இன்று ஞாயிறுக்கிழமை 30-3-2013 மாலை 7 மணியளவில். பெட்ரோல் நிரப்ப புதுவையில் உள்ள அட்லேயர் பெட்ரோல் வங்கியிற்குச் சென்றேன். ரூ.500 கொடுத்தேன். 3L பெட்ரோல் ரூ.220 90mL என்ஜின் எண்ணை ரூ.20 என்று ரூ.240 ஆயிற்று. பெட்ரோல் நிரப்புபவர் மீதி சில்லரை என்று கொடுத்தார். வாங்கிக்கொண்டு சற்று நகர்ந்தேன். என் முன்பு இடதுப் பக்கத்தில் வண்டி டயருக்கு காற்று நிரப்ப நான்குப் பேர் வரிசையில் இருந்தனர். நானும் காற்று நிரப்பி பல வாரங்கள் ஆகிவிட்டது என்று நின்றேன். நான்கு பேருக்கு காத்திருக்க சற்று பொறுமையும் இல்லை எனக்கு. இருப்பினும் மனதை சற்று கட்டுப்படுத்தி வண்டிக்கு அடிச்சி பல ஆச்சு, இதுல ஒரு அதிகபட்சம் அஞ்சு நிமிடம் தான் ஆகும். பரவாயில்லை. நம்ம ஒன்னும் வெட்டி முறிக்க போகவில்லை என்று காத்து இருந்தேன். ஒரு இரண்டு நிமிடம் பிறகு என்னிடம் ஒரு பெட்ரோல் பங்கு ஊழியர் (வேறு ஒருவர்) வந்து பேசினார். நீங்க எவ்ளோ காசு கொடுத்தீங்க ? ரூ.500 என்றேன். எனக்கு உடனே பளார் என்று மூஞ்சில் அடித்ததுப் போல் ஒரு எண்ணம். ஆமாம். நான் ரூ.260 வாங்க வேண்டிய இடத்தில் ரூ.60 வாங்கி விட்டு வந்து இருக்கிறேன். அவர் எனக்கு ரூ.200 தந்துவிட்டு சென்றார். அங்கேயே தலையில் கை வைத்து சிந்தித்தேன்.
இதில் இரண்டு அம்சங்களை நோக்க வேண்டும்
1) இன்றும் அறம் சார்ந்து நிறுவனங்கள் இயங்குகின்றன. என் நேரம் நான் அஞ்சு நிமிடன் நின்றதனால் எனக்கு ரூ.200 கிடைத்தது என்பதை காட்டிலும், அவர் வந்து எனக்கு ரூ.200 தனைத் தேடி வந்துக் கொடுத்த அறவுணர்ச்சியைப் பாராட்டாமலும், நெகிழாமலும், கற்காமாலும் இருக்க இயலாது. இதைப் போன்ற தருணங்கள் தான் வாழ்வில் அறம் சார்ந்து இருக்க வேண்டும் என்ற வேரிற்கு நீரூற்றிக்கொண்டே இருக்கின்றது. அறம் வாழ்க!
2) நான் எவ்வளவு அலட்சியமாய் இருந்து உள்ளேன் என்பதை நான் திரும்பிப்பார்க்காமல் இருக்க முடியாது. இதற்கு என்ன காரணம் ? பர்சில் காசு இருக்கா? மறதியா ? கவனகுறைவா ? வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என்கிற அவசரமா ? இவையெல்லாம் சேர்ந்த ஒரு அமைதியின்மையா ? என்னை நானே கேட்டுகொள்கிறேன். எல்லாமே தான் என்று தோன்றுகிறது. (பின்பு. அம்மாவிடம் சொன்னேன். அம்மா சொன்னார்கள், பெட்ரோல் வங்கியில் பெட்ரோல் போட்டு விட்டு தான் காசு கொடுக்க வேண்டும். இது பெட்ரோல் வங்கியிற்கு மட்டும் அல்ல)
ஒவ்வொரு ரூபாயும் இந்த தருணத்தில், அதுவும் கல்லூரிக்கு செல்லும் போது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நிகழ்வு எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. அடுத்த மூன்று மாதங்களும், அதன் பின்பும் வாழ்க்கையில் நாம் எவ்வளவு சிக்கனமாகவும், கவனமாகவும், பொறுமையாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பது உறுதிப்பட தெரிகிறது.
No comments:
Post a Comment