Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

January 22, 2019

எனக்கு முக்கியமான ஜெயமோகன் மற்றும் பிற எழுத்தாளர்கள் பதிவுகள்

இக்கட்டுரைகளின் தொகுப்பு பெரும்பாலும் ஆசான் நிலையில் உள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் வலைத்தளத்தில் இருந்து வாசித்து சேமித்து வைக்கபட்டது. 

இவற்றில் எந்த ஒரு ஜெயமோகன் புத்தகமோ தொகுக்க படவில்லை. உதிரிகளாக சில இருக்கலாம். ஆயினும் அந்த ஒரு புத்தகமும் இல்லை. 


ஆனால், இக்கட்டுரைகள் தேர்ந்தெடுக்க எந்த வித ஒரு மதிப்பீடும் அளவுகோலும் நான் வைத்துக்கொள்வது இல்லை. பெரும்பாலும் 2-3 முறை வாசித்து இருப்பேன். இவை பெரும்பாலும் நான் வாசித்தபொழுது இருந்த மனநிலையில் அக்கட்டுரையில் இருந்த கருத்துக்காவோ அல்லது ஒரே ஒரு வரிக்காகவே அல்லது ஒரே ஒரு சொல்லுக்காக்கவோ எனக்கு முக்கியமானதாக பட்டவை. 

பெரும்பாலும் எனது மீள் வாசிப்பிற்காகவே பயன்படுத்தபடும் எனக்கான Bookmark post இது.

பொது

நூல்மரபில் - மனனம், ஸ்வாத்யாயம், தியானம் - மனப்பாடம்
செயல் தியானம் - தியானம்
இளிப்பியல்
அமெரிக்க நூலகச் சந்திப்பு - ஜெயமோகன் நேர்காணல் (Day Planning - என் நாளை எப்படி திட்டமிடுகிறேன், Indian Values)
நாம் எதைப்பற்றியாவது பெருமிதம் கொள்ளமுடியுமா?
ஒரே ஆசிரியரை வாசித்தல்
சகஜயோகம்
எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்… நம்பிக்கையிலிருந்து தொடங்குவது
யோகம்,ஞானம்
விற்பனை பற்றி - அகம்நக விற்பது - ஆட்டத்தின் ஐந்துவிதிகள் நூலுக்கான முன்னுரை 
எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா?
எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? -2
இயற்கையின் சான்றுறுதி (நாய்கள் பற்றிய எல்லா கட்டுரைகளும் இதன் கடைசியில் உள்ளன)
இன்றைய தற்கொலைகள் [செயல், பொருள், இலட்சியம், இலக்கு, குழந்தைகள், பெற்றோர்கள், தற்கொலை, அகவாழ்வு, உளச்சோர்வு, காதல், தோல்வி, நுகர்வு, விளையாட்டு, அதீத போட்டி]
இந்து பாக சாஸ்திரம்  (சமையல் மேல் ஏன் இத்தனை ஈடுபாடு? ஏனென்றால் இங்கே சமையல் வெறும் உணவு மட்டுமல்ல. அது சமூகப்படிநிலையில் மேலேறுவதன் வெளிப்பாடும்கூட)




லோலோ, கடிதம் [செல்வம், காமம், அதிகாரம் மூன்றிலும் மனிதனுக்கு பேராசை உள்ளது. அது அனைத்தையும் திரிபடையச் செய்கிறது.]

கௌதம் மேனன், துருவநட்சத்திரம், மீட்சி [குறுகிய கால தன்னலப் புத்தியால் இவற்றைச் செய்துவிட்டு தங்கள்  சொந்த வாழ்க்கையில், தங்கள் வாரிசுகளின் வாழ்க்கையில் அவற்றுக்கான விலையை கொடுக்காமல் சென்ற எவருமே இல்லை.............தோல்விச்சூழலில் வெளித்தெரிவதுதான் மனிதனின் தரம் என்பது.........அவரோட அந்த நிமிர்வு, எல்லாத்தையும் பொறுப்பேத்துக்கிட்டு எவரையுமே குறைசொல்லாம இருக்கிற அந்த ஃபைட்டர் ஆட்டிடியூட், அதான் எனக்கு இன்ஸ்பிரேஷன் ......... நான் வணிகமே செய்வதில்லை, என் அப்பாவின் ஆணை அது.]

ரசனை 
நுகர்வுக்கு அப்பால் [இயற்கையை ரசிப்பதைக்கூட நுகர்வாக எண்ணிக்கொள்ள நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஊட்டி ஏரியை பார்த்து ‘கொடுத்த காசுக்கு ஒர்த்துடா!” என்று சொல்லும் பலரை நான் கண்டிருக்கிறேன். அம்மனநிலை ரசனையை முற்றாக அழிப்பது. ஏனென்றால், நுகர்வு என்பது நாம் விரும்பும் பொருளை நம் விருப்பப்படி ஆக்கிக்கொண்டு அனுபவிப்பது. நம் விருப்பத்தையே பொருளாக ஆக்கி நுகர்ந்து மகிழ்கிறோம். ரசனை என்பது நாம் அந்த ரசிக்கப்படும் விஷயம் நோக்கி முன்னகர்வது. ரசனை என்பது நம்மை சற்றேனும் மேம்படுத்தவேண்டும். நுகர்வில் நாம் வளர்வதில்லை.............இன்றைய வாழ்க்கையில் நுகர்வோர் மனநிலைக்கு வெளியே சென்று நாம் அடைபவை மட்டுமே உண்மையில் மதிப்புள்ளவை. நுகர்வுக்கு அப்பால் செல்லும்போது மட்டுமே வாழ்கிறோம்.]



வரலாறு

இசை

கவிதை


ஆன்மிகம் 
கீதை
திருக்குறள் / இலக்கியம் / தத்துவம் / கல்வி / அறிவு / கலை


மு. இராகவையங்கார் - கலாச்சாரம் / அறிவுச்செயல்பாடு [கலாச்சாரம் என்பதே மானுட இயற்கைக்கு எதிராகச் செயல்படுதல் என்று சொல்லலாம். மானுடவிலங்கு காமமும் பசியும் வன்முறையுமாக அன்றாடத்தில் வாழ்ந்து அழிவது. உள்ளுணர்வு மட்டுமே அதன் தொடர்ச்சியாக நீடிக்கிறது. கலாச்சாரம் என்பது நேர் எதிரானது. காமத்தை வன்முறையை கட்டுப்படுத்தி, பசியை ஆட்சிசெய்தாலொழிய கட்டுப்பாடு இல்லை. கூடவே அன்றாடத்தில் மட்டுமே திளைக்கும் உள்ளத்தை இழுத்து விரித்து கடந்தகால நினைவுகளாக, எதிர்காலக் கனவுகளாக ஆக்கவேண்டும்.

சென்ற கால அறிஞர் ஒருவரை பற்றிப் பேசினால் உடனே “அதெல்லாம் தெரிஞ்சுகிட்டு இப்ப என்ன?” என்று உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் எவராக இருந்தாலும் கலாச்சாரத்துக்கு எதிரான எளிமையான மானுடவிலங்கு மட்டும்தான். இன்னொரு சொல்லில் பாமரர். அவர்களே நம்மில் பெரும்பாலானவர்கள். அதைச் சொன்னால் வருந்துவார்களென்றாலும் அதுவே உண்மை. அறிவுச்செயல்பாட்டில் ஈடுபடுபவர்கள் அறிஞர்களை நினைவுகூர்ந்தே ஆகவேண்டும். அப்படியெனில் மட்டுமே அவர்கள் நினைவுகூரப்படுவார்கள். அந்த உறுதிப்பாடே அறிவுச்செயல்பாட்டின் அடிப்படை ]

வயதடைதலும் வயதாவதும் -ஒரு கடிதம்
பாத்தும்மாவுடைய ஆடும் இளம் பருவத்துத்தோழியும்
காமமும் கம்பனும்- ஒரு காலைநேரம்
கம்பனும் காமமும், இரண்டு
கம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது
மகள் மங்கலம் ,கம்பனும் காமமும் 6
மனம் (மனதை என்ன செய்யவேண்டும் குரு?)
பேச்சும் பயிற்சியும்  (மற்றும் பொதுக்கல்வி vs தற்கல்வி)
காடு, நிலம், தத்துவம் (நாங்கள் லாஜிக்கல் பாஸிடிவிஸத்தைக் கொண்டு அன்றுவரை பேசப்பட்ட அத்தனை தத்துவநிலைபாடுகளையும் உடைத்தோம். எஞ்சியது இடிபாடுகள். எங்களால் எதையும் உருவாக்க முடியவில்லை. அழகியலையோ அறவியலையோ” நாங்கள் லாஜிக்கல் பாஸிடிவிஸத்தைக் கொண்டு அன்றுவரை பேசப்பட்ட அத்தனை தத்துவநிலைபாடுகளையும் உடைத்தோம். எஞ்சியது இடிபாடுகள். எங்களால் எதையும் உருவாக்க முடியவில்லை. அழகியலையோ அறவியலையோ” )

அர்ஜுனனும் கர்ணனும் [மகாபாரதத்தில் கர்ணன் மெய்ஞானம் தேடி எந்தப் பயணத்தையாவது செய்திருக்கிறானா? எங்காவது அலைந்திருக்கிறானா?

மாறாக அர்ஜுனன் திசைப்பயணம் செய்துகொண்டே இருந்தவன். சிவனையே சந்தித்து பாசுபதம் பெற்றவன். தேடுபவனுக்கே சொல்லப்படும் இல்லையா? // அர்ஜுனர்களுக்கே கீதை சொல்லப்படமுடியும். ஒரு போரில் எதையும் அடையும் நோக்கம் இல்லாமல், எதற்கும் எதிராக இல்லாமல், கடமையின்பொருட்டே வில்லெடுப்பவர்கள் அர்ஜுனர்கள்தான். அவர்கள் வில்லை தாழ்த்துவது சொல்லைப் பெறுவதற்காகவே.]




====

இலக்கிய வாசிப்பு / வெண்முரசு பற்றி 
ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்
கல்விச்சாலையில் இந்திய மரபிலக்கியங்கள்
யானைடாக்டர்- கதை தொன்மமாதல் (கதையாக சொல்லுதல்)
மொழியாக்கங்களை வாசிப்பது (this has lot of references on translation works)
தமிழாசியா- வாழ்த்துரை (ஏன் வாசிக்க வேண்டும்? ஏன் எழுத்தாளர் வேண்டும்)
பிறழ்வுகள் [ஒரு கட்டிடத்தை நீங்கள் கட்டி குடியிருக்கிறீர்கள். தொன்மையான, பாரம்பரிய உரிமையாக கிடைத்த பழைய கட்டிடம். அதை ஒரு விசை உடைத்து விரிசலிடுகிறது. நீங்கள் அதை விட்டு வெளியே வந்து வெட்டவெளியில் நிற்கிறீர்கள். பின்னர் நீங்களே ஒரு புதிய வீட்டை கட்டுகிறீர்கள். புதிய வீடுகள் அவ்வாறுதான் கட்டப்படுகின்றன. அந்த விசைதான் இலக்கியம். அது உடைக்கிறது, மறுபரிசீலனைக்குச் செலுத்துகிறது]
மொழிவழி அறிதலும் மொழியை அறிதலும்  [நீங்கள் பார்த்த ஒன்றை, அறிந்த ஒன்றை மொழியாக ஆக்கத்தெரியவில்லை என்றால் உங்களுக்குள் அது எவ்வகையிலும் தொகுக்கப்படவில்லை என்றுதான் பொருள். அது எந்த வகையிலும் உங்களுக்குப் பயனற்றது என்பதே உண்மை]

ச ங் க ச் சி த் தி ர ங் க ள்

சங்கப்பாடல்








பேட்டிகள் 
ஓலைச்சுவடி இதழ் - பேட்டி
கட்டிடக் கலை


வெண்முரசு பற்றி 


=======================

புத்தர்


நகைச்சுவை


விலங்குகள்



குமரித்துறைவி [தனிமையின் புனைவுக்களியாட்டு / கதைத் திருவிழா]
=======================================================================


குமரித்துறைவியின் விழா [திருவிழா என்பதைப்பற்றி தொடர்ந்து சொல்லிவருகிறேன். ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் வாழ்பவர்கள் அந்தப் பத்துநாளும் இருக்கும் நிலை என்பது ஓர் அரிய விடுதலைநிலை. அப்படி ஒருவரின் ஆயுளில் நினைவறிய அறுபது எழுபது விழாக்களை பார்க்கமுடியும். வாழ்க்கை என்பதே அவ்வளவுதான். அதில் மகிழ்வுக்குரிய எந்த தருணமும் விடுதற்குரியவை அல்ல. சில்லறை ‘பகுத்தறிவு’ , நம்மை ஒரு படி மேலாக எண்ணிக்கொள்ளும் பலவகை ஆணவங்கள் வழியாக சமூகத்தின் கூட்டுக்களியாட்டங்களை இழந்தால் உளச்சோர்வுக்கே செல்வோம். உலகியல்வாழ்க்கையில் செல்வம் ஈட்டுவதும் நுகர்வதும் முக்கியம்தான், ஆனால் அவற்றுக்கிணையானவை இத்தகைய களியாட்டுகளும். பழங்குடிச் சமூகங்கள் முதல் அதிநவீன சமூகங்கள் வரை அவை வெவ்வேறு வகையில் உள்ளன]

=====

==========

======


====



வெண்முரசு கட்டுரைகள்
01 முதற்கனல்


=======================
========


கோவில்கள்

தொடர்கள் 
மகாபாரத கதைகள்



ஜெயமோகன் Quotes

தன்னிலை என்பது நாம் ஏற்று அணிந்துகொள்ளும் அடையாளம் அல்ல. நம்மில் உருவாகிக்கொண்டே இருப்பது. அழிந்து அழிந்து உருவாவது. [அத்வைத மரபின்படி ஒருவன் முதல்முழுமையின் பகுதியாக தன்னை அறுதியாக உணர்வதே முழுத்தன்னிலை. அதைக் கடந்து சென்று தன்னிலையழிவது வீடுபேறு]
- ஜெயமோகன் [இந்து என உணர்தல்- ஒரு கடிதமும் பதிலும்]

இங்கு நிகழும் நன்றுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது ஆணவம். தீதுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது மேலும் ஆணவம். இங்கு உங்களை எதிர்த்து நின்றிருப்போரின் வாழ்வை நீங்கள் அமைத்தீர்களா என்ன? இங்குவரை அவர்கள் தெரிந்து வந்தமைந்த வழியை வகுத்தீர்களா? முடிவுக்கு மட்டும் நீங்கள் எவ்வண்ணம் பொறுப்பேற்கிறீர்கள் என்ற உங்கள் சொல்லை நான் தலைக்கொண்டவன்.

இங்கனைத்திலும் நிறைந்திருக்கும் அழிவற்ற ஒன்றின் அலைகளே இவையென்று உணர்ந்தவன் துயரோ களிப்போ கொள்வதில்லை. எழுவதே அமையும். எரிவதே அணையும். எனவே இருமைகளற்று துலாமுள் என நிலைகொள்பவனுக்கு சோர்வென்பதில்லை என்றது உங்கள் மெய்வேதம்.
-ஜெயமோகன் [வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை-54]

ஆக, நான் முன்வைப்பது ஒரு முக்கியமான வேறுபாட்டை. போலிக்கும் அசலுக்குமான வேறுபாட்டை. உண்மையான கருத்தியல் நிலைப்பாட்டுக்கும் உள்நோக்கம் கொண்ட வெறுப்புக்குரலுக்கும் இடையேயான மாபெரும் தூரத்தை.

இந்நிலையில் செய்யக்கூடியது இந்த உண்மையை முடிந்தவரை உரத்துக்கூவுவதுதான். அதற்கு ஏதேனும் விளைவுகள் வருமென்றால் அதைச் சந்திப்பதுதான். அப்படி உரத்துக்கூவ முதன்மையான தகுதி நம் மடியில் கனமில்லாமல் இருப்பது. நமக்கு சுயலாப நோக்கங்கள் இல்லாமல், அவை பறிபோகுமா என்ற அச்சமில்லாமல் இருப்பது. அது எனக்கிருப்பதாக நம்புவதனால் இதைச் சொல்கிறேன்.
-ஜெயமோகன் [அவதூறு செய்கிறேனா?]

நான் எப்போதும் சொல்வதுதான் , ஒருவாழ்க்கையில் பல வாழ்க்கைகளை வாழ்பவனே வாழ்வை பொருள்கொள்ளச் செய்பவன். மெய்யாக வென்றவன் அவன். ஆனால் அவனுக்கு அறைகூவல்கள் மிகுதி. ஆகவே சோர்வும் கொந்தளிப்பும் மிகுதி. அவன் தன்னை மீண்டும் மீண்டும் தொகுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வரையறை செய்ய வேண்டியிருக்கிறது. அதன்பின்னர் அதைக் கடக்க வேண்டியிருக்கிறது. அது சிந்தனையினூடாக நிகழவேண்டும்.
- ஜெயமோகன் [வரையறுத்து மீறிச்செல்லுதல்]


தனிப்பட்ட வாழ்க்கையில் உருவாகும் இடர்கள் கற்பதற்கும் மேலே செல்வதற்கும் தடைகள்தான். ஆனால் அதை நாம் கடந்தே ஆகவேண்டும் அதற்கான உளக்கருவிகள், வழிமுறைகள் ஒவ்வொருவருக்கும் ஒன்று அதை நாம் கண்டடையவேண்டும். சிலருக்கு பிரச்சினையில் இருந்து மானசீகமாக விலகிக்கொள்வது, சிலருக்கு அதை சிறுகச்சிறுக எதிர்கொள்வது, சிலருக்கு அதை வேறு ஒன்றாக கற்பனைசெய்துகொள்வது. ஆனால் விலகியாகவேண்டும் என்னும் உறுதியான எண்ணம் இருந்தால்போதும் - ஜெயமோகன் [இரு தொடக்கங்கள்]

எப்போது நாம் தத்தளிப்பின் எல்லையில் இனியென்ன என்று தவிக்கிறோமோ அப்போது நமது அந்தரங்கத்திலிருந்து அதுவரை நாமறிந்திராத ஓர் உள்ளொளி உதயமாகி நம்மை புதிய சாத்தியங்களின் வாசல்களை நோக்கி இட்டுச் செல்கிறது. அது தரும் தன்னம்பிக்கையும் துணிவும் என்றும் நமது வழித்துணையாக இருக்கும். சற்றும் எதிர்பாராதபடி ஓர் எரிமலை நம்முள் உடைந்து தீக்கங்குகளை உமிழும்போது, வானைத் துழாவும் தீ நாக்குகளை நாம் செயலற்றுப் பார்த்திருக்குபோது, அவ்வொளியில் புதிய தோற்றம் தரும் வானம், பிறகு நம் வாழ்வின் மிக இனிய நினைவுகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது.

– யதி & ஜெயமோகன்  [தும்பி]



வலியை எதிர்கொள்ள சிறந்த வழி என்பது வலியை கூர்ந்து கவனிக்க ஆரம்பிப்பதே. வலியில் நாம் நினைப்பவை எல்லாமே வலியுடன் தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன. எதையும் கூர்ந்து நோக்கும்போது நம்முடைய மனம் அதில் இருந்து மெல்ல விலகிவிடுகிறது. அதை வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கிறது. அந்த வேடிக்கை அவ்வனுபவத்தில் உள்ள அச்சம், துயரம், வலி போன்றவற்றை பெருமளவுக்குக் குறைத்து விடுகிறது

- ஜெயமோகன் [வலி]

மனிதர்களை எங்கும் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறோம். அவர்களின் அன்பு காழ்ப்பு சிறுமை பெருமைகளுடன். ஒன்றை வைத்து இன்னொன்றை எடைபோடாமலிருப்பது, ஒன்றைப் பெருக்கி இன்னொன்றைக் காணாமலிருப்பதுதான் பயிலவேண்டிய நிலை.

- ஜெயமோகன் [கொரோனா- கடிதங்கள்]

பாதைகள் இருப்பது மண்ணிலும் கால்களிலுமல்ல. அவை காற்றில் வானில் திசைகளில் இருக்கின்றன. அவற்றை மனம்  எதிர்கொள்ளும் சாத்தியங்களில் இருக்கின்றன. பாதைகள் ஏற்கனவே நுண்வடிவில் இருந்துகோண்டிருக்கின்றன. தயங்கி ஐயுற்று துணிந்து மீண்டும் அஞ்சி மெல்லமெல்ல மனிதன் அவற்றுக்கு மண்ணில் ஒரு பருவடிவத்தை அளிக்கிறான்.

பலகோடி பாதைகளின் பின்னல்வலையால் முற்றிலும் சூழப்பட்ட இந்தபூமி ககனவெளியில் திரும்பித்திரும்பி பிற கோளங்களுக்கு நன் பாதைக்கோலத்தின் அழகைக் காட்டியபடிச் சுற்றி வருகிறது. பிரபஞ்சத்துக்கு அப்பாலிருந்து பார்க்கையில் கோள்களின் மீன்களின் மாபெரும் பாதைவலையே பிரபஞ்சமென்று தோன்றுமோ?

அப்படியே இருக்கட்டும் இந்தப்பாதை. அதன் மறுநுனியில் நானறிந்த அனைத்துமே இன்னும் மேலானதாக மேலும் மகத்தானதாக இருக்கட்டும். பாதை ஒரு  வாக்குறுதி, வெளியே திறந்த வாசல்.

-ஜெயமோகன் [குன்றுகள்,பாதைகள்]


நான்கு வினாக்களை கேட்டுக்கொள்ளவேண்டும். 

1. எதைச் செய்தால் நான் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருப்பேன்? 

2. எதைச்செய்ய என்னால் முடியும்? 

3. அதில் எனக்கிருக்கும் தடைகள் என்ன? 

4. அதைச்செய்வதற்கான திட்டங்கள் என்ன? 

தொடங்குங்கள். வாழ்நாள் முழுக்கச் செல்லுங்கள். அப்படி தொடங்குவது ஒரு பிறப்பு. அது ஒரு பிறந்தநாள் சூளுரை. அது ஒன்று போதும்.

-ஜெயமோகன் [புத்தாண்டுச் சூளுரை]

ஆகவே உங்களிடம் நான் என்ன சொல்வேன்? 

உங்களால் அரிது என்று மலைக்கப்படும் ஒரு செயலை இன்றே செய்ய தொடங்குங்கள்.

- ஜெயமோகன் [இருத்தலின் ஐயம்]

வாழ்வதன் அகலம் அல்ல, வாழ்வதன் ஆழமே முக்கியம்

நான் ஏன் செயலாற்ற வேண்டும் இந்த இனிமை போதுமே என்று கேட்கலாம். செயலாற்றுவதன் மூலம நாம் அடைவது தன்னிறைவு. செயல் போல் நிறைவளிக்கக்கூடியது ஏதுமில்லை. செயல் என்பதே நம்மை மற்ற உயிர்களிடத்தில் இருந்து பிரித்து காண்பிப்பது. செயலின்மை என்பது இனிய மது. செயலாற்றவே நாம் மனிதனாக பிறந்துள்ளோம். உண்மையில் எதையாவது செய்ய ஆரம்பித்து அதன் சவால்களைச் சந்தித்து அச்சவால்களைத் தூண்டுவது போல் சிறந்தக் கல்வி என ஏதுமில்லை. அது மிக மிக கூர்மையான கல்வி. அது செயல்முறைக் கல்வி. நமக்குப் பிடித்த தளத்தில் செயலாற்றுவதுதான் யோகம். அது நம்மை கண்டடையும் வழி. நம்மை முழுமைப்படுத்தும் வழி. வாழ்க்கை வெல்வதற்கும் நிறைவதற்கும் உரியது. பத்திரமாக பதுங்கி இருப்பதற்குரியதல்ல.

-ஜெயமோகன் [சரியான வாழ்க்கையா?] [தன்மீட்சி- கடிதம்]

நான் விதைக்குள் வாழும் அழியா நெருப்பு

அறத்தின் முன், ஊழின் முன், தெய்வங்களுக்கு முன் தணிவதே நாங்கள் கற்றாகவேண்டியது. இரக்கத்தை அடையும் அசுரன் தேவனாகிறான்.

சிறிய குன்றுகள் வழியாக நான் ஏறும் மாமலை ஒன்று இருக்கிறது.

அதாவது சகோதரா, சின்ன விஷயங்களில்தான் நமக்கு உடனடி வெற்றிகள் கிடைக்கும். சின்ன விஷயங்களில் உள்ள சின்னச்சின்ன சந்தோஷங்கள் நமக்கு மட்டுமே உரியவை. அவைதான் நமக்கு அன்றாடம் ருசிக்கத்தக்கவையாக இருக்கும். பெரிய விஷயங்கள் மலைகளைப்போல பக்கத்தில் இருந்தாலும் நாம் நெருங்கநெருங்க விலகிவிலகிச் செல்லக்கூடியவை. அவற்றை நெருங்கியதும் நாம் மிகமிகச் சிறியவர்களாக ஆகி மறைந்துவிடுவோம். பெரியவிஷயங்களில் உள்ள துன்பமும் ஏமாற்றமும் பிரம்மாண்டமானவை. அவற்றில் உள்ள வெற்றியும் மகிழ்ச்சியும் பல்லாயிரம்பேரால் பகிர்ந்துகொள்ளப்படும்.

ஆனாலும் பெரியவிஷயங்களை நோக்கிச் செல் என்றே நான் சொல்வேன். பெரியவிஷயங்களைச் செய். அல்லது பெரிய விஷயங்களுக்குப் பக்கத்திலே இரு. ஏனென்றால் அவைதான் சரித்திரம்…சரித்திரத்திலே பங்கெடுக்காத வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. அப்படி வாழ்ந்து சாகிறவர்கள்தான் கோடிக்கணக்கானவர்கள். அவர்களெல்லாம் இதோ இந்த கங்கையில் வெடித்து அழியும் குமிழிகள்… நாமெல்லாம் போய் மறைவோம். சரித்திரம் மட்டும் எஞ்சும்
-ஜெயமோகன் [பிழை, சிறுகதை]


ஆனால் எந்த துறையிலும் முதன்மையாளர்கள் என்பவர்களுக்கு ஒரு தகுதி உண்டு, அவர்களின் நீண்டகால அர்ப்பணிப்பு. ஒன்றை தெரிவுசெய்து அதில் தன்னை முழுதளித்தல்.  நான் செய்வதுபோல ஒரு கரு அமைந்ததுமே கையில் வடிவம் உங்களுக்கு வரவேண்டுமா? என்னைப்போல நாற்பதாண்டுகள் ஒவ்வொருநாளும் குறைந்தது எட்டு மணிநேரம் முழுக்கவனத்துடன் வாசியுங்கள், எழுதுங்கள், ஓர் ஆண்டுக்கு பத்தாயிரம் கிலோமீட்டருக்கு குறையாமல் உலகைப் பார்ப்பதற்காக மட்டுமே பயணம் செய்யுங்கள், நீங்கள் மதிக்கும் அத்தனை பேராளுமைகளையும் எந்த தயக்கமும் இல்லாமல் சென்று பாருங்கள், ஆணவத்தை முழுமையாக கழற்றிவிட்டு காலடியில் அமர்ந்து கற்றுக்கொள்ளுங்கள். 

பிற தளங்களில் வெற்றியும் பணமும் புகழும் உள்ளது, நாலுபேர் மதிக்கும்படி இருக்கவேண்டும் என்பதுபோன்ற சபலங்களை கடந்து உங்கள் கலைக்கு உங்களை அளியுங்கள். அதன்பின் முயலுங்கள்.
- ஜெயமோகன் [’மாஸ்டர்’]

இந்த உடல் அதன் வடிவம் மூலம் உங்களுக்கு
ஒரு கடமையை விடுக்கிறது. செயலாற்றுக.
ஒரு சவாலை விடுக்கிறது. வென்று செல்க!
- ஜெயமோகன்

அத்திமரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைகாலம் நெருங்கிவிட்டதென்று அறிந்துகொள்வீர்கள். வேர்கள் காயும் கோடையில் புதிதெனத் தளிர்க்கும் மரங்கள் மட்டுமே அறியும் அவன் ரகசியம்.

வலியைப்பற்றிய அச்சமளவுக்கு பயங்கரமானதல்ல வலி. வலியைத் தாங்கமுடியாது என்ற கற்பனையே பொய். வலியைத் தாங்கமுடியும். மனிதனால் மிகமிகக் கடுமையான வலியைக்கூட தாங்கமுடியும். அதை உணர உணரத்தான் சித்ரவதைமுறைகள் மேலும் மேலும் கடுமையாகின்றன. அவை அப்படிக் கடுமையாக ஆவதிலிருந்தே மனிதன் வலியை வெல்கிறான் என்று தெரிகிறது. 

இதோ என்னைப்போல. நானும் வலியை வென்றிருக்கிறேன். என்னாலும் முடியும்… அந்த வெற்றியுணர்வு என்னைப் பூரிக்கச்செய்தது. என்னைப்பற்றி எப்போதும் உணராத பெருமிதம் உருவாயிற்று
- ஜெயமோகன் [கன்னி நிலம்]


எந்த பித்துக்கும் ஆட்படாத உள்ளம் கொண்டவர்கள் ,ஜாக்ரதையானவர்கள், இழப்பே இல்லாதவர்களாகவும் எங்குமே உரசிக்கொள்ளாதவர்களாகவும் மறுகரைக்குச் சென்றிருப்பார்கள். அவர்கள் அடைந்தவை என ஒரு சில கணங்கள்கூட இருக்காது. அவர்கள் வாழ்ந்திருக்க மாட்டார்கள், வெறுமே கடந்து சென்றிருப்பார்கள். அதற்காகவா வந்தோம்? 


பெருஞ்செயல் என்றால் பெருங்கனவின் நடைமுறை வடிவம். கனவு ஒட்டுமொத்தமானது.செயல் அதன் துளிகளால் ஆனது. துளிகளில் மனம் ஊன்றி தொடர்ச்சியாகச் செய்துகொண்டே இருக்கவேண்டியது. ஒட்டுமொத்தம் நம் கனவில் இருக்கிறது. ஆழத்தில் நாம் அறியாமல் உறைகிறது. துளிகளில் நாம் முழுமையாக வெளிப்பட்டோம் என்றால் ஒட்டுமொத்தம் ஒத்திசைவுடன் தன்னை நிகழ்த்திக்கொள்வதைக் காண்போம்

நான் ஒன்றைக் கண்டுகொண்டேன். 
அச்சம்தான் சித்ரவதையின் முக்கியமான கருவி. 
அச்சத்துக்கு ஆட்படாமலிருந்தாலே பாதி வென்றது போலத்தான். 
ஆனால் அச்சம் நம்மை மீறுகிறது. 
அதை வெல்ல ஒரே வழி அதை உதாசீனம் செய்வது. 
உதாசீனம் செய்யச் சிறந்தவழி பிறிதொன்றைக் கவனிப்பது…
- ஜெயமோகன் [கன்னி நிலம்]


ஆவேசமான ஒரு காதல் நம்மிடம் எப்போதும் ஊறிக்கொண்டே இருக்க வேண்டும். அந்தக் காதல் எப்போது இல்லாமலாகிறதோ அப்போது நம்முள் உயிர்ச்சக்தி இல்லாமல் ஆகிறது என்று பொருள்.
- ஜெயமோகன் [லோகி 1..காதலன்]

ஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக!
- ஜெயமோகன்

December 20, 2017

[கவிதை] கோபுரத்திற்கெல்லாம் ராஜமாதா ராஜகோபுரம்



ராஜகோபுரம்
கோயிலுக்கு என்று சென்ற போது
நான் முதன் முதலாய் கண்டது ராஜகோபுரம்
நீ அளித்த உவகை என்னை உன்னிடம் அழைத்தது
உன் பாதம் தொட்டு
வணங்கி செல்லாமலில்லை

கோயிலுக்குள்ளே சென்று நான்
பல  பரிவார மூர்த்திகளை
கண்டேன் தொழுதேன் நகர்ந்தேன்
கற்பகரகத்தை வணங்கினேன்
சிறுதெய்வங்களும் இருந்தனர்
ஆனால் அவைகள் பலர் கண்ணுக்கு தெரியவில்லை
கற்பகரகத்தில் இருந்து தினமும் பார்க்கிறேன்
ஆதலால் எனக்கு தெரிகிறது

பிரகாரம் சுற்றியப்பின்பு வந்து அமர்ந்தேன்
பிறரை போல் நான்
அண்ணாந்து பார்த்தது உனைதான்
உன் அடித்தளம் கண்டு வியந்தேன்
நீ நூற்றாண்டுகளாய் தாங்கும்
பெரும் பாரம் பேசி முடியாது
ஆனால் அழாமல் நீ அழகாய் இருக்கிறாய்

மற்ற சந்நிதிகள் கோபுரம் கொண்டாலும்
ராஜகோபுரத்தை நின்று பார்க்காதவார் உண்டோ?
நீ வான்நோக்கி எழும் பொழுது
சிற்பங்கள் உன் மீது எழுந்து அமர்ந்தது
பல மலர்கள் கொண்ட வெட்சி பூ ஏறி
கலச மகுடமாய் அழகு சேர்த்தது

மனிதர்ளாயினும் தெய்வங்களாயினும்
உன்னை தாண்டியே வரவேண்டும்
அதுவே உனக்களித்த சிறப்பு
கோபுரங்களுக்கெல்லாம் "ராஜமாதா" நீ
அதுவே உன் பேறு ராஜகோபுரம்

அவசரத்தில் செல்வோரும்
உனை பார்த்து மலைத்து
ஒரு கணம் வணங்கி
உன்னை மெச்சாதவர் உண்டோ?

உன் பெருமை கேட்டாயே ராஜகோபுரமே
மூலஸ்தானமாய் நின்று எனக்கு கிட்டாத
புகழும் உனக்கு கிட்டுகிறது
என்று சொல்வதில் மகிழ்ச்சியே

ஆயினும் நீ அழுவதை கண்டால் எனக்கு
விரக்தியாய் உள்ளது
கேள் ராஜகோபுரமே கேள்
உன் முதல் தளத்தில் நின்றுகொண்டு
மற்ற பரிவார மூர்த்திகள் கோபுரங்கள்
உயர்வாய் உனக்கு தெரிந்தால்
உன் உயரம் உனக்கு எப்படி தெரியும்!!
ராஜகோபுரம் மட்டும் இருந்தால்
கோயில் அவ்வளவு அழகில்லை
என்பதையும் அறிக நீ
கோயிலின் விளிம்பில் இருக்கிறேன்
என்று நினைக்கிறாய்
என்னில் முதல் படி நீ
என் அங்கம் நீ
நீ இல்லாமல் கோயிலை யார் அறிவார்?

- ராஜேஷ் (19 டிசம்பர் 2017)

April 15, 2017

ஏழாம் உலகம்

==================================================================
==================================================================
அன்புள்ள ஜெ,

நலமா?

தங்களின் சங்கச்சித்திரங்களை சிறிது சிறிதாக வாசித்தேன். நல்ல வாசிப்பாகவும், சங்க பாடல்களை எப்படி பார்க்க வேண்டும் என்று தெரிந்துக்கொண்டேன். உங்களின் திருக்குறள் பற்றிய உரைகளையும் யூடிபில் கேட்டேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஏனெனில் நான் அவ்வப்போது திருக்குறளை புரிந்துக்கொள்ளவேண்டும் என்று ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு குறள் என்று சுழற்ச்சி முறையில் வாசித்துக்கொண்டு இருக்கிறேஏண். நீங்கள் ஒரு இடத்தில் கூறி இருப்பீர்கள் ஒவ்வொரு சொல்லுக்கும் பல பொருள்கள் இருக்கும். அதனை அறிந்துக்கொண்டு படித்தால் திருக்குறள் இன்னும்  நன்றாக புரியும் என்று. அவ்வாறே கடந்த மூன்று ஆண்டுகளாக agarathi.com உதவியுடன் படித்து வருகிறேன். துவக்கத்தில் கடினமாக தான் இருந்தது. ஆனால் பிற்பாடு பொறுமையாக படித்தாலும் நன்கு படிக்க முடிந்தது.  இப்படி படிப்பது வீண் வேலையோ என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் உங்களின் உரை கேட்டப்பின்பு அது சிறந்த முறையில் ஒன்றே என்று தெரிந்துக்கொண்டேன். நன்றிகள்.

ஏழாம் உலகம்


சில ஆண்டுகளுக்கு முன் ஏழாம் உலகம் நாவலை வாங்கினேன். ஆனால் படிக்க ஒரு ஐயப்பாடு இருந்துக்கொண்டே இருந்தது. ஏனெனில் அது ஒரு இருண்ட உலகம், அதற்கு தேவையான நுண்வாசிப்பு என்னிடம் இல்லை என்ற எண்ணங்கள் என்னை தடுத்தன. கடந்த ஒரு வாரமாக வாசித்தேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாவலை ஒரு தடவை வாசித்துள்ளேன். ஆதலால் நான் புரிந்துக்கொண்ட அளவு தொகுத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.

நாவலின் துவக்கமே (30 பக்கத்திற்குள்) எனக்கு ஒரு உவப்பிலாத உலகத்திற்குள் செல்லும் உணர்வு இருந்தது. கீழே வைத்து விடலாம் என்றேன் தோன்றியது. அதுவும் ஒரு இடத்தில் எருக்குக்கு பெருமாள் தாலி கட்டும் இடம். பின்பு இன்னும் ஒரு 50 பக்கம் படித்தேன். அதன் பின்பு என்னால் அந்த ஏழாம் உலகம் சொல்ல வருவது புரிந்துக்கொள்ள முடிந்தது. நாம் வாழும் உலகையும் புரிந்துக்கொள்ள முடிந்தது.

நாவலின் பிற்பகுதியில் மண்ணுக்கு கீழ் உள்ள ஏழு லோகங்கள் அதலம். விதலம். நிதலம், கபஸ்திமல், மகாதலம், சுதலம், பாதளம் உண்டு அவை அனைத்தும் நம்மை சுற்றியே இருக்கிறது. ஆனால் நாம் அதை பார்ப்பது இல்லை. பழனி மலைக்கு படியேறி போறவங்க கூட எல்லாதையும் பாத்துட்டு சும்மா போகிறார்கள் என்று.  முருகனுக்கு அரோகரா என்று கூறுகிறார்கள். அதுபோல எருக்கை ஒரு துணியில் போட்டு அந்த மல வண்டியில் போடுகிறான். வண்டி அதிர்கிறது. எருக்கி மீது சாக்கை எடுத்து மூடுகிறான். ஆனால் இந்த வண்டியைப் பார்க்கும் எவரும் மறு முறை பார்க்காமல் பதறி விலகுகிறார்கள்.  இது போல நாம் வாழ்வில் நம்ம சுற்றி இருக்கிற உலகை பார்க்க மறுக்கிறோம். பொருள் அல்லவற்றை பொருள் என்று எண்ணி அதன் பின் ஓடுகிறோம். 

பழனிக்கு பல முறை சென்றதுண்டு. ஆனால் பழனியை இப்படி பார்ததது இல்லை. எல்லாவற்றையும் செய்து விட்டு சாமி சாமி என்று சொல்லும் எளிய மனிதர்கள். பாவிகளுக்கும் அதே சாமி, பிச்சக்காரணுக்கும் அதே சாமி, திருடனுக்கும் அதே சாமி. எளிய மனிதர்கள். ஒரு கையும் இரு கால்களும் இல்லாத மாங்காண்டி சாமியை கண்டால் ஐஸ்வர்யம் என்று நினைப்பவர்கள், தினமும் ஒரு காசாவது போடவேண்டும் என்று நினைப்பவர்கள் என்று அந்த பழனி மலை. அங்கே மக்கள் காசு பொடுவதும் ஒரு வணிகமாக சித்தரிக்கப் படுகிறது. பிச்சைக்கார்ர்களைப் பார்க்கும் போது ஐயோ என்பது. பின்பு நமக்கு இல்லையே என்று ஆறுதல் படுத்திக்கொள்வது. அதற்கு நன்றி சொல்லிக்கொள்வது என்று காசு போடுவது. கீழ்மைகள்.  இந்த பழநி மலை உண்மையில் ஒரு திருத்தலம் என்று கருதுகிறோம். ஆனால் தைப்பூசம் முடிந்தப்பின்பு அது ஒரு குப்பை குவியலாய் நாறுவது மனிதர்களை பற்றியே உணர்த்துகிறது. நம்ம மனதில் உள்ள குப்பைகளை பழனி என்ற குப்பை கூடையில் போடுகிறார்களோ என்று தோன்றியது.  ஆதலால் தான் என்னவோ (கேரளாக்கு கொச்சன்) எல்லா வருஷமும் போனாலும் ஒரு சாமிக்கும் இவர்களை அறியவில்லை. அந்த கோவிலில் (பல கோவில்களில்) நடக்கும் அபத்தமும் நன்றாக கூறப்பட்டு உள்ளது. வெளியுலகத்து தான் மரியாதையான கோவில் வேலை, மற்றபடி செய்வதெல்லாம் அறம் அல்லாதவைகள். கை நீட்டினாலும் அதும் எரப்பாளித் தனம்தான். மந்திரம் சொல்லி துண்ணூறுவாரிக் கொடுத்து கைய நீட்டினாலும்  கணக்குதேன்...  அந்த ஆறடிக்கல்லுக்கு ஆயிரம் வருசமா கழுவி சந்தனம் போட்டு பூ போட்டு கும்பிட்றது ஒர் தொழில் - அதுபோல முத்தமை பண்டாரத்தின் தொழிலுக்கு மூல தனம். 

இருந்த இடத்தில் சோறு கிடைக்கும் பழனியில் உருப்படிகளை காண்பிப்பது எல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. அடுத்த பக்கம் போலாமா வேண்டாமா என்றே எண்ணித் திருப்பினேன்.  அங்கே ஓரு உருப்படியும் ஒவ்வொரு ரகம். மலமும் மூத்திமும் நாறும் இடத்தில் பன்னிக மாதிரி திங்குவதும் தூங்குவதும். .. கடைசியில் அவர்கள் எலை போட்டு சோறு திங்குவதற்கு காத்துகிடப்பது. குய்யன் கல்யாண் சாப்பாடு இல்லை என்ற உடன் வருத்தம் கொள்ளும் இடம், பிறகு சாக துணியும் இடங்கள் அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை.

பண்டாரம் எல்லாவற்றையும் செய்யும் பொழுதும் முருகன் துணையிருப்பான் என்று கூறுகிறான்..ஆரம்பத்தில் எல்லாம் பழனியாண்டிக்க கணக்கு... கணக்கறிந்தவன் அவன். ஞானபண்டிதன் என்கிறான்.  ஆனால் பண்டாரம் செய்யும் தொழில் உடல் உணமூற்றோர்களை வாங்கி, விற்று, பிச்சை எடுக்க வைத்து செய்யும் தொழில். பண்டாரம் இந்த உருப்படிகளை பிச்சை எடுக்க வைத்து சோறு போடுவதே அவர்களுக்கு ஒரு வித நல்லது .. இல்லை என்றால் யார் இவர்களை பார்த்துக்கொள்வார்கள் என்ற நினைப்பு.  பண்டாரம் செய்வதும் முதலாளித்துவம் தான். ஒரு குமாஸ்தா மூளையை விற்பது போல, தேசம் மனிதற்களை விற்பது போல. மனுசனை மனுசன் விக்காம் பணம் இல்லை என்ற இடங்கள் நன்றாக இருந்தது. பண்டாரம் இப்படி செய்கிறான் என்றால், உலகில் பல மக்கள் தந்திரத்தால் எப்படி காரியம் சாதிக்கின்றனர் என்பதை கூறும் இடங்கள் - உதாரணமாக -  ஒருத்தன் அடித் தொண்டையில நிதானமா பேசினாலே அவன் புத்திசாலின்னுஜனம் நினைக்கும். 

பின்பு தன் மகளுக்கு வளையல் வாங்கும் பொழுது அந்த இடத்தில் சுத்தியால் ஒரு குழந்தை அடிகிறார்கள். ஆனால் வளையலை வாங்கிவிட்டு செல்கிறான்... குடும்பவாழ்வில் கலியாணம் செய்து வைத்து பிள்ளைக்கு அப்பாவாக பொறுப்பாக பாசமாக இருந்தாலும், அவன் மனது அவனை அலைக்கழிக்கிறது. பண்டாரம் எல்லாவற்றையும் செய்து விட்டு நான் ஒருத்தனுக்கு துரோகம் நினைக்கவில்லை, ஒருத்தனையும் ஏமாத்தினதும் இல்லை என்பது எல்லாம் வெளியே சொல்லிக்கொள்ளும் சமாளிப்புகளே. உண்மையில் அவன் அகத்திற்கு தெரியும் அவன் செய்வது தவறு என்று. சில இடங்களில் அவன் நட்சத்திரங்களை பார்க்க முற்படுகிறான். ஆனால் அதை பார்க்க முடியவில்லை. கண் கூசுகிறது. அவன் செய்யும் தவறுகளை யாரோ பார்க்கிறார்கள் என்ற குற்ற உணர்வு. தன்நெஞ்சே தன்னைச் சுடும் என்பது போல.  
  
முத்தமைய பற்றி சொல்லமால் இருக்க முடியாது. அவளுடைய முதற்காட்சியே கொடூரம் என்று சொல்வேன்.  பண்டாரம் முத்தமையை அந்த நிலைமையிலும் பலபேருடன் புணர வைத்து அவளை ஒரு முட்டையிடும் கோழியாக சித்தரிப்பும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.   பதினேட்டு  பெற்றும் எதுவும் அவளுடன் இல்லை என்று கஷ்ட படுகிறாள். ஒற்றை முலை தான் இருந்தாலும் அவளுடைய தாய்மை சற்றும் குறையவில்லை. அவளது குழந்தையின் சிறுநீரு பட்ட உடன்.. எங்க மகாராஜல என்று சொல்லும் இடங்கள். (அந்த இடத்தில் குழந்தை பிரிக்கிறான் பண்டாரம். நட்சத்திரங்களை தன்னை அறியாமல் பார்க்கும் பொழுது அவனுக்கு கூசு கிறது. குடையை விரித்துக்கொள்கிறான். பாவங்களை இப்படித்தான் மறைத்துக்கொள்கிறார்கள். ) .. அது போல சணப்பியிடம் உரையாடும் இடங்களில். பிள்ளைகளை வெறுக்க முடியாது... முலைகளில் வாய் வச்ச பின்பு அது அம்மாண்ணு விளிப்பது மாதிரி இருக்கும் - பிறகு வெறுக்க முடியாது.  அது போல. குழுந்தை கூனும் குருடுமாக இருந்தாலும் பிள்ளையை மயிருனு சொன்னா அவள் கோபம் கொள்வதும். 

நான் சற்று நேரம் பின்பு கடந்த மற்ற சில இடங்களை சொல்ல வேண்டும்.1) நம்மள மாதிரி சாதாரண ஆத்மா நம்மளை மாதிரி இன்னொரு ஆத்மாவ மதிக்கணும், சினேகிக்கனும். 2) சீவன் கூனன் சீவனாட்டு மாறுமா என்ற இடத்தில்.. பீல எரியிர தீயும் சந்தனக் கட்டைல எரியர தீயும் நாத்த குப்பைல எரியிர தீயும் ஒன்னு தான் 3) அப்பன் குழந்தையை தொட்டு பார்க்கும் ஏற்படும் சுகம் அந்த மணத்தை மோந்தவன் செத்தாலும் மறக்க மாட்டன் 4) கூன்குருடு செவிடு நீங்கி பிறத்தலரிது. பிறந்தாச்சு. பின்ன என்ன? என்ற் இடமும் 5) ஓட்டு இல்லாதவன் முனிசிப்பாலிடி கேஸ் என்ற இடம் (லா அண்ட் ப்ரொசீஜர்) 6) எல்லோருக்கும் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான காலம் குழந்தைகள் வளர்ந்து வரும் காலகட்டம்தான்

இன்னும் சில நாட்கள் இந்த ஏழாம் உலகத்தில் தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். அப்படியே தொகுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். யோசித்த்ப்பார்த்தால், நான் பல இடங்களை தவறவிட்டிருப்பேன். மறுவாசிப்பில் வாசிப்பும் மனதும் இன்னும் விரிவடையும் என்று நம்புகிறேன்.

Image result for ezham ulgam
எழுத்தாளர் ஜெயமோகன்

நன்றிகள்!! இதனை திரைப்படம் ஆக்கிய பாலாவிற்கும் நன்றிகள்! 

அன்புடன்,
ராஜேஷ்  

January 28, 2017

கிருஷ்ணா கிருஷ்ணா!!

அன்புள்ள வணக்கத்திற்குரிய திரு.இந்திரா பார்த்தசாரதி ஐயா அவர்களுக்கு,

நமஸ்காரங்கள்!

தாங்கள் நலமா?

முதல் முதலாக 2014இல் தங்களின் ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன குறுநாவலை வாசித்தேன். அப்பொழுது தான் நான் வாசிக்க துவங்கியிருந்தேன். நல்ல வாசிப்பு அனுபவமாக அமைந்தது.


Image result for krishna krishna indira parthasarathy


கடந்த ஒரு வாரமாக கிருஷ்ணா கிருஷ்ணா குறுநாவலை வாசித்தேன். கிழே வைக்க மனமில்லாமல் கிழே வைத்து வைத்து வாசித்தேன். கிருஷ்ணனை இப்படி எல்லாம் இதன் முன் பார்த்தது இல்லை நான் . மிக நல்ல திறப்பாக அமைந்தது. கிருஷ்ணன் மூலம் சொல்லப்படும் மாற்றம், மரணம், செல்வம், அதிகாரம்,பயம், உடல், காதல், காமம், பாசம், நட்பு, பெண்ணியம் (இன்னும் பல), பற்றி கூறுவதை ரசித்தேன்.

தர்மம், அதர்மம் பற்றி பல இடங்களில் வருவது மிகுந்த தெளிவாக இருக்கிறது. அன்றே விதிகளை ஆட்டதிற்கு ஏற்ப கிருஷ்ணன் மாற்றிக்கொண்டான். ஆஹா Reinvention என்ற buzz wordக்கு கிருஷ்ணனே வழிகாட்டி!! 

அதே போல் ராமன், கர்ணனை சுற்றி இருந்த துன்பியல்கள் கிருஷ்ணனை சுற்றியில்லை. கிருஷ்ணன் என்றால் கொண்டாட்டம். கிருஷ்ணனே அவ்வதாரத்தின் செய்தி என்று முதலில் குறிப்பிட்டது நினைவில் வந்தது. 

பின்பு கடைசியில் ராதவிற்கும் கிருஷ்ணன்னுக்கும் ஆன காதலை பற்றி சுறுக்கமாக சொன்ன இடங்களையும் ரசித்தேன்.

கிருஷ்ணா கிருஷ்ணா மொத்தத்தில் எனக்கு இப்பொழுது தேவை பட்ட ஒரு நல்ல வாசிப்பாக இருந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

நன்றி.

அன்புடன்
ராஜேஷ் பாலசுப்ரமணியன்


January 08, 2017

பெருமழை

எத்தனை வகையான மழை, இந்த ஒரே கவிதைக்குள்! முதலில் கரிய வேங்கை மரத்தில் வண்டுகள் மொய்ப்பது போல ரீங்கரிக்கும் இளம் மழை. பின்பு மலைச்சரிவுகள் அதிரும் யானைப் பிளிறல் போன்ற பெருமழை. கடல் முழுக்கக்  குடித்து உமிழும் மழை. மண்ணை மூடும் நீலமணி அருவி . இடிநாதம் சேவை செய்ய ஊர்வலம் வரும் மழை. 

இந்த உக்கிரமழை ஒரு காத்திருப்பின், எதிப்பார்ப்பின், ஒரு கற்பனைக் கூடலின் பேருருவம். எல்லா அலங்காரங்களும் கட்டுப்பாடுகளும் அறுந்து தெறிக்கும் வெறிமழை. அப்படிப்பட்ட ஒரு மழையில்தான் யுகங்களாக மண்ணில் பதிந்து, மௌனத்தின் பரு வடிவங்களாக ஆன மாமலைகள் தங்கள் ஒளி காக்கும் கண்களைக் திறக்கும் போலும். உறவை அப்படி அதன் உக்கிரத்துடன் அறிய வேண்டும். பிறகு நாசூக்கான மௌன மழைகள் வம்மை நினைப்பதில்லை. வாழ்க்கையில் எது முக்கியம் என்ற கேள்விக்குப் பிறகு இடமே இல்லை. 

நற்றிணை - 112. குறிஞ்சி
பருவ வரவின்கண்ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது. 
விருந்து எவன்செய்கோ- தோழி!- சாரல்
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச்
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு,
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்
பெருங் கல் நாடன் வரவு அறிந்து, விரும்பி,
மாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித்
தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய்,
மலை இமைப்பது போல் மின்னி,
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே?
               -  பெருங்குன்றூர் கிழார்

(எளிய வடிவில்)
அரும்புகள் முழுக்க விரிந்த
கரிய கால் கொண்ட
வேங்கை மரத்தில்
வண்டுகள் ரீங்கரிக்கின்ற,
மலைச்சரிவுகள் எதிரொலிக்க
யானை மத்தகம் பிளந்து
சிம்மம் உலவுகின்ற,
மாமலையின் அதிபன் வருவத்தைச் சொல்ல
பெருங்கடல் நீர் அள்ளி ,
நீலமணியருவியென
மண் நிறைத்து ஒழுகி,
மலை கண்ணிமைப்பதுபோல
மின்னல் ஒளிர
இடிமேளம் முழங்க
வரும் இந்த மழையை
எப்படி வரவேற்பது தோழி!

(நன்றி: ஜெயமோகன் / சங்கச்சித்திரங்கள்)

Related image

August 09, 2016

காடு வாசிப்பு எனக்கு ஒரு மீட்சியரிதாதல்

==================================================================
காடு நாவலை வாசித்தப் பின்பு நான் தொகுத்து/synopsis-ஆக ஒரு மடலாக நாவலாசிரியர் ஜெயமோகனுக்கு எழுதியது
==================================================================




அன்புள்ள ஜெ,

நலமா?

தங்களின் 'காடு' நாவலை முதலாவதாக  2-3 நாடகள் முன்பே வாசித்து முடித்தேன். நான் நீலத்திற்கு உள்ளே செல்லலாம் என்பதே என் திட்டமாக இருந்தது. ஆனால் காடு கொண்டு சென்ற வழி விரிந்து விரிந்து என்னை வழிதவறினேன். ஆதலால் நீலத்திற்கு முன்பு ஒர் இடைவேளையில் காடு-இனை தொகுத்துக்கொள்ள வேண்டும் என்று பின்வருமாறு எழுதியுள்ளேன். மிக நீளாமான மடல். மன்னிக்கவும்


காடு நாவலை நான் கிரிதரனின் பார்வையிலும், ஐயரின் பார்வையிலுமே அதிகம் அறிந்துக்கொண்டேன். மறுவாசிப்பில் இன்னும் பல திறப்புக்களை கண்டுக்கொள்வேன் என்று நினைக்கிறேன். மற்றவர் பார்வையில் இன்னும் அதிகம் பார்க்கவில்லை. அடுத்த வாசிப்பில் கண்டுக்கொள்வேன். காட்டில் பல தளங்களை காண்கிறேன். 


கிரியின் வாழ்வில் வரும் காதல் வேவ்வேறு காலங்களில் எப்படி இருக்கிறது. அவன் முதல் முதலாக  காட்டிற்குள் வரும் பொழுது காட்டின் மேல் கொள்ளும் காதலும், நீலியின் மேல் கொள்ளும் காதலும் அற்புதமான நேரங்கள். மொத்ததில் காட்டின் தீஞ்சுவை எனக்கு மீட்சியரிதாதல்

காதல் / காமம்

கிரி முதலாவதாக காட்டை காணும் பொழுது அப்பச்சை மரத்தடியில் அவன் கொள்ளும் எழுச்சியை போல அவனுள் இயற்கையான காதல் மலர துவங்குகிறது. பின்பு அது தீயின் துளி போல பெருகிறது. பின்பு காதலின் உச்சத்தில் பாறையின் மீது தகிக்கிறது. வழியில் காடு எப்படி பிரித்தறிய முடியாமல் மரங்களும் கொடிகளும் செடிகளும் உருவான  பச்சைப்பரப்பு. ஒர் இலைகளினாலான் ஏரி. அதில் கிரி முக்குளியிட்டு செல்கிறான். காதல் அதுபோலே பிரித்தறிய முடியாதது. ஆனால் இக்காடும் / காதலும்/ காமமும் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருப்பது. ஒவ்வொரு இடமும் பார்த்தது போலவே இருந்தாலும் புதிய இடங்கள். திசையற்ற இடம் காடு. ஆனால் மனிதன் அங்கே திசை தேடி அபத்தம் ஆகிறான். ஆனால் காட்டை கண்டவன் காட்டை விட முடியாது. அது போல காதலும் .  கிரி காட்டிற்குள் மீண்டும் நுழைப்பொழுது மிக சீக்கிரம் ஓடைப்பாறை அடைகிறான். மேலே செல்ல நினைக்கிறான். அப்படி செல்கையில் காடு தன் எல்லையை விரித்து விரித்து உள்ளே இட்டுச் செல்கிறது. அங்கே கிரி காட்டின் மீது இருந்த பயம் கிளர்ச்சி அடங்குகிற்து. காதலும் காமும் இது போலவே என்று எனக்கு படுகிறது. துவக்கத்தில் காதல் பரவசம் இருந்தாலும் அதில் மனிதன் திளைத்தாலும் அவன் மேலே போவது என்பது அவனுடைய எண்ணத்தை பொருத்தது. அப்படி எண்ணினால் காதல் கூட்டிச்செல்லும். ஆனால் காடு விரும்பினதால் கூட்டிச்சென்றது. 

அங்கே காட்டில் கிரியும்/ மனிதனும் அறியாத விஷயம் மீது மோகம் கொள்கிறான், காதிலிக்கிறான். அப்போது வானத்தை பார்க்கிறான். வானம்போல அவன் மனம் விரியமுடிகிறது. மனிதன் இயற்கையாக இருக்கும்பொழுது அவன் மனம் எப்படி இருக்கிறது. ஆனால் செயற்கையான நகரங்களில் மனைவியிடமும் காதலியிடமும் நம் மனம் நேரம் ஒதுக்கி பேசுகையில் எங்கே நமக்கு விரிவடைய முடியும்? .. அத்தகைய கணங்களில் மிக மெல்ல இரவெனும் தாபம் அவனுள் நிகழ்ந்தும் கொண்டு இருக்கிறது.

அதன் பின் மனுஷனுக்கு உள்ள தீ காமகுரோத மோகங்கள்.. அது காடு போல. இலைகள் தளிர்கள் வானை நோக்கி எழும் உயிர் உள்ளவரை. பின்பு மட்கியும் எரியும். காடு ஈவு இரக்கம் அல்லாதது. அங்கே பூக்கள் வசந்த காலத்தில் பூத்து அழிகிறது தடமே இல்லாமல்.  நம் மனமும் காதலும் எப்படி பட்டது. 


நீலியை கண்ட பின்பு ஓர் இடத்தில் அவர்களை தவிர காலமே இல்லாதது போல் தோன்றுகிறது. நினைவும் அறுபடவில்லை. அசையவுமில்லை. அதுபோல சிற காலம் நானும் இருந்து உள்ளேன் என்று என்னை அங்கு காண்கையில் ஒரு புன்னகை. ஆனால் இன்று யோசிக்கையில் அதை பற்றிய ஒரு சுவடு கூட என் நினைவில் பெரியதாய் இல்லை.  பின்பு கூறுகிறீர்கள் எப்படி அக்கணங்கள் கொந்தளிப்பாக இருக்கிறது. ஆனால் அனுபவம் முடிந்த மறுகணம் அதனை பகுத்துப்பிரித்து பார்க்கிறோம். எவ்வளவு உண்மை என்றே நினைத்துக்கொண்டேன். ஓர் இடத்தில் கிரி திட்டம் தீட்டுகிறான் பின்பு புதிய திட்டம் ஆனால் குட்டப்பனை கண்ட பின்பு அது ஒரு நினைப்பாகி விடுகிறது. நான் சில ஆண்டுகள் முன்பு ஒரு பெண்ணிடம் என் காதலை கூற முற்படுகையில் அவ்வாறு நடந்து உள்ளது. என்னுடன் பேரூந்தில் பயணிப்பாள். யாராவது வந்து விடுவார்கள். அல்லது மழை பெய்து விடும். சொல்ல வந்ததையே மறந்து விடுவேன். ஆனால் அப்போது அவளுடன் மழையில் சிறிது நேரம் உணவு உண்டாலும் - நீங்கள் குறிப்பிட்டு இருந்தது போல அது ஒரு பெரிய வெகுமதி.  பின்பு இதனை "தாண்டிச் சென்றபடியே இருத்தலை, இழந்தபடியே இருத்தலையே வாழ்க்கை என்கிறோம்" என்று குறிப்பிட இடமும் நன்று. 


அவன் காதல் முதிர்ச்சி அடையும் பொழுது அவள் வெறும் பெண். முடிந்துபோகும் என்று எண்ணி தன் எண்ணங்களை சாந்தப்படுத்திக்கொள்கிறான். நிதானமாக நடக்கிறான். ஆனால் அந்நிலைக்கு வர ஒருவனுக்கு ஒரு சிறிய காலம் தேவை படுகிறது. அங்கே ஓர் இடத்தில் கூறுகிறீர்கள் நிழல்கள் இடம் மாறியிருந்தன. அது போல காதலும் எப்படி நிறம் மாறுகிறது.  


ஐயர் ஓர் இடத்தில் சொல்கிறார் எல்லா பெண்ணிலும் அழகு இருக்கு. காட்டை ரசிகனும்னு நினச்சா நிம்மதியா இருக்கலாம். ஆனால் நீங்கள் சொல்லாமல் சொன்னது அதை (காட்டையும், பெண்ணையும்) அடைய நினைக்கும் பொழுது தான் ஆபத்து. கடைசியில் உனக்கு அகங்காரம் - தன்னை எல்லாரும் பேண வேண்டும் என்னும் எண்ணம். அது போல "காமம் காமம் என்ப காமம்" பாடல் மூலம் ஒரு ஒப்பீடு . காமம் கடைசி வரைக்கும் தீராத ஒரு விருந்து. காதல் என்னும் பழம் ஆதாம் ஏவால் காலத்தில் இருந்தே இருக்கிறது. அதாவது மனிதன் உருவான காலத்தில் இருந்தே காதலும் காமமும் மிக மிக இயற்கையான ஒன்று. அதனை செயற்கை படுத்த கூடாது. அதுபோல ஏங்கி உண்டால் பழத்தின் ருசியினை அறிய முடியாமல் ஆகிவிடும். உண்ணும் தோறும் ருசியும் வெறியும் ஏறும் என்னும் வரிகள!! பொதுவாகவே நீங்கள் குறுந்தொகை பாடல்களை குறிப்பிட்டு அகம் சார்ந்து நோக்கும் பார்வையில் நான் இது வரையில் அணுகியது கிடையாது. இந்நாவல் எனக்கு இன்னொரு திறப்பை கொடுத்தது என்றே சொல்லலாம். 


இருப்பினும் கிரி போல நானும் ஐயரால் எரிச்சல் அடைந்தேன். அவன் அவ்வளவு கற்பனையில் இருக்கும் பொழுது ஐயர் எளிதில் அதில் இருந்து விளகி மற்றொன்றுக்கு சென்று விடுகிறார். அவளின் அழகிற்கு விடுத்த அநீதி, தன் உணர்வுகளை சிறுமைபடுத்தியது போல. ஆனால் ஐயர் முதிர்ந்தவர் இதை போல பல நூறு பெண்களை பார்த்து இருப்பார் என்று நினைக்கும் பொழுது அது அவரது இயல்பு என்று படுகிறது. 


அது போல ஓர் இடத்தில் சொல்லுக்குள் வாழ்வதை அனுபவித்து பார்த்தால் தான் அறிந்துக்கொள்ள முடியும் என்பதனையும் ரசித்தேன். அது போல "மனம் அழகை உணரும் விதங்களின் மர்மங்களில் அலைக்கழிந்தேன்" என்னும் வரிகளில் பயணிக்கிறேன் இப்போது. நமக்கு ஏன் இப்படி எல்லாம் இதுக்கு முன்னாடி நடந்தது இல்லை. இப்ப எப்படி இதெல்லான் நடக்குது. அதுவும் நம்மலா இப்படினு நினைக்கும் பொழுது உண்மையாகவே மர்மமாக இருக்கிறது. 


நீலியின் பின்னால் அளவிட முடியாத பொன் காற்றில் குலுங்கி எழுந்தமர்ந்து (பொன்னைவிட ஒளி கொண்ட) பூக்கள் உதிர்கிறது. எவ்வளவு அழகான கற்பனை. அது போலவே அவள் பின்னால் காதல் உள்ளது என்றே எனக்கு படுகிறது. காதலே அங்கே பூக்களாக பொழிகிறது. ஆதலால் அவளே முக்கியமற்று இருக்கிறாள். .... ஆனால் "என்னால் அறிந்துகொள்ளவே முடியாத அளவுக்கு மகத்தான அபாயகரமான விஷயங்களின் விளிம்பில் உலவிக் கொண்டிருக்கிறேன் என்று நெஞ்சுக்குள் ஒரு சிறு அச்சம் சோன்றியது. கையில் அந்த மூக்குத்தி இருந்தது ஒரு சிறு கூழாங்கல்போல. உண்ணமுடியாத தானிய மணி போல. அதை ஆற்றை நோக்கி வீசினேன்" .. கிரி எப்படிபட்ட ஒரு அபாய கட்ட இடத்தில் இருக்கிறான். ஒரு படி தவறினாலும் விளைவு மிக மோசம். அங்கே அவன் கையில் எவ்வளவு அழகான ஒரு காதல் அழகிய மூக்குத்தி போல கூழாங்கல் (கூழாங்கல் உறுவாக எத்தனை ஆண்டுகள் ஆகும்)  போல தானியம் (அது எத்தனை விதைகளை உள்ளே கொண்டது) போல இருக்கிறது... ஆனால் அவன் அக்கனவை ஆற்றில் வீசுகிறான். எப்படி அதை நீங்கள் எழுதினீர்கள். பலர் அத்தகைய நேரங்களை வாழ்வில் தவறவிடுகின்றனர். 

கிரி காதலின் உச்சியில் எல்லாம் தெரிந்த பறவை இருக்கு என்கிறீர்கள். எனக்கு ஒருமாதிரி தான் புரிந்தது. இரண்டாவது தடவை பறவை தனை குறியீடாக வருகிறது. மீள் வாசிப்பில் அறிவேன் என்று நினைக்கிறேன்.


"காட்டையே ஒற்றைப் பெரும் பூவாக மற்றும் வேங்கை, தீப்பற்றி எரியும் காந்தள், பொன் சொரியும் கொன்றை எத்தனை மலர்கள். மாறாப் பசுமைக் காடு என்பது பூக்களின் பேருலகம். இந்த நிலத்திற்கு அடையாளமாக இந்த அபத்தமான பூவை ஏன் கற்பனை செய்தார்கள்? ஆனால் மொத்த சங்க இலக்கியப் பரப்பிலும் குறிஞ்சிப்பூ பற்றிய வர்ணனைகளே இல்லை என்பது நினைவுக்கு வந்தது." - இவ்விடத்தில் இவனுடைய காதல் என்பது எவ்வளவு சாதாரணமான ஒன்று என்று ஆகிறது. எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் காதலை போலவே. அதற்கு நீங்கள் மற்ற சில இடங்களில் காவியைத்தை பற்றியும் தூய காதல் பற்றியும் பேசுகிறீர்கள்.


பல இடங்களில் மாமியை நினைக்கும் பொழுதெல்லாம்,தனிமையிலும், அவன் மனம் ஒன்றையே நாடுகிறது மாறாத சடங்காய். குற்ற உணர்வு, இழிவுணர்வு, சுய இரக்கம். அச்செயல் முடிந்த உடன் ஒரு வெறுமை. ஆனால் தவிர்க்க நினைத்தால் இரண்டு நாட்களைத் தாண்டாதது. பிறகு. கண்களை மூடி நினைவுகளை மனதிலிருந்து விரட்டுகிறான். அதுவே பல சமயம் நடக்கிறது.  எப்படி அவனுக்கு காமம் ஒரு கேளிக்கையாக மாறிவிடுகிறது. 

நான் சில இடங்களில் கிளியை பற்றிய குறிப்புகளை கவனித்தேன். கொஞ்சம் தவறான புரிதலா என்று தெரியவில்லை. பேசி தெரிந்துக்கொள்ள வேண்டும்.  "கிளி பறந்து போனதும் கிளை சற்று விடுபட்டது. காற்றில் ஆடிச் சரிந்தது. அதன் இலைகள்மீது வெயிலின் ஒரே ஒரு கதிர். இலைகள் கைவிரித்து அதை அள்ள முயன்றன 'கிளி விளி பயிற்றும் வெயில் ஆடு பெருஞ்சினை... பின்பு ஓர் இடத்தில் நீங்கள் மாமி கட்டிலில் அமர்கிறாள் என்றும் கிளிக்கு ஒப்புவாக கிரியை கிளையாக சொல்கிறீர்கள். மாமி சென்ற உடன் அவன் மனம் எப்படி விடுபடுகிறது. 


நகரம்

நகரத்தை பற்றியும் காற்றை பற்றியும் நீங்கள் சொன்ன பல குறிப்புகள் மிக மிக சரியாகவே எனக்கு பட்டது. எனக்கு பிடித்த வற்றையும் நான் வாழ்வில் சந்தித்த வற்றையும் கீழே குறிப்பிட்டு உள்ளேன். 

1. காட்டில் மனிதன் எவ்வளவு நிதானமாக இயங்கிக் கொண்டு இருக்கிறான். காட்டை ரசித்துக்கொண்டு, காதல் கொண்டு காமம் கொண்டு. ஆனால் அங்கே இருக்கும் பொழுது தெரியவில்லை வெளியே வரும் பொழுது தான், நகரத்துடன் ஒப்பிடுகையில் தெரிகிறது நாம் எவ்வளவு வேகமாக சென்று கொண்டு இருக்கிறோம் ஒன்றுமே ரசிக்காமல். 

2. காடும் மனிதனின் இச்சைப்போல சீரற்றது. ஆனால் மனிதன் காட்டை சமன் செய்து கொண்டு இருக்கிறான். துல்லிய வடிவங்களால் நிர்ப்புகிறான். 


3. நகரங்களில் காதலிப்பது தவிர வேறு பிரச்சினைகளே இல்லையா என்றும் கேட்கும் இடத்தில் நம் சமூகத்தில் இன்று நடக்கும் சம்பவங்களை (பல பெண்களை கொலை செய்தல், சினிமாக்களில் காதல் இல்லாமல் டூயல் பாடல்கள் இல்லாமல் இல்லை) பார்க்கையில் இது மாறுமா என்றே கேட்டுக்கொள்கிறேன்.


4. குடிசைகள் எவ்வளவு ஆபாசமான ஒன்று. மழை என்னும் அமுதை ஓவ்வொரு அணுவும் திளைக்காமல் மனிதன் எலி போன்று இருட்டில் பதுங்குகிறான். அவனுடைய பயம், பலவீனம், சுயநலத்தின் அடையாளமே குடிசை. நம்முடைய வாழ்வில் சொந்தமான வீடே ஒரு பெரும் லட்சியமாக இருக்கிறது என்று நினைக்கையில் சற்று ஆபாசமாக உள்ளது. 


5. நீலியை வரவழைத்து பார்க்க நினைக்கிறான். ஆனால் அதில் நியாயமில்லை என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. "காடு என்பது மனிதன் அனுபவிக்கப்பட வேண்டிய பொருள் என்று நினைக்கும் நகர் மனநிலையின் தொடர்ச்சி அது" ..என்னும் இடம்!!! பின்பு காற்றை வணிக பொருள்களின் (பலகை) உற்பத்தியாகும் இடம் என்று நினைக்கும் மனம். ஒரு தடவை நாஞ்சில் நாடனின் "மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடையது அரண்பற்றிய கட்டுரையை நினைத்துக்கொண்டேன். 

6. "நட்சத்திரங்களை ஏறிட்டுப் பார்த்தேன்.. அலங்காரக் கூரை.. வீட்டிற்க்குள்ளே சென்று விடுக்கிறான். மழையில் இருந்தும் வெயிலில் இருந்தும் தப்புவதற்க்காக இல்லை. அப்படி என்றால் ஆயிரம் வழிகள் உண்டு. ஆனால் தான் தான் என்று சதா நினைத்தபடி ஓடுகிறான். வாழ்வின் துவக்க நாட்களில் தான் நிமிர்ந்து பார்க்க முடிகிறது... இதை பற்றி சில வருடங்களாக நினைத்ததுண்டு. நான் பள்ளிச்சிறுவனாக இருந்த பொழுது அரசு குடியிருப்புகளில் மொட்ட மாடியில் உணவு உண்டு உறங்கிய நாட்கள் உண்டு. ஆனால் இன்றோ அது நடந்து குறைந்தது 10 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏன் நாம் அப்படி இப்பொழுது எல்லாம் செய்ய முடியவில்லை. பல நேரம் சினிமா, கடற்க்கரை, நண்பர்களுடன் உணவகத்தில் என்று வீடு திரும்பவே 10 மணிக்கு மேல் ஆகிறது. இதன் பிறகு எங்கே மொட்ட மாடி.  தினசரிகளில் சாலையில் பயணமே 1-2 மணி நேரம், பின்பு எங்கே வானம். கடைசியாக நான் மேல் நோக்கி வியந்து வானம் பார்த்தது என் மனைவியாக போகிறவளுடன் தொலைப்பேசியில் உறையாடிக்கொண்டு இருக்கும் பொழுது. அப்பொழுதும் இதையே நினைத்துக்கொண்டேன். 


7."வாழ்க்கையை கடந்து சென்றபோது எத்தனையோ அனுபவங்கள் சிறு தடயம்கூட இல்லாமல் ஆகின்றன. அது மலையேற்றம் போல ... ஏறும் பொது ஒவ்வொன்றும் சிறியதாகி, அற்பமாகி பார்வையை விட்டு மறையும். உச்சியில் மலையே அற்பமாகி விடுகிறது. வானம் மட்டும் எஞ்சுகிறது"..என்று நீங்கள் கூறும் இடம் அற்புதம். நான் பதின் பருவங்களில் இருக்கையில் என்னுடைய சபரிமலை குரு இதனை யொட்டி கூறியுள்ளார். மலை ஏற ஏற நாம் தேங்காய் களை உடைத்துகொண்டு செல்கிறோம். நம் பாரங்கள்/ பாவங்கள் குறையும் என்று. அவரை நினைத்துக்கொண்டேன். நீங்கள் பொதுவாக மலையெற்றத்திற்கு கொடுத்த விளக்கம் மிக ஏற்ப்புடையாத இருந்தது. 

8. நகர வாழ்க்கையில் காதல் எவ்வளவு செயற்கையாகி கொண்டே இருக்கிறது. சிறுவர்களிடம் இருக்கும் பணம் போல என்னும் இடம்!! 

9. ஆனால் அழகு என்பது எல்லா இடங்களிலும் இருக்கிறது. சுசீந்திரம்கிற சாக்கடைச் சந்திப்பு முனையில்கூட வானம் அழகு என்னும் இடம்!!


10. தெய்வங்கள் ஊரில் இருந்தாலும் காடுக்கு உரியவர்கள் காட்டில் முளைத்து ஊருக்குள் நிறுவப் பட்டவர்கள். நான் கேட்ட பல புராண கதைகள் காட்டில் நடந்தவை என்று நினைத்துப்பார்கையில் பெரிய அளவில் அதிர்ச்சி இல்லை ஏன் என்றால் உங்கள் தளத்தில் இந்து மதம் எப்படி பட்டது என்று நீங்கள் எழுதிய பல கட்டுரைகள் வாயிலாக அறிந்துள்ளேன். 


11. காடு என்பதை மனிதன் எப்படி உரிமை கொண்டாடுகிறான். ஒரு சாலை மௌனமாக ஒரு திட்டத்துடன் பாம்புபோல நீள்கிறது. .. அதேபோல முயல் காட்டில் எவ்வளவு இயல்பாக உள்ளது. ஆனல் சாலையில் வந்த உடன் மருண்டுவிடுகிறது என்னும் இடம்.  [ஆண்டுதோறும் 1993 முதல் சபரிமலை சென்று வருவதால் நீங்கள் காட்டை காட்சிப்படுத்தும் பொழுது என்னால் முழுமையாக உள்வாங்கி கற்பனை செய்ய முடிந்தது.  உதாரணமாக திசையில்லா காடு, பல பச்சைகள், பல நிழல்கள், பார்த்தது போல் தோன்றும் புதிய இடங்கள். ஆனால் இன்றோ எங்கு பார்த்தாலும் பீடி நாற்றம், ரப்பர் தோட்டங்களின் பரவலான ஆக்ரமிப்புகள், சாலைகள் சென்றுள்ள தொலைவு/வளர்ச்சி.  அந்த அழகிய காட்டின் மீது மனிதன் செய்த கொடுமைகளை பார்த்துள்ளேன்.  1995களில்  வெறும் கஞ்சி மட்டுமே கிடைக்கும். அதுவும் 5ரூபாயுக்குள்ளே. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல் அங்கே தோசை முதல் சன்னா பரோட்டா வரை கிடைக்கிறது. அது மட்டும் அல்லாமல் மனிதனின் மலம் அங்கே சரியான முறையில் அப்புறபடுத்தாதனால் அங்கு காட்டிற்கு ஏற்படும் சுகாதார கேட்டினை ஒரு சுற்றுசூழல் தன் ஆர்வலுருமான நண்பரின் மூலம் அறிந்து கொண்ட பொழுது நெஞ்சம் கனக்கிறது. அன்றெல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா என்று சொல்லும்பொழுது பழைய நினைவுகளின் மீது  ஏக்கம்/Nostalgia  வரவில்லை. மனிதனின் மீது கோபமே வருகிறது.  நீங்கள் ஒரு இடத்தில் குறிப்பிட்டு இருந்தீர்கள். காடு மனிதன் அனுபவிக்க படைக்க பட்டாதக எண்ணிக்கொள்கிறான். அற்பமான மனிதன்!! ]


12. நாகரீகம் என்பது நகர் சார்ந்தது. அதற்கு எதிர்ப்பதம் காட்டுமிராண்டி என்று பள்ளிகள் முதலே கற்பிப்பபடுவது. காட்டை வென்றடக்கும் ஊர்களின் கதையே மனித நாகரீகம் போலும். ஆனால் நகரம் என்பது எவ்வளவு செயற்கையானது. காடு எவ்வளவு இயற்கையானது என்று யோசிக்க தவறுகிறோம். 

பொது


மேலே காதல், நகரம் என்று மட்டும் அல்லாமல் நான் பொதுவாக ரசித்த இடங்கள். 

1. அவன் அம்மாவிடம் ஏற்படும் இழப்பினை  காதலிக்கும் கணத்தில் அன்னையை கண்டுக்கொள்கிறான் என்னும் இடத்திலும்... பின்பு அடிக்கடி தின்பதற்கு ஏதாவது தந்து முன்போலவே இருந்தாலும் கூட..வெகுதூரத்தில் என்னை உணர்ந்தேன் இடத்திலும்.. ஒரு நிமிடம் நின்று மீள் வாசிப்பு செய்தேன்!  

2. பெயர்களில் உள்ள அப்பத்தத்தை பற்றி ஒரு இடத்தில் கூறியிருப்பீர்கள். அவை ஒருபோதும் மந்திரங்களாக முடியாது. எவரும் அதைப் பிடித்து ஏறி முக்தியைத் தொடமுடியாது - என்னும் இடம் அற்புதம். நான் பதின் வயதில் இருக்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டுக்கொள்வேன். எனது அப்பாவின் பெயர் ஆறுமுகம். இதனை கேட்ட ஒருவர் உங்கள் பெற்றோர்கள் கலப்பு திருமணமா என்று கேட்டார். ஆம் என்றேன். எப்படி பேரை மட்டும் வைத்து அவர் கேட்டார் என்று எனக்கு ஆச்சர்யம். எனது பாட்டியை கேட்டேன். பாட்டி சொன்னாங்க நம்முள்ள அப்படி பெயர் வைக்க மா என்று கேட்டதற்கு பெயர்  கடவுளின் சமஸ்கிருத பெயராக இருந்தால் உன்னை கூப்பிடுபவர்களுக்கு முக்தி அடைய வாய்ப்பு உண்டு என்று. அதற்கு ஒரு உதாரணம் கொடுத்தார்கள். துரியோதனனுக்கு புஷ்ப விமானம் வந்துச்சாம். வந்துச்சு ஏன்னா கிருஷ்ணா கிருஷ்ணா என்று கிருஷ்ணனின் பெயரை உச்சரித்துக்கொண்டே இருந்தானாம். அன்றே எனக்கு அபத்தமாக தோன்றியது ஏன்றால் இன்னொரு பக்கம் கர்ணன் அவ்வளவு கொடைகளை அளித்ததனால் முக்தி அடைகிறான் என்று படம் பார்த்து உள்ளோம். 

3.  ஒரு மனிதனின் பழக்கங்கள் அவனுடைய மனம்தான். தன் மனதின் மேலேயே பிடி இல்லாத எளிய மனிதர்கள் பிறரது மனம் மீது கட்டளைகளை விதிக்கிறார்கள் ஆலோசனைகள் சொல்கிறார்கள். வருத்தமும் ஆதங்கமும் கொள்கிறார்கள். என்னும் இடம். 

4. "கருமையளவுக்கு அது இளமையை வெளிப்படுத்துவதில்லை. கரிய நிறம் கண்களை நிறைத்து விடுகிறது" போன்ற சிறு சிறு இடங்களையும் ரசித்தேன். 
5. மனுஷ உடல்ல இருந்து மலம் போறது மாதிரி மனசில இருந்தும் போகணும்
6. தருக்கம்னா அது அதருக்கத்தை போய்த் தொடணும். அப்பதான் அதுக்கு மதிப்பு..... ஏன்னா, ஒவ்வொரு தர்க்கத்துக்கும் கண்டிப்பா எதிர் தர்க்கம், சமானமான வலிமையோட இருக்கும்

7. "என்ன ஒரு அசைவு! செயற்கையான பவ்யம், தளுக்கு, வெக்கம் ஒண்ணும் கிடையாது. ஆனா மலர்ச்செடி அசையறா மாதிரி ஒரு மென்மை, நளினம்... பார்வதிதேவி மலைமகளா இப்படித்தான் இருந்திருப்பா சிவனுக்கு பித்துப் பிடிக்க வைக்கிற சிவகாமசுந்தரி." ... ஒரு பெயரை நான் இப்படி நோக்கியது இல்லை. அவ்வளவு அழகு. 


8. "ஒரு சங்கீத கச்சேரியில் இருப்பவர்களைப்போல ஒரு மிகையான நெகிழ்வு. ஆனால் நெகிழ்வையே கணக்கு வழக்கின் மொழியில் சொல்வார்கள்" - கச்சேரிகளில் சில நேரங்களில் எரிச்சல் அடையும் அளவுக்கு செய்வார்கள். அவர்கள் கணக்கு போடுவது அவர்களின் உரிமை. ஆனால் பக்கதில் உள்ளவரிடம் கலந்துரையாடும் பொழுது அது என்னை எரிச்சலடைய செய்கிறது. 

கடைசியாக/கிளைமாக்ஸ்

அவன் அவளுடைய அருகாமையை அவன் புலன்கள் கொண்டாடும் இடம் தன் அகம் போன்றது என்னும் இடங்கள் அதுவும் காடு போன்றது. பின்பு இருவரும் மலர்களை எறிந்து விளையாடும் இடத்தில் அங்கே உரசுவது மனங்கள். அது சிறுவிளையாட்டு என்னும் இடம். அருகாமையில் இருக்கையில் காற்று வெளியிடையையும் காலத்தையும் நிரப்ப முனைவது. காதல் எவ்வளவு அகம் சார்ந்த ஒரு விஷயம் என்று கூறுகிறீர்கள். ... ஆனால் இவை அனைத்திலும் ஒன்றையும் நிகழ்த்தாமல் காலம் சென்றுக்கொண்டு இருக்கிறது.

அதேப்போல இறுதியில் அவன் நீலியின் அருகாமையை உணர்கிறான். ஆனால் மாமியுடன் ஏற்படும் உறவினால் அவன் காதல் என்னும் கனவினை இழக்கிறான். அங்கே அக்கனவாக நீலி அழும் காட்சி அற்புதம். அவன் கனவை கொன்று/ தொலைத்து நிகழ் காலத்திற்கு வருகிறான். பின்பு வாழ்வில் செல்லும் பொழுது அவன் மனைவியுடன் மகிழ்ச்சியிள்ளாத வாழ்க்கை, மாமியின் நினைவுகள் அவனை ஒரு வழி செய்கிறது. காதலும்/ காமமும் கேளிக்கை ஆகுகிறது. ஒரு கட்டத்தில் மூத்திரம் போகவே கஷ்டப்படுகிறான். அவன் வாழ்வில் தோல்வி அடைகிறான். 

காடு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அதனில் ஒரு 2-3 நாட்கள் அலைந்து கொண்டு இருந்தேன். என்னுடைய வாசிப்பினை யாரிடமாவது கலந்துரையாடிக் காட்டினை இன்னும் அறிந்துக்கொள்ள நினைத்து கடலூர் சீனுவிற்கு அழைத்தேன். அவர் நான் காணாத இடங்களையும் தளங்களையும் காண்பித்தார். அப்போழுது தான் நான் ஆழமாக வாசிக்காத இடங்களை தெரிந்துக்கொண்டேன். அவரும் என்னை தொகுத்துக்கொள்ள ஊக்குவித்தார். ஆதலால் முதல் முறையாக தொகுத்துக்கொள்ள முனைந்தேன். 

காடு போன்ற படைப்பிற்கு மிக்க நன்றி! 

அன்புடன்,

ராஜேஷ்