இன்று எங்கள் வீட்டில் ஒரு சட்டியில் வளர்த்த லில்லி செடியில் அழகான ஒரு மலர் பூத்தது. மிகவும் மணத்துடன் நிறைவாக பூத்துள்ளது.
பொதுவாகவே எனக்கு தோட்டக்கலையில் ஆர்வம் உண்டு. நான் பிள்ளையாய் இருந்த போழுது எங்கள் வீட்டில் 100 சட்டிகளில் செடி இருக்கும். வகை வகையான செடிகள் வண்ணவண்ணமான மலர்கள். எங்களுக்கு சின்ன சின்ன மெய்யான சந்தோஷங்களை கொடுத்தது.
ஆனால் இப்படி செடி வளர்ப்பதற்கும் உழைப்பு தேவை. அதற்கு உரம் இட்டு, களைகள் களைந்து, தினமும் தண்ணீர் ஊற்றி போற்றவேண்டும். சில செடிகளில் ஒரு சில பூச்சிகள் இருந்தால் பரவாயில்லை. ஆனால் செம்பருத்தி போன்ற செடிகளில் பூச்சிகள் எளிதாய் தொற்றிக்கொள்ளும். பலநாள் இருக்கும் செடி அதற்கு ஒன்றும் இல்லை என்று நினைப்போம். இலைகளின் மேலே பளபளவென இருக்கும் ஆனால் கீழே அடி பகுதியில் நம் கண்ணுக்கு தெரியாத வண்ணம் வெள்ளை வெள்ளையாக பூச்சிகள் இருக்கும். அதை காணும் பொழுது மனதிற்கு கடினமாக இருக்கும். அப்படி பார்க்கும் பொழுது அதனை களைந்து எரிவதே சிறந்தது ஏனெனில் மருந்துகள் இதுபோன்ற சூழ்நிலைகளில் உதவாது ஏனெனில் ஆழ் அடிவேர்வரை நோயின் தாக்கமும் இருக்கும். இல்லையேல் அது மொத்த தோட்டத்தையும் கெடுத்துவிடும். அப்படி செய்வதால் தோட்டத்திற்கு நல்லது. அந்த செடியிற்கும் நல்லது. நோயுற்ற செடி அவதி பட வேண்டாமே. பூச்சியுடன் இருக்கும் செடி நமக்கும் மன உளைச்சலே.
ஆனால் சில நேரம் சில இன்னல்கள் இருந்தாலும், ஒரு மலரை கண்ட உடன் மனம் இலகுவாகிறது. சந்தோஷம் நம்மை நாள் முழுக்க தொற்றிக்கொள்கிறது
No comments:
Post a Comment