Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

December 29, 2017

பூவே பூச்சூடவா

பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா…

பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..

அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என்வாசல் தீண்டவேயில்லை ..
கண்ணில் வெண்ணீரை வார்பேன்.
கண்களும் ஓய்ந்தது..
ஜீவனும் தேய்ந்தது..
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்..
இந்த கண்ணிரில் சோகம் இல்லை
இன்று ஆனந்தம் தந்தாய்..
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே
பொன் முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்..
இந்த பொன்மானை பார்த்துக்கொண்டே ..
சென்று நான் சேர வெண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போது,
நீ என் மகளாக வேண்டும்.
பாச ராகங்கள் பாட வேண்டும்..

பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா…

பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..

=====================================
படம் : பூவே பூச்சூடவா
பாடல் :  பூவே பூச்சூடவா
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : சித்ரா, கே.ஜே.ஜேசுதாஸ்
=====================================


December 20, 2017

[கவிதை] கோபுரத்திற்கெல்லாம் ராஜமாதா ராஜகோபுரம்



ராஜகோபுரம்
கோயிலுக்கு என்று சென்ற போது
நான் முதன் முதலாய் கண்டது ராஜகோபுரம்
நீ அளித்த உவகை என்னை உன்னிடம் அழைத்தது
உன் பாதம் தொட்டு
வணங்கி செல்லாமலில்லை

கோயிலுக்குள்ளே சென்று நான்
பல  பரிவார மூர்த்திகளை
கண்டேன் தொழுதேன் நகர்ந்தேன்
கற்பகரகத்தை வணங்கினேன்
சிறுதெய்வங்களும் இருந்தனர்
ஆனால் அவைகள் பலர் கண்ணுக்கு தெரியவில்லை
கற்பகரகத்தில் இருந்து தினமும் பார்க்கிறேன்
ஆதலால் எனக்கு தெரிகிறது

பிரகாரம் சுற்றியப்பின்பு வந்து அமர்ந்தேன்
பிறரை போல் நான்
அண்ணாந்து பார்த்தது உனைதான்
உன் அடித்தளம் கண்டு வியந்தேன்
நீ நூற்றாண்டுகளாய் தாங்கும்
பெரும் பாரம் பேசி முடியாது
ஆனால் அழாமல் நீ அழகாய் இருக்கிறாய்

மற்ற சந்நிதிகள் கோபுரம் கொண்டாலும்
ராஜகோபுரத்தை நின்று பார்க்காதவார் உண்டோ?
நீ வான்நோக்கி எழும் பொழுது
சிற்பங்கள் உன் மீது எழுந்து அமர்ந்தது
பல மலர்கள் கொண்ட வெட்சி பூ ஏறி
கலச மகுடமாய் அழகு சேர்த்தது

மனிதர்ளாயினும் தெய்வங்களாயினும்
உன்னை தாண்டியே வரவேண்டும்
அதுவே உனக்களித்த சிறப்பு
கோபுரங்களுக்கெல்லாம் "ராஜமாதா" நீ
அதுவே உன் பேறு ராஜகோபுரம்

அவசரத்தில் செல்வோரும்
உனை பார்த்து மலைத்து
ஒரு கணம் வணங்கி
உன்னை மெச்சாதவர் உண்டோ?

உன் பெருமை கேட்டாயே ராஜகோபுரமே
மூலஸ்தானமாய் நின்று எனக்கு கிட்டாத
புகழும் உனக்கு கிட்டுகிறது
என்று சொல்வதில் மகிழ்ச்சியே

ஆயினும் நீ அழுவதை கண்டால் எனக்கு
விரக்தியாய் உள்ளது
கேள் ராஜகோபுரமே கேள்
உன் முதல் தளத்தில் நின்றுகொண்டு
மற்ற பரிவார மூர்த்திகள் கோபுரங்கள்
உயர்வாய் உனக்கு தெரிந்தால்
உன் உயரம் உனக்கு எப்படி தெரியும்!!
ராஜகோபுரம் மட்டும் இருந்தால்
கோயில் அவ்வளவு அழகில்லை
என்பதையும் அறிக நீ
கோயிலின் விளிம்பில் இருக்கிறேன்
என்று நினைக்கிறாய்
என்னில் முதல் படி நீ
என் அங்கம் நீ
நீ இல்லாமல் கோயிலை யார் அறிவார்?

- ராஜேஷ் (19 டிசம்பர் 2017)

December 12, 2017

இரண்டாயிறத்திப் பதினேழ்

இரண்டாயிறத்திப் பதினேழே
இன்னும் இருபது நாட்கள் இருக்கிறாய்
உன்னை நான் மறவேன்
என் திருமண நாளின் ஆண்டு
என்பதற்காக அல்ல

ஜனவரி ஒன்று காலை இவ்வாண்டை
நல்லபடியாக கடக்க வேண்டும்
என்று வேண்டினேன்
ஏனெனில் அதற்கு ஒருவாரம் முன்பே
இவ்வாண்டு எவ்வளவு கடுமை
என்பதற்கான கடுஞ்சொல்லை
என் செவி கேளச்செய்தாய்

மனதில் உறுதியுடன்
உன்னை எதிர்க்கொண்டேன்
ஆனால் உனக்கு கிடைத்த
முதல் தருணத்திலேயே
என்னை செம்மட்டியால் அடித்தாய்

வலித்தாளாமல் வருந்தினேன்
என் வலிமை முழுவதையும்
உனக்காக கொடுத்தேன்
ஆனால் நீ எனக்கு சிறிதும்
கை கொடுக்கவில்லை

முளைத்து விதையாய் எழுந்தாலும்
நீ என் தழைகளை
கிள்ளி எரியும் தோறும்
வீழ்வேனோ என்று நான்
தழைத்து மீண்டும் வந்தேன்

வஞ்சகத்திற்கு பிறர் கைக்கொர்த்து
பிறர் அறியாமல்
அவர் சொற்களை திரித்தாய்
கருணையின்றி வெட்கமின்றி
ஓல சாசனம் எழுதினாய்

உன் சொற்கள் என்னை
வாலால் வெட்டி
மன்னில் புதைத்து
உன் இயலாமைக்கு என்னை
நரபலி கொடுத்துக்கொண்டது

நீ நசுக்கியது என்னையல்ல
என்னுள் இருந்த தன்னம்பிக்கையை
நான் உன்னை நினைக்காத நாள் இல்லை
என்பதனை நீ அறிவாயோ?
ஏனெனில் நீ என் 70-80 அகவைகளில் ஒருவன்

எனக்கெதற்கு
ஏன் நான்
என்ன தவறு செய்தேன்
இப்பொழுது ஏன்
என்று மனதில் உன்னை கேட்காத நாளில்லை

நயவஞ்சகனே உன் பதில் வேண்டி
உன்னை கேட்டேன்
ஒன்றுக்கும் பதில் கூறவில்லை
இல்லாத நியதிகளை கூறி
உண்மையை மறைத்து உன்னை தற்காத்துக்கொண்டாய்

கரையான் போல் என்னில்
ஒவ்வொரு உயிரணுவிலும் புகுந்தாய்
என் சந்தோஷங்களை
என் அமைதி
என் நம்பிக்கை
என் முயற்சி
என் நேரம்
என் ஓர் ஆண்டு
என் உன்னத தருணங்கள்
ஏன் என்னை சார்ந்தோரின் இன்பங்கள் என்று கூட இல்லாமல்
இரக்கமின்றி அழித்தாய்

நீ உமிழ்ந்த சொற்கள் எனக்கு அகோர ஓலமாய் ரீங்கரிக்கிறது
அகோர ஓலம் என்றால் என்னவென்று கேட்கிறாய்?
தொடர்மழையால் முளைத்துக்கொண்டு இருக்கும்
காட்டில் முளைத்த பல கோடி விஷகாளான்கள் போல
என்னுள் முளைத்துக்கொண்டே இருந்தாய்
உனை களைய நான் பாடுபட்டு
சோர்வடைந்தேன்
வீழ்ந்தேன்

சோர்வில் வந்த
பிழற்றல் எண்ணங்கள்
மேலூன்றிய பொழுதெல்லாம்
என் வலிமையும் பிறர் வலிமையும் அன்பும்
என்னை எளிதாக தற்காத்தது

ஆனால் என்னை இந்த கதியிற்கு
ஆளாக்கிய உன்னை என்னவெல்லாம்
செய்ய நினைத்தேன் தெரியுமா
உன்னை கடத்தி
வருடத்திற்கு பன்னிரண்டு மாதம்போல
பன்னிரண்டு பாகங்களாய் வெட்டி எரிய நினைத்தேன்

உன்னை ஒரு ஆள் உயர
கண்ணாடியாய் பாவித்து
உன்னை ஒவ்வொரு சில்லாய்
அடித்து நொறுக்க விழைந்தேன்
கண்ணாடி நொறுங்கும் தோறும்
ஒவ்வொரு சில்-இலும் அதன் ஒவ்வொரு ஓரத்திலும்
உன் குருதி வழிவதை
பார்க்கவே விரும்பினேன்
உன் விகார முகமும் அகோர மனமும்
இரக்கமின்றி  சிதைக்கவே விணவுகிறேன்

இரண்டாயிறத்திப் பதினேழே
ஆண்ட்ரியாவே
நான் வேண்டாத பாக்டீரியாவே
உன்னை அழித்துக்கொள்
என்னை விட்டுவிடு
இன்னும் இருபது நாட்கள்
இருப்பினும் இப்போதே
என்னை விட்டுவிடு!!

ஆனால் ஒன்று
கெட்டதிலும் ஒரு நன்மை
இரண்டாயிறத்திப் பதினேழே
நீ எனக்கு நிறைய வலி தந்தாய்!