ராஜகோபுரம்
கோயிலுக்கு என்று சென்ற போது
நான் முதன் முதலாய் கண்டது ராஜகோபுரம்
நீ அளித்த உவகை என்னை உன்னிடம் அழைத்தது
உன் பாதம் தொட்டு
வணங்கி செல்லாமலில்லை
கோயிலுக்குள்ளே சென்று நான்
பல பரிவார மூர்த்திகளை
கண்டேன் தொழுதேன் நகர்ந்தேன்
கற்பகரகத்தை வணங்கினேன்
சிறுதெய்வங்களும் இருந்தனர்
ஆனால் அவைகள் பலர் கண்ணுக்கு தெரியவில்லை
கற்பகரகத்தில் இருந்து தினமும் பார்க்கிறேன்
ஆதலால் எனக்கு தெரிகிறது
பிரகாரம் சுற்றியப்பின்பு வந்து அமர்ந்தேன்
பிறரை போல் நான்
அண்ணாந்து பார்த்தது உனைதான்
உன் அடித்தளம் கண்டு வியந்தேன்
நீ நூற்றாண்டுகளாய் தாங்கும்
பெரும் பாரம் பேசி முடியாது
ஆனால் அழாமல் நீ அழகாய் இருக்கிறாய்
மற்ற சந்நிதிகள் கோபுரம் கொண்டாலும்
ராஜகோபுரத்தை நின்று பார்க்காதவார் உண்டோ?
நீ வான்நோக்கி எழும் பொழுது
சிற்பங்கள் உன் மீது எழுந்து அமர்ந்தது
பல மலர்கள் கொண்ட வெட்சி பூ ஏறி
கலச மகுடமாய் அழகு சேர்த்தது
மனிதர்ளாயினும் தெய்வங்களாயினும்
உன்னை தாண்டியே வரவேண்டும்
அதுவே உனக்களித்த சிறப்பு
கோபுரங்களுக்கெல்லாம் "ராஜமாதா" நீ
அதுவே உன் பேறு ராஜகோபுரம்
அவசரத்தில் செல்வோரும்
உனை பார்த்து மலைத்து
ஒரு கணம் வணங்கி
உன்னை மெச்சாதவர் உண்டோ?
உன் பெருமை கேட்டாயே ராஜகோபுரமே
மூலஸ்தானமாய் நின்று எனக்கு கிட்டாத
புகழும் உனக்கு கிட்டுகிறது
என்று சொல்வதில் மகிழ்ச்சியே
ஆயினும் நீ அழுவதை கண்டால் எனக்கு
விரக்தியாய் உள்ளது
கேள் ராஜகோபுரமே கேள்
உன் முதல் தளத்தில் நின்றுகொண்டு
மற்ற பரிவார மூர்த்திகள் கோபுரங்கள்
உயர்வாய் உனக்கு தெரிந்தால்
உன் உயரம் உனக்கு எப்படி தெரியும்!!
ராஜகோபுரம் மட்டும் இருந்தால்
கோயில் அவ்வளவு அழகில்லை
என்பதையும் அறிக நீ
கோயிலின் விளிம்பில் இருக்கிறேன்
என்று நினைக்கிறாய்
என்னில் முதல் படி நீ
என் அங்கம் நீ
நீ இல்லாமல் கோயிலை யார் அறிவார்?
- ராஜேஷ் (19 டிசம்பர் 2017)
No comments:
Post a Comment