18 Feb 2024 - 4:45am Regina
என் கனவுலகில் என் அன்பிற்கு உரியவள் வந்தாள். நாங்கள் இருந்தது பூங்காக்களும் விளையாட்டிடங்களும் கொண்ட பலர் கூடும் ஒரு வளாகம் போன்ற கட்டிடம். கட்டிடத்திற்கு சாம்பல் வண்ண பூச்சு இருக்கலாம்.
நான் அவள் மேல் உள்ளார்ந்த அன்பை எப்பொழுதும் கொண்டு இருந்தேன். அன்பென அன்பு. பிரேமை.
அவளை அக்கோலத்தில் அன்று காண்கையில் என் உள்ளம் உடைந்து உள்ளாரா அமைதியாக விம்மியது யாராவது நோக்கிவிடுவாரோ என்று கைகளை அசைத்துக்கொண்டு அத்தருணைத்தை கடந்தேன். அவளுக்கும் எனக்கும் 100 வித்தியாசங்கள் இருக்கும். ஆனால் அவ்வித்தியாசங்களே அவளை எனக்கு மேலும் மனதுக்கு நெருக்கமானது. அந்த ஊடலில் நான் தோற்கவும் தயந்தியதில்லை ஆனால் வெள்ளவே போராடுவேன். அந்த அனல் பறக்கும் வாதம் நீள்நேரம் தொடரவே விரும்புவேன். அதன் இறுதியில் இருவரும் அவரவர் நிலைப்பாட்டை மேலும் திடமாக்கிக்கொண்டு அதில் நிற்பதை இருவருமே வெற்றியென கொள்வோம். அப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான பிணக்குகளே என்னை அவளிடம் ப்ரேமைக்கொள்ள செய்ததா தெரியவில்லை.
அவளுக்கு என்மேல் மதிப்பா பரிவா என்று கூட தெரியாது. உள்ளாரா ஒரு அன்பு. பிரேமையாக இருக்க வாய்ப்புகள் மிகமிக குறைவு. எங்கள் தீவிர பிணக்குகள் கூட காரணம் இருக்கலாம். ஆனால் அத்தீவிர பிணக்குகள் பின்னால் ஓர் ஸ்னேகம்.
நான் இது பிரேமையாக இருக்க வாய்ப்பு இல்லை. அதற்கான சாத்தியங்கள் இல்லையே என்று மனதுக்குள் கூறிக்கொண்டு வந்துள்ளேன். ஆனால் இன்னொருத்தியின் மீது அவா எப்பொழுதும் உண்டு. சமீப காலங்களில் அது இன்னும் அதிகம். ப்ரேமை என்றே நினைத்தேன். ஆனால் சுக்ரர் கசன் கதையை படித்த பொழுது அவ்வுறவின் ப்ரேமை ஏன் என புரிந்தது. ஆனாலும் அவள் என்ற இவள் மீது ஒன்றும் விஷேஷ கவனம் ஏதும் இல்லை. ஏனேனில் அது சாத்தியமில்லை என்று நினைத்தேன். ஏனெனில் எங்கள் அக உலகங்களே வேறு வேறாக இருப்பதாகவே நினைத்துவந்தேன்.
நேற்று அதாவது 17 பிப்ரவரி 2024 அன்று சில பல சம்பவங்கள் 1) கடந்த 4-5 நாட்களாக நளன் தமயந்தி கல்யாணம் வரையிலான கதை வாசித்துக்கொண்டு வந்தேன். அதுவும் முதல் நிலவிரவு வரை. 2) எனக்கு மிக பிடித்த wolf of wall street இல் we're not gonna be friendச் வசனத்தை பார்த்தேன் 3) 96 படத்தை பற்றிய ஒரு நினைவு பதிவைப் பார்த்தேன். 4) நடிகர் அர்ஜுன் (மற்றும் நடிகை ரஞ்சிதா) நடித்த, கர்ணா திரைப்படத்தில் வந்த, பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியன் எஸ்.ஜானகி குரல்களில் பதிவுசெய்யப்பட்ட, வித்யாசாகர் இசையில் அமைந்த, மலரே மௌனமா பாடலை, விஜய் டிவி யின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், பாடகர்கள் மனோவும் அனுராதாவும், மிகவும் ரசித்து பாடினார்கள். அவர்கள் குறிப்பிட்ட இந்த வரிகளை பாடினார்கள் “ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே விரல்கள் தொடவா விருந்தை பெறவா மார்போடு கண்கள் மூடவா”. எனக்கு எப்பவும் பிடித்த வரிகள் இவை. காமன் அம்புகள் மனதை தைக்கும் வரிகள். மார்பின் மீது கண்கள் வைத்து உறங்க அவள் மீது எத்தனை ப்ரேமை இருக்க வேண்டும். அந்த உன்னதம் வார்த்தைகளால் வடித்ததே அழகு. அதை மதுரமான இசையில் பாடியது சுகானுபவம். இவையெல்லாம் என் ஆழ் மனதை பாதித்ததா என்று தெரியவில்லை.
ஆனால் இன்று 18 பிப்ரவரி 2024 காலையில் என் கனவுலகில் முதலில் சொன்னப்படி ஒரு கட்டிடத்தில் சஞ்சரித்துக்கொண்டு இருக்கையில். அவளை ஒரு நடைக்குடத்தில் (corridor) இல் சந்திக்கிறேன். அவளிடம் நேரடியாக சென்று நான் நீ சொன்ன சவாலை செய்துமுடித்துவிட்டேன். அவளுக்கு பரம சந்தோஷம். பார். உன்னால் முடியும். அவ்ளோதானே என்பதுப்போல் என்னை உள்ளார அணைத்துக்கொண்டாள். அவள் அதற்குமுன் என்னை அணைத்துள்ளாளா என்ற நினைவே இல்லை எனக்கு. ஆனால், அவளை நான் இறுகப்பற்றினேன். [என் மகளை இருக்கைகளாலும் தழுவி இறுக்கி அணைப்படுத்துப்போல. (இன்னும் கொஞ்ச வருடங்கள் தான் உன்னை இப்படி இறுக்கி அணைக்கமுடியும் என்பதுபோல).] அவளை இறுகப்பற்றியது ஒரு சில நொடிகள் கூட இருக்காது. ஆனால் அதுப்போல் அவள் தோள் மேல் என் கைகள் படர எங்கள் உடல்கள் அப்படி ஒட்டும் என்று நான் நினைத்தது இல்லை. அந்நேரம் பார்த்து வேறு ஏங்கோ இருந்து அவளுக்கு ஒரு அழைப்பு வருகிறது. சரி ராஜேஷ். நான் போனும் என்கிறாள். ஆனால், நான் அவள் கைகளின் மணிக்கட்டை இறுகப்பிடித்து ஏங்கே போற? என்பதுபோல் கேட்டேன். அவள் புன்னகைத்து, நான் கிளம்பனும் என்கிறாள்.
அவளுக்கு தெரியும் அவள் செல்வது தான் உசித்தம் என்று. சரி, சவாலை வென்றால் தருகிறேன் என்றாயே. தந்துவிட்டுப்போ என்கிறேன். அவளுக்கு அப்போது தெரியும் அது வேறும் ஒரு உந்துசக்திக்காக சொல்லபட்ட வார்த்தைகள் அல்ல என்று. ஆனால் அது இவ்வளவு விரைவாக வரும் என்று நினைக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பம் அமையும் என்று நினைக்கவில்லை. இல்ல ராஜேஷ். நான் கிளம்பனும் என்கிறாள். யாராவது பார்த்துவிட போகிறார்கள். உனக்கு கண்டிப்பா வேணுமா என்று கேட்டாள். தவறு என்றோ, நான் விளையாட்டாக சொன்னேன் என்றோ கூட சொல்லவில்லை. அவள் தயங்குகிறாள் என்று எனக்குப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை கடக்க நினைக்கிறாள். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறாளோ என்று தெரியவில்லை. ஆனால் இதுபோல் ஒரு தருணத்தை அத்தருணத்தின் ஓட்டத்திலேயே அதன் போக்கிலே சென்றால் தான் உண்டு. பிறகு என்று ஒத்திப்போட்டால் அது செயற்கையாக இருக்கும் என்று எண்ணினேனோ என்று தெரியாது. ஆனால் இச்சவாலை செய்து முடித்ததற்கு பரிசாக அவள் கூறியதின் பின்னில் உள்ள ப்ரேமையை உணர்ந்துக்கொண்டு இருந்த தருணம், அவளை சுவரின் ஓரமாக தள்ளி அவளை ஆரத்தழுவி வாயோடு வாய் வைத்து இதழ்கள் பரிமார முத்தமிட்டேன். இருவரும் பிரிதொன்றாக இல்லாமல் ஒன்றாய் உணர்ந்த தருணம். இச்சிறுகாலத்துளியை எவ்வளவு நீட்டிக்கமுடியுமோ அவ்வளவு நீட்டிக்கவேண்டும் என்று எல்லாம் நினையாமல் அத்தருணைத்தை அத்தருணத்தின் அமுதத்தை பருகினோம். இருவரும் மீச்சிறு துளி கூட தவறவிடக்கூடாது என்று இருந்தோம் என்று படுகிறது. ஆனால் அந்நிலையில் மனிதன் ஒழுக்கம் ஒழுங்கீனம் என்று தன்னை செயற்கையாக்கிகொள்ளும் அனைத்திலிருந்தும் இருவரும் விடுபட்டு இயற்கை படைத்த விலங்குகளாய இருந்தோம் எனலாம். இயற்கைக்கு மிக அருகில். எங்களை சுற்றி அந்த இயற்கை மட்டுமே இருந்தது. எந்த நியாய தராசுகளும் இல்லை மதிப்பீட்டுகளும் இல்லை.
ஆனால் காலம் நம்மீது அவ்வளவு அன்புக்கொண்டது அல்ல. ஒரு நொடி இருவரும் - போதும். இது போதும். இது போதும் வாழ்நாளிற்கு! என்பது போல் எங்களை நாங்களே விலக்கினோம். அவள் கண்ணங்களில் கைவைத்து என் கண்களில் நீர் கசிய, thank you, thank you so much என்று அவள் கண்ணத்தில் முத்துமிட்டு விலகினேன். சரி பட்டா போட்டாச்சுல என்பதுபோல அவள் பார்வையும் உடல்மொழியும். okay. கிளம்பு ராஜேஷ். போதும் என்று என்னை அவள் வழி அனுப்பிவைத்தாள். அந்த நொடி “அவள் மார்பில் கண்கள் மூடி” உறங்கிய ஒரு உன்மத்தத்தை அடைந்தேன் எனலாம். அவளுக்கும் என்னை முத்தமிட்டதில் ஒரு உன்மத்தம் என்றே நான் உணர்ந்தேன் ஏனெனில் அம்முத்தத்தில் ஒரு சிறு பிசிறு விலக்கமும் அவளிடம் இல்லை.
எங்களுக்குள் இப்படி ஒரு காதலா என்றே நாங்கள் இருவரும் இம்முத்தத்திற்கு பிறகு உணர்ந்தோம் எனலாம். ஏன் இதை சொல்லிக்கொண்டதுக்கூட இல்லை என்றே தோன்றுகிறது. உள்ளங்களுக்கு கண்கள் தெரியவில்லை? மூளைக்கு சொற்கள் சிக்கவில்லையா? தெரியவில்லை.
எனக்கு அராத்து, சாரு போன்றோரை வாசித்ததில் பெற்ற நற்பேறாகவே இதை கருதுகிறேன். ஏனெனில் இது மிகவும் இயற்கையான விஷயம். இருவர் அன்பை பரிமாறிக்கொள்ள முத்தம் எவ்வளவு அழகான இயற்கையான விஷயம். அதுவும் அழகாக அமையும் பொழுது அது மேலும் அழகாகிறது. அந்நாளையே அழகாக்குகிறது. அவ்வுறவை மேலும் அழகாக்குகிறது. இது எப்படிப்பட்ட உறவு என்ற ஐயங்கள் இப்போது இல்லை. ஒழுக்கம் ஒழுங்கீனம் என்ற குழப்பங்கள் இல்லை. வருத்தங்கள் இல்லை. இவ்வுறவு முத்தத்தோடு கனிந்தது என்றே சொல்லாம்.
what a dream. thank you dream என்றே சொல்லுவேன். உன்னால் தான் இந்த அனுபவம்.
Fyodor Dostoevsky போல் இந்த சிறு தருணத்தை ஒரு 50 பக்கத்திற்குக்கூட எழுதலாம். பல வருட wine ஐ சிறுக சிறுக உண்ணுவதுபோல் திளைக்கலாம். இப்போது யோசித்தால், 96 படத்தில் கற்பனையில் கல்லூரி நாட்களில் ஜானுவும் ராமும் சேர்வது போன்ற ஒரு Happy Ending ஆக தோன்றுகிறது. ஆனால் அதுவும் ஒரு நிறைவுதானே. இல்லையேல் என்றுமே சொல்லபடாத தட்டையான பேர் கொண்ட உறவாகவே இருந்து இருக்கும்.