இன்று 29-ஆகஸ்ட-2020 மிக இனிதாகவே திட்டமிட்டபடி தொடங்கியது. காலையில் 4:45க்கு எழுந்து டீ போட்டுக் குடித்துவிட்டு, திருக்குறள் படித்துவிட்டு, 10கிலோமீட்டார் (56 நிமிடத்தில்) ஓடிவிட்டு, பிராணாயமம்-தியானம் செய்துவிட்டு நன்றாக துவங்கியது.
நண்பர்கள் சிலருடன் குழுவாக காணோளி உரையாடல் (நடையாடல்) செய்துவிட்டு புத்துணர்ச்சியுடன் இருந்தது. நல்ல செய்திகள். கவலையற்ற அழுக்காறு அல்லாத உரையாடல்கள்.
பிறகு, நண்பருடன் வாராந்திர திருக்குறள் வகுப்பு (பதினான்காகவாது வகுப்பு) எடுக்க / உரையாட சென்றேன். இணைய வழி வகுப்பில் வந்த உடன் நண்பர் முதலில் சொன்னது -- “ராஜேஷ், first/முதல உனக்கு ரொம்ப thanks/நன்றி சொல்லனும். ஏன்னா, உன்னால தான் எனக்கு தமிழ் இப்ப நல்லா புரியுது. அதனால நான் என்னோட பொன்னுக்கு தமிழ் சொல்லி தர முடியுது. அதனால ஏன் பொன்னு தமிழ்ல அவளோட வகுப்புல(classல) மூனாவது (mark)மதிப்பெண் எடுத்து இருக்கிறா. பயங்கர improvement(முன்னேற்றம்). அவுங்க class miss (வகுப்பு ஆசிரியார்)லான் ஒரே பாராட்டுதான் போ. இத்தனை வருஷமா தமிழ் சொல்லிக்குடுக்காம விட்டுருவேன் ஏன்னா எனக்கே தமிழ் சரியா புரியாது. இப்ப உன்கிட்ட திருக்குறள் வகுப்பு படிச்சுனு இருக்கற்தனால் என்னால அவ பாடத்தை படிச்சு சொல்லி தரமுடியுது. அவளும் குஷி. எனக்கும் செம குஷி. அதுக்கு நான் உனக்கு thanks/நன்றி சொல்லனும்”.
அதுப்போல் இன்று மதியம் என் மனைவியுடன் உரையாடுகையில் அவளுடைய குழந்தைப் பிறந்த உடன் கூடிய/ஏறிய எடையை இழக்க ஒரு ஒருவருட எடைகுறைப்பு திட்டத்தில் மூன்று மாதங்கள் முன்பு (ஜூன் துவக்கதில்) சேர்த்திருந்தேன். சற்று சிரமப்பட்டுத்தான் சேர்த்துவிட்டேன். ஏனெனில் இதற்கு சுமார் 15000 ரூபாய் முதலீடு இருந்தது. ஆதலால் முதலில் மனைவி ஒப்பவில்லை. பின்பு ஒருவழியாக சமாளித்து சேர்த்துவிட்டேன். முதல் இரண்டு மாதங்கள் சற்று ஐயத்துடன் தான் அவள் அதில் பங்கேற்றால். ஆனால் மூன்று மாதங்களில் பின்பு சுமார் 5+ கிலோ எடை குறைத்துள்ளாள். அதுமட்டும் இன்றி. தனது உடம்பின் வாகும் சீராக உள்ளது என்று கூறினாள். அவளுக்கு கொடுக்கபட்ட ஒரு உடற்பயிற்சி திட்டம் நன்கு திட்டமிடபட்டுள்ளதாக கூறினாள். [இதற்கு முன்பு இலவச Apps, Youtube videos பார்த்து செய்ததில் தசைகளின் வளர்ச்சி சீராக இல்லை எனவும் எடையும் சரியாக குறையவில்லை என்றும் கூறினாள்] அவளுக்கே இத்திட்டத்தின் மீது நம்பிக்கை வந்துள்ளதாகவும் அது பயனுள்ளதாகவும் இருப்பதாக கூறினாள். அவளுக்கும் மகிழ்ச்சி. எனக்கும் மகிழ்ச்சி.
நம்ம வாழ்க்கைல நம்ம பன்றது அடுத்தவங்க வாழ்க்கைல ஒரு சிறு துரும்பு அளவுக்காவது உதவுதுனு நினைக்கும் பொழுது ரொம்ப சந்தோஷமா இருக்கு. The Innovator's Dilemma புத்தகத்தை எழுதிய உலகப்புகழ்பெற்ற Prof.Clayton Christensen என்றொரு (Harvard University Professor) பேராசிரியர் சொல்லுவார் - வாழ்க்கையை நீ எப்படி அளப்பாய்? (How will you measure your life?) அதற்கு பதில் நீ எத்தனை பேரின் வாழ்வில் நல்லதொரு தாக்கமாய் (அல்லது பயனாய்) இருந்தாய் என்பதில் அளக்கலாம் (Answer: Number of lives you touch upon). அதுப்போன்ற ஒரு தருணம் இது.