அன்புள்ள வணக்கத்திற்குரிய திரு.இந்திரா பார்த்தசாரதி ஐயா அவர்களுக்கு,
நமஸ்காரங்கள்!
தாங்கள் நலமா?
முதல் முதலாக 2014இல் தங்களின் ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன குறுநாவலை வாசித்தேன். அப்பொழுது தான் நான் வாசிக்க துவங்கியிருந்தேன். நல்ல வாசிப்பு அனுபவமாக அமைந்தது.
கடந்த ஒரு வாரமாக கிருஷ்ணா கிருஷ்ணா குறுநாவலை வாசித்தேன். கிழே வைக்க மனமில்லாமல் கிழே வைத்து வைத்து வாசித்தேன். கிருஷ்ணனை இப்படி எல்லாம் இதன் முன் பார்த்தது இல்லை நான் . மிக நல்ல திறப்பாக அமைந்தது. கிருஷ்ணன் மூலம் சொல்லப்படும் மாற்றம், மரணம், செல்வம், அதிகாரம்,பயம், உடல், காதல், காமம், பாசம், நட்பு, பெண்ணியம் (இன்னும் பல), பற்றி கூறுவதை ரசித்தேன்.
தர்மம், அதர்மம் பற்றி பல இடங்களில் வருவது மிகுந்த தெளிவாக இருக்கிறது. அன்றே விதிகளை ஆட்டதிற்கு ஏற்ப கிருஷ்ணன் மாற்றிக்கொண்டான். ஆஹா Reinvention என்ற buzz wordக்கு கிருஷ்ணனே வழிகாட்டி!!
அதே போல் ராமன், கர்ணனை சுற்றி இருந்த துன்பியல்கள் கிருஷ்ணனை சுற்றியில்லை. கிருஷ்ணன் என்றால் கொண்டாட்டம். கிருஷ்ணனே அவ்வதாரத்தின் செய்தி என்று முதலில் குறிப்பிட்டது நினைவில் வந்தது.
பின்பு கடைசியில் ராதவிற்கும் கிருஷ்ணன்னுக்கும் ஆன காதலை பற்றி சுறுக்கமாக சொன்ன இடங்களையும் ரசித்தேன்.
கிருஷ்ணா கிருஷ்ணா மொத்தத்தில் எனக்கு இப்பொழுது தேவை பட்ட ஒரு நல்ல வாசிப்பாக இருந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
நன்றி.
அன்புடன்
ராஜேஷ் பாலசுப்ரமணியன்