் குரலில் லயித்து போனேன்.  அவர்கள் குரல் இந்நூற்றாண்டு முழுதும் ஒலிக்கட்டும். அதற்கான அனைத்து ஆரோக்கியத்தையும் இறைவன் அவர்களுக்கு அருள் வேண்டும். 

  

ஷ்ரேயா கோஷல் அவர்கள் பாடிய பாடல்கள் இதோ

1) Bahara - I hate luv story
2) Agar Tum Mil Jao - Zeher
3) Oh Saathi Re - Omkara
4) Saans - Jab Tak Hai Jaan
5) Manwa Laage  - Happy New Year
6) Samjhawan - Humpty Sharma ki Dulhania
7) Journey - Piku
8) Piya O Re Piya - Tere Naal Love Ho Gaya
9) Dheere Dheere (Saibo) - Shor in the City
10) Munbe Vaa - Silunnu Oru Kaadhal
11) Aashiyan - Barfi
12) Barso re - Guru
13) Yeh Ishq Hai - Jab we met
14) Zoobi Doobi - 3 Idiots
15) Ooh La La - Dirty Picture
16) Radha - Student of the year
17) Chinki Chameli - Agneepath
18) Teri Meri - Bodyguard
19) Tujh Mein Rab - Rab Ne Bana Di Jodi
20) Teri Ore - Singh is King
21) Vintunnaavvaa - Ye Maaya Chesaave [Mannippaaya - Vinnaithaadi varuvaayaa]
22) Lag Ja Gale
23) Jaadu Hai Nasha Hai - Jism
24) Raabta - Agent Vinod
25) Bairi Piya - Dev Das
26) Mere Dholna - Bhool Bhulaiyaa
27) Nagada Sang Dhol - Ram Leela
28) Sun Raha - Aashiqui 2





 (Shreya Ghoshal on the stage)

Jude (Right) and I (Left)

ஹம்சாவிற்கு பிடித்த ஷ்ரேயா கோஷலின் பாடல்கள் இதோ
1) Bahara - I hate love stories
2) Sathiya Sathiya - Singam
3) Samjhawan - Humpty Sharma Ki Dulhaniya
4) Tujh me rab dikta hai - Rab ne bana di jodi
5) Jhalla Wallah - Ishqzade
6) Mein Agar Kahoon - Om Shanthi Om
7) Piyu Bole - Parineeta
8) Khabar Nahi - Dostana

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் அவர்கள் பாடிய 30 பாடல்களில் (28 ஹிந்தி) 18 பாடல்கள் குறைந்த பட்ச பரிட்சயம் உண்டு எனக்கு. மனதுக்கு நிறைவான நாளாக அமைந்தது. கச்சேரி முடிந்த உடன் ஸ்டேஜ் டோர்க்கு சென்று ஷ்ரேயா கோஷலுடன் ஒரு புகைப்படம் எடுக்க 45 நிமிடம் காத்திருந்தோம். ஆனால் அவர்கள் எப்போழுதோ கச்சேரி முடிந்த உடன் அவழியாக கிளம்பிவிட்டார்கள் என்று தாமதமாகவே தெரிந்தது. சற்று வருத்தமே. பின்பு மோட்டலுக்கு வந்து உறங்கினோம். 






சனிக்கிழமை காலை எழுந்து சிறிது நேரம் தோழி ப்ரசன்ன தேவியுடன் கூகுல் ஹங்கொட்-இல் ஜூடும் நானும் உரையாடிக்கொண்டு இருந்தோம். பி.டி வேறு ராஜேஷ் நீ ரொம்ப அழகா தெரியர. இந்த மாதிரிலான் நான் உன்கிட்ட சொன்னதே கிடையாது தோன்னதும் கிடையாது. உன்கிட்ட ஒரு பெரிய மாற்றம் இருக்குனு. பிறகு என்னை பற்றியும் ஜூடை பற்றியும் எங்களது வாழ்வில் நடக்க இருக்க போகும் மாற்றங்களை பற்றியும் நகைத்து உரக்க வெடித்து சிரித்து உரையாடிக்கொண்டு இருந்தோம். ஒரு 30 நிமிடம் மிக நன்றாய் சென்று கொண்டு இருந்தது பேச்சு. குறைந்தது இன்னும் ஒரு 30 நிமிடம் சென்று இருக்க கூடியது. ஆனால்  நாங்கள் மோட்டலை 11 மணிக்கு காலி செய்ய வேண்டிய கட்டாயம்.  பின்பு ஒரு இடத்தில் மதிய உணவு உண்டோம். அதன் பின் ஒரு ஹிந்து கோயிலுக்கு சென்றோம். கோயில் உள்ளே மிக அழகாய் இருந்தது. நிறைவாகவும் இருந்தது. பின்பும் நானும் ஜூட்டும் எனக்கு வேண்டியவரிடம் பேசிக்கொண்டு இருந்தோம். துவக்கத்திலையே அனிமேஷன் அக்‌ஷன் (x-men, wolverine, superman, batman) அது இதுனு பேசி பனியை உடைத்து(ice break) நன்கு பேசினோம்.  சுமார் 90 நிமிடம் பேசினோம். அவர்கள் இருவருமே மிக நன்றாய் பேசினார்கள். புதியவர்கள் பேசிக்கொள்ளுவது போல இல்லை. 

அதன் பின்பு Ant Man(எறும்பு மனிதன்) திரைப்படம் பார்த்தோம் நானும் ஜூடும். வழக்கமான உலகத்தை காப்பாற்றும் ஒரு கதைக்களம். நல்ல படம்.  ஓ ஓ என்று எல்லாம் சொல்லக்கூடாது. ஆனால் Evangeline Lilly சூப்பரோ சூப்பர். அதுவும் அவளின் சிகை அலங்காரம் அவ்வளவு நேர்த்தி!

ஆக இன்று (24,25 July 2015) மிக நன்றாய் சென்றது!! 

 

 Evangeline Lilly

 

July 21, 2015

மௌனம்

பார்க்காத விழிகள்
இதயம்போல் துடித்தது
வாட்ஸ்ஆப்-குறைத்த  விரல்கள்
விச்சித்திரமாய் சொடுக்கியது
பேசாத மௌனம்
பெருக்கியது நேசத்தை


(கண் 8-10 முறைதான் துடிக்கும். இதயம் 72 முறை துடிக்கும்)
(சொடுகர்தே மறந்து போச்சாம்)
19-ஜூலை 

July 16, 2015

ஞாயிறு உன் நெற்றியில்

பதுமையை பார்த்து
ஞாயிறு நெற்றியில்
குடிக் கொண்டதோ
பொற்கதிர்கள்
சுற்றி வீசுகிறதே
அதை காண்கையில்
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே!
 

July 15, 2015

மெல்லிசை

உன்னோடு பேசுவதால்
மெல்லிசை பாடல்கள்
தேவையில்லை எனக்கு
அதனால் கேட்பதில்லை
இருவாரம் பின்பு
உணர்ந்தேன் நான்
 

July 02, 2015

மனத்தடை

நீயில்லாத இரவும் பகலும் பொழுதில்லை
உன்னுடன் வாழ தடையில்லை
ஆனால் காலம் செய்யும் அலைக்கழிப்பால்
மனத்தடை வருகிறதே  உன்னுடன் பேச
பேசாமலிருக்க முடியாதென்பது உனக்குத் தெரியும்
என்பதே ஆறுதல் எனக்கு
உன்னுடன் கொஞ்சம் என்று பேச

June 30, 2015

அலைக்கழிக்கப்பு | நான்கு வேடங்கள்

நான் சமீப காலங்களில் படித்த கட்டுரைகளில் முக்கியமான கட்டுரை இது. இலக்கிய உலகில் வரும் பெரும்பாலானோர் சிக்கித்தவித்து அலைக்கழிக்கப்படும் மனநிலைக்கு காரணம் என்னவென்று எழுத்தாளர் ஜெயமோகன் தர்க்க பூர்வமாக விளக்குகிறார்!

மூலம் :  (கீழ்காணும் தலைப்புகளை/ சுட்டிகளை தட்டவும்)
தன்வழிகள்

நான்கு வேடங்கள்

எழுதலின் விதிகள்

இரண்டு முகம்

தேடியவர்களிடம் எஞ்சுவது

தன்னறம்

தன்வழிச்சேரல்

பதுங்குதல்

ஒருமரம்,மூன்று உயிர்கள்

செயலின்மையின் இனிய மது

தன்னறத்தின் எல்லைகள்

தன்னறமும் தனிவாழ்வும்-கடிதம்

விதிசமைப்பவர்கள்

சராசரி

விதிசமைப்பவனின் தினங்கள்

தேர்வு செய்யப்பட்ட சிலர்


படிமங்கள்

பல்லாயிரம் முறை நான் உணர்ந்து பாடிய வாசித்த வரிகள் இன்று புதியதாய் தோன்றுகிறது. வாழ்க்கையில் இதற்கு முன்பும் நான் இது போல் நினைத்ததுண்டு. எங்கெங்கு காணினும் படிமங்கள்! 

June 29, 2015

இவள் இன்னருள் வேண்டுமடா!

பாரதியாரின் வரிகளே என் நெஞ்சினில் ஓடிக் கொண்டு இருக்கின்றது.