நான் என்றும் இசையில் லயித்து விடுவேன். நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் (ஒன்பதாவது இருக்கும்) எமது நண்பர்கள் வந்தே மாதரம் பாடினார்கள். கண்ணில் நீர் திரண்டது. அதே போல் எனது சகோதர சகோதரி படித்த பள்ளியின் ஆண்டு விழாவுக்கு செல்லும் பொழுதும் உணர்ச்சிவசப்படுவேன். அடுத்த பிறவி என்று ஒன்று எனக்கு இருந்தால் அதில் இசையை முறைப்படி கற்க வேண்டும். இசை என் முதன்மை வாழ்வாக இருக்க வேண்டும்.