தமிழ் சினிமாவில் தவிர்க்கப்பட முடியாத ஒரு திரைப்படம் என்றால் அது "சம்சாரம் அது மின்சாரம்" (தயாரிப்பு ஏ.வி.எம்). அதனை படைத்தது அப்படத்தின் இயக்குனர் விசு அவர்கள். அவர் இந்திய நேரப்படி இன்று 22-மார்ச்-2020 மாலை 5:30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அவரோட "சம்சாரம் அது மின்சாரம்"ல வர ஒரு 5-6 காட்சிகளை எத்தனை வாட்டி பார்த்தேன் என்று எனக்கு தெரியவில்லை. அதில் அவரக்கூடிய வசனங்கள் மனப்பாடம் என்றே சொல்லலாம். வாழ்க்கையில் நிஜ மனித உறவுகளின் சிக்கல்களை மிக எளிமையாகவும் ஆழமாகவும் நுண்ணுணர்வோடும் அணுகி அதற்கு விடை கண்டு கொடுத்தவர் விசு அவர்கள். அவர் படங்கள் குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம் மற்றும் மணல் கயிறு பல்லாண்டு வாழும்.
அப்படத்தில் எனக்கு பிடித்த சில காட்சிகள்
(இதில் வரும் விசு அவர்கள் பலகாரத்துக்கு கொடுக்கும் விவரணை - நகைச்சுவை)
(இதில் தன் மகளின் சுயநலத்தையும் அவர் எப்படி மற்றவர்கள் கல்யாண வேலைகளுக்கு பயன்படுத்துவாள் என்றும், பின்பு அண்ணியை மதிக்காத தங்கையை அண்ணன் எப்படி உதாசீன படுத்துகிறான்)
(இறுதியில் மாமனார் மருமகளுக்குள் வரும் வாக்குவாதம்)
(வீட்டு செலவுகளுக்கு கணக்கு பார்க்க கூடாது என்பதை எடுத்துரைக்கும்)
(மனோரமா விற்கும் கிஷ்முவிற்கும் இடையே நடக்கும் நாடக சண்டை)
(மனோரமா விற்கும் கிஷ்முவிற்கும் இடையே நடக்கும் நாடக சண்டை - 2, லக்ஷ்மி ரகுவரனுக்கு தவறை உணர்த்துவது, லட்சுமி தன் மச்சினனுக்கு பொறுப்பை உணர்த்துவது)
(இளவரசி மனம் திருந்துவது)
(திரைப்படத்தின் கிளைமாக்ஸ் - இறுதிக்காட்சி - குடும்ப சிக்கல்கள், லக்ஷ்மியின் தன்மானம் போன்றவை)
No comments:
Post a Comment