நேற்று ஒரு துக்க செய்தி ஒன்று வந்தது. அது அதிர்ச்சியாக இல்லை. ஏனெனில் அது 1-2 வருடங்கள் முன் அதன் ஓசையை அடித்திருந்தது. எனது பள்ளிக் கல்லூரிகாலங்களில் என்னுடன் ட்யூஷ்ன்களிலும் கல்லூரியிலும் உடன் படித்த ஒரு தோழியின் கணவர் வயிற்று புற்றுநோயால் இறந்துவிட்டார். அவளுக்கு அப்படி ஆகியிருக்க வேண்டாம்.
வாழ்க்கை எவ்வளவு குரூரமானது. யார் வாழ்வை எப்படி திருப்பிப்போடும் என்றும் சொல்ல முடியாது. இதனை பார்த்து நாம் நமது வாழ்விற்கு நன்றியோடு இருப்பதா என்றால் இல்லை என்றே சொல்லவேன். ஏனெனில் பிறரின் கஷ்டத்தில் நாம் பரவாயில்லை என்று நினைப்பது எவ்வளவு கேவலம். எனக்கு நான் எனது வாழ்வில் என்ன செய்துக்கொண்டு இருக்கிறேன் என்ற கேள்வி தான் பிரதானமாக வருகிறது. நாம் இழப்பு சோகம் என்று நினைப்பதெல்லாம் உண்மையில் இழப்போ சோகமோ இல்லை. இறைவன் சிலருக்கு வாழ்வில் ஒரு தூணையே துணையையே பறித்திருக்கிறான். வாழ்வில் சடார் என்று பலூவை கூட்டி இருக்கிறான்.
வாழ்வில் இன்னி ஒவ்வொன்றும் அவளுக்கு வேறு. முன்பு போல் இல்லை. ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு செயலும் நிதானித்து செய்வதாகிவிட்டது. அடுத்த 7-8 வருடங்கள் கம்பில் நடக்கும் விளையாட்டு என்றால் மிகையாகது.டீனேஜ் பிள்ளையை அமெரிக்காவில் வளர்ப்பது ஒன்றும் லேசல்ல. மேலும் ஒரு பெண் பிள்ளையை அமெரிக்காவில் தனியாக வளர்ப்பது லேசல்ல. 6 வயதாக இருக்கும்பொழுதே தந்தையை இழந்தவன் என்ற முறையில் இப்பயணம் எளிதல்ல என்றுணர்வேன்.
எனக்கு அந்த ஆண்பிள்ளையை நினைத்தால் தான் கஷ்டமாக இருக்கிறது. பள்ளிகளில் ஜெனட்டிக்ஸ் போன்ற பாடங்களை இனிமேல் படிக்கும் பொழுது அது தலையில் ஓராயிரம் அச்சங்களை விதைக்கும். அதன் பிறகு உறக்கமற்ற நாட்களை சந்திக்க வேண்டும். இறைவா அப்பிள்ளைக்கு சக்திகொடு.
No comments:
Post a Comment