இன்று என் வாழ்வில் நான் ஒரு பாதுகாப்பின்மை உணர்கிறேன் முன்பெப்பொழுதையும் விட. நான் பள்ளிகளில் படிக்கும் பொழுது உற்றார் உறவினர் இல்லாத பாதுகாப்பின்மை சில நேரங்களில் வந்ததுண்டு. தந்தை இல்லை என்று கூட கவலை பட்டது இல்லை. பட்டபடிப்பு பற்றியை கவலையை விட வேலை பற்றிய கவலையே பள்ளி நாட்களில் உண்டு.
பள்ளிகளில் படிக்கும் பொழுது என் மேல் இருந்த குடும்ப பொறுப்பு ஒரு புறம் சுமையாக இருந்தாலும் எனக்கு அது அவ்வளவு சுமையாக இல்லை. பின்னாளில் வேலை செய்யும் போது கூட சுமையாக எண்ணியதில்லை. ஏனெனில் நான் அப்பொழுது தான் வேலை செய்ய துவங்கினேன். என் மேல் எனக்கு அதீக தன்னம்பிக்கை இருந்தது. எனக்கு நிலையான வருமான இருந்தது.
பள்ளிகளில் படிக்கும் பொழுது என் மேல் இருந்த குடும்ப பொறுப்பு ஒரு புறம் சுமையாக இருந்தாலும் எனக்கு அது அவ்வளவு சுமையாக இல்லை. பின்னாளில் வேலை செய்யும் போது கூட சுமையாக எண்ணியதில்லை. ஏனெனில் நான் அப்பொழுது தான் வேலை செய்ய துவங்கினேன். என் மேல் எனக்கு அதீக தன்னம்பிக்கை இருந்தது. எனக்கு நிலையான வருமான இருந்தது.
வேலைக்கு சென்று 4-5 ஆண்டுகள் பிறகு வேலையை பற்றிய பாதுகாப்பின்மையை உணர்ந்தேன். என் திறமை மேலும், என் தொழில் சுத்தத்தின் மேல் நம்பிக்கை இருந்தாலும், எனக்கு இத்தொழிலில் வளர்ச்சி என்பது குறைவாகவே இருக்கும் என்று கருதினேன். "நான்" செல்லவேண்டிய இடம் மிக தொலைவில் இருப்பதாக நினைத்தேன். மேற்ப்படிப்பு என்பது எனது வளர்ச்சிக்கும் மட்டும் இன்றி எனது அறிவுக்கும் மிக தேவையான கட்டுமானமாக கருதினேன். ஆதலால் மேற்ப்படிப்பு படித்தேன்.
மேற்ப்படிப்பு படிக்கும் பொழுது வேலை கிடைக்காமல், கல்யாணத்திற்கு பெண் கிடைக்காமல் வாழ்வின் மீது பாதுகாப்பின்மையை உணர்ந்தேன். இவ்வளவு நேர்மையாக உழைத்தும், படித்தும், எவர் உடைமையின் மீதும் பற்றற்று இருந்தும், நல்லது நினைத்தும், வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். என மக்களுக்கும் என் குடும்பத்தினருக்கும் சிறந்த கட்டுமானத்தையும் வழிகாட்டுதலையும் சுற்றத்தையும் தரவேண்டும் என்று என் மனம் விழைக்கிறது . ஆனால் அதற்கான வேலைகளில் என்னால் முழுமையாக ஈடுப்பட முடியவில்லை.
என்னுடைய புதிய வேலையில் என்னை பாதுக்காப்பின்மையில் ஆழ்த்தும் ஒரு மேலாளர். என் மீது சிறிதும் நம்பிக்கையில்லாமல் இருக்கும் அவர் எனக்கு மிகுந்த மன அழுத்தத்தை தருகிறார். என் மனம் அமைதியாகவே இல்லை. பலவற்றை நினைக்கிறது. ஒன்றும் செய்ய மறுக்கிறது.
ஏன் என்று தெரியவில்லை. வாழ்வு எனக்கு இப்படி உள்ளது. ஒரு நேரத்தில் கடந்த கால நினைவுகள் பசுமையாக தென்றலாக தோன்றுகிறது. அதுவே சற்று ஆறுதல் அளிக்கிறது.
எனக்கு வயது 32. காலம் சென்று விட்டது. நான் வந்தடைந்த தூரம் மிக குறைவாகவே தோன்றுகிறது. செல்ல வேண்டிய தூரம் மிக அதிகமாக தோன்றுகிறது. கிட்டதட்ட நான் சபரிமலையில் அழுதை மலை ஏறிய பிறகு கொள்ளும் மனநிலை. இன்னும் இறக்கம், கரிமலை, நீலிமலை, சபரிமலை இருக்கிறதே என்கிற மன சஞ்சலம்.
எங்கே என் மேலாளர் என்னை சறுக்கிவிடுவாரோ என்று ஐயம் கொள்கிறேன். இதனால் நான் இன்று என் நிகழ்காலத்தில் இல்லை. நான் நாளை பற்றியும் பல மாதங்கள் கழித்து எனது வேலையின் நிலை பற்றியும் ஐயம் கொள்கிறேன். வருங்காலத்தை பற்றி ஐயம் கொள்கிறேன்.
கடந்தகாலம் இவ்வளவு வேகமாக சென்று விட்டதே என்று நினைக்கிறேன். நிகழ்காலத்தில் யாருடனும் உடன் இல்லாமல் தனித்த ஒரு வனத்தில் உணவு சமைத்து, உழைத்து உண்டு வாழ்கிறேன். என் மக்கள் மீதும், என் நண்பர்கள் மீது ஆவிதழுவாமல் ஏற்றம் ஏற்றம் என்று எண்ணி எது சிகரம் என்று தெரியாமல் இருக்கிறேன். இன்றை நான் சிறுதும் வாழவில்லை. அதுவே அப்பட்டமான உண்மை.
எனக்கு இருக்கும் ஒரே மனநிறைவு என் வருங்கால மனைவி என்னுடன் எல்லாவற்றிலும் உடனிருப்பாள் என்னும் தெளிவும் நம்பிக்கையும் தான்.