Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

December 22, 2018

2018

இவ்வாண்டு இவ்வளவு கடுமையானதாக எனக்கு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. கடினம் கடினம் கரிமலை கடினம் என்று சரணகோஷம் முழங்கி இருக்கிறேன். ஆனால் கடினம் கடினம் வாழ்வு மிக மிக கடினம் என்று விரத்தியின் உச்சியிற்கே வந்துவிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். 

ஜனவரி-மார்ச்
வருட துவக்கத்தில் நன்றாகவே இருந்தது. முதன்முறையாக சபரிமலையின் மகர விளக்கை காண சென்றேன். நன்றாக தரிசனம் கண்டேன். கூடுதலாக திருவாபரண தரிசனம் பெற்றேன். அது மட்டுமில்லாமல் ஐய்யப்பனின் (போர் வாள், அரிவாள், ராஜா முகம் உடனான) திருவாபரண அலங்காரத்தையும் கண்டுகளித்தேன்.  

உடற்பயிற்சியில் ஈடுபட்டு எனது கொழுப்பின் அளவுகளையும் குறைத்தேன். தம்பி மணிகண்டனின் கல்யாண வேலைகளில் ஈடுபட்டேன். எல்லாம் நன்றாக சென்றுகொண்டு இருந்தது. ஆனால் வேலையும் கிடைக்கவில்லை,  கனடா பி.ஆர்க்கான அழைப்பு வரவில்லை.

கனடா வில் பி.ஆர் எனப்படும் நிரந்திர தங்குமுரிமை கிடைக்க நவம்பர் 2017இல் விண்ணப்பித்தேன். ஆனால் ஒவ்வொரு இருவாரமும் ஒரு புள்ளி இரண்டு புள்ளிகளில் கோட்டை விட்டேன். ஒன்றும் செய்யமுடியாத கையறு நிலையில் இருந்தேன் ஏனெனில் என்னால் எடுக்க முடிந்த எல்லா புள்ளிகளையும் எடுத்துவிட்டிருந்த நிலையது. 

தம்பியின் கல்யாண முறைமைகள் நன்றாக துவங்கியது. கல்யாணத்திற்கு கிளம்புவதற்கு முன் இரவு என் மனைவியிற்கு வாய் குளரியது. அதன் வீரியம் புரியாமல் இருந்தேன். காலையில் அவளால் இடது கையை அசைக்ககூட முடியவில்லை எழவும் நடக்கவும் முடியவில்லை. அழகுவேல் சொன்னதால் சி.டி.ஸ்கேன் எடுத்துவிட்டு சென்னை சென்றோம். அங்கு தான் இடி காத்திருந்தது. என் மனைவியிற்கு ஸ்ட்ரோக் (மூளை பக்கவாதம்) தாக்கி இருந்தது தெரியவந்தது. நாங்கள் இதை அறிந்த நேரம் ஸ்ட்ரோக் வந்தால் கொடுக்ககூடிய சிகிச்சையின் பொன் நேரம் (3 மணிநேரத்திற்குள்ளே வர வேண்டும்)  தாண்டி (13 மணிநேரம் கழித்து) வந்து சேர்ந்தோம். சிகிழ்ச்சை கொடுக்க முடியவில்லை. ஆதலால் அப்போலோ சென்றோம். நண்பர்கள் (அவர்களின் மூளை நரம்பியல் நிபுண மருத்துவர்கள்) உதவியுடன் மேற்படி பராமரிப்பு சிகிழ்ச்சை அளித்தோம். அவள் செய்த புண்ணியத்தால் அவளுடைய பக்காவாதம் குறைந்து பத்து நாட்களில் வீடு திரும்பினாள். ஆனால் அவள் சரிவர சராசரியாக ஆக இரண்டு மாதம் ஆனது. இதற்கிடையில் என் தம்பியின் கல்யாணத்தையும் காணகொடுப்பினையில்லை எங்கள் இருவருக்கும். 

ஏப்ரல்-ஜூன்
மனைவியின் தங்கையின் கல்யாணம் ஜூனில் இருந்ததால் மனைவியின் பெற்றோர்கள் அவளுடன் கனடா செல்ல இயலவில்லை. ஆதலால் நான் அவளுடன் சென்றேன். கனடா விமான நிலையத்தில் Immigration officer என்னை ஏன் அடிக்கடி வருகிறாய் என்று கேட்டார். 

கனடா செல்லும் முன் கடையின் பெலென்ஸ் ஷீட் எடுத்துபார்த்தால் அதில் நாங்கள் எல்லோரும் எவ்வளவு பெரிய வேலைகள் செய்ய வேண்டியது இருக்கிறது என்பது புரிந்தது. 

எனக்கு கனடா பீ.ஆர்க்கான அழைப்பு வந்தது. ஆறு மாதம் கழித்து வந்தது. மிக விரத்தியில் இருந்தோம். ஆதலால் யாரிடமும் பீ.ஆர் வந்து கனடா வரும் வரை இதை பற்றி பேச வேண்டாம் என்று முடிவு செய்தோம். பெற்றோர் உட்பட.  எங்களின் விண்ணப்பத்தை சமர்பிக்க 2 மாதம் ஆனது. ஜூன் இறுதியில் தான் சமர்பித்தோம். 

மே ஜூன் மாதங்களில் மனைவியின் உடலுக்கு சில பரிசோதனைகள் செய்தோம். இதயத்தில் ஒரு சிறு ஒட்டை இருக்கலாம் என்று மருத்துவர் கூறினார். ஆனால் உறுதியாக சொல்லவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்தியாவிலோ அது தேவையில்லை என்று கூறினார்கள். நாங்கள் செய்வதறியாது தவித்தோம் (தவிக்கிறோம்). இதனால் மருத்துவர் எங்களை இந்தியா செல்லகூடாது என்று கூறிவிட்டார். ஆதலால் மனைவியால் அவள் தங்கையின் கல்யாணத்தையும் காணமுடியவில்லை. 

ஜூன் மாதத்தில் என்னுடைய கொழுப்பின் அளவுகளை பரிசோதித்தால் அது அதிகமாக இருந்தது. ஆதலால் மறுபடியும் உடற்பயிற்சி செய்யத்தொடங்கினேன். சாப்பாட்டில் அக்கறை எடுத்தேன். 

இதற்கிடையில் பல குழப்பங்களையும், சஞ்சலங்களையும் சந்திக்க நேர்ந்தது. மிக கடினமான நாட்கள்.

ஜூலை-செப்டம்பர்
ஜூலையில் இந்தியாவிற்கு சென்றேன். உடனே திட்டமிட்டபடி புபனேஸ்வர், கொனார்க், பூரி, கயா, புத்கயா, காசி, சேவாக்ராம், காஞ்சிபுரம் சென்றேன் அழகுவேலுடன். இந்த பயணம் நன்றாக இருந்தது. இதில் எனக்கு கிடைத்த நல்ல விஷயம் என்றால் அது தியானம் செய்ய புதுச்சேரியிலேயே இடங்கள் இருக்கும் என்று. கையில் வெண்ணை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதைதான். 

ஜூலை மாதம் அம்மாவின் பணிநிறைவு விழா நடந்தது. நான் அம்மாவிற்காக மே மாதத்தில் ஒரு ஒவியரின் உதவியுடன் ஒரு ஒவியம் வரைந்து வாங்கினேன். நானும் ஒரு ஏழுபக்க உரை தயார் செய்து வாசித்தேன். அதுவே அம்மாவிற்கு நான் செய்யகூடிய சரியான அங்கிகாரமாக இருக்கும் என்று நினைத்தேன். 

பாண்டியில் தேடினால் தியானத்திற்கு நல்ல இடங்கள் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. கடைசியாக யோகாஞ்சலி நாட்யாலயாவில் டாக்டர் ஆனந்த பாலயோக்கி பவனானி கிடைத்தார். அவரோ யோக, பிராணயாம் செய்யாமல் தியானம் செய்யவது அவ்வளவு பலன் இல்லை. ஆதலால் நாங்கள் இவை அனைத்தையும் ஒன்றாக தான் கற்பிப்போம் என்று கூறிவிட்டார். பிறகு அங்கேயே சேர்ந்து வகுப்பில் கற்றேன்.  இரண்டு நாட்கள் டாக்டர் ஆனந்த பாலயோகியை சந்தித்தேன். அவர் பிரச்சனையின் ஆதி என்னவென்று சொன்னார். என்னையும் எனது மனைவியையும் யோக செய்து பிரணாயாமம் செய்ய சொன்னார். அதுவே சிறந்த தீர்வாகும் என்றார்.

அக்டோபர்-டிசம்பர்
இதற்கிடையே, கனடா பீ.ஆர் எங்களை சோதித்தது. என்னையும் என் மனைவியையும் இன்னும் சில படிவங்களை கேட்டது. எல்லாம் கொடுக்க அக்டோபர் ஆனது. ஒருவழியாக பீ.ஆர் ஒப்புதல் பெற அக்டோபர் ஆனது. ஆனால் கையில் பாஸ்போர்ட் கிடைக்க நவம்பர் ஆனது. மிகவும் விரத்தியாகவே இருந்தது அந்த காத்திருப்பு.

ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை கடையில் வேலை செய்து கணக்கு வழக்குகளை பார்த்து கடையின் மைய பிரச்சனைகளை கண்டைந்தது சற்று ஆறுதல் அளித்தாலும் பணியின் சுமை, கடையின் -தவறுகளின் சுமை சோர்வே அளித்தது. செய்ய வேண்டிய பணிகள் ஏறாலாம். இதனால் சில மனகசப்புகளையும் விரிசல்களையும் சந்திக்க நேர்ந்தது. நல்லவேலையாக அவை துளிரிலேயே களையப்பட்டு இப்போது சரியான வழியில் செல்கிறோம்.

தங்கையோ அவளுடைய வீட்டை வாங்கினாலும் அவளால் அதனை கையில் வாங்க முடியவில்லை. அதனால் அவள் கஷ்டபட்டாள். அவளுக்கு கணக்குகளை சரிபார்த்துக்கொடுத்தேன். வட்டி பணம் (40%)  கட்டி வாங்க ஊக்கப்படுத்தினேன். அவள் பணத்தை செலுத்தி வீட்டை வாங்கி நவம்பரில் கிரஹப்ரவேசம் செய்து வீடு புகுந்தாள்.

தம்பியின் உடம்பிற்கு இப்போது கொழுப்பு பிரச்சனை என்று கேட்கையில் அதுவும் உளசோர்வு அளிக்கிறது. ஏன் இப்படி எங்கள் குடும்பத்தில் எல்லோரும் ஒரு ஒரு விதத்தில் அவதிபடுகிறோம் என்று தெரியவில்லை.

இறுதியாக கனடாவிற்கு புறப்படும் முன்பு மூக்கில் அடிப்பட்டு காதில் சிறு பழுது பெற்று வலது காது சற்று கேட்கும் திறனை இழந்தது (சிறிது அளவு. மூன்று மாதம் ஆகும் சரியாக) இன்னும் சோர்வை அளிக்கின்றது.

ஒருவழியாக டிசம்பரில் கனடா வந்து அடைந்தேன். இங்கு வந்தபிறகு தான் தெரிந்தது மனைவியின் மருந்த தரும் பக்கவிளைவுகள் வரும் சந்ததிகளையும் தாக்கும் என்று. அதற்கு நாம் இதயத்தில் அறுவை சிகிழ்ச்சை செய்ய வேண்டும் என்று.

இந்த ஆண்டு குறைந்த அளவிலான 25 புத்தகங்களாவது படிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் வெறும் 16 புத்தகங்களே படித்தேன். இவ்வளவு நேரம் இருந்தும் ஒரு 25 புத்தகம் கூட முழுதாய் படிக்க முடியவில்லை என்பது மிகுந்த வருத்தமாக இருந்தது. இதில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால் நமது திட்டம் இன்னும் ஆழமாக இருக்க வேண்டும் என்று. நேரத்தை இன்னும் அணுக்கமாக கண்காணிக்கவேண்டும் என்று.

ஒட்டுமொத்தமாக சொன்னால் நான் சந்தித்த சவால்கள் (வரிசைபடி) 1) கனடா பீ.ஆர் அழைப்பிற்கு 6 மாதம் காத்து இருந்தது 2) மனைவியின் உடலிற்கு மிகுந்த இடர் வந்தது 3) தம்பி கல்யாணம் செய்ய முடியாமல் போனது 4) பீ.ஆர் சமர்பிக்க 2 மாதம் போராட்டம் ஆனது 4)மன சஞ்சலங்களும் குழப்பங்களும் 5) பீ.ஆர் மேலும் படிவங்கள் கேட்ட காத்திருப்பை நீட்டியது 6) கடையின் கணக்குள், தவறுகள் தரும் சோர்வு 7) மனைவியின் மருந்துகள் தரும் பக்கவிளைவுகள் 8) மற்றவர்களின் பிரச்சனைகள் தரும் சோர்வு 9) 20 மாதமாக வேலையில்லாமல் இருப்பது 9) புதியதாக மூக்கு காது பிரச்சனை

ஆண்டின் ஆறுதல்கள் என்று சொன்னால் 1) தம்பியின் கல்யாணம் தடையின்றி நடந்தது 2)காசி பயணம் செய்தது 3) அம்மாவிற்கு அங்கீகாரமாக ஒவியம் செய்து, உரை ஆற்றியது 4) யோகா பிராணாயமம் தியானம் பற்றி நன்கு படித்து டாக்டர் ஆனந்தாவிடம் பேசி உடலை பற்றி நன்கு புரிந்துக்கொண்டது  5) கடையின் ச்டாக் எடுத்து பிரச்சனைகளை கண்டு அடைந்தது 6) கிருத்திகாவிற்கு ஆலோசனை வழங்கியது 6) கனடா வந்தது.

உண்மையாக சொன்னால் எனக்கு ஏன் இப்படி நடக்கின்றது என்றே தெரியவில்லை. யாரிட்ட சாபமோ தெரியவில்லை. 

No comments:

Post a Comment