Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

June 17, 2016

அவளும் நானும் அமுதும் தமிழும்


பாரதிதாசன் காதல் கவிதைகள்

மூலம்1: தமிழ் இணையக் கல்விக்கழகம் (சுட்டியை தட்டவும்)

நானும் அவளும்

நானும் அவளும்! உயிரும் உடம்பும்,
நரம்பும் யாழும், பூவும் மணமும்,
தேனும் இனிப்பும், சிரிப்பும் மகிழ்வும்,
(நானும் அவளும்!)

திங்களும் குளிரும், கதிரும் ஒளியும்
மீனும் புனலும், விண்ணும் விரிவும்,
வெற்பும் தோற்றமும், வேலும் கூரும்,
ஆனும் கன்றும், ஆறும் கரையும்
அம்பும் வில்லும், பாட்டும் உரையும்
(நானும் அவளும்!)

அவளும் நானும் அமிழ்தும் தமிழும்
அறமும் பயனும், அலையும் கடலும்,
தவமும் அருளும், தாயும் சேயும்,
தாரும் சீரும், வேரும் மரமும்
(அவளும் நானும்!)

அவலும் இடியும், ஆலும் நிழலும்;
அசைவும் நடிப்பும், அணியும் பணியும்,
அவையும் துணிவும், உழைப்பும் தழைப்பும்,
ஆட்சியும் உரிமையும், அளித்தலும் புகழும்!
(அவளும் நானும்!)

பி.கு: இங்கே "ஆளும் நிழலும்" என்பதில்  ஆல்(ஆலும்) என்பதே சரி. அச்சுப்பிழை என்று நினைக்கிறேன்.

 
திரைப்பாடல் வடிவத்தில் (கீழே சுட்டியை தட்டவும்)

(1)

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்

ஆலும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்

அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தலும் புகழும்

(2)

மீனும் புனலும்
விண்ணும் விரிவும்
வெற்பும் தோற்றமும்
வேலும் கூரும்

ஆறும் கரையும்
அம்பும் வில்லும்
பாட்டும் உரையும்
நானும் அவளும்

நானும் அவளும்
உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்
பூவும் மனமும்

நானும் அவளும்
உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்
பூவும் மனமும்

அவளும் நானும்
தேனும் இனிப்பும்
அவளும் நானும்
சிரிப்பும் மகிழ்வும்

அவளும் நானும் 
திங்களும் குளிரும்
அவளும் நானும் 
கதிரும் ஒளியும்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்

ஆலும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்

அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தலும் புகழும்

- பாவேந்தர் பாரதிதாசன்


பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் தகவல்
திரைப்படம்: அச்சம் என்பது மடமையடா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: விஜய் ஜெசுதாஸ்
இயக்குனர்: கௌதம் வாசுதேவ் மேனன்

6 comments:

  1. இந்த கவிதை பாரதிதாசனின் கவிதைகளில் எந்த தலைப்பின் கீழ் உள்ளது என சொல்ல முடியுமா??? முடிந்தால் இணைப்பையும் சேர்த்து பகிரவும்...

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. @Arun: இப்பதிவில் இப்பொழுது சேர்த்தேன். காதல் கவிதைகள் தொகுப்பில் உள்ளது. பாரதிதாசன் பல்கலைகழகத்தின் இணையதளத்தில் scan செய்யப்பட்டு இருந்தது.

      Delete
  2. Aalum nizhalum sari.. meaning...man and shadow

    ReplyDelete
    Replies
    1. ஆலும் நிழலும் - may be "ஆலும்" --> ஆலமரம் and its shadow.

      Delete